ஹிந்தி படப் பாடல்கள்-69-ஒரு ராகம், இரு மலர்கள் (Post No.8183)

WRITTEN BY R. NANJAPPA                        

Post No. 8183

Date uploaded in London – – – 16 June 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

ஹிந்தி படப் பாடல்கள்-69-ஒரு ராகம், இரு மலர்கள்-ராகம் யமன்!

R. Nanjappa

ராகம் யமன்

ஹிந்தி இசைஞர்களிடையே செல்லமான ராகங்களில் ஒன்று இந்த யமன். இந்த ராகத்தில் அனேகம் பாட்டுக்கள் இருக்கின்றன. ஒன்றிரண்டு நாம் முன்பே பார்த்திருக்கிறோம். இப்போது இரண்டு பார்ப்போம். இதிலும் மெட்டுகள் எப்படி வித்தியாசமான உணர்ச்சிகளை விவரிக்கின்றன என்பதைக் காண்போம்.

நாம் கும் ஜாயேகா

नाम गुम जाएगा
चेहरा ये बदल जाएगा
मेरी आवाज़ ही पहचान है
गर याद रहे

वक्त के सितम कम हसीं नहीं
आज है यहाँ कल कहीं नहीं
वक्त से परे अगर मिल गए कहीं
मेरी आवाज़ ही
नाम गुम जाएगा

जो गुज़र गई कल की बात थी
उम्र तो नहीं एक रात थी
रात का सिरा अगर फिर मिले कहीं
मेरी आवाज़ ही
नाम गुम जाएगा

दिन ढले जहाँ रात पास हो
ज़िन्दगी की लौ ऊँची कर चलो
याद आए गर कभी जी उदास हो
मेरी आवाज़ ही
नाम गुम जाएगा..  

நாம் கும் ஜாயேகா, செஹ்ரா யே பதல் ஜாயேகா,

மேரா ஆவாஃஜ்  ஹீ பஹ்சான் ஹை

கர் யாத் ரஹே

பெயர் மறைந்துவிடும், இந்த முகம் மாறிவிடும்

என் குரல் ஒன்றுதான் தெரிந்ததாக இருக்கும்– 

உனக்கு நினைவிருந்தால்!

வக்த் கே ஸிதம் கம் ஹஸீ(ன்) நஹீ

ஆஜ் ஹை யஹா(ன்) கல் கஹீ(ன்) நஹீ

வக்த் ஸே பரே அகர் மில் கயே கஹீ(ன்)

காலம் சில கஷ்டங்களைக் கொடுத்தாலும்,

அதிலும் சில இனிய விஷயங்கள் இல்லாமல் இல்லை!

இன்று இங்கே இருக்கிறோம், நாளை எங்கே என்று யார் சொல்ல முடியும்!

காலக் கணக்கை மீறி, எங்கோ சந்திப்போமோ, என்னவோ!

ஜோ குஃஜ்ர்  கயீ கல் கீ பாத் தீ

உம்ரு தோ நஹீ, ஏக் ராத் தீ

ராத் கா ஸிரா அகர் ஃபிர் மிலே கஹீ(ன்)

மேரீ ஆவாஃஜ் ஹீ.

நடந்து போனது நேற்றைய விஷயம் தான்

ஒரு இரவுதான்வாழ்நாள் முழுதும் அல்ல!.

ஆனாலும் அதை மீண்டும் சந்திக்க நேர்ந்தால்?

என் குரல் தான் தெரிந்ததாக இருக்கும்!

தின் டலே ஜஹா(ன்) ராத் பாஸ் ஹை

ஃஜிந்தகீ கி லௌ ஊஞ்சீ கர் சலோ

யாத் ஆயே கர் கபீ பீ உதாஸ் ஹோ

மேரீ ஆவாஃஜ் ஹீ பஹசான் ஹை

பகல் கழிந்து விட்டால், இரவு நெருங்குகிறது என்று பொருள்

அந்த சமயத்தில் வாழ்க்கையில் ஒளியை அதிகப்படுத்து!

மனதிற்கு வருத்தம் தரும் விஷயம் நினைவிற்கு வந்தால்,

என் குரல் தான் தெரிந்ததாக இருக்கும்!

பெயர் மறைந்துவிடும், முகம் மாறிவிடும்!

உனக்கு நினைவிருந்தால்!

Song: Naam gum jaayega film: Kinara 1977  Lyrics: Gulzar

Music: R.D.Burman Singers : Lata Mangeshkar & Bhupinder Singh

YouTube link:  https://www.youtube.com/watch?v=gO87WaEejag

எவ்வளவு அருமையான மெட்டு! ஆர்.டி.பர்மன் இசையில் இப்படி ராகங்கள் மீது அமைந்த பாடல்கள் பல இருக்கின்றன. இந்தக் கவிதை எளியது- குல்ஃஜாருக்கே உரித்தான கடினக் கற்பனைகள் இல்லை. பூபிந்தர் சிங்க் குரல் அருமை.  

இதே ராகத்தில் இன்னொரு பாடல்

ஜப் தீப் ஜலே ஆனா

जब दीप जले आना, जब शाम ढले आना
संकेत मिलन का भूल जाना
मेरा प्यार ना बिसराना

मैं पलकन डगर बुहारूँगा
तेरी राह निहारूँगा
मेरी प्रीत का काजल
तुम अपने नैनों में मले आना
जब दीप जले आना

जहाँ पहली बार मिले थे हम
जिस जगह से संग चले थे हम
नदिया के किनारे आज
उसी अमवा के तले आना
जब दीप जले आना

ऩि रे , रे रे ऩि, , रे नि

नित सांझ सवेरे मिलते हैं
उन्हें देख के तारे खिलते हैं
लेते हैं विदा एक दूजे से
कहते हैं चले आना
जब दीप जले आना…  

ஜப் தீப் ஜலே ஆனா, ஜப் ஷாம் டலே ஆனா

ஸங்கேத் மிலன் கீ பூல் ஜானா

மேரா ப்யார் நா பிஸ்ரானா

விளக்கு வைத்ததும் வரவும், மாலை வரும்பொழுது வரவும்

நம் உறவின் அடையாளத்தை மறந்துவிடாதே

என் அன்பை மறந்துவிடாதே

மை பல்கன் டகர் புஹாரூங்கா

தேரீ ராஹ் நிஹாரூங்கா

மேரீ ப்ரீத் கா காஜல்

தும் அப்னே நைனோ மே மலே ஆனா

ஜப் தீப் ஜலே ஆனா

நான் உன் கண்களின் பாதையில் அழைப்பேன்

உனக்காகக் காத்திருப்பேன்

என் அன்பாகிய மையை உன் கண்களில் இட்டு நீ வா

விளக்கு வைத்ததும் வரவும்

ஜஹா(ன்) பஹலீ பார் மிலேதே ஹம்,

ஜிஸ் ஜகஹ் ஸே ஸங்க் சலே தே ஹம்

நதியா கே கினா ரே ஆஜ் உஸீ ஆம்வா கே தலே ஆனா

ஜப் தீப் ஜலே ஆனா

நாம் முதலில் எங்கு சந்தித்தோமோ

எங்கிருந்து ஒன்றாகக் கிளம்பினோமோ,

அந்த நதிக்கரையில் அந்த மாமரத்தின் கிழே வா

விளக்கு வைத்ததும் வா

நித் சாஞ்ச் ஸவேரே மில்தே ஹை(ன்)

உநே தேக் கே தாரே கில்தே ஹை (ன்)

லேதே ஹை விதா ஏக் துஜே ஸே

கஹதே ஹை சலே ஆனா

ஜப் தீப் ஜலே ஆனா

தினமும் மாலையும் காலையும் சந்திக்கிறோம்

அதைப் பார்த்து தாரகைகள் மகிழ்ந்து குலுங்குகின்றன

நாம் விடைபெறும் பொழுது,

மீண்டும் வரவும் என்று சொல்லிச் செல்கிறோம்!

விளக்கு வைத்ததும் வரவும்!

Song: Jab deep jale aana  Film: Chitchor 1976 

Music and Lyrics: Ravindra Jain

Singers: Yesudas & Hemlata.

Youtube link: https://www.youtube.com/watch?v=wdEwI37dZB8 

எத்தனை அருமையான பாட்டு! ஏசுதாஸ் குரலில் தான் எத்தனை கம்பீரம்! இந்த ராகத்தில், இந்தப் பாட்டில் முழுதும் வெளிப்படுகிறது! இந்த “சித்சோர்” படம் முழுதும் இத்தகைய நல்ல பாடல்கள் நிறைந்தது. வட இந்தியாவில் எங்கும் நல்ல வரவேற்பைப் பெற்றது! இந்தப் பாட்டு மிகவும் விரும்பிக் கேட்கப்பட்டது! 45 வருஷங்களுக்கு முன்பு கூட நம் மக்கள் ரசனை கெடவில்லை!  நமது இசைஞர்களும் இத்தகைய தரமான இசை தந்தார்கள். ரவீந்த்ர ஜெயின் “சுத்தமான” இசை தந்தவர்.

70களில் வந்தாலும் நம் பொற்காலத்திய இசையை நினைவுபடுத்தும்!

இதன் இசைஞர் ரவீந்த்ர ஜெயின் [1944-2015] கண்பார்வையற்றவர். இந்த பாட்டுப் பதிவானதும், ‘எனக்குப் பார்வை வந்தால் இந்தக் குரலுக்குரியவரை முதலில் பார்ப்பேன்” என்று சொன்னாராம்!

Virus-free. www.avast.com

Attachments area

Preview YouTube video Naam Gum Jayega -Lata Mangeshkar (LYRICS)

Naam Gum Jayega -Lata Mangeshkar (LYRICS)

Preview YouTube video Naam Goom Jayega (Uncut Video Song) | Kinara | Dharmendra | Hema Malini

Naam Goom Jayega (Uncut Video Song) | Kinara | Dharmendra | Hema Malini

Preview YouTube video Jab Deep Jale Aana | Lyrical Song | Chitchor | Yesudas & Hemlata Songs | Amol Palekar, Zarina Wahab

Jab Deep Jale Aana | Lyrical Song | Chitchor | Yesudas & Hemlata Songs | Amol Palekar, Zarina Wahab

Preview YouTube video Jab Deep Jale Aana – Yesudas & Hemlata – Chitchor

Jab Deep Jale Aana – Yesudas & Hemlata – Chitchor

Leave a comment

Leave a comment