மூன்று கிரகம் உச்சம் – மந்திரி பதவி நிச்ச(ய)ம் – PART 2 (Post.8625)

WRITTEN BY KATTUKKUTY

Post No. 8625

Date uploaded in London – –4 SEPTEMBER 2020    

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

மூன்று கிரகம் உச்சம் – மந்திரி பதவி நிச்ச(ய)ம்  – 2

என்கண்ணில் அவர் இருந்தால்

அவர் கண்ணில் நான் இருந்தால்……பிரச்சினை ஏதுமில்லை!!!!


நான் பயந்து போய் என் சேரை பின்னால் இழுத்துக்
கொண்டேன். அவர் கைக்கு எட்டாதபடி பார்த்துக்கொண்டேன்
அன்று ஆடி வெள்ளிக்கிழமை.பால்பாயசம் கொடுத்தேன்.


மலே பேச ஆரம்பித்தார் மெதுவாக…….
என்ஜாதகத்தை பாருங்கள் சார் 3 கிரகம்  உச்சம்
மற்றவை பரவாயில்லை.நீங்களே சொல்லுங்கள்………

உங்களுக்கு ஜோதிடம் தெரியுமா??? 


கொஞ்சம் கொஞ்சம்…..பக்கத்துவீட்டு மாமாவும் பார்ப்பார்
சூரியன் எங்கே…மேஷத்தில்…. எந்த நடசத்திரத்தில்???


கார்த்திகையில்…..

இதோ பாருங்கள் இது மிகப்பெரிய ஜோதிட புத்தகம்

இதன்பெயர் “உத்திர கலாம்ருதம்”
இதிகிரக உச்ச நீச அட்டவணை.இதில் பாருங்கள்


சூரியன்—10 டிகிரி உச்சம் என்று போட்டிருக்கிறதா?????
ஆகையினால் உங்கள் சூரியன் உச்சத்தில் இல்லை….
வாருங்கள் குருவுக்கு போவோம்.அது பார்க்க 5 டிகிரி….
புனர்பூசம் , பூசம் 1 ம்பாதம்மட்டுமே…..உங்கள் உச்ச குரு
உச்சத்தில் இல்லை…… சரி அடுத்த கிரகம் எது???


ஜாதகத்தை பாய்ந்து எடுத்துக்கொண்டார்…….என்னதான்
சொல்கிறீர்? கடைசியாக….
உங்களுக்கு மந்திரி பதவி மட்டுமில்லை, உங்க ஜாதக
விசேஷத்திற்கு முந்திரி பருப்பு கூட கிடைக்காது…..!!!!



நிறையப்பேர் ஜாதகத்தை மேலுழுந்தவாரியாக பார்த்து விட்டு
பலன் சொல்லிவிடுகிறார்கள். இப்போது நேரமே யாருக்கும்
போதவில்லை…..எல்லாம் ஜூம் ZOOM ,டெலிக்ராம் , டீம் , போடிம்
யாகூ சேட் என்று அவசரம் அவசரமாக பாரத்து “கத்துக்குட்டிகள்”
( நான் இல்லை) புதிதாக கற்றுக்கொள்கிறவர்கள் சொல்லிவிடுகிறர்கள்!!!


இத்துடன் இருக்கும் அட்டவணையைப் பாருங்கள்
உச்சம்எந்தந்த டிகிரிகளில் நீசம்  எந்தந்த டிகிரிகளில் என்று
கொடுக்கப்பட்டுள்ளது. பார்த்தால்  நீங்களே தெரிந்து
கொள்ளலாம்.டிகிரி, பாதம் பார்த்து பலன் சொல்லவும்.
அவர் பாடிக்கொண்டே போனது என் காதில் விழுந்தது

போனால்போகட்டும் போடா……இந்த உலகத்தில்
நிலைத்த மந்திரியாரடா…….??


THANKS வணக்கம்

tags- கிரகம் உச்சம் – 2, மந்திரி பதவி,



Leave a comment

Leave a comment