இளம் பெண்ணின் சமயோசித உதவி! (Poat No.8444)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 8444

Date uploaded in London – – –3 August 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

உண்மைச் சம்பவம்!

இளம் பெண்ணின் சமயோசித உதவி!

ச.நாகராஜன்

பிரான்ஸில் உள்ள சிறு நகரம் நோயான் (Noyon). ஒரு நாள் சாக்கடையைச் சுத்தம் செய்யும் நான்கு தொழிலாளிகள் சாக்கடையைச் சுத்தப் படுத்தும் போது அதிலேயே மாட்டிக் கொண்டார்கள். அதில் கிளம்பிய நச்சு வாயுவால் அவர்களால் மேலே ஏறி வர முடியவில்லை. நேரமோ இரவு பதினோரு மணி. கத்தினாலும் உதவிக்கு யாரும் வரவில்லை. இன்னும் சில நிமிடங்கள் அதிலேயே இருந்தால் நிச்சயம் உயிர் போய் விடும்.

அப்போது அருகிலிருந்த ஒரு குடும்பத்தில் வேலை பார்த்து வந்த ஒரு இளம் பெண் அந்த சாக்கடைக்கு அருகில் வந்து நிலைமையை அறிந்து கொண்டாள். பதினேழே வயதான அந்தப் பெண் ஓடோடிச் சென்று ஒரு கயிறைக் கொண்டு வந்தாள். அதைச் சாக்கடையில் தொங்க விட்டாள். இருவர் அதைப் பிடித்துக் கொண்டு மேலேறி வந்தனர். ஆனால் மூன்றாவது மனிதரைக் காப்பாற்ற விழையும் போது அவளுக்கு சாக்கடையிலிருந்து வந்த அந்த நச்சு வாயுவால் மூச்சுத் திணறியது. மயக்கமடையும் நிலைக்கு அவள் வந்து விட்டாள். தனது சமயோசித புத்தியால் அந்தக் கயிறைத் தன் தலை மயிருடன் இறுகக் கட்டிக் கொண்டாள்.

கயிறைப் பிடித்துக் கொண்ட மூன்றாவது நபர் மேலே வந்தார். நான்காவது தொழிலாளியும் காப்பாற்றப் பட்டார்.

மறு நாள் செய்தியைக் கேள்விப்பட்ட நகரமே பரபரத்தது. அனைவரும் அந்த இளம் பெண்ணைப் பாராட்டினர். நோயான் நகர கார்பொரேஷன் அந்தச் சிறுமியைப் பாராட்டும் விதமாக 600 லிவர்ஸைப் (Livers) பரிசாக வழங்கியது. அவளுக்கு நகரத்திற்குச் சொந்தமான விசேஷ மகுடத்தைச் (Civil Crown) சூட்டிக் கௌரவித்தது. அத்துடன் அவள் பெயர் பொறித்த நகரத்தைச் சித்தரிக்கும் ஒரு மெடலையும் கொடுத்தது. அதில் அவளது வீரச் செயலும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த வீரச் செயலைக் கேள்விப்பட்ட் ஆர்லியன்ஸ் டியூக் (Duke of Orleans) அவளுக்குத் தன் சார்பில் 500 லிவர்ஸை அனுப்பி கௌரவித்தார். அத்துடன் வருடத்திற்கு 200 லிவர்ஸை அவள் வாழ்நாள் முழுவதும் கொடுத்து வர ஆணை பிறப்பித்தார்.

தன் உயிரையும் பொருட்படுத்தாமல் மற்றவருக்கு உதவ முன் வந்த அந்த இளம் பெண்ணை நாடே போற்றி மகிழ்ந்தது!

*

இதே போல இன்னொரு இளம் பெண்ணின் உதவி ஒரு மன்னனையே காப்பாற்றியது.

ஃபால்கிர்க் யுத்தம் நடப்பதற்குச் சில நாட்கள் முன்னம் நடந்த சம்பவம் இது.

ஆங்கிலேயருக்கு பெரும் சவாலாக விளங்கிய இந்தப் போரில் லார்ட் லூடன் (Lord Louden)  மோய் கோட்டையை  (Moy Castle) எப்படியேனும் பிடிக்க வேண்டும் என்று திட்டமிட்டார். இன்வெர்னெஸ் நகருக்கு ஆறு மைல் தொலைவில் இருந்தது அது.

வெகு கவனமாகத் திட்டம் தீட்டினார் லூடன்.

இன்வெனெஸ் நகரில் உள்ள ஒரு வீட்டில் ஆங்கில ராணுவ அதிகாரிகள் சிலர் ராத்திரி நேரத்தில் கோட்டையைக் கைப்பற்றக் கிளம்புவதற்கு முன்னர் நேரத்தைப் பொழுதுபோக்காகச் செலவழிக்க குழுமினர். பெயிலி என்ற பெண்மணிக்குச் சொந்தமான வீடு அது. அந்த வீட்டில் பெயிலியின் பெண்ணும் இருந்தாள். அவளுக்கு வயது 13 அல்லது 14 இருக்கும். அதிகாரிகள் கேட்டதைக் கொடுப்பதற்காக அவர்கள் அருகில் அவள் நின்று கொண்டிருந்தாள்.

ராணுவ அதிகாரிகள் தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்ததை அவள் கேட்டுக் கொண்டிருந்தாள். இரவு கோட்டையைத் திடீரென்று தாக்கிப் பிடிக்கும் திட்டத்தை அவள் நன்கு புரிந்து கொண்டாள்.

சமயம் பார்த்து அந்த வீட்டிலிருந்து மெதுவாக நழுவி வெளியே சென்றாள். மோய் கோட்டைக்குச் செல்லும் சாலையில் ஷுவும் சாக்ஸும் இல்லாமல் வெகு வேகமாக ஓடினாள். ஷூக்களை அணிந்தால் வேகமாக ஓட முடியாது என்பதால் அவள் ஷுக்களை அணியவில்லை.

லூடன் அந்தக் கோட்டையை அடைவதற்கு முன்பே அங்கு சென்ற அவள் இளவரசரிடம் என்ன நடக்கப் போகிறதென்று என்பதை விவரித்தாள். உடனேயே இரவு உடை அணிந்தவாறு இருந்த இளவரசர் அப்படியே தப்பி ஓடி அருகிலிருந்த மலைக்குள் சென்று ஒளிந்து கொண்டார்.

ஓடி வந்த களைப்பில் மூச்சுத் திணறி மயக்கமுற்ற இளம் பெண்ணை இளவரசர் காப்பாற்றி நன்றி கூறினார்.

படையுடன் வந்த லூடன் ஏமாந்தார்.

ஒரு சிறு பெண்ணின் கூரிய சமயோசித புத்தி ஒரு கோட்டையின் இளவரசரையே காப்பாற்றியது!

tags– இளம் பெண், சமயோசித , உதவி,

***

Leave a comment

Leave a comment