
Post No. 8451
Date uploaded in London – 4 August 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
அவ்வையார் வாழ்வில் பல புதிர்கள், மர்மங்கள், ரஹஸ்யங்கள் உண்டு.
சங்க இலக்கியத்தில் ஏறத்தாழ 30, 000 வரிகள், ஒரு லட்சம் சொற்கள் இருக்கின்றன. அங்கும் சரி, திருக்குறளின் சுமார் 9300 சொற்களிலும் சரி ‘ஒள’ என்ற எழுத்தில் சொல்லே கிடையாது.அந்தப் பெண்புலவரே ‘ஒள’ என்பதற்குப் பதிலாக தன் பெயரை ‘அவ்’ ( அவ்வையார்) என்றுதான் எழுதி இருப்பார் போலும்!
சங்க காலப் பாடலின் கீழ் இன்னார் பாடியது என்பதில் ‘ஒளவையார்’ என்ற சொல் இருக்கும். அதை எவரும் சங்க காலச் சொல்லடைவில் சேர்ப்பதில்லை.. ஏனெனில் அவை பிற்காலத்தில் சங்க கால நூலைத் தொகுத்தோர் எழுதியது . தொல்காப்பியத்திலும் கூட ‘ஒள’- வில் துவங்கும் சொல் கிடையாது.’ஒள’ — எழுத்து பற்றிப் பேசும் இடங்களில் ‘ஒள’ -காரம் என்று வரும்.
***

அவர் போடும் இரண்டாவது புதிர்:–
சில நாட்களுக்கு முன்னர் ஒரு இ மெயில் வந்தது. அதில் கொன்றை வேந்தனில் உள்ள புதிருக்கு எம்.எஸ். மூர்த்தி என்பவர் விளக்கம் கேட்டிருந்தார் . எனக்கும் இன்றுவரை பதில் கிடைக்கவில்லை; புதிரை விடுவிக்க முடியவில்லை ; ஒரு வேளை , உங்களுக்கு விடை தெரிந்தால் எழுதுங்கள். இதோ புதிர்
44. தேடாது அழிக்கின் பாடாய் முடியும் – பொருளைத் தேடிச் சேர்க்காது, இருப்பதை செலவிட்டுக் கொண்டிருந்தால் துன்பத்தில் முடியும்
45. தையும் மாசியும் வையகத்து உறங்கு – தை, மாசி (வெயில் காலம்) மாதங்களில் வைக்கோல் வேய்ந்த வீட்டில் உறங்கு
46. தொழுது ஊண் சுவையின் உழுது ஊன் இனிது – பிறரிடம் வணங்கி அந்த ஊதியத்தில் உண்பதை விட பயிர் செய்து உண்பதே இனிது.
அவ்வையாரின் கொன்றை வேந்தனில் 45-ஆவது செய்யுளை படியுங்கள். தை, மாசி மாதங்கள் குளிர்காலம் ஆயிற்றே ; பாடலின் பொருள் தை , மாசி மாதங்களில் வைக்கோல் வீட்டில் உறங்கு என்று சொல்லப்பட்டிருக்கிறதே. இது சரியா ? என்று கேட்டிருந்தார்.
நான் எழுதிய பதிலில் சொன்னேன் :–
“என்னுடைய கொன்றை வேந்தன் புஸ்தகத்திலும் வைக்கோல் வீடு என்றே எழுதி இருக்கிறது. அதுமட்டுமல்ல அவ்வையாரின் படைப்புகளை நான் ஆங்கிலத்திலும் இந்த ‘பிளாக்’கில் வெளியிட்டுள்ளேன். அதிலும் வைக்கோல் வீடு அல்லது தரை என்றே மொழி பெயர்த்துள்ளனர் . இது சரியல்ல என்றே நான் கருதுகிறேன் ; அதற்கான காரணங்கள் :-
1.1935-ம் ஆண்டு ஆனந்த விகடன் தமிழ் அகராதியில் வையகம் என்பதற்கு வைக்கோல் என்ற பொருளே இல்லை. பூமி, தரை என்ற பொருளே உள்ளன.
2. தை , மாசி மாதங்கள் கோட்டை காலமும் அல்ல. சித்திரை வைகாசி என்று சொன்னால் பொருள் இருக்கும். ஏனெனில் சித்திரை வைகாசி அக்கினி நட்சத்திர காலம். ஆகவே தை , மாசி மாதங்களில் தரையில் படுத்துக்கொள் அல்லது வைக்கோல் பாயில், அல்லது வைக்கோல் வேய்ந்த வீட்டில் தூங்குங்கள் என்றும் அவ்வையார் சொல்லி இருக்க மாட்டார்.
3,ஒரு வேளை வையகத்துக்குப் பதிலாக மையகம் , பையகம் என்று இருக்கலாம் என்று கருதி அகராதியைப் பார்த்தால் அப்படி சொற்களும் இல்லை.
மொத்தத்தில் “வையகத்துறங்கு” என்பதன் பொருள் ‘வைக்கோல் வீட்டில் தூங்கு’ என்று சொன்னது பிழையே.
இந்தப் புரியாத புதிருக்கு யாராவது நல்ல விளக்கம் கொடுத்தால் பிழையை அகற்றிப் புதிய பொருளை எழுதலாம்.
****

மற்றும் ஒரு புதிர் அவ்வையார் கயிலாய மலைக்குச் சென்ற வழியாகும். சேரமான் பெருமாள் நாயனாரும் சுந்தர மூர்த்தி சுவாமிகளும் குதிரையில் கயிலாய மலைக்குச் செல்வதற்கு முன்னர் அவ்வையாரை விநாயகப் பெருமான் துதிக்கையில் ஒரு நொடியில் கயிலாய மலைக்கு அழைத்துச் சென்றுவிட்டார். தமிழ் நாட்டிலிருந்து கயிலாய மலை சுமார் 1800 மைல் தொலைவில் உள்ளது.
ஒரு நொடியில் 1800 மைல் சென்றால் ஒரு மணிக்கு 108,000 மைல் செல்லலாம். இப்போது அமெரிக்கா , ரஷியா விடும் விண்கலங்கள் கூட இதைவிடக் குறைவான தொலைவே செல்கின்றன. ஐன்ஸ்டைன் (ALBERT EINSTEIN) போன்ற அறிஞர்கள் சொல்லும் ஒளியின் வேகத்தை விட (ஒரு நொடிக்கு 1,86,000 மைல்) இது மிகக் குறைவுதான். ஆயினும் ஐன்ஸ்டைன் தியரி (THEORY)க்களையும் பொய்ப்பிக்கும் மநோ வேக தியரியை இந்துக்கள் சொல்கின்றனர் . நாரதர் போன்ற முனிவர்கள் திரிலோக சஞ்சாரி என்று பெயர் பெற்றவர்கள் . இவர்கள் ஐன்ஸ்டைன் கொள்கைகளை முறியடிக்கிறார்கள் .நமக்கு மிகப் பக்கத்தில் இருக்கும் ஆல்பா சென்டாரை நட்சத்திரம் நாலரை ஒளி ஆண்டு தொலைவில் உள்ளது; அதற்குக்கூட மனிதன் செல்ல முடியாது என்பது ஐன்ஸ்டைன் சித்தாந்தம். ஆனால் நாரதர் போன்ற முனிவர்கள் குறுக்குப்பாதையில் — மனோ வேகத்தில் -இதைவிடக் கூடுதல் தொலைவு செல்கிறார்கள் . ஆகவே அவ்வையார் அதிக தொலைவை ஒரு நொடியில் கடந்ததில் வியப்பில்லை. ஆயினும் விஞ்ஞானிகளுக்கு இது விளங்காத புதிரே !
***

ஆறு அவ்வையார் புதிர் !!
சுமார் 17 ஆண்டுகளுக்கு முன்னர் டாக்டர் தாயம்மாள் அறவாவாணன் எழுதிய “அவ்வையார் அன்றுமுதல் இன்றுவரை ” (புதுச்சேரி ) என்ற புஸ்தகத்தில் சங்க காலம் முதல் இன்றுவரை குறைந்தது ஆறு அவ்வையார்கள் இருந்தனர் என்று சொல்கிறார்.. இறைவனை நாடும் முதிய பெண்களுக்கு ‘அவ்வை’ என்ற பெயர் சூட்டப்பட்டது என்பதை ஆராய்ச்சி மூலம் எடுத்துக் காட்டியுள்ளார். கீழேயுள்ள இணைப்பில் பழைய கட்டுரைகளைக் காண்க; தமிழ் இலக்கண, இலக்கியம் தெரிந்தவர்கள் எளிதில் சொற் பிரயோக வேறுபாடுகளைக் காணலாம்.ஆக, ஔவையார் புதிர் , ‘பெயர்’களிலும் நீடிக்கிறது.
***
சங்க காலத்தில் சோழன் பெருநற்கிள்ளி இராஜசூய யாகம் செய்தான். அப்போது அவ்வையாருக்கு SPECIAL INVITATION ஸ்பெஷல் இன்விடேஷன் — சிறப்பு அழைப்பிதழ் — அனுப்பியிருந்தான் . எல்லோருக்கும் புதிர் போடும் அவ்வையாருக்கு பெரிய புதிர் அங்கே காத்து இருந்தது ; கல்தோன்றி மண் தோன்றாக்காலத்தே வாளொடு முன்தோன்றிய முத்த குடி தமிழர் இனம் . 1500 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு தமிழ் மன்னனை மற்றொரு தமிழ் மன்னன் அடித்துக் கொன்ற அசுரர் இனம். அப்படிப்பட்ட இனத்தைச சேர்ந்த சேர, சோழ , பாண்டிய மன்னர் மூவரும் ராஜசூய யக்ஞ மேடையில் ஒருங்கே அமைந்திருந்தனர். பெரு நற் கிள்ளி வளவனுடன், சேரமான் மாரி வெண்கோவும் கானப்பேர் தந்த உக்கிரப் பெருவழுதியும் ஒரே இடத்தில் உட்கார்ந்து இருந்தனர். அதைக் கண்டு வியப்புற்ற ஔவையார் உடனே, லண்டனிலுள்ள GUINNESS BOOK OF RECORDS கின்னஸ் புஸ்தக அலுவலத்துக்குப் போன் செய்து, உடனே போட்டோகிராஃபரை அனுப்புங்கள்; அரிய காட்சி ; போனால் கிடைக்காது; பொழுதுவிடிந்தால் இருக்காது என்று சொல்லவே அவர்களும் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு குடுமி பிடிச்சண்டை போட்ட தமிழினத்தின் முதல் ஒற்றுமைப் புகைப்படம் இது என்று வெளியிட்டனர்.;அவ்வையாரும் ஒரு ‘ரிக்கார்ட்’ RECORD இருக்கட்டும் என்று புறநானுற்றுப் பாடல் 366-ல் நீங்கள் மூவரும் இன்று போல் என்றும் வாழ்க என்று வாழ்த்திவிட்டுப் போனார் ; ஒவ்வொரு தமிழனும்
புறனானூறு பாடல் 366-ஐப் படிக்க வேண்டும் .
தமிழில் ஆறு அவ்வையார்கள் !!! (Post No …
tamilandvedas.com › 2020/07/11
11 Jul 2020 – சங்க காலம் முதல் இன்று வரை ஆறு அவ்வையார்கள் இருந்தனர் என்பது ஒரு ஆராய்ச்சி . தமிழ் … தமிழில் ஆறு அவ்வையார்கள் புஸ்தகம் பற்றிய மதிப்புரையை நான் … விற்றதே tamilandvedas.com, swamiindology.blogspot.com இதற்கு காரணம்.
அவ்வையார் | Tamil and Vedas
tamilandvedas.com › tag › அவ்…
21 Nov 2018 – தமிழ் மூதாட்டி அவ்வையார் எழுதிய பிள்ளையார் பாட்டு … சங்க காலம் முதல் தற்காலம் வரை ஆறு அவ்வையார்கள் இருந்தனர்; …
அவ்வையார், வள்ளுவர் பற்றிய …
tamilandvedas.com › 2015/11/14
14 Nov 2015 – ஆனால் கபிலர், அவ்வையார் என்ற பெயர்களில் பல புலவர்கள் உண்டு. ஆறு அவ்வையார்கள் இருந்ததாக ஒருவர் ஆராய்ச்சிப் …
You’ve visited this page 3 times. Last visit: 15/01/20
அவ்வையாரும் சாணக்கியனும் | Tamil …
tamilandvedas.com › tag › அவ்…
14 Feb 2018 – ஆனால் இறைவனை நாடி அறம் பாடிய முதுமைப் பெண்கள் எல்லோரையும் அவ்வையார் என்று அழைத்ததால் தமிழில் ஆறு அவ்வையார்கள் …
ஔவை | Tamil and Vedas
tamilandvedas.com › tag › ஔவ…
11 Oct 2019 – ஆனால் கபிலர், அவ்வையார் என்ற பெயர்களில் பல புலவர்கள் உண்டு. ஆறு அவ்வையார்கள் இருந்ததாக ஒருவர் ஆராய்ச்சிப் …
சாக்ரடீசும் அவ்வையாரும்! | Tamil and …
tamilandvedas.com › 2015/07/10
10 Jul 2015 – அவ்வையார் புகழ்பெற்ற தமிழ் கவிஞர், அறிஞர், இறையன்பர். சங்க காலம் முதல் தற்காலம் வரை ஆறு அவ்வையார்கள் இருந்தனர்; …
அவ்வையாரும் பேயும் | Tamil and Vedas
tamilandvedas.com › tag › அவ்…
19 Dec 2013 – குறைந்தது மூன்று முதல் ஆறு ஔவையார்கள் வரை வாழ்ந்ததாக ஆராய்ச்சியாளர் கருதுகிறார்கள். பேயால் மிரட்டப்பட்ட ஔவைப் …
காமசூத்திரத்துக்குப் …
tamilandvedas.com › 2019/05/28
28 May 2019 – This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com)). —subham— … தமிழில் ஆறு அவ்வையார்கள் !!! (Post No.8326) · தமிழ் ஒரு வினோத …
மன்னர்களை வசப்படுத்திய பேரழகி …
tamilandvedas.com › 2019/11/20
20 Nov 2019 – … rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. … தமிழில் ஆறு அவ்வையார்கள் !!!
தமிழ் டமாரம் பற்றிய அதிசயச் …
tamilandvedas.com › 2019/08/10
10 Aug 2019 – ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com)) தமிழ் முரசு, டமாரம் பற்றிய அதிசயச் … https://tamilandvedas.com/… … தமிழில் ஆறு அவ்வையார்கள் !!!
Page navigation
***
Tags — ஆறு அவ்வையார்கள் , ஒளவையார் புதிர்கள்
S.n. Ganapathi
/ August 8, 2020////“வையகத்துறங்கு” என்பதன் பொருள் ‘////நண்பரே ..எனது ஆத்ம நண்பர் ஒரு இலக்கண ஆசிரியர் .அவரிடம் கேட்டேன் அவர் கூறிய விளக்கம் சற்று பொருத்தமாக உள்ளது ………….***.ஐயா தை பனி தரையை துளைக்கும். மாசி பனி மச்சை துளைக்கும் என்பர்.
அந்த பனியிலிருந்து தற்காத்துக் கொள்ள வைகு அகத்து, உறங்கு அகத்து என்பதை வைக கத்து உறங்கு என சொல்ல வந்தவர் செய்யுள் ஆகலின் வையகத்து உறங்கு என்றிருப்பார்..***