DAVID IN FLORENCE இத்தாலியின் புகழ்பெற்ற டேவிட் சிலை (Post No.8150)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8150

Date uploaded in London – 11 June 2020       

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

2004 year paper cutting

உலகப்   புகழ்பெற்ற ஓவியரும், சிற்பிபியுமான மைக்கேல் ஏஞ்சலோ செதுக்கிய  டேவிட் (David in Florence, Italy) சிலை இத்தாலியின் பிளாரென்ஸ் நகரில் உள்ளது (நான் சில ஆண்டுகளுக்கு முன்னர் இத்தாலி சென்ற போது பிளாரென்ஸ் சென்று புகைப்படமும் எடுத்தேன். தேடிக் கண்டுபிடிக்க நேரமில்லை. ஆகவே பி.பி.ஸி . ரேடியோ 4 வெளியிட்ட படத்தை அப்படியே தருகிறேன். இதன் சிறப்பு என்ன வென்றால் இரண்டு பிரபல ஓவியர்களை அழைத்து பைபிளில் வரும் டேவிட் சிலையை வடியுங்கள் என்று கேட்டனர். ‘சீ , சீ ! இது மோசமான சலவைக் கல் (marble) இதில் சிலை செதுக்க முடியாது என்று சொல்லி, வீட்டுக்குப் போய் விட்டார்கள்.

‘ஆடத் தெரியாத *****யாளுக்கு தெருக்கோணல்’ என்பது பழமொழி. ‘என்னடி இது !கத்தரிக்காய் ஊ த்தையாக இருக்கிறது என்றானாம் கணவன்; நான் என்ன செய்யறது ? அருவாமணை கோணல் என்றாளாம் மனைவி’. இதுவும் தமிழ் பழமொழி புஸ்தகத்தில் உளது.

இப்படியெல்லாம் சாக்குப் போக்கு சொல்லாமல் சலவைக் கல்லை எடுத்துச் செதுக்கினான் மைக்கேல். இன்று இதை பார்ப்பதற்காக மட்டுமே மக்கள் கூட்டம் வருகிறது . 500 ஆண்டுகளாக நிற்கும் இந்தச் சிலை ஒருகாலத்தில் பிளாரன்ஸ் நகர தெரு விளக்குகளின் புகை மண்டிக் கிடந்தது; ஒரு பைத்திக்காரன் இதன் கால் விரல்களை சுத்தியல் வைத்து உடைத்தான், டேவிட்டின் கைகள் ஒரு கலகத்தின் போது உடைந்தன. எல்லாவற்றையும் சரி செய்து புதிதாக காட்சிக்கு வைத்தனர் 2004ம் ஆண்டில்; அப்போது பி பி சி (Radio 4) ஓலி பரப்பிய செய்தி அடங்கிய பேப்பர் கட்டிங் (Paper Cutting) கை 16 வருஷம் கட்டிக்க காத்தேன் ; இன்று அந்தக் காகிதத்தைக் குப்பைத் தொட்டிக்குள் எறிவதற்கு முன்னர் இங்கு செய்தியாக போ ஏற்றியதில் கொஞ்சம் திருப்தி.

இதன் உயரம் 17  அடி; செதுக்கிய ஆண்டு 1501-1504; இற்றைக்கு சுமார் 515 ஆண்டுகளுக்கு முன்.

—–subham—-

Leave a comment

Leave a comment