
Post No. 8076
Date uploaded in London – – – 31 May 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
ஹிந்தி படப் பாடல்கள் – 53 – இரு மணிகள் – ஆர். டி. பர்மன்
R. Nanjappa
ஆர். டி. பர்மன்
ஹிந்தித் திரை இசையில் மேற்கத்திய அம்சங்களையும் உத்திகளையும் புகுத்தியவர்களின் வரிசையில் முதலில் நிற்பவர் சி.ராம்சந்த்ரா. ஆனால் இவர் ஓரளவோடு நிறுத்திக்கொண்டார். இவர் இசையில் இனிமைக்கே melody முதலிடம் இருந்தது. தாள ஜாலம் beats, rhythm என்றெல்லாம் அதிகம் போகவில்லை.
ஆர்.டி பர்மன் அதற்கென்றே பிறந்து வந்தவர்! நல்ல இந்திய இசைஞானம் இருந்தும், வலிந்து மேலை அம்சங்களை அதில் புகுத்தி ஏதாவது சோதனை செய்வதே அவர் வழக்கமாயிருந்தது. மேலை மெட்டுக்களை எடுத்தாள்வது, புதிய வாத்தியங்களை நுழைப்பது, புதிய ஒலிகளை நூதனமாக உருவாக்குவது என்று இப்படி ஏதாவது செய்வதே அவர் வழக்கம். இதே முறைகளை பின்னர் வந்த பலரும் கையாளத் தொடங்கியவுடன், ஆர்.டி.பர்மனின் மார்க்கெட் படுத்தது. இவர் யாருக்கும் குல்லாய் போட்டு காக்கா பிடிக்கும் நபரல்ல. தனக்கென்று சில தயாரிப்பாளர்களை தன் வசம் வைத்திருக்கவில்லை. அதனால் பின்னாட்களில் இவரால் சமாளிக்க முடியவில்லை.
சினிமா ரசிகர்கள் மத்தியில் ‘ஓ, இசை ஆர்.டி.பர்மனா- அது மேற்கத்திய இசையின் சாயல் அல்லது பாணி’ என்ற ஒரு கருத்து உருவாகி நிலவியது. அவர் இயக்கத்தில் இந்திய இசையில் உருவான பல நல்ல பாடல்கள் கவனிப்பாரில்லாமல் போயின. சில பாடல்கள் மிகப் பிரபலமடைந்தும் அவை இந்திய இசை மரபில் உருவானவை என்பது பலருக்கும் தெரியாது. அப்படிப்பட்ட இரு பாடல்களை இன்று பார்க்கலாம்.
சிங்காரி கோயி பட்கே
चिंगारी कोइ भड़के
चिंगारी कोइ भड़के तो सावन उसे बुझाये
सावन जो अगन लगाये, उसे कौन बुझाये, हो उसे कौन बुझाये
पताजाद जो बाग़ उजाड़े, वो बाग़ बहार खिलाये
जो बाग़ बहार में उजड़े, उसे कौन खिलाये, हो उसे कौन खिलाये
हम से मत पूछो कैसे मंदिर टूटा सपनों का
हम से मत पूछो कैसे मंदिर टूटा सपनों का
लोगों की बात नहीं है ये किस्सा हैं अपनों का
कोइ दुश्मन ठेंस लगाये तो मीत जिया बहलाये
मनमीत जो घांव लगाये, उसे कौन मिटाये
ना जाने क्या हो जाता जाने हम क्या कर जाते
ना जाने क्या हो जाता जाने हम क्या कर जाते
पीते हैं तो ज़िंदा है ना पिटे तो मर जाते
दुनिया जो प्यासा रखे तो मदिरा प्यास बुझाये
मदिरा जो प्यास लगाये, उसे कौन बुझाये, हो उसे कौन बुझाये
माना तूफ़ान के आगे नहीं चलता जोर किसी का
माना तूफ़ान के आगे नहीं चलता जोर किसी का
मौजों का दोष नहीं है ये दोष हैं और किसी का
मज़धार में नैय्या डोले तो माजी पार लगाये
मांजी जो नाँव दूबोये, उसे कौन बचाये, हो उसे कौन बचाये
चिंगारी हम्म हम्म.. हम्म हम्म.. हम्म हम्
சிங்காரீ கோயீ பட்கே தோ ஸாவன் உஸே புஜாயே
ஸாவன் ஜோ அகன் லகாயே, உஸே கௌன் புஜாயே,
ஹோ உஸே கௌன் புஜாயே
பத்ஜத் ஜோ பாக் உஜாடே, ஓ பாக் பஹார் கிலாயே
ஜோ பாக் பஹார் மே உஜ்டே, உஸே கௌன் கிலாயே,
ஹோ உஸே கௌன் கிலாயே
எவராவது நெருப்புப்பொறி பற்றவைத்தால், மழை அதை அணைத்து விடும்
மழையே நெருப்பு பற்றவைத்தால், அதை யார் அணைப்பது?
பனிக்காலத்தில் சோலை வாடிவிட்டால்,
வசந்த காலத்தில் மீண்டும் மலர்ந்துவிடும்
வசந்த காலத்திலேயே சோலை வாடிக்கெட்டுவிட்டால்,
அதை யார் மலரவைப்பது?
ஹம்ஸே மத் பூசோ கைஸே மந்திர் டூடா ஸப்னோ கா
லோகோ கீ பாத் நஹீ ஹை, யே கிஸ்ஸா ஹை அப்னே கா
கோயீ துஷ்மன் டே(ன்)ஸ் லகாயே தோ மீத் ஜியா பஹலாயே
மன்மீத் ஜோ தாவ்(ன்) லகாயே, உஸே கௌன் மிடாயே
என் கனவுகளின் கோயில் எப்படி இடிந்ததென்று என்னைக் கேட்காதே
இது வெளியாரிடம் பேசக் கூடிய விஷயமல்ல, எனக்குள்ளேயே இருக்கவேண்டிய சமாசாரம்
எதிரி எவனாவது அடித்துவிட்டால், நமக்கு வேண்டியவர் ஆதரவு தரலாம்
நமக்கு வேண்டியவரே அடித்ததால், யாரிடம் ஆதரவு தேடுவது?
நா ஜானே க்யா ஹோ ஜாதா ஜானே ஹம் க்யா கர் ஜாதே
பீதே ஹை தோ ஜிந்தா ஹை, ந பீதே தோ மர் ஜாதே
துனியா ஜோ ப்யாஸா ரக்கே தோ மதிரா ப்யாஸ் புஜாயே
மதிரா ஜோ ப்யாஸ் லகாயே, உஸே கௌன் புஜாயே,
ஹோ உஸே கௌன் புஜாயே
எது எப்படி ஆகும், நான் என்ன செய்கிறேன்– எதுவும் புரியவில்லை.
குடிக்கிறேன்–உயிர் தரிக்கிறேன்; குடியில்லாமல் உயிர் போய்விடும்!
உலகம் உன்னை தாகமாக வைத்தால், இந்தக் கள் தாகத்தைப் போக்கிவிடும்
கள்ளே தாகம் தந்தால், அதை யார் போக்குவார்கள்? யார் போக்குவார்கள்?
மானா தூஃபான் கே ஆகே சல்தா ஜோர் கிஸீகா
மௌஜோ(ன்) கா தோஷ் நஹீஹை, யே தோஷ் ஹை ஔர் கிஸீ கா
மஃஜ்தார் மே நையா டோலே தோ மா(ன்)ஜீ பார் லகாயே
மா(ன்)ஜீ ஜோ நாவ் டுபோயே, உஸே கௌன் பசாயே,
ஹோ உஸே கௌன் பசாயே
புயல் காற்றிற்கு எதிரில் நம் சக்தி பயனற்றது என்பது தெரிந்தது தான்
இது அலைகளின் குற்றம் அல்ல– குற்றம் வேறு யாருடையதோ!
அலைகளில் படகு நிலைகுலைந்தாடினால்,
படகோட்டி அதை கரைசேர்த்து விடலாம்
படகோட்டியே படகை நீரில் அமிழ்த்தினால், அதை யார் காப்பாற்றுவது?
Song: Chingari koi bhadhke Film: Amar Prem 1972 Lyrics: Anand Bakshi
Music: R.D. Burman Singer: Kishore Kumar Raga: Bhairavi
Youtube link: https://www.youtube.com/watch?v=TmFTuplqqYo
This song has drawn great admiration from leading classical musicians from both North and South. Prince Rama Varma has analysed it beautifully, both the song and the background music. Pandit Ajoy Chakrabarty has praised it. Hemant Kumar said it was his favourite composition. A great song rendered for about 5 minutes, still admired after 50 years.
இங்கு நாம் பார்ப்பது நல்ல மெட்டு, நல்ல கவிதை, நல்ல பாடகர், அதை நன்றாகப் படமாக்கிய விதம் ஆகிய அனைத்து அம்சங்களும் சேர்ந்து உருவாக்கிய ஒரு விந்தை!
குச் தோ லோக் கஹேங்கே
कुछ तो लोग कहेंगे, लोगों का काम है कहना
छोडो, बेकार की बातों में कहीं बीत ना जाए रैना
कुछ तो लोग कहेंगे
कुछ रीत जगत की ऐसी है
हर एक सुबह की शाम हुई
तू कौन है, तेरा नाम है क्या
सीता भी यहाँ बदनाम हुई
फिर क्यों संसार की बातों से
भीग गए तेरे नैना
कुछ तो लोग कहेंगे, लोगों का काम है कहना
हमको जो ताने देते हैं
हम खोये हैं इन रंगरलियों में
हमने उनको भी छुप छुप के
आते देखा इन गलियों में
ये सच है झूठी बात नहीं
तुम बोलो ये सच है ना
कुछ तो लोग कहेंगे, लोगों का काम है कहना
छोडो, बेकार की बातों में कहीं बीत ना जाए रैना
कुछ तो लोग कहेंगे, लोगों का काम है कहना
குச் தோ லோக் கஹேங்கே, லோகோ(ன்) கா காம் ஹை கஹனா
சோடோ, பேகார் கீ பாதோ(ன்) மே, கஹீ பீத் நாஜேயே ரைனா
குச் தோ லோக் கஹேங்கே…

ஜனங்கள் ஏதாவது சொல்லிக்கொண்டுதான் இருப்பார்கள்
ஏதாவது சொல்வதே ஜனங்களின் வேலை!
இத்தகைய வெட்டிப் பேச்சை பொருட்படுத்தாதே
இல்லயெனில் இரவு முழுதும் அந்த நினைவிலேயே கழிந்துவிடும்
ஜனங்கள் ஏதாவது பேசிக்கொண்டுதான் இருப்பார்கள் ..
குச் ரீத் ஜகத் கீ ஐஸீ ஹை
ஹர் ஏக் ஸுபஹ் கீ ஷாம் ஹுயீ
தூ கௌன் ஹை, தேரா நாம் ஹை க்யா
ஸீதா பீ யஹா பத்னாம் ஹுயீ
ஃபிர் க்யோ(ன்) ஸன்ஸார் கீ பாதொ(ன்) சே
பீக் கயே தேரே நைனா…
குச்தோ லோக் கஹேங்கே…
உலகின் சில நியதிகள் அப்படிப்பட்டவை–
(நாம் எதுவும் செய்ய முடியாது)
ஒவ்வொரு காலைக்கும் ஒரு மாலை வந்துவிட்டதல்லவா!
நீ யார், உன் பெயர் என்ன?
ஸீதா தேவிக்கும் இங்கு கெட்ட பெயர் வந்ததே, (உனக்குத் தெரியாதா?)
பின் ஏன் இந்த உலகத்தோரின் பேச்சைக்கேட்டு
உன் கண்கள் நனைந்துவிட்டன?
ஹம்கோ ஜோ தானே தேதே(ன்) ஹை
ஹம் கோயே ஹை இன் ரங்க் ரலியோ(ன்) மே
ஹம் நே உன்கோ பீ சுப் சுப் கே
ஆதே தேகா இன் கலியோ(ன்) மே
யே ஸச் ஹை ஜூடீ பாத் நஹீ
தும் போலோ யே ஸச் ஹை நா
நாம் இந்த மாதிரி இடத்தில் சல்லாபிக்கிறோம் என்று
நம்மைத் தூற்றுக்கிறார்களே–
அவர்களும் திருட்டுத் தனமாக இந்த இடத்திற்கு
வருவதைப் பார்த்திருக்கிறோம்
இது உண்மை, பொய்யான விஷயமல்ல
நீயே சொல், இது உண்மைதானே!
குச் தோ லோக் கஹேங்கே…..
ஜனங்கள் ஏதாவது பேசிக்கொண்டுதான் இருப்பார்கள்,
பேசுவதே அவர்களுக்கு வேலை!
Song: Kuch toh log kahenge film: Amar Prem, 1972 Lyrics: Anand Bakshi
Music: R.D.Burman Singer: Kishore Kumar Raga: Khamaj
Youtube linc: https://www.youtube.com/watch?v=0bfQJ6YU5_4
முதல் பாட்டிற்குச் சொன்ன அத்தனை விஷயங்களும் இந்தப் பாட்டிற்கும் பொருந்தும்.
இந்த அமர்பிரேம் படத்தின் அத்தனை பாட்டுக்களும் நல்ல ராகத்தில் அமைந்தவை, மக்களிடம் நல்ல வரவேற்பும் பெற்றன. இப்படத்தின் இசையைப் பற்றி ஒரு செவிவழிச் செய்தி உண்டு. இதன் பாடல்களுக்கு மெட்டமைத்த ஆர்.டி அவற்றை தந்தை எஸ்.டி. பர்மனுக்குக் காட்டினாராம். இந்தப் படத்தின் கதைக்கு அவை பொருத்தமில்லை என்று அவர் சொல்லிவிட்டாராம். பின்னர் மீண்டும் முயன்று இந்த மெட்டுக்களை உருவாக்கினார் ஆர்.டி என்பார்கள்.
ஆனந்த பக்ஷியின் பாட்டுக்களையும் பாராட்டவேண்டும். நல்ல கவிதையும் மெட்டும் சேராமல் அதிக நாட்கள் நினைவில் நிற்கக்கூடிய பாட்டுக்கள் அமைவதில்லை.
ஆர்.டி பர்மன் (பன்சம்) என்றால் மேலை பாணி இசைதான் என்ற ஒரு அபிப்பிராயம் பொதுமக்களிடையே எப்படியோ பரவிவிட்டது. அதனாலேயே அவருக்கு வரவேண்டிய சில பரிசுகள் வராமல் போயின. அவர் மேலை நாட்டு இசையால் மிகவும் கவரப்பட்டார், அங்கிருந்து பல மெட்டுக்களுக்கான விஷயங்களை எடுத்துக்கொண்டார் என்பதும் உண்மையே, அவர் இதை மறைக்கவில்லை. ஆனால் அமர் பிரேம் போன்ற படங்கள் அவர் இந்திய இசையிலும் ஊறியவர் என்பதைக் காட்டும்.
பொற்காலத்திற்குப் பிறகும் நல்ல இசை வழங்கியவர்களில் ஆர்.டி பர்மனும் ஒருவர். ஆனால் தன் கவனத்தை சதா புதிய உத்திகளிலேயே செலுத்தி சக்தியை வீணடித்தார். பின் வந்தவர்கள் இவர் பாணியையே பின்பற்றி இவர் மார்க்கெட்டைக் கெடுத்தார்கள் (முன்பு ஓ.பி. நய்யாருக்கும் இதே நடந்தது.) இவர் கடைசியாக இசையமைத்தது “1942-எ லவ் ஸ்டோரி”என்ற படம்.(1994) மிகச் சிறந்த இசை கொண்டது. படம் ரிலீசாவதற்குள் அவர் காலமானார் (55 வயதுதான்) இப்படத்தின் இசைக்கு அவருக்கு ஃபிலிம்ஃபேர் அவார்டு கொடுத்தார்கள்.
Those interested may read: R.D.Burman: The Man, The Music by Anirudha Bhattacharjee & Balaji Vittal (HarperCollins, 2011)- winner of a National Award in that year. It is an engaging book.
| Virus-free. www.avast.com |
Attachments area
Preview YouTube video Chingari Koi Bhadke Lyrics Translation in English (Amar Prem)
Chingari Koi Bhadke Lyrics Translation in English (Amar Prem)