
WRITTEN BY R. NANJAPPA
Post No. 8108
Date uploaded in London – – – 5 June 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
ஹிந்தி படப் பாடல்கள் – 58 – இரு மணிகள் – கல்யாண்ஜீ – ஆனந்த்ஜீ!
R. Nanjappa
கல்யாண்ஜீ – ஆனந்த்ஜீ!
30 வருஷங்கள் ஹிந்தித் திரை இசையில் தங்களுக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர்கள் கல்யாண்ஜீ-ஆனந்த்ஜீ சகோதரர்கள். சுமார் 250 படங்களுக்கு இசையமைத்தார்கள். இவர்கள் திரையிசையின் பொற்காலத்தில் பழைய ஜாம்பவான்கள் இருந்த பொழுது துறைக்கு வந்தார்கள்.-இவர்கள் காலத்தில் திரை இசை தன் பழைய பெருமையை படிப்படியாக இழந்தது.
1958-59ல் கல்யாண்ஜி தனியாக இசையமைத்து வந்தார். ஆனந்த்ஜீ அவருக்கு உதவியாளர். அப்போது லக்ஷ்மிகாந்த்-பியாரேலாலும் அவர்களுக்கு உதவியாளர்கள்! சலியா (1960) படத்தின் மூலம் பிரபலமடைந்தார்கள். இவர்களை ஏழைகளின் ஷங்கர்-ஜெய்கிஷன் என்று சொல்வார்கள்! அவ்வப்போது அக்கால கட்டத்திற்குத் தகுந்த முறையில் இசையமைத்தாலும் Outstanding என்று சொல்லும் படி எதுவும் இல்லை என்பது என் கருத்து. ஹிமாலய் கீ கோத் மே, சரஸ்வதிசந்தர், டான், லாவாரிஸ், முகத்தர் கா ஸிகந்தர், குர்பானி போன்ற படங்களில் இவர்கள் இசை ஜனரஞ்சகமானாலும் நீடித்து நிற்கும் அம்சங்கள் எதுவும் இல்லை. இவர்கள் இசையில் இனிமை அவ்வளவாக இருக்காது. இவர்களின் ஆரம்பகாலப் பாடல்கள் இரண்டைப் பார்க்கலாம்..
ये समा ये खुशी कुछ बोलो जी बोलो जी
ये समा ये खुशी कुछ बोलो जी बोलो जी
मुझे तुम जो मिले सारी दुनिया मिली
मेरी प्रीत आज हँसी
छोड़ो जी छोड़ो जी
ये समा ये खुशी कुछ बोलो जी बोलो जी
सामने हो तुम तो आँखें है नशे में चूर
दे के बाहों का सहारा ले चलो कहीं दूर
आज हर एक चीज़ में है
आज हर एक चीज़ में है
रंग ओर दिलकशी
छोड़ो जी छोड़ो जी
ये समा ये खुशी कुछ बोलो जी बोलो जी
आ आ आ
कह रही है हमसे लहरें थाम लो पतवार्
साथ हो जो तुम हमारे जा लगेंगें पार
प्यार में जो तुम मिले हो
प्यार में जो तुम मिले
मुझे मिल गई ज़िंदगी
बोलो जी बोलो जी
ये समा ये खुशी कुछ बोलो जी बोलो जी
छेड़ दी मौजों ने मेरी ज़िंदगी की धुन
हँस के तुम बोलो बलम तो झूमता है मन
तेरी मुस्कानों से मेरे
तेरी मुस्कानों से मेरे
गीत की धुन सजी
छोड़ो जी छोड़ो जी
ये समा ये खुशी कुछ बोलो जी बोलो जी
मुझे तुम जो मिले सारी दुनिया मिली
मेरी प्रीत आज हँसी
कुछ बोलो जी बोलो जी
ये समा ये खुशी कुछ बोलो जी बोलो जी
யே ஸமா யே குஷீ குச் போலோ ஜீ போலோ ஜீ
முஜே தும் ஜோ மிலே ஸாரீ துனியா மிலீ
மேரீ ப்ரீத் ஆஜ் ஹ(ன்) ஸீ
சோடோ ஜீ சோடோ ஜீ
யே ஸமா யே குஷீ, குச் போலோ ஜீ போலோ ஜீ
இந்த அழகிய சூழல், இந்த சந்தோஷம்– ஏதாவது சொல்லுங்களேன்!
உன்னை அடைந்துவிட்டேன், எனக்கு உலகமே கிடைத்துவிட்டது!
அன்பில் இன்று சந்தோஷம் விளைந்தது!
ஓ. கையை விடுங்கள்
ஸாம்னே ஹை தும் தோ ஆன்கே ஹை நஷே மே சூர்
தேகே பாஹோ(ன்) கா ஸஹாரா லே சலோ கஹீ தூர்
ஆஜ் ஹர் எக் சீஃஜ் மே ஹை
ரங்க் ஔர் தில்கஷீ
சோடோ ஜீ சோடோ ஜீ
நீ எதிரில் இருந்தால் கண்கள் போதை கொள்கின்றன
கையைப் பிடித்து எங்கோ தொலைவிற்கு அழைத்துச் செல்
இன்று ஒவ்வொன்றிலும் வண்ணமும் இனிமையும் நிரம்பி இருக்கிறது!

கஹ ரஹீ ஹை ஹம் ஸே லஹரே தாம் லோ பத்வார்
ஸாத் ஹோ தும் தோ ஹமாரே ஜா லகேங்கே பார்
ப்யார் மே ஜோ தும் மிலே முஜே மில்கயீ ஃஜிந்தகீ
போலோ ஜீ போலோ ஜீ
துடுப்பு வலிப்பதை நிறுத்து என அலைகள் என்னிடம் கூறுகின்றன
நீ உடனிருந்தால் போதும், அக்கரையை அடைந்துவிடலாம்!
அன்பில் நீ இணைந்ததால் உலகமே கிடைத்துவிட்டது!
ஏதாவது சொல்லுங்களேன்!
சேட் தீ மௌஜோனே மேரீ ஃஜிந்தகீ கீ துன்
ஹ(ன்)ஸ் கே தும் போலோ பலம் தோ ஜூம் தா ஹை மன்
தேரீ முஸ்கானோ ஸே மேரே கீத் கீ துன் ஸஜீ
குச் போலோ ஜீ போலோ ஜீ
மனதிலிருக்கும் மகிழ்ச்சி வாழ்க்கையின் கீதத்தைக் கிளப்பிவிட்டது!
அன்பே நீ சிரித்துப் பேசினால், மனம் துள்ளுகிறது!
உன் சிரிப்பில் என் கீதம் பிறந்துவிட்டது!
ஏதாவது சொல்லுங்களேன்!
Song: Ye sama Ye kushi Film: Ghar Ghat Ki Baat 1959 Lyrics: Gulshan Bawra
Music : Kalyanji Virji Shah Singers: Lata Mangeshkar & Mukesh
YouTube link; https://www.youtube.com/watch?v=p8umBPBLptc
இந்த வீடியோவைப் பார்த்தவாறே இந்தப் பாடலைக் கேட்கவேண்டும். எத்தனை இனிய பாடல்! முன்பின் தெரியாத அறிமுக நடிகர்கள் மீது படமாக்கப்பட்டது! பாட்டு மாமூல் காதல் பாட்டுதான்-பெரிதாக எதுவும் இல்லை.
Sweet nothings, nothing more! மிக இனிய இசை!
இதே போல் இன்னொரு பாடல்!
ஸாஃஜ் ஏ தில் சேட் தே
साज़–ए–दिल छेड़ दे, क्या हसीं रात है
कुछ नहीं चाहिये, तू अगर साथ है
मुझे चाँद क्यों तकता है, मेरा कौन ये लगता है
मुझे शक यहीं होता है, मेरे चाँद से जलता है
हमें इसकी क्या पर्वा है
तेरे दर पे सर झुक जाए, यहीं ज़िन्दगी रुक जाए
कली दिलकी ये खिल जाए, ख़ुशी प्यारकी मिल जाए
कभी फिर ग़म ही न आए
ஸாஃஜ் –ஏ–தில் சேட் தே, க்யா ஹஸீ(ன்) ராத் ஹை
குச் நஹீ சாஹியே, தூ அகர் ஸாத் ஹை
உன் மனது கீதம் இசைக்கத் தொடங்கட்டும், இது எத்தனை அழகான இரவு!
நீ உடன் இருந்தால் போதும், வேறு எதுவும் தேவை இல்லை!
முஜே சாந்த் க்யூ(ன்) தக்தா ஹை, மேரா கௌன் ஏ லக்தா ஹை
முஜே ஷக் யஹீ ஹோதா ஹை,மேரே சாந்த் ஸே ஜல்தா ஹை!
ஹமே இஸ் கீ க்யா பர்வா ஹை
இந்த நிலவு ஏன் என்னை இப்படி விழித்துப் பார்க்கிறது?
அது எனக்கு என்ன ஆகவேண்டும்?
எனக்கு இதுதான் சந்தேகம் – அது என் நிலவைக் கண்டு பொறாமையில் எரிகிறது!
நாம் இதை ஏன் பொருட்படுத்த வேண்டும்?
தேரே தர்பே ஸர் ஜுக் ஜாயே, யஹீ(ன்) ஃஜிந்தகீ ருக் ஜாயே
கலீ தில் கீ யே கில் ஜாயே, குஷீ ப்யார் கீ மில் ஜாயே
கபீ ஃபிர் கம் ஹீ ந ஆயே

உன்னிடம் தலை தாழ்ந்து இருக்கட்டும்,
இந்த வாழ்க்கை இங்கேயே நின்று விடட்டும்!
இதயமாகிய மொட்டு மலர்ந்து விடட்டும்,
அன்பின் சந்தோஷம் கிடைத்துவிடட்டும்
இனி என்றும் துன்பமே இல்லாமல் இருக்கட்டும்!
Song: Saaz E Dil ched de Film: Passport 1961 Lyrics: Farooq Qaiser
Music: Kalyanji Anandji Singers : Mohammad Rafi & Lata Mangeshkar
YouTube links:
https://www.youtube.com/watch?v=9JE531uhdvg .
இது என்ன அழகான கவிதை! எத்தனை இனிமையான பாட்டு! 1961ல் இந்தப் படம் தான் வசூலில் முதலிடம் பெற்றது! சில நடிகர்களுக்கு நல்ல இசை ராசி! பிரதீப் குமார் சுமாரான நடிகர் தான், ஆனால் அவருடைய படங்கள் அனைத்துமே நல்ல இசை அமைந்தவை! இங்கே கருப்பு வெள்ளை படம் தான்-எத்தனை ரம்யமாக இருக்கிறது!
இந்த மெட்டிற்கும் முந்தைய பாட்டின் மெட்டிற்கும் உள்ள தொடர்பை கவனித்தீர்களா? அடிப்படையில் ஒரே மெட்டு அல்லது ராகம் தான்- ஓரிரு இடத்தில் சிறிது ஸ்வரத்தை மாற்றினால் வேறாகத் தோன்றுகிறது!
இங்கு ரஃபி-லதாவின் குரலில் இனிமை சொட்டுகிறது! முந்திய பாடலில் முகேஷ்-லதா!
இவ்விரண்டிற்கும் பின்னணி இசையும் கல்யாண்ஜீ ஆனந்த்ஜீயின் பிற பாடல்களிலிருந்து முற்றும் வித்தியாசமாக அமைந்திருக்கிறது!
இத்தகைய இனிய பாடலை பிறகு இவர்கள் இசையில் நாம் காணமுடியவில்லை!
These are exceptional songs from Kalyanji Anandji.
Attachments area
Preview YouTube video ye sama ye khushi..Mukesh _Lata_Gulshan Bawra_Kalyanji Anandji..a tribute
ye sama ye khushi..Mukesh _Lata_Gulshan Bawra_Kalyanji Anandji..a tribute
Preview YouTube video Yeh sama yeh khushi – Ghar Ghar Ki Baat
Yeh sama yeh khushi – Ghar Ghar Ki Baat
saaj e dil chhed de..Rafi_Lata_Farooq Q_Kalyanji Anandji..passport 1960..a tribute
Saaz-E-Dil Chhed De – Best Classic Romantic Song – Pradeep Kumar & Madhubala – Passport