ஹிந்தி படப் பாட்டுகள் – 75 – பக்திப் பாடல்கள்! (Post No.8222)

WRITTEN BY R. NANJAPPA                        

Post No. 8222

Date uploaded in London – – – 22 June 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

ஹிந்தி படப் பாட்டுகள் – 75 – பக்திப் பாடல்கள்!

R. Nanjappa

” The fear of the Lord is the beginning of wisdom”, என்பது பைபிளில் வரும் வாக்கியம். நம் திருவள்ளுவர் மொழியில்,

கற்றதனாலாய பயனென்கொல், வாலறிவன்

நற்றாள் தொழாஅர் எனின்

என்போம்.

சினிமா என்னதான் பொழுதுபோக்குச் சாதனமாக இருந்தாலும் அங்கும் அடிப்படையில் தெய்வபக்தி சிறிதளவாவது இருக்கிறது. (ஹிந்துக் கடவுளைக் காட்டாவிட்டாலும் வேறு ஏதாவது காட்டுவார்கள்!) சினிமாவில் காட்டுகிறார்களோ இல்லையோ, அதில் ஈடுபட்டுள்ள பலரும் சொந்த வாழ்க்கையில் ஏதோ தெய்வ நம்பிக்கை உள்ளவர்களாகவே இருக்கிறார்கள். எந்தப் படமானாலும் ‘பூஜை” (முஹுரத்) என்று போடாமல் தொடங்குவதில்லை! (நம் ஊரில் சாமி இல்லை என்பவர்களும் தாயே தெய்வம் என்பார்கள்!)

நமது  வேதம் முதலில் தாயைத் தான் தெய்வமாகச் சொல்கிறது: “மாத்ரு தேவோ பவ”! இதை ஒரு படத்தில் அருமையான பாட்டாகத் தந்துவிட்டார்கள்:

உஸ் கோ நஹீ தேகா

उसको नहीं देखा हमने कभी
पर इसकी ज़रुरत क्या होगी
माँ, माँ तेरी सूरत से अलग
भगवान की सूरत क्या होगी, क्या होगी
उसको नहीं देखा हमने कभी

इनसान तो क्या देवता भी
आँचल में पले तेरे
है स्वर्ग इसी दुनिया में क़दमों के तले तेरे
ममता ही लुटाये जिसके नयन ऐसी कोई मूरत क्या होगी
माँ, माँ तेरी सूरत



क्यों धूप जलाए दुखों की  क्यों गम की घटा बरसे
ये हाथ दुआओं वाले  रहते हैं सदा सर पे
तू है तो अँधेरे पथ में हमें  सूरज की ज़रुरत क्या होगी
माँ, माँ तेरी सूरत

कहते हैं तेरी शान में जो कोई ऊँचे बोल नहीं
भगवान के पास भी माता  तेरे प्यार का मोल नहीं
हम तो यही जानें तुझसे बड़ी  संसार की दौलत क्या होगी
माँ, माँ तेरी सूरत… 

உஸ்கோ நஹீ தேகா ஹம்னே கபீ

பர் இஸ் கீ ஃஜரூரத் க்யா ஹோகீ

யே மா, யே மா தேரீ ஸூரத் ஸே அலக்

பகவான் கீ ஸூரத் க்யா ஹோகீ, க்யா ஹோகீ

உஸ் கோ நஹீ தேகா ஹம்னே கபீ

நாங்கள் அவரைப் பார்த்ததில்லை

அப்படிப் பார்ப்பதற்கும் என்ன அவசியம் இருக்கிறது?

அம்மா! அம்மா!

உன் முகத்தைவிட வேறானதாகவா பகவான் முகம் இருக்கும்?

நாங்கள் பகவானைப் பார்த்ததில்லை! (உன்னைப் பார்க்கிறோம்!)

இன்ஸான் தோ க்யா தேவ்தா பீ  ஆன்சல் மே பலே தேரே

ஹை ஸ்வர்க்  இஸீ துனியாமே கதமோ(ன்) கே தலே தேரே

மம்தா ஹீ லுடாயீ ஜிஸ்கே நயன் ஐஸீ கோயீ மூரத் க்யா ஹோகீ

யே மா, தேரீ ஸூரத் 

மனிதர்கள் என்ன, தேவதைகளையும் நீதானே போஷித்து வளர்க்கிறாய்!

உன் காலடியில் ஸ்வர்க்கமே இருக்கிறது!

உன் கண்களிலிருந்து வரும் அன்புக்கு ஈடாக எந்த மூர்த்தியிலிருந்தாவது வருமா?

அம்மா, நாங்கள் கடவுளைப் பார்த்ததில்லை, உன்னைப் பார்க்கிறோம்!

க்யூ(ன்) தூப் ஜலாயே தேகோ(ன்) ..கீ கம் கீ கடா பர்ஸே

யே ஹாத் துவா(ன்) வோ வாலே, ரஹ்தா ஹை ஸதா ஸர் பே

தூ ஹை தோ அந்தேரே பத் மே ஹமே,ஸூரஜ் கீ ஃஜரூரத் க்யா ஹோகீ

யே மா தேரீ ஸூரத்...

அம்மா! உலகில் வெய்யில் காலம் போன்று கஷ்டங்கள் கொளுத்தலாம்,

மழை போன்று வருத்தங்கள் வரலாம்

ஆனால் உன்னுடைய வாழ்த்தும் கரங்கள் எப்போதும் எங்களை ரட்சிக்கின்றன!

நீ இங்கு இருக்கையில், வெளிச்சத்திற்கு சூரியன் தேவையா, என்ன!

அம்மாநாங்கள் உன் முகத்தைப் பார்க்கிறோம், கடவுளைக் கண்டதில்லை!

கஹதே ஹை தேரீ ஷான் மே ஜோ கோயீ ஊஞ்சே போல் நஹீ

பகவான் கே பாஸ் பீ  மாதா தேரே ப்யார் கா மோல் நஹீ.

ஹம் தோ யஹீ ஜானே  துஜ் ஸே படீ ஸம்ஸார் கீ தௌலத் க்யா ஹோகீ

யே மா தேரீ ஸூரத் ஸே அலக்..

அம்மா! உன்னைப் புகழும் சொற்களைவிட உயர்ந்த சொற்கள் இல்லை!.

உன் அன்புக்கு ஈடாக கடவுளும் எதுவும் செய்ய முடியாது!

அம்மா! உன்னைவிட உயர்ந்த செல்வம் இந்த உலகத்தில் எதுவும் இல்லை

என்பது எங்களுக்கு நன்றாகத் தெரியும்!

அம்மா! அம்மா! நாங்கள் உன் முகத்தைப் பார்க்கிறோம்

கடவுளைப் பார்த்ததில்லை!

ஆனால் கடவுள் உன்னைவிட வேறாகவா இருக்கப்போகிறார்!

Song: Usko nahi dekha hum ne kabhi Film: Daadi Maa 1966 Lyrics: Majrooh Sultanpuri

Music : Roshan Singers: Manna Dey & Mahendra Kapoor

Youtube link:  https://www.youtube.com/watch?v=I1XWUbWIO9c

version song;  https://www.youtube.com/watch?v=JQo_-TJcQP8&list=PLFDrs9fiiaE45Ew-dS-99nyVU4yZGEaxj&index=154

பாஹடி ராகத்தில்அமைந்த அருமையான பாட்டு! மஜ்ரூஹ் ஸுல்தான்புரியின் அருமையான கவிதை, ரோஷனின் அரிய படைப்பு! மஹேந்த்ர கபூரும் மன்னாடேயும் இணைந்து அருமையாகப் பாடுகிறார்கள்! கண்ணில் நீர் துளிர்க்காமல் இதை கேட்காதவர் இருக்கமுடியாது!

நம் படங்களில் தெய்வபக்திப் பாடல்கள் அருமையாக அமைந்திருக்கின்றன.

தூ ப்யார் கா ஸாகர் ஹை


तू प्यार का सागर है   तेरी इक बूँद के प्यासे हम
लौटा जो दिया तुमने   चले जायेंगे जहां से हम
तू प्यार का सागर

घायल मन का पागल पंछी उड़ने को बेक़रार
पंख हैं कोमल, आँख है धुँधली, जाना है सागर पार
अब तू ही इसे समझा, राह भूले थे कहाँ से हम
तू प्यार का सागर

इधर झूम के गाये ज़िंदगी, उधर है मौत खड़ी
कोई क्या जाने कहाँ है सीमा, उलझन आन पड़ी
कानों में ज़रा कह दे, कि आएँ कौन दिशा से हम
तू प्यार का सागर… 

தூ ப்யார் கா ஸாகர் ஹை

தேரீ ஏக் பூந்த் கே ப்யாஸே ஹம்

லௌடா ஜோ தியா ஹம்னே சலே ஜாயேங்கே ஜஹா(ன்) ஸே ஹம்

தூ ப்யார் கா ஸாகர் ஹை

நீ கருணைக் கடல்!

உன் ஒரு துளிக்காக நாங்கள் ஏங்கி நிற்கிறோம்!

நீ எங்களை நிராகரித்துவிட்டால்

நாங்கள் இந்த உலகை விட்டே போய்விடுவோம்!

நீ கருணைக் கடல்!

காயல் மன் கா பாகல் பஞ்சீ உட்னே கோ பேகரார்

பங்க் ஹை கோமல், ஆன்க் ஹை துந்த்லீ, ஜானா ஹை ஸாகர் பார்

அப் தூ ஹி இஸே ஸம்ஜா, கே ராஹ் பூலே தே கஹா(ன்) ஸே ஹம்

தூ ப்யார் கா ஸாகர் ஹை..

காயம் பட்ட மனதாகிய இந்தப் பறவை பறப்பதற்கு துடிக்கிறது!

சிறகுகள் மெல்லியவை, கண்கள் தெளிவாக இல்லை

ஆனால் இந்த சமுத்திரத்தைக் கடக்கவேண்டும்!

நாங்கள் எங்கே வழியைத் தவறவிட்டோம் என்று

நீதான் இப்பொழுது எங்கள் மனதிற்குச் சொல்ல வேண்டும்!

நீ கருணைக் கடல்!

இதர் ஜூம் கே காயே ஃஜிந்தகீ, உதர் ஹை மௌத் கடீ

கோயீ க்யா ஜானே, கஹா(ன்) கை ஸீமா, உல்ஜன் ஆன் படீ

கானோ(ன்) மே ஃஜரா கஹ் தே, கே ஆயே(ன்கௌன் தி ஸே ஹம்

தூ ப்யார் கா ஸாகர் ஹை

ஒரு பக்கம் வாழ்வில் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்

அந்தப் பக்கமோ மரணம் நிற்கிறது!

இவற்றைப் பிரிக்கும் எல்லை எது? தெரியவில்லை!

மனதில் ஒரே குழப்பம் நிலவுகிறது!

நீயே என் காதில் சொல்லிவிடுநாங்கள் எந்தப் பக்கத்திலிருந்து  வந்து உன்னை அடைவது?

நீ கருணைக் கடல்

அந்த ஒரு துளிக்காக நாங்கள் ஏங்கி நிற்கிறோம்!

Song: Tu Pyar ka sagar hai Film: Seema 1955 Lyrics: Shailendra

Music: Shankar Jaikishan  Singer: Manna Dey & கோரஸ்

YouTube link:  https://www.youtube.com/watch?v=eMJ3UWYpzcI

நமது திரைப்படங்களிலேயே சிறந்த பாடல்களில் ஒன்று!

மாலிக் தேரே பந்தே ஹம்

मालिक तेरे बन्दे हम  ऐसे हों हमारे करम
नेकी पर चलें और बदी से टलें  ताकि हँसते हुए निकले दम
मालिक तेरे बन्दे हम


ये अंधेरा घना छा रहा  तेरा इंसान घबरा रहा
हो रहा बेखबर, कुछ आता नज़र
सुख का सूरज छुपा जा रहा
है तेरी रोशनी में जो दम  तो अमावस को कर दे पूनम
नेकी पर चलें

जब ज़ुल्मों का हो सामना  तब तू ही हमें थामना
वो बुराई करें, हम भलाई भरें नहीं बदले की हो कामना
बढ़ उठे प्यार का हर कदम  और मिटे बैर का ये भरम
नेकी पर चलें

बड़ा कमज़ोर है आदमी  अभी लाखों हैं इसमें कमी
पर तू जो खड़ा, है दयालू बड़ा  तेरी किरपा से धरती थमी
दिया तूने हमें जब जनम  तू ही झेलेगा हम सबके ग़म
नेकी पर चलें… 

மாலிக் தேரே பந்தே ஹம்

ஐஸே ஹோ ஹமாரே கரம்

நேகீ பர் சலே ஔர் பதீ ஸே டலே

தாகி ஹன்ஸ்தே ஹுவே நிக்லே தம்

மாலிக் தேரே பந்தே ஹம்!

ஆண்டவனே, நாங்கள் எல்லோரும் உனக்கு ஆட்பட்டவர்கள்

எங்கள் கரங்கள் நல்ல செயல்களிலேயே ஈடுபடட்டும்

தீயவற்றிலிருந்து விலகி நிற்போம்

சந்தோஷமாகவே, உயிர் பிரியட்டும்!!

ஆண்டவனே, நாங்கள் உனக்கு ஆட்பட்டவர்கள்

அந்தேரா கனா சா ரஹா

தேரா இன்ஸான் கப்ரா ரஹா

ஹோ ரஹா பேகபர், குச் ஆதா நஃஜர்

ஸுக் கா ஸூரஜ் சுபா ஜா ரஹா

ஹை தேரீ ரோஷனீ மே ஜோ தம்

வோ அமாவஸ் கோ கர்தே பூனம் 

நேகீ பர் சலே

இங்கு எங்கும் இருள் கனத்துப் பரவுகிறது

உன் மக்கள் பீதியில் இருக்கிறார்கள்

எங்கும் எதுவும் கண்ணிற்குத் தெரியவில்லை

சுகம் என்னும் சூரியன் மறைந்துவிட்டான்

ஆனால் உன்னிடம் உள்ள ஒளியின் சக்தி

அது அமாவாசையையும் பௌர்ணமியாகச் செய்துவிடும்!

எங்கள் கரங்கள் நல்ல வழியிலேயே செயல்படட்டும்!

ஜப்  ஜுல்மோ(ன்) கா ஹோ ஸாம்னா

தப் தூ ஹி ஹமே தாம் நா

புராயீ கரே(ன்) , ஹம் பலாயீ பரே(ன்)

நஹீ பத்லே கீ ஹோ காம்னா

பத் உடே ப்யார் கா ஹர் கதம்

ஔர் மிடே பைர் கா யே பரம்

நேகீ பர் சலே..

நாங்கள் தீமைகளை எதிர்கொள்ள நேர்ந்தால்

நீயே எங்களை நிதானப்படுத்து!

அவர் கெட்டதே செய்தாலும், நாம் நல்லதாகவே எடுத்துக்கொள்வோம்

பதிலுக்குப் பதில் பழிவாங்கும் எண்ணம் வராமலிருக்கட்டும்

நாங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் அன்பு நிறைந்ததாக இருக்கட்டும்

துவேஷம் இல்லாமல் இருக்கட்டும்

எங்கள் கரங்கள் நல்லதையே செய்யட்டும்!

நல்ல வழியிலேயே செல்வோம், தீயவற்றிலிருந்து விலகி நிற்போம்!

படா கம்ஃஜோர் ஹை ஆத்மீ

அபீ லாகோ(ன்) ஹை இஸ்மே கமீ

பர் தூ ஜோ கடா ஹை தயாலூ படா

தேரீ கிர்பா ஸே தர்தீ தமீ

தியா தூ நே ஹமே ஜப்  ஜனம்

தூ ஹீ ஜேலேகா ஹம் ஸப் கே கம்

நேகீ பர் சலே….

மனிதன் வலுவில்லாதவன், அதிலும் அனேக குறைகள் உள்ளவன்

ஆனால் நீ எல்லாவற்றையும் பொறுத்துக்கொள்ளும் தயாள இயல்புடையவன்

உன் கருணையினால் தான் இந்த உலகம் பிழைத்திருக்கிறது

நீதான் எங்களைப் பிறப்பித்தாய்

எனில் நீயே எங்கள் சுமைகளையும் தாங்குவாய்

நாங்கள் நல்லதையே செய்வோம், தீயவற்றிலிருந்து விலகுவோம்

சந்தோஷமாகவே எங்கள் உயிர் பிரியட்டும்!

Song: Ae Malik tere bandhe hum Film: So Ankhen Barah Haath 1957 Lyrics: Bharat Vyas

Music: Vasant Desai  Singer: Manna Dey & Lata Maangeshkar (separately)

 நமது திரைப்படங்களில் வந்த பிரார்த்தனைப் பாடல்களிலேயே இது மிகச் சிறந்தது. வட இந்தியாவில் பல பள்ளிகளில் பிரார்த்தனைப் பாடலாக இருந்தது. பாகிஸ்தானிலும் இதை விரும்பி வரவேற்றார்கள்!

இது பைரவ் (பைரவி அல்ல) ராகத்தில் அமைந்த பாட்டு!

நமது திரை இசையில் இது அமர கீதமாகிவிட்டது-

Like an Anthem!

  ஹிந்தித் திரை இசையில் நமது பாரத பண்பாட்டு மரபு எப்படி விரவி வருகிறது என்று பார்த்தோம். சாஹித்யத்தில் நமது இலகிய மரபுகள் பயின்று வருகின்றன. திரை இசை பெரும்பாலும் நமது பிரதேச, சாஸ்திரீய இசையின் அடிப்படையில் அமைந்ததே. மேலை நாட்டு அம்சங்களையும் நமது மரபுக்கு ஒப்பதாகவே செய்தார்கள். நமது பழைய இசையமைப்பாளர்கள் ஒரு ராகத்தை மூன்று-நான்கு நிமிஷங்களுக்குள் ஒரு பாட்டில் பிழிந்து கொடுத்தார்கள் என்றெல்லாம் பார்த்தோம். தெய்வச் சிந்தனை கொண்ட பாடலுடன் இக்கட்டுரைத் தொடர் தொடங்கியது. அதே தெய்வச் சிந்தனையுடன்- இந்த மூன்று பிரார்த்தனைகளுடன் இந்தத் தொடரை முடிப்போம்.

விரும்பிப் படித்தவர்களுக்கு நன்றி. 

முற்றும்

This Series on Hindi Film Songs is concluded.

Attachments area

Preview YouTube video Usko Nahin Dekha Humne Kabhi | Manna Dey, Mahendra Kapoor | Daadi Maa 1966 Songs | Tanuja, Mumtaz

Usko Nahin Dekha Humne Kabhi | Manna Dey, Mahendra Kapoor | Daadi Maa 1966 Songs | Tanuja, Mumtaz

Preview YouTube video Usko Nahin Dekha Humne Kabhi

Usko Nahin Dekha Humne Kabhi

Preview YouTube video Full Bhajan ‘Tu pyar ka sagar hai’ old Hindi movie Seema lyrics English translations.wmv

Full Bhajan ‘Tu pyar ka sagar hai’ old Hindi movie Seema lyrics English translations.wmv

Preview YouTube video AYE MAALIK TERE BANDE HUM – COMPLETE MALE VERSION -DO AANKHEIN BARAH HAATH (1957)

AYE MAALIK TERE BANDE HUM – COMPLETE MALE VERSION -DO AANKHEIN BARAH HAATH (1957)

Preview YouTube video Aye Maalik Tere Bande Hum (Male) [Full Version] – Do Aankhen Barah Haath.flv

Aye Maalik Tere Bande Hum (Male) [Full Version] – Do Aankhen Barah Haath.flv

Leave a comment

Leave a comment