
Post No. 8609
Date uploaded in London – –1 SEPTEMBER 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
நேற்றும்,அதற்கு முந்தைய தினமும் 18 என்ற எண்ணின் மஹிமையைக் கண்டோம் ; இன்று மேலும் சில 18க்ளிக் காண்போம்.
18 வகை கூலம்
நெல், புல் , வரகு, தினை,
சாமை, இறுங்கு/சோளம் , துவரை,
கேழ்வரகு , எள்ளு , கொள்ளு, பாசிப் பயறு,
உளுந்து, அவரை, கடலை,
மொச்சை , காராமணி , கோதுமை,
தட்டைப்பயறு ; சில நூல்களில் தோகை என்ற வகை காணப்படுகிறது.

******
18 வகை குடிமக்கள்
வண்ணான் , நாவிதன்/அம்பட்டன், குயவன், தட்டான், கன்னான் ,
கல்தச்சன், கொல்லன், தச்சன், எண்ணை வாணிகன், உப்பு வாணிகன்,
இலை வாணிகன், பள்ளி, பூமாலைக்காரன், பறையன் ,
கோவிற்குடியான், ஒச்சான், வலையன், பாணன்.

****
குற்றங்கள் 18
பிங்கலம் என்னும் நிகண்டு கூறும் 18 குற்றங்கள்–
பசியும், பயமும், நீர்வேட்டலும்,
வெகுளியும் உவகையும் வேட்டலும் ,
நினைப்பு, உறக்கமும் ,நரையும்
நோய் படுதலும் பிறப்பு, இறப்பு,மதமும்,
இன்பமும் அதிசயமும், வியர்த்தலும் ,
கேதமும் ,நகை யும்.
******
18 மூலிகைகள் / அஷ்டதசமூலம்
கொடிவேலி , கண்டங்கத்தரி, எருக்கு,நொச்சி ,
முருங்கை, மாவிலிங்கம்,சங்கங்குப்பி ,
தழுதாழை, குமிழ், பாதிரி,
வில்வம், கறிமுள்ளி, சிற்றாமல்லி,
பேராமல்லி, கரந்துறை, தூதுளை,
நன்னாளை, வேர்க் கொம்பு.
****

அஷ்டாதச ரஹஸ்யம்
(விசிஷ்டாத்வைதம் முமுக்ஷு ப்படி )
தத்வத்ரயம், அர்த்தபஞ்சகம்,ஸ்ரீவசனபூஷணம்,
அர்த்தசராதி , பிரமேயசேகரம், பிரபன்னபரித்ராணம் ,
சாரசங்கிதம், சம்சார சாம்ராஜ்யம் , நவரத்னமாலை,
நவவித சம்பந்தம், யாத் ருசிகப்படி,பரந்தபடி ,
ஸ்ரீயப்பதிகப்படி, தத்வசேகரம், தனித்வயம்,
தனிச்சரமம், தனிப் பிரணவம் .
முன்பு கண்டது போல மஹாபாரத பர்வங்கள் 18, பகவத்கீ தை அத்தியாயங்கள் 18, மஹாபாரதப் போர் நடந்த நாட்கள் 18 என்பதுடன் , யதுவின் வழிவந்த யாதவர் குடிகள் 18 என்றும் மஹாபாரதம் இயம்பும். அதைவிட அதிசய விஷயம் மாபாரதத்தின் பழைய பெயர் ‘ஜய’ அதன் எண்ணும் கடபயாதி முறைப்படி 18 ஆகும்.
tags –
–சுபம்–
Nalini Persad
/ September 4, 2020I am glad to say that I was born on May 18, so perhaps I have some of the good thiings mentioned in this article on the importance of the number 18, other than the 18 parvas of the Mahabharata. Thank you for explaining the அஷ்டாதச ரஹஸ்யம்.