
Post No. 8253
Date uploaded in London – 28 June 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ஜூலை 2020 நற்சிந்தனை காலண்டர்; சார்வரி வருடம் ஆனி -ஆடி மாதம்
பண்டிகை தினங்கள் – ஜூலை 4 வியாச பூஜை, குரு பூர்ணிமா , சாதுர்மாஸ்ய விரதம் ஆரம்பம் ; 20-ஆடி அமாவாசை; 24- திரு ஆடிப் பூரம் /ஆண்டாள் ஜெயந்தி; 25- கருட பஞ்சமி; 31- வரலெட்சுமி விரதம்
முகூர்த்த நாட்கள் – ஜூலை 2, 12 ;அமாவாசை – 20, பௌர்ணமி – 4;
ஏகாதஸி விரத நாட்கள் – 1, 16, 30;

ஜூலை 1 புதன் கிழமை
பகட்டான ஆடைகள் காதலர்களைக் கவரும்.
உஜ்வல வேஷ ரசனா காமிஜானாக்ருஷ்டயே – சம்ஸ்கிருத பொன்மொழி
Xxxx
ஜூலை 2 வியாழக் கிழமை
மன்மதனின் பாணங்களால் தாக்கப்படாதவர் யார் ?
கம் விடம்பயதி நோ குசுமேஷு ஹு – சுபாஷிதாவளி
Xxxx
ஜூலை 3 வெள்ளிக் கிழமை
மன்மதனை வெல்ல எவராலும் இயலாது
கந்தர்ப்ப தர்ப்பதலனே ந து கஸ்ஸித் ஈஷஹ – ப்ருஹத் கதா மஞ்சரி
Xxxx
ஜூலை 4 சனிக் கிழமை
மன்மதனை வெல்ல ஒரு சிலரால் இயலும்
கந்தர்ப்ப தர்ப்பதலனே விரலா மனுஷ்யாஹா- Kahavatratnakaar
xxx
ஜூலை 5 ஞாயிற்றுக் கிழமை
ஊடுதல் காமத்திற் கின்பம் – குறள் 1330
xxx

ஜூலை 6 திங்கட் கிழமை
நீடுக மன்னோ இரா –குறள் 1329
இரவுப் பொழுது நீடிக்கட்டும்
xxxx
ஜூலை 7 செவ்வாய்க் கிழமை
ஊடலில் தோற்றவர் வென்றார் -குறள் 1327
Xxxx
ஜூலை 8 புதன் கிழமை
புலத்தலின் புத்தேள் நாடு உண்டோ -குறள் 1323
Xxxx
ஜூலை 9 வியாழக் கிழமை
அறம் , பொருள் ஆகிய இரண்டை விட ஆசையின் /காமத்தின் பிடியே
வலியது என்பது என் கருத்து – வால்மீகி ராமாயணம் 2-53-9
காம ஏவா ர்த்த தர்மாப்யாம் கரீயாநிதி மே
Xxxx
ஜூலை 10 வெள்ளிக் கிழமை
எவரிடத்தில், எங்கே, காமம் துளிர் விடாமல் இருந்தது?
காமஹ கஸ்ய குதிரை ந ஜாயதே– கதா சரித சாகரம்
Xxxx

ஜூலை 11 சனிக் கிழமை
காமத்தை திருப்தி செய்ய முடியாது
காமம் மன்யேத துஷ்பூரம் – சதோபதேச பிரபந்தம்
Xxxx
ஜூலை 12 ஞாயிற்றுக் கிழமை
ஆசை என்பது வெல்லுதற்கரிய எதிரி
காமாஹா கஷ்டா ஹி சத்ரவஹ – கிராதார்ஜுனிய 11-35
Xxxx
ஜூலை 13 திங்கட் கிழமை
காமம் கணிச்சி உடைக்கும் (பெண்மைக் குணங்களை) -குறள்1251
காமம் கோடரி போல உடைத்தெறியும்
Xxxx
ஜூலை 14 செவ்வாய்க் கிழமை
காம நோய் உற்றார் அறிவதொன்று அன்று -குறள் 1255
காமம் வந்தால் அறிவு மழுங்கிவிடும் (Love is Blind)
Xxxx
ஜூலை 15 புதன் கிழமை
யாமத்தும் ஆளும் தொழில் -குறள் 1252
நள்ளிரவிலும் என்னை ஆட்டும் தொழில் காமம்
Xxxxx

ஜூலை 16 வியாழக் கிழமை
பெண்மை உடைக்கும் படை -குறள் 1258
பெண்மைக் குணங்களை அழித்து விடும் படை
Xxxx
ஜூலை 17 வெள்ளிக் கிழமை
இனிது கொல் தாமரைக் கண்ணன் உலகு?
பெண்ணை விட வைகுண்டம் இன்பம் தர முடியுமா?-குறள் 1103
XXX
ஜூலை 18 சனிக் கிழமை
காமம் பிடித்தால் பயமும் போகும், வெட்கமும் போகும்
காமா துராணாம் ந பயம் ந லஜ்ஜா– விக்ரம சரித 132
Xxx
ஜூலை 19 ஞாயிற்றுக் கிழமை
ஆசையுடையவன் தன்னைப் பற்றியே சிந்திப்பான்
காமி ஸ்வதாம் பஸ்யதி – சாகுந்தலம் 2-2
XXX
ஜூலை 20 திங்கட் கிழமை
காமக் கறை படியாதார் யார்? – ப்ருஹத் கதா மஞ்சரி
கோ ஹி காமேன ந கலீ க்ருதஹ
XXX

ஜூலை 21 செவ்வாய்க் கிழமை
காமத்தால் எரிச்சல் (Frustration) அடையாதோர் உண்டா ?- கதா ஸைத் சாகரம்
கோ ஹி காமேன ந விடம்ப்யதே
XXX
ஜூலை 22 புதன் கிழமை
காமம் தனது பலனைப் பெற , மக்களைப் பைத்தியமாக்கி விடும்
த்வரயதி ரத்து மஹோ ஜனம் மனோ பூ ஹு – சிசுபாலவாதம்
XXX
ஜூலை 23 வியாழக் கிழமை
காமத்தை வெல்ல முடியாது
துர்நிவாரோ ஹி மன்மதஹ- ப்ருஹத் கதா மஞ்சரி
XXX
ஜூலை 24 வெள்ளிக் கிழமை
காமத் தீயை அணைக்க முடியாது – ப்ருஹத் கதா மஞ்சரி
துஷ் சிகித்யஹ ஸ்மரா நலஹ
XXX
ஜூலை 25 சனிக் கிழமை
காமம் போல் எதிரி கிடையாது
ந காம சத்ருசோ ரிபுஹு – யோக வாசிஷ்டம்
XXX

ஜூலை 26 ஞாயிற்றுக் கிழமை
காமமுள்ள பெண் இரு முறை சிந்திக்கமாட்டாள்
ந சைவம் க்ஷமதே நாரீ விசாரம் மார மோஹிதா – கதா ஸைத் சாகரம்
XXX
ஜூலை 27 திங்கட் கிழமை
காமத்தால் தகிப்பவர்க்கு காலம், இடம், குணம் தெரியாது
ந தேச காலவ் ஹி யதார்த்த தர்மாவ வேக்ஷதே காமரதிர் மனுஷ்யஹ- வால்மீகி ராமாயணம் 4-33-55
XXX
ஜூலை 28 செவ்வாய்க் கிழமை
வெல்ல முடியாத காமம் பற்றி எச்சரிக்கையாக இருங்கள் – சதோபதேச பிரபந்தம்
பேதவ்யம் துர்ஜயாத் காமா த்
Xxx
ஜூலை 29 புதன் கிழமை
உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்
கள்ளுக்கில் காமத்திற்கு உண்டு -குறள் 1281
Xxxxx
ஜூலை 30 வியாழக் கிழமை
மலரினும் மெல்லிது காமம் – குறள் 1289
Xxxx
ஜூலை 31 வெள்ளிக் கிழமை
கொண்கன் பழிகாணேன் கண்டவிடத்து -குறள் 1285
கணவனைக் கண்டவுடன் குற்றமெல்லாம் பறந்தோடிப் போய்விடுகிறது
xxxx

ஒரு நாள் ஏழு நாள் போல் செல்லும் – குறள் 1269, 1278
காதலர் இல்லாவிடில் ஒரு நாள் 7 நாள் போல தோன்றுகிறது
Tags — மன்மதன், லீலை, காமம், ஆசை ஜூலை 2020, காலண்டர்
–subham–