குழந்தை பாக்கியம் இல்லையா? இதோ பரிகாரங்கள் பல..! – 2 (Post No.8636)

WRITTEN BY KATTUKKUTY

Post No. 8636

Date uploaded in London – –6 SEPTEMBER 2020    

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

குழந்தை பாக்கியம் இல்லையா? இதோ பரிகாரங்கள் பல..! – 2

                                   Kattukutty

குழந்தை செல்வத்தின் அதிபதி “குரு “ பகவான் அவர்களே???

அவரே “புத்திர காரகன்” என அழைக்கப் படுகிறார். இவர் ஆட்சி ,

உச்சம், பெற்று நல்ல இடங்களில் இருந்திருந்தால்

உங்களுக்கு புத்திர பாக்யம் உண்டாகி இருக்கும், இந்த

கட்டுரையை படிக்க அவசியம் இல்லை்

திகட்டாத தாம்பத்யத்தையும் ஈர்ப்பு சக்தியையும் ஆண்களின் சுக்லத்தையும்,

பெண்களின் சுரோணிதத்தையும், கரு

உற்பத்திக்கும் காரணம் சுக்கிர பகவானே!!

ஆண்களுக்கு 5 ம் இடமும், பெண்களுக்கு 9 ம் இடமும்

புத்திர ஸ்தானம் என சொல்கிறது சாஸ்திரம்.

இந்த இடங்களில பாவகிரகங்கள் இருந்து குரு பார்வையோ,

குரு நல்ல இடங்களில் இருந்தாலோ கண்டிப்பாக புத்திர

பாக்கியம் சற்றே தாமதமாகி கிடைக்கும்.

முக்கியமாக புத்திர ஸ்தானாதிபதி 6,8, 12 ல் மறைந்தாலும்

சூரியன்,செவ்வாய்,சனி,ராகு, உடன்சேர்ந்து இருந்தாலும்

புத்திர பாக்யம் துர்லபமே……..

மேலும் குருவுக்கு பாதகமான கிரகங்கள் புதனும் சனியும் தான் !,!!!

புத்திரன் கிடைக்காமல் போவதற்கு மற்றொரு எதிரி ராகு பகவான்……

குருவோ, புத்திர ஸ்தானாதிபதியோ புதனின் வீடுகளான மிதுனம்

கன்னி, சனியின் வீடுகளான மகரம், கும்பம் வீடுகளில் இருந்தால்

அவ்வளவுதான் குழந்தை செல்வம் கனவாகிவிடும்

ஐந்தாம் வீட்டு அதிபதியோ குருவோ ராகுவுடன் சம்பந்தப்

பட்டிருந்தால் சர்ப்ப தோஷத்திற்கு உள்ளாகி புத்திரன்

இல்லாமல்போகும்.

ஐந்தாமிடத்தில் இருக்கும் ராகுவை செவ்வாய் பார்ப்பதும்,

ஐந்தாம் வீடு மேஷமாகவோ, விருச்சிகமாகவோ இருந்து

அதில் ராகு இருப்பதும் குழந்தை இறந்து பிறப்பதற்கு

உரிய வாய்ப்புகள் அதிகம்.

பரிகாரங்கள்

குல தெய்வ வழிபாட்டில் குறை, பித்ரு தோஷத்தினால் குறை,

சரப்ப தோஷத்தினால் குறை, ரிஷி, கோ, விருட்ச,பெண் சாபங்களில்

இருந்து வெளிபட தகுந்த ஜோதிடரிடம் இருவர் ஜாதகங்களையும்

காட்டி என்னன்ன பரிகாரங்கள் உண்டோ செய்ய வேண்டும்

கண்கண்ட தெய்வம் கலியுகக் கடவுள் இருக்க பயமேன்???

புத்திர காரகன் குரு ஸ்தலம் திருச்செந்தூர் இருக்கையிலே???

கணவன் மனைவி இருவரும் திருச்செந்தூருக்குச் செல்லுங்கள்.

அங்கிருக்கும் சோழியர், புடவைத் தலைப்பையும் வேஷ்டி

நுனியையும் முடிச்சுப்போட்டு சமுத்திர ஸ்னானம் செய்யச் சொல்லுவார்.

பிறகு நாழிக்கிணற்றில் குளித்து முருகன் தரிசனம்.

அடுத்த வருடம் கண்டிப்பாக குழந்தையுடன் சென்று முருகனுக்கு

நன்றி சொல்லுங்கள்!!!!உறுதி!!!

சஷ்டி விரதம் இருந்து பிறந்த குழந்தைகளுக்கு முருகன் என்று

பெயரிடப்பட்டவர்கள் ஏராளம்

மதுரை  மீனாட்சியும், சமயபுரம் மாரியம்மனையும் வேண்டி

குழந்தை பெறாதவர்களே இல்லை.

கும்பகோணம் அருகில் உள்ள திருக்கருகாவூரிலுள்ள

கர்ப்ப ரக்ஷாம்பிகையை வேண்டி குழந்தைகள் பெற்றவர்கள்

ஏராளம், ஏராளம்!!!

அங்கு நேரில் சென்று பசு நெய்யால் வாசற்படியை மெழுகி

அவர்கள் கொடுக்கும் நெய்யை ஒருமண்டலம் அருந்தினால்

குழந்தை பாக்கியம் உறுதி!!!!

மேலும் குருவாயூரப்பனுக்கு எடைக்கு எடை வாழைப்பழமோ,

வெண்ணை, சர்க்கரையோ,மற்றும் உங்களால் என்ன முடியுமோ

அதை காணிக்கையாய் தர வேண்டினால் குழந்தை உறுதி.

இவை எல்லாம் அவரவர் நம்பிக்கையை பொறுத்தது.

இதையெல்லாம் விட்டு விட்டு இந்த விஞ்ஞான உலகில்

எதற்கு அய்யா இந்த சாமியும் , பூதமும்???.

இருக்கவே இருக்கிறது நிறைய ஆஸ்பத்திரிகள்!!!!

உங்கள் பர்ஸ் ஜாக்கிறதை!!! நிறைய பணமும், பக்கம்

பக்கமாக கையெழுத்தும் தேவை. ஆனாலும்.

50% சான்ஸஸ் தான் என்று சொல்லுவார்கள்.

அப்படியும் கொடுத்து பக்கம் பக்கமாக கையெழுத்து

போட்டவர் நிறைய்ய………..உண்டு………..

அந்த ஜோஸ்யர் சொன்னாராம்….இவர்கேட்டாராம்…..

இதில் எங்களுக்கு வேற கெட்ட பெயர்!!!

இதை படிக்கும் அனைவருக்கும்,அவர்நண்பர்களுக்கும்

என்றும் மாறாத மழலைச் செல்வங்களைப் பெற்று

மகிழ்ச்சியுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்திக்கிறேன் .

tags– குழந்தை பாக்கியம்-2, பரிகாரங்கள் -2

                                  ***

Leave a comment

Leave a comment