
WRITTEN BY KATTUKKUTY
Post No. 8581
Date uploaded in London – 27 August 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
அடிக்கல்ல குளிரு, ஆனா துடிக்குது உதடு…..
Kattukutty
என்ன அர்த்தம் மாமா ……சொல்லு நீ ஆமா….
(திரு.சாமி நாதன் அவர்கள் 13-10-2018 post 5535
அன்று எழுதிய “கண் துடிப்பது நல்லதா கெட்டதா??? “
என்ற கட்டுரையின் தொடர்ச்சி)
தாத்தா, தாத்தா, என் அக்கா உங்களண்ட ஒண்ணு கேட்டுண்டு
வரச் சொன்னா…….அவளுக்கு நேத்து ராத்ரீலேர்ந்து உதடு
துடிக்கறதாம்.
நான்கேட்டேன் – உங்கக்கா எங்கே????
ஆபீஸுக்கு போயிருக்கா ராத்ரி 7 மணிக்கு தான் வருவா…..
சரி உங்கக்கா வந்தா பாக்கச் சொல்லு…….
நீங்க சொன்னாதா ….நான் போவேன்……அந்த அய்யர் வீட்டு பெண் சிறு குழந்தை சொன்னால் கேட்காதென்று எனக்குத் தெரியும்……..
அந்த பெண்ணிடம் சொன்னேன் ,”அடி உனக்கு அத்திம்பேர்
வரப் போரார்டி”……..வழக்கம்போல ஒரு சாக்லேட் வாங்கிக்
கொண்டு கத்திக்கொண்டே போனாள்……..

இரவு 9 மணிக்கு தட. தட என்று கதவைத் தட்டும் சத்தம்……
“அட, அடுத்தாத்து ஐஸ்வர்யா ராய்!!! “ என சொல்லிக் கொண்டே
கதவைத் திறந்தாள் என் மனைவி……
என்ன மாமா நீங்களே இப்படி செய்யலாமா …சொல்லலாமா?
அந்தக் கழுதை இந்த காம்பவுண்டுல இருக்கிற 24 பேர்வீட்டிலேயும் போய் எனக்கு அத்திம்பேர் வரப் போரர்ன்னு சொல்லிட்டு வந்திருக்கு…….
இந்த விஷயத்திற்கு நீ வராமல் குழந்தையை அனுப்பியது எந்த விதத்தில் எனக்கு மரியாதை???? உனக்கு ஜோதிடர் என்றால் அவ்வளவு இளப்பமா????
திடீரென ஒரு சத்தம் அவள் என்காலில் விழுந்து கிடக்கிறாள்….
என்னை மன்னிச்சடுங்க மாமா…..
உனக்கு கல்யாணம் ஆகப் போகிறது.
ரொம்ப தேங்ஸ்…..எனக்கு இப்ப வேண்டாம்….என்று சொல்லி
கொண்டே ஓடி விட்டாள்
உடலிலுள்ள நரம்புகள் இயற்கை விதியை மீறி சில சமயம்
துடிக்குமாம்.அப்போது, கண், உதடு, நெற்றி, விரல்கள்,
கால் விரல்கள், பெண்களுக்கு மார்பகங்கள், கை, புஜங்கள் துடிக்குமாம்.
இதற்கு மருத்துவத்துறையில் “மயோகிமியா“”(“MYOKYMIA”) என்று சொல்லுவார்கள்
காரணங்கள் பல — தூக்கமின்மை,சோர்வு ,நரம்பு தளர்ச்சி, போதை வஸ்துக்களை உபயோகிப்பது, அடிக்கடி காப்பி சாப்பிடுவது…….அடிக்கடி துடித்தால் தகுந்த மருத்துவரை நாடி, ஆலோசனை பெறலாம்,
எப்போதாவது துடித்தால் என்னிடம் வாருங்கள் இதோ பதில்!!!
என்னன்ன அங்கம் துடித்தால் என்னன்ன பலன்…….
இது அபிதான சிந்தாமணி என்ற நூலிலிருந்து தொகுத்தது.
முதலில் தலையிலிருந்து ஆரம்பிப்போம்.
தலை உச்சி துடித்தால் சங்கடங்கள் நீங்கும்.
தலையின வலது பக்கம் துடித தால்-பயம் வரும்.
இனிமேல் துடித்ததால் என்று அடிக்கடி எழுதப்போவதில்லை
அங்கத்தின் பெயரை எழுதினாலே அது துடித்தால் என்று
அர்த்தம் கொள்ளுங்கள்.ஓ கே… மேலே போகலாமா????
வலது நெற்றி- பிணி நீங்கும்
வலது புருவம்- பெருமை சேரும்
இடது புருவம்- கெட்ட வார்த்தைகள் கேட்க நேரும்
இரண்டு புருவங்களும் சேர்ந்து துடித்தால்-பெருமை சேரும்
வலது மேல் இமை-வழக்குகள் விலகும்
இடது மேல் இமை- துன்பங்கள் வந்து பின் போகும்
இரு மேலிமைகளும்-புகழ், செல்வம் சேரும்
வலது கீழ் இமை- நண்பருக்கு கேடு
இடது கீழ் இமை-நோய் விலகும்
இடக்கண் முழுவதும்- செல்வம் சேரும்
வலக்கண் முழுவதும்-நோய் விலகும்
வலது மூக்கு- செல்வம் சேரும்
இடது மூக்கு – செல்வம்சேரும்
மேல் உதடு- நல்ல காரியம் நடக்கும்
கீழ் உதடு- விதம்விதமான தின் பண்டங்கள் கிடைக்கும்
வலது பிடரி- நன்மை
இடது பிடரி- பெருமை கிடைக்கும்
கழுத்து……மரணச் செய்தி கிடைக்கும்
இனி மேல் கழுத்துக்குக் கீழ் வருவோமா????
வலது புஜம்- வழக்குகளில் வெற்றி
இடது புஜம் – தூரத்து செய்தி வரும்
இடது புஜத்துடன் இடது மார்பும் சேர்ந்து-மரணச்செய்தி வரும்
வலது கை- தோஷம் நீங்கும்
வலது முழங்கை-தெய்வ அருள் கிட்டும்
இடது முழங்கை- பணம் கிடைக்கும்
வலது உள்ளங்கை-பாதிப்பு
இடது உள்ளங்கை -லாபம்
வலது புறங்கை-வம்பு வழக்கு
இடது புறங்கை-துன்பம்
இனிமேல் விரல்களுக்கு வருவோமா……
நடு விரல்- நல்ல செய்தி
மோதிர விரல் – பெருமை
சிறு விரல் – மரணச் செய்தி
வலது கை அடிப்பாகம்- எடுத்த காரியம் முடியும்
இடது கை அடிப்பாகம்-காரிய தாமதம்
இடக்கை பெரு விரல்-நல்ல முடிவு
இடக்கை சுட்டு விரல்-ராஜ அனுகூலம்
இடக்கை நடு விரல்- பெருமை
இடக்கை மோதிர விரல் – நல்லது நடக்கும்
இடக்கை சிறு விரல்-நீண்ட ஆயுள்
இனிமேல் நமது மார்புக்கு வருவோமா????
நெஞ்சு— வியாதி வரப்போகிறது
வலது முலை – சாவு செய்தி
இடது முலை- சுகவாழ்க்கை
முதுகு தொப்புள்- கவலை
இடது விலா- வீடிழப்பு
முதுகு முழுவதும் – நோய்நீங்காது
வலது முதுகு- நோய் வந்து நீங்கும்
இடது முதுகு-குடி இருக்கும் வீட்டைகாலி செய்ய வைக்கும்

நடு முதுகு – செல்வம் வரும்
வலது கழுத்துப பட்டை – புது வஸ்த்திரம்
இடது கழுத்துப் பட்டை- இனிய வார்த்தை
இரு பட்டைகளும் – துன்பம் இடை- புகழ் வேள்வி
இடது விதை- – நோய் நீங்கும் வலது விதை- வாகன யோகம்
வலது தொடை- வழக்கில் வெற்றி இடது தொடை- நல்ல சேதி
இரு தொடைகளும்- செம்பொன் கிடைக்கும்
வலது முழந்தாள் -கோபம்வரும்
இடது முழந்தாள்- பந்துக்கள் வருகை
இரண்டு முழந்தாள்களும்-பண வருமானம்
வலது கணை கால்- செல்வம் வருகை
இடது கணைக்கால்- சாவு வார்த்தை
இடது கண்டைக்கால்- நோயினால் தன்பம்
வலது கண்டைக் கால்- அடிமைப் படுதல்
இரு கண்டைக்கால்களும்- பிரயாணம்
பின் உள்ள இடது புற வழி – நோய்
பின் உள்ள வலது புற வழி-வழக்கில் வெற்றி
வலது உள்ளங்கால் பாதம்- பொருள் கை கூடும்
இடது உள்ளங்கால் பாதம்- நோய் நீங்கும்
இரு கால்விரல்களும்- செல்வமும் நன்மையும் சேரும்
இதெல்லாம் சொல்லி விட்டாய் கத்துக்குட்டி
இதெற்கென்ன பதில்
துடியா துடிக்குது மனசு ????
துடிக்குது மனசு, அடிக்குது காத்து, கதவச் சாத்து…..
***