
Post No. 8334
Date uploaded in London – 13 July 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com

சங்க இலக்கிய நூல்களில் தமிழ் ஆட்டிடையர்கள் பயன்படுத்தும் சீழ்க்கை ஒலி (whistle) பற்றிய குறிப்புகள் உண்டு . ஆங்கிலத்தில் நாம் அதை விசில் (whistle) என்று சொல்வோம். தமிழிலும் சர்வ சாதாரணமாக ‘அவன் விசில் அடித்தான்; பெண்களை பார்த்து ‘விசில்’ அடிக்கிறான்’ என்றும் சொல்லுவோம் . இப்போதும் கூட பிரிட்டனில் ஆடு மேய்க்கும் இடையர்கள் சீழ்க்கை ஒலியைப் பயன்படுத்துகின்றனர். மாலை நேரம் நெருங்கியவுடன், அவர்கள் வளர்க்கும் நாயை அனுப்புவார்கள். வாயினால் விசில் ஒலியை எழுப்பியவுடன் அந்த நாய்கள் , ஆடுகளை சுற்றி வளைத்து அவைகளுக்கான அடைப்பு வேலிக்குள் தள்ளும். எல்லா ஆடுகளையும் உள்ளே கொண்டு வந்து அடைக்கும் வரை சீழ்க்கை ஒலி மூலமே ஆட்டிடையன் நாய்க்கு செய்தி அனுப்புவான்.
சங்க இலக்கியத்தில் சீழ்க்கை என்ற சொல் இல்லை. ஆனால் அதை ‘நெடுவிளி’ என்ற சொல்லால் அழைப்பர்.
அகனானூற்றில் — பாடல் 253-ஜப் பாடியவர் நக்கீரர். அவர் சொல்கிறார்
“பகைமுனை அறுத்துப் பல் இனம் சாஅய்
கணம்சால் கோவலர் நெடுவிளிப் பயிர் அறிந்து
இனம் தலைத் தரூஉம் துலங்கு இமில் நாள் ஏற்றுத் தழூஉபினர் ………………………”
பொருள்
தம்முடைய நெடிய கூப்பிட்டொலியினை அறிந்து பசுவினம் எல்லாம் தம்மிடத்தே ஒன்றாகக் கூடிவருமாறு செய்யும் சிறப்புடையவர் கோவலர் (கோபாலன் =கோவலன்)
கீழ்கண்ட இடங்களில் அகனானூற்றிலும் மணிமேதையிலும் காணலாம்
நெடு விளி – அகனானூறு 79-15, 94-8, 253- 12,
மணி -6-113

நெடு விளிப் பருந்து – அகம் 299-6 (விசில் அடிக்கும் பருந்து)
இதே போல பல நூற்றா ண்டுகளாக ஒரு தீவில் நடக்கிறது ;அந்த விசில் மொழியைப் பாதுகாக்க யுனேஸ்கோ (UNESCO) நிறுவனமும் அதைப் ‘பாதுகாக்கப்பட வேண்டிய பாரம்பர்யம்’ (Heritage) என்று அறிவித்து அந்தத் தீவின் கல்வி நிறுவனங்களில் விசில் மொழியை– சீழ்க்கை ஒலியை — பாடத்திட்டமாக வைத்துள்ளது.
ஸ்பெயின் நாட்டுக்குச் சொந்தமான கானரி தீவுகளில் ஒரு குட்டித் தீவு கொமெரா (Gomera in Canary Islands of Spain) . குவெஞ்சி இனமக்கள் (Guanche) வசிக்கின்றனர் அவர்கள் ஐந்து கிலோ மீட்டர் தொலைவு வரை கேட்கும் ஒலியை, வாய் மூலம் விசில் அடித்துப் பயன்படுத்துகின்றனர். பள்ளத்தாக்கு நிறைந்த மலைப்பகுதி என்பதால் அந்தக் காலத்தில் ஓடிப்போய் கூப்பிட முடியாது. முதலில் குவெஞ்சி மொழியில் விசில் அடிப்ப
ர். சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்னர் ஸ்பெயின், அதை வசப்படுத்தியதால் இப்பொழுது ஸ்பானிய மொழியில் விசில் அடிக்கின்றனர். அது 5 கிலோமீட்டர் வரை கேட்கும்.
‘சாப்பாடு ரெடி , உடனே வீட்டுக்கு வா’, ‘திரும்பி வரும்போது அடுப்பு எரிக்க கொஞ்சம் விறகு வெட்டிக் கொண்டு வா’’ என்பதை எல்லாம் வாய் மொழி விசில் மூலமே சொல்லிவிடுகிறார்கள்.
இதில் இன்னொரு வியப்பான விஷயம் ஸ்பானிய மொழியில் அந்த மொழியை சிப்லோ கோமேரா (Silbo Gomera) என்று அழைக்கின்றனர். சில்போ (silbo) என்பது தமிழ் சீழ்க்கை என்பதன் மருவுதான்.அதுவே ஆங்கிலத்தில் விசில் (Silbo=Silvo= Vislo= Whistle) என்று மருவி இருக்கிறது ; ஆக சங்க இலக்கிய ஆட்டிடையனுடன் மட்டும் ஒற்றுமை நின்றுவிடவில்லை!
நான் பல கட்டுரைகளில் எழுதிவருவதை போல தமிழும் சம்ஸ்கிருதமும்தான் உலக மொழிகளின் மூல மொழி (source language) என்பதை நிரூபிக்க இதுவும் சான்றாக கிடைத்துள்ளது.
நாகரீகத்தை உலகம் முழுதும் பரப்பியது தமிழர்களும் வட இந்திய இந்தியர்களும்தான் . இதனால் உலகின் பழைய மொழிச் சொற்களை தமிழ் அல்லது சம்ஸ்கிருத மூல மொழிக்கு (Originate) இழுத்து வந்து விடலாம். சம்ஸ்கிருத மொழியுடன் நெருங்கிய ஸ்பானிய மொழியில் ‘சீழ்க்கை’ எப்படி இடம் பெற்றது?
இதற்குப் பதில் — ஒரே மூலத்தில் இருந்து பிறந்த சொல் ஸ்பானியத்தில் சிவிலோ (Silvo= silbo= Whislo= Whistle) என்று மாறி அது ஆங்கிலத்தில் விசில் என்று மாறியிருக்கிறது!
ஒரு சொல், இரு சொல் அல்ல! ஆயிரக்கணக்கான தமிழ் சொற்கள் ஆங்கிலத்திலும் பிற ஐரோப்பிய மொழிகளிலும் உளது. பிள்ளை என்பதை பிரெஞ்சு மொழியிலும் ஆண் /பெண் பிள்ளே (Fils-son; fille-daughter) என்று தான் சொல்லுவர்!
முன்னரே தமிழர்களும் ஆப்பிரிக்க காட்டுவாசிகளும் பயன்படுத்தும் டமார மொழி (Speaking Drums) பற்றி எழுதியுள்ளேன் .


tags — விசில் மொழி,நெடு விளி, பருந்து, WHISTLE ,இடையர்கள்
—-subham—