INDEX 22 FOR LONDON SWAMINATHAN’S ENGLISH & TAMIL ARTICLES (Post No.8638)

MORE PICTURES FROM OLD BHAGAVATHA PURANA

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8638

Date uploaded in London – –6 SEPTEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

SEPTEMBER 2014 ARTICLES

1262.யாரிடமும் கற்கலாம், எப்போதும் கற்கலாம் 1-9-14

1263.Mysterious Buddha in Sweden (2-9-14)

1264.சுவீடன் நாட்டில் மர்ம புத்தர் சிலை  (3-9-14)

1265.Numbers in the Rig Veda! Rig Veda Mystery-2 (3-9-14)

1266.வாத்தியாரைக் காலைவாரிவிட்ட மூக்குப்பொடி டப்பி 4-9-14

1267.ரிக்வேதக் கணிதப் புலிகள் 4-9-14

1267.உலகின் முதல் சிவில் எஞ்சினீயர் இந்திரன் 4-9-14

1268. Oldest Engineer in the World: Indra 4-9-14

Indra-Taranis-Thor in Indus Valley Civilization 5-9-14

1269.சிந்து சமவெளியில் இந்திரன் 6-9-14

1270.Indus Valley to Egypt: Lapiz lazuli Export 6-9-14

1272.சுமேரிய யாவுக்கு இந்தியாவின் நீலக்கல் ஏற்றுமதி 7-9-14

1273.Encyclopedia of Indra 7-9-14

1274. என் அப்பாவிடம் கற்றது 8-9-14

1275.Hindu Gods and other Ancient Gods 8-9-14

1276.கோயங்கா சாம்ராஜ்ய ரகசியங்கள் 9-9-14

1277.Astrology in Mahavamsa  9-9-14

1278.பாரதியுடன் 60 வினாடி பேட்டி10-9-14

1279.ஆரிய பாரதி வாழ்க 10-9-14

1280.Miracles inMahavamsa 10-9-14

1281.மகாவம்சத்தில் ஜோதிடச் செய்திகள் 11-9-14

1282.Why did Asoka kill his 99 Brothers? 11-9-14

1283.மகாவம்சத்தில் அற்புதச் செய்திகள் 12-9-14

1284. Did Kalidasa fly in a Space Shuttle? 12-9-14

1285.மாமன்னன் அசோகன் 99 சகோதரர்களைக் கொன்றது ஏன்? 13-9-14

1286.காளிதாசன் நாடகத்தில் வியத்தகு விண்வெளி விஞ்ஞானம் (13/9/14)

1288.Why did Sumeria and Egypt worship Indra? 14/9/14

1289.சுமேரியா, எகிப்தில் இந்திரன் வழிபாடு 15-9-14

1290.Brahmins and Candalas in Mahavamsa 15-9-14

1291. மகாவம்சத்தில் அதிசயத் தமிழ் காட்சிகள். பகுதி 1 (16-9-14)

1292.Why did Emperor Asoka send Ganges water to Sri Lanka 16/9/14

1293. 2000 ஆண்டுகளுக்கு முன் தமிழர்-சிங்களவர் உறவு 17-9-14

1294.Spontaneous Combustion Miracle in Mahavamsa 17/9/14

1295. இலங்கைக்கு அசோகன் கங்கை நீர் அனுப்பியது ஏன்? 18-9-14

1296.3000 Gods in Mesopotamia! Similar to Hindus 18/9/14

1297.மகாவம்சத்தில் அதிசயத் தமிழ் காட்சிகள். பகுதி 3 (19-9-14)

1298.யோகிகள் தீப்பிழம்பாக மாறும் அதிசயம் 19/9

1299.Who invented Four Horse Chariot? 20/9/14

1300. இராக்கில் 3000 கடவுள்! இந்துக்கள் போல சிலைகளுக்கு கண் திறக்கும் அதிசயம் 20/9

1301.How did Ravana travel from Sri Lanka to India;21/9/14

1302. கிருஷ்ணன் ரதத்தில் நான்கு குதிரைகள் ஏன்? 21/9/14

1303.இந்தியாவுக்கு ராவணன் எப்படி வந்தான்?கப்பலா? விமானமா? 22-9-14

1304.Quotations from The Mahavamsa; 22/9/14

1305.மஹாவம்ச பொன்மொழிகள் 23/9/14

1306.Palmyra Tree Worship in India and Sri Lanka; posted 23/9/14

1308.700 Temples for ‘Hindu Mitra’ in Rome; posted 24/9/14

1309.பனைமர வழிபாடு: மஹாவம்சம் சங்க இலக்கியத்தில் சான்றுகள்  25-9-14

1310.Eagle/Garuda in India, Rome and Sri Lanka 25-9-14

1311.ரோம் நகரில் 700 மித்ரன் கோவில்கள் 26-9-14

1312.84,000 Letters to Emperor Asoka 26 sept.2014

1313.31 New Quotations from Valmiki Ramayana 27-9-14

1314.அசோகனுக்கு ஒரே நாளில் 84000 கடிதங்கள் 28-9-14

1315.Japan, China and Tamil Epic- A strange Coincidence 28-9-14

1316.pattinathaarin 31 mukkiya paatalakaL (oct calendar) 29-9-14

1317.Why did Indra steal? How did he Escape? 29-9-14

1318.சீனா ஜப்பான் சிலப்பதிகார அதிசய ஒற்றுமை 30-9-14

1319. New Zealand Maoris and Chinese worship Agastya 30-9-14

Xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

INTRODUCTION

I started blogging in tamilandvedas.wordpress.com and swamiindology.blogspot.com from June 2011, I am giving above the INDEX for SEPTEMBER, 2014

 I did not give the date of loading or number for the article in the beginning. But all articles are available in both the blogs in the name of

 ‘London Swaminathan’.

Like you did with S Nagarajan’s articles INDEX, get the articles by googling.

Following  is the method:-

Paste the title of the article in the google (space)and add ‘from tamilandedas.com or ‘from swamiindology.blogspot.com’

 Here is an example :

Is Brahmastra a Nuclear Weapon? from tamilandvedas.com

Or

Is Brahmastra a Nuclear Weapon? From swamiindology.blogspot.com

Since I am going to give nearly 6000 titles, you may not find time to read all the articles/ posts at once.

So, please take a printout of the Index or note down the titles and dates of your favourite posts.

Thanks for all your support. We are reaching two million hits now.

If you have any difficulty in getting the articles, please let us know.

Be careful about the spelling of the title. Even a small mistake will take you somewhere and waste your precious time.

***

IN THE BEGINNING I UPLOADED MY ARTICLES IN

1.THE SPEAKING TREE OF TIMES OF INDIA

2.TAMIL HERITAGE FOUNDATION SITE

3.TAMIL BRAHMINS.COM etc.

So you may find the same articles on different days on different blogs

*****

To be continued…………………….

Tags- சுவாமிநாதன், கட்டுரை இன்டெக்ஸ் 22, INDEX 22,   LONDON SWAMINATHAN,  2014 ,POSTS

புல் பற்றி 4 பழமொழிகள்- கட்டத்தில் கண்டுபிடி (Post.8637 )

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8637

Date uploaded in London – –6 SEPTEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

புல் பற்றி 4 பழமொழிகள்- கட்டத்தில் கண்டுபிடி

ஒரே சொல் பல பழமொழிகளில் வந்தால், ஒரு இடத்தில் மட்டுமே கட்டத்தில் காணப்படும் .

விடைகள் கீழே உள்ளன.

விடைகள்:–

1.புல்லு விற்கிற கடையிலே பூ விற்கிறது

2.புல்லும் பூமியும் கல்லும் காவேரியும் உள்ள மட்டும் என் நிலத்தை அனுபோகம் பண்ணு

3.புல்லைத் தின்னும் மாடுபோல புலியைத் தின்னும் செந்நாய் உதவுமா

4.புல்லு இருக்கிற இடத்தில் மேய விடாது, சோறு இருக்கிற இடத்தில் தின்ன  விடாது

TAGS- புல்,பழமொழிகள்

குழந்தை பாக்கியம் இல்லையா? இதோ பரிகாரங்கள் பல..! – 2 (Post No.8636)

WRITTEN BY KATTUKKUTY

Post No. 8636

Date uploaded in London – –6 SEPTEMBER 2020    

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

குழந்தை பாக்கியம் இல்லையா? இதோ பரிகாரங்கள் பல..! – 2

                                   Kattukutty

குழந்தை செல்வத்தின் அதிபதி “குரு “ பகவான் அவர்களே???

அவரே “புத்திர காரகன்” என அழைக்கப் படுகிறார். இவர் ஆட்சி ,

உச்சம், பெற்று நல்ல இடங்களில் இருந்திருந்தால்

உங்களுக்கு புத்திர பாக்யம் உண்டாகி இருக்கும், இந்த

கட்டுரையை படிக்க அவசியம் இல்லை்

திகட்டாத தாம்பத்யத்தையும் ஈர்ப்பு சக்தியையும் ஆண்களின் சுக்லத்தையும்,

பெண்களின் சுரோணிதத்தையும், கரு

உற்பத்திக்கும் காரணம் சுக்கிர பகவானே!!

ஆண்களுக்கு 5 ம் இடமும், பெண்களுக்கு 9 ம் இடமும்

புத்திர ஸ்தானம் என சொல்கிறது சாஸ்திரம்.

இந்த இடங்களில பாவகிரகங்கள் இருந்து குரு பார்வையோ,

குரு நல்ல இடங்களில் இருந்தாலோ கண்டிப்பாக புத்திர

பாக்கியம் சற்றே தாமதமாகி கிடைக்கும்.

முக்கியமாக புத்திர ஸ்தானாதிபதி 6,8, 12 ல் மறைந்தாலும்

சூரியன்,செவ்வாய்,சனி,ராகு, உடன்சேர்ந்து இருந்தாலும்

புத்திர பாக்யம் துர்லபமே……..

மேலும் குருவுக்கு பாதகமான கிரகங்கள் புதனும் சனியும் தான் !,!!!

புத்திரன் கிடைக்காமல் போவதற்கு மற்றொரு எதிரி ராகு பகவான்……

குருவோ, புத்திர ஸ்தானாதிபதியோ புதனின் வீடுகளான மிதுனம்

கன்னி, சனியின் வீடுகளான மகரம், கும்பம் வீடுகளில் இருந்தால்

அவ்வளவுதான் குழந்தை செல்வம் கனவாகிவிடும்

ஐந்தாம் வீட்டு அதிபதியோ குருவோ ராகுவுடன் சம்பந்தப்

பட்டிருந்தால் சர்ப்ப தோஷத்திற்கு உள்ளாகி புத்திரன்

இல்லாமல்போகும்.

ஐந்தாமிடத்தில் இருக்கும் ராகுவை செவ்வாய் பார்ப்பதும்,

ஐந்தாம் வீடு மேஷமாகவோ, விருச்சிகமாகவோ இருந்து

அதில் ராகு இருப்பதும் குழந்தை இறந்து பிறப்பதற்கு

உரிய வாய்ப்புகள் அதிகம்.

பரிகாரங்கள்

குல தெய்வ வழிபாட்டில் குறை, பித்ரு தோஷத்தினால் குறை,

சரப்ப தோஷத்தினால் குறை, ரிஷி, கோ, விருட்ச,பெண் சாபங்களில்

இருந்து வெளிபட தகுந்த ஜோதிடரிடம் இருவர் ஜாதகங்களையும்

காட்டி என்னன்ன பரிகாரங்கள் உண்டோ செய்ய வேண்டும்

கண்கண்ட தெய்வம் கலியுகக் கடவுள் இருக்க பயமேன்???

புத்திர காரகன் குரு ஸ்தலம் திருச்செந்தூர் இருக்கையிலே???

கணவன் மனைவி இருவரும் திருச்செந்தூருக்குச் செல்லுங்கள்.

அங்கிருக்கும் சோழியர், புடவைத் தலைப்பையும் வேஷ்டி

நுனியையும் முடிச்சுப்போட்டு சமுத்திர ஸ்னானம் செய்யச் சொல்லுவார்.

பிறகு நாழிக்கிணற்றில் குளித்து முருகன் தரிசனம்.

அடுத்த வருடம் கண்டிப்பாக குழந்தையுடன் சென்று முருகனுக்கு

நன்றி சொல்லுங்கள்!!!!உறுதி!!!

சஷ்டி விரதம் இருந்து பிறந்த குழந்தைகளுக்கு முருகன் என்று

பெயரிடப்பட்டவர்கள் ஏராளம்

மதுரை  மீனாட்சியும், சமயபுரம் மாரியம்மனையும் வேண்டி

குழந்தை பெறாதவர்களே இல்லை.

கும்பகோணம் அருகில் உள்ள திருக்கருகாவூரிலுள்ள

கர்ப்ப ரக்ஷாம்பிகையை வேண்டி குழந்தைகள் பெற்றவர்கள்

ஏராளம், ஏராளம்!!!

அங்கு நேரில் சென்று பசு நெய்யால் வாசற்படியை மெழுகி

அவர்கள் கொடுக்கும் நெய்யை ஒருமண்டலம் அருந்தினால்

குழந்தை பாக்கியம் உறுதி!!!!

மேலும் குருவாயூரப்பனுக்கு எடைக்கு எடை வாழைப்பழமோ,

வெண்ணை, சர்க்கரையோ,மற்றும் உங்களால் என்ன முடியுமோ

அதை காணிக்கையாய் தர வேண்டினால் குழந்தை உறுதி.

இவை எல்லாம் அவரவர் நம்பிக்கையை பொறுத்தது.

இதையெல்லாம் விட்டு விட்டு இந்த விஞ்ஞான உலகில்

எதற்கு அய்யா இந்த சாமியும் , பூதமும்???.

இருக்கவே இருக்கிறது நிறைய ஆஸ்பத்திரிகள்!!!!

உங்கள் பர்ஸ் ஜாக்கிறதை!!! நிறைய பணமும், பக்கம்

பக்கமாக கையெழுத்தும் தேவை. ஆனாலும்.

50% சான்ஸஸ் தான் என்று சொல்லுவார்கள்.

அப்படியும் கொடுத்து பக்கம் பக்கமாக கையெழுத்து

போட்டவர் நிறைய்ய………..உண்டு………..

அந்த ஜோஸ்யர் சொன்னாராம்….இவர்கேட்டாராம்…..

இதில் எங்களுக்கு வேற கெட்ட பெயர்!!!

இதை படிக்கும் அனைவருக்கும்,அவர்நண்பர்களுக்கும்

என்றும் மாறாத மழலைச் செல்வங்களைப் பெற்று

மகிழ்ச்சியுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்திக்கிறேன் .

tags– குழந்தை பாக்கியம்-2, பரிகாரங்கள் -2

                                  ***

1947: INDEPENDENCE OR TRANSFER OF POWER? – 3 (Post No.8635)

WRITTEN BY R. NANJAPPA                        

Post No. 8635

Date uploaded in London – – – –6 SEPTEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

 1947: INDEPENDENCE OR TRANSFER OF POWER? – 3

R.Nanjappa

TRAGEDY OF CONSTITUTION

We then set about the task of giving this British imposed structure an air of Indian legitimacy. When we set about making a Constitution for ourselves, none of the basic structures or their underlying purposes or continued relevance was questioned or reviewed in the light of the ideas that guided our freedom movement. That structure was taken for granted.
The man in charge of drafting it  (B.N.Rau) was a career bureaucrat and part of British administration. There was a 7-member committee to go through the draft and make amendments. 6 of these members had been part of the British system and its beneficiaries. None of them had taken part in the struggle for freedom. One of them- Dr. B.R.Ambedkar –  in fact had been a staunch supporter of the British, did not participate in the freedom movement, and was an  opponent of  Gandhiji.   Ironically, he became the Law Minister! He was a member of the Viceroy’s Council when Gandhiji, Patel, Nehru and the entire top leaders of the Congress were in Jail in 1942-45! None of these people had worked with Gandhiji, really knew or shared or cared for his ideas on Swaraj . They were mostly lawyers practising the law they loved, or were part of the administration! Naturally when they set about making a Constitution, they retained all the elements that the British system had imposed on us and with which they had fallen in love. Not a single idea of Gandhiji was included or even seriously discussed. Most noteworthy was omission of any reference to the village at all! 

INDIAN VILLAGES KILLED AGAIN

Dr.Ambedkar had no love for Indian villages and he made no secret of it. He said in the Constituent Assembly:

“The love of the intellectual Indian for the village community is of course infinite if not also pathetic.” 

He openly boasted of his disdain for the Indian village:

“I hold that these village republics have been the ruination of India…. What is the village but a sink of localism, a den of ignorance, narrow mindedness and communalism? I am glad that the draft Constitution has discarded the village..”


From what we know of historical records, we see that Dr.Ambedkar was completely wrong. Today, with all the historical evidence available to us, his ignorance in the matter is even more appalling. Dr. Ambedkar did not know his facts.
But we have another such gem from another man considered great, Jawaharlal Nehru. His differences with Gandhiji are well known, but are underplayed. Though he pretended to follow Gandhi, he did not share any of his core values, especially about village industries and village Swaraj.. In 1945, he wrote to Gandhi:

” I do not understand why a village should necessarily embody truth and non-violence. A village, normally speaking, is backward intellectually and culturally, and no progress can be made from a backward environment.”

This is shocking, coming from someone perceived to be close to Gandhi and supposed to be his follower. One wonders where he got this idea from- it is Cambridge, not certainly Indian villages, where Nehru had never lived or  worked! Such Westernised elite never read our true history, never understood that the poor condition of the village was due to the 150 years of British rule which had “ruined India economically, politically, culturally and  spiritually”, in the words of Gandhiji’s 1930 Resolution.

The result was that with such ’eminent’ people around, the Constitution merely solemnised what the British had created for their benefit and left behind. Our administration. law, education, general attitude to life and society, the philosophy behind the whole edifice- everything continued as before, unchecked and unaltered. With Nehru continuing as Prime Minister for 17 years, there was no chance that there could even be a second look or review. In these 17 long years, Nehru did not implement even a single programme of Gandhiji. It was Nehru who killed Gandhiji’s spirit in free India.

Some people had really informed Gandhiji that the draft Constitution had entirely discarded the village. Gandhi reacted:

“…there is no mention or direction about village panchayats and decentralisation in the foreshadowed Constitution.It is certainly an omission calling for immediate attention if our independence is to reflect the people’s voice. The greater the power of the panchayats, the better for the people……”


Gandhiji wrote this on 21 December 1947. Alas, he was dead in about 40 days. None in the Congress govt who came to power in Gandhi’s name cared to listen to him or do anything in the matter. To think that Gandhi named Nehru his successor- how awful! Great men do indeed make great and silly mistakes.

SWARAJ FOR THE ELITE

The result is that in the name of Independent India we continue with the same British systems and approach which were meant to oppress the people, and suppress their initiative. We still suffer from the cleavage between the elites and others. The police still treat the common  people as cattle, as of no worth.  Our officials still continue to treat the villagers with disdain, and continue to exploit them. Indian officials are every bit as arrogant and mindless of the people as during the colonial times.they are as ready to use force against dissent as the British. Now, they are even more corrupt. Even doctors educated in subsidized government colleges refuse to work in rural areas..  Villagers are steadily leaving their habitats and marching to towns and cities in search of livelihood. The village economy is ruined, its autonomy still lost, and its exploitation continues by the town and city. People exercise their vote once in five years, but by that they ensure their continued bondage to the town masters for another five years.

 The ideal of village emancipation lies buried with Mahatma Gandhi.

So, what was achieved on 15 August 1947 was mere transfer of power from white sahibs to their  brown Indian imitators. It is not Independence as Mahatma Gandhi taught us.

***

அவதூதர் கொண்டிருக்கும் 24 குருக்கள் – 2 (Post No.8634)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 8634

Date uploaded in London – – –6 SEPTEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

அவதூதர் கொண்டிருக்கும் 24 குருக்கள் – 2

ச.நாகராஜன்

  1. பிங்கலை : பிங்கலை என்று ஒருவேசி இருந்தாள். அவள் ஒரு நாள் தனக்கு நிறையப் பணம் தருவார் என்று நினைத்திருந்த ஒருவருக்காகக் காத்திருந்தாள்.அவர் வரவே இல்லை. இரவு முழுவதும் காத்திருந்த பிங்கலை, ‘அடடா! என்ன ஒரு முட்டாள்தனம் இது. பேராசையை ஊட்டும் புலனின்பத்திற்காக அல்லவா என் வாழ்க்கையைச் செலவழித்து விட்டேன். என்றும் அழியாத ஒன்றைப் பற்றி இனி நினைப்பேன்” என்று எண்ணி அனைத்தையும் துறந்து ஞான மார்க்கத்தில் பிரவேசித்தாள். அவளே எனது பதிமூன்றாவது குரு.
  2.  அம்பு செய்பவன் : ஒரு நாள் அம்பு செய்யும் ஒருவனை நான் பார்த்துக் கொண்டிருந்தேன். அவன் கூரிய அம்பைச் செய்வதிலேயே குறியாக இருந்தான். அருகிலே சென்று கொண்டிருந்த ஒரு படை அலங்கார அணிவகுப்பைக் கூட அவன் பார்க்கவில்லை. அவனது இந்த செய்கை கூர்மையாக ஒரே கவனத்துடன் தன் லட்சியத்தில் இருக்க வேண்டும் என்பதை நான் கற்றுக் கொண்டேன். ஆன்மீக வாழ்க்கையில் முன்னேற இந்த இரகசியத்தைக் கற்றுக் கொடுத்த அவனே எனது பதிநான்காவது குரு.
  3. விளையாட்டுச் சிறுவன் : சிறுமிகளும் சிறுவர்களும் கௌரவம் அகௌரவம் பாராட்டாதவர்கள். யாருடனும் அவர்களுக்குக் கோபதாபம் இருப்பதில்லை. எது தன்னுடையது, எது மற்றவர்களுடையது என்று அவர்களுக்குத் தெரியாது. அவர்களது சந்தோஷம் அவர்கள் உள்ளில் இருந்தே பூரிக்கிறது. வெளியிலிருந்து அல்ல. பூரண ஞானி ஒருவனும் இதே நிலையில் தான் இருக்க வேண்டும் என்பதை அவனிடமிருந்து நான் கற்றுக் கொண்டேன். எனது பதினைந்தாவது குரு அந்த விளையாட்டுப் பையனே.
  4. சந்திரன் : படைப்பில் தனித்துவம் பெற்றது சந்திரன். நமது பார்வைக்கு அது தேயும், வளரும். ஆனால் உண்மையில் அது அப்படியே தான் இருக்கும். ஒரு மனிதன் குழந்தைப் பருவம், வாலிபப் பருவம், முதுமைப் பருவம் என பல நிலைகளைக் கடக்கிறான். ஆனால் அவன் ஆன்மாவோ ஒரே நிலையில் தான் இருக்கிறது. சந்திரன் சூரிய ஒளியையே பிரதிபலிக்கிறது. அதற்கென தனி ஒளி இல்லை. அது போலவே ஆன்மாவின் ஒளியே மனிதனின் மனதில் பிரதிபலிக்கிறது. இதை உணர்த்தும் சந்திரனே எனது பதினாறாவது குரு.
  5. தேனீ : மலருக்கு மலர் தாவும் தேனீ அவற்றை துன்பப்படுத்தாது, தேனை உறிஞ்சி எடுத்துக் கொள்கிறது. அதே போல ஆன்ம ஞானம் நாடும் ஒருவனும் சாஸ்திரங்களில் தன் மனதைச் செலுத்தி, தேவையானவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். இதைக் கூறும் தேனீ எனது  பதினேழாவது குரு.
  6. மான் : இசையில் பெரும் விருப்பமுள்ள மான்கள் அதை வேட்டையாடுவோருக்கு அதனால் இலக்காகிறது. புலனின்பமும் பற்றும் நம்மை பலஹீனப்படுத்துகிறது. இதைச் சொல்லும் மானே எனது பதினெட்டாவது குரு.
  7. இரையாகும் பறவை : இரை தேடும் பறவை ஒன்று ஒரு செத்த எலியைத் தூக்கிக் கொண்டு பறந்தது. அதைப் பார்த்த கழுகு மற்றும் பருந்துகள் அதைத் துரத்தலாயின. அங்கும் இங்கும் அலைந்த அது கடைசியில் தன் இரையைக் கீழே போட்டது. தனது இரையைக் கீழே போட்டவுடன் அதற்கு மற்ற பறவைகளிடமிருந்து சுதந்திரம் கிடைத்தது. அதிலிருந்து உலக இன்பங்களைச் சுமந்து கொண்டு அதை நாடும் ஒருவன் மற்றவர்களுடன் சண்டையிட வேண்டும், அவர்களால் துரத்தப்படுவான் என்பதை உணர்ந்து கொண்டேன். உலக இன்பங்களை நாடக் கூடாது என்பதை கற்றுக் கொடுத்த அந்தப் பறவையே எனது பத்தொன்பாவது குரு.
  8.  கன்னிப் பெண் : குடும்பம் ஒன்று தங்களது பிள்ளைக்கு ஒரு கன்னிப் பெண்ணை  மணமுடிக்க அந்தப் பெண்ணின் இல்லத்திற்குச் சென்றது. அந்தச் சமயம் பெண்ணின் தாயார் வெளியே சென்றிருந்தாள். ஆகவே அந்தக் கன்னிப் பெண்ணே வந்தவர்களை வரவேற்று உபசரிக்க வேண்டிய நிலையில் இருந்தாள். வந்திருப்பவர்களுக்காக அவள் மாவை அரைக்க ஆரம்பித்தாள். அதனால் அவள் வளையல் ஓசை பெரிதாகக் கேட்டது. வந்த விருந்தினர்கள் இதைத் தவறாக நினைக்கக் கூடாது என்று நினைத்த அவள் ஒவ்வொரு கையிலும் இரு வளையல்களை மட்டும் வைத்துக் கொண்டு மற்றவற்றைக் கழட்டி விட்டாள். அப்போதும் கூட வளையல் ஓசை கேட்டது. ஆகவே அவள் ஒரே ஒரு வளையலை மட்டும் அணிந்து  கொண்டாள். இதிலிருந்து நான் புரிந்து கொண்டது ஒரே இடத்தில் பல ஆன்மீக சாதகர்கள் இருந்தால் தேவையற்ற வீண்பேச்சு தான் வரும் என்பதைத் தான்! ஆகவே ஒருவன் தனிமையை நாடி சாதனை புரிய வேண்டும். இதைக் கற்றுக் கொடுத்த அந்தக் கன்னிப் பெண்ணே என் இருபதாவது குரு.
  9. பாம்பு : பாம்பு எப்போதும் தனக்கென ஒரு உறைவிடத்தைக் கட்டிக் கொள்வதில்லை. கரையான்கள் தனக்கென ஒரு புற்றை அமைக்கும் போது பாம்பு அதில் வசிக்கத் தொடங்குகிறது. அதே போல உலகியலில் ஈடுபடும் மனிதர்கள் தமக்கென வீடுகளைக் கட்டிக் கொள்கின்றனர். ஆனால் ஒரு சாதுவோ அவர்கள் கட்டித் தரும் மடாலயங்களிலோ அல்லது கோவில்களிலோ அல்லது மரத்தடியிலோ  தான் தங்க வேண்டும். பாம்பு தன் பழைய சட்டையை உரித்துப் போட்டு விடுகிறது. அது போலவே ஒரு சாதுவும் தன் உடலை முழு விழிப்புடன் உதிர்த்து விட வேண்டும். மரணத்தைக் கண்டு அவன் அஞ்சக் கூடாது. இதைச் சொல்லும் பாம்பே எனது இருபத்தொன்றாவது குரு.
  10. சிலந்தி : சிலந்தி திரவத்தினால் தனக்கென ஒரு கூட்டை அமைத்துக் கொள்கிறது. பிறகு அதைத் தனக்குள் சுருக்கிக் கொள்கிறது, அதே போல மஹா சக்தி பிரளய காலத்தில் அனைத்தையும் தன்னுள் இழுத்துக் கொள்கிறது. அதே போலவே மனித ஆன்மாவும் அனைத்தையும் தன்னுள் கொண்டிருக்கிறது. மனிதப் பிறப்பில் அவற்றை மனித அங்கங்களாக மனமாக வெளிப்படுத்துகிறது. வாழ்க்கைக்குத் தேவையான அனைத்தையும் அது இதன் மூலம் பெற்றுக் கொள்கிறது. இறுதியில் அது புலன்களிலிருந்தும் மனத்திலிருந்தும் விடுபடுகிறது. இதைச் சொல்லும் சிலந்தியே என் இருபத்தியிரண்டாவது குரு.
  11.  புழு : புழு தனது குட்டியை கூட்டில் வைத்து பத்திரமாக அது இருப்பதற்காக அங்கு கூட்டைச் சுற்றி ரீங்காரம் இடுகிறது. குட்டி அந்த ஓசையைத் தவிர வேறு எதையும் நினைப்பதில்லை. நாளடைவில் அதுவும் தாய் போலவே வடிவெடுக்கிறது. அது போலவே சாதகன் ஒருவன் தன் குருவையன்றி வேறு யாரையும் நினைக்காமல் இருக்க வேண்டும். அப்படிப்பட்ட ஒரு முனைப்பட்ட தியானத்தினால் அவன் குரு போலவே உயரிய நிலையை அடைகிறான். இதைக் கற்றுத் தரும் புழுவே என் இருபத்திமூன்றாவது குரு.
  12.  தண்ணீர் : ஒவ்வொரு ஜீவராசியின் தாகத்தையும் தண்ணீர் தணிக்கிறது. ஆனால் அது ஒரு போதும் கர்வம் கொள்வதே இல்லை. அது தாழ்வான இடத்தை நோக்கியே பாய்கிறது. அது போலவே ஒரு ஞானியும் அனைவருக்கும் சந்தோஷத்தையும் ஆரோக்கியத்தையும் அருள வேண்டும். கடவுளின் படைப்பில் நீர் போல எளிமையுடன் அனைவருக்கும் பயன்படுத்தும் விதத்தில் ஒரு ஞானி இருக்க வேண்டும். நீரே எனது இருபத்திநான்காவது குரு.

இப்படியாக படைப்பில் அருமையான பாடங்களைக் கற்றுத் தரும் இந்த இருபத்துநான்கு குருக்களை நான் ஏற்றுக் கொண்டு எனது சாதனையைத் தொடர்கிறேன்.

இப்படி யதுவிடம் சொல்லி முடித்தார் அவதூதர்.

பாகவதம் தரும் இந்த அருமையான உபதேசத்தில் வரும் அவதூதரை தத்தாத்ரேயர் என்று கொண்டு தத்தாத்ரேய உபதேசம் எனவும் இது கூறப்படுகிறது,

tags –தத்தாத்ரேயர் ,பாகவதம்,24 குருக்கள்-2

***

கால் பற்றி 6 பழமொழிகள்- கட்டத்தில் கண்டுபிடி (Post. 8633)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8633

Date uploaded in London – –5 SEPTEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

கால்   பற்றி 6 பழமொழிகள்- கட்டத்தில் கண்டுபிடி

ஒரே சொல் பல பழமொழிகளில் வந்தால், ஒரு இடத்தில் மட்டுமே கட்டத்தில் காணப்படும் .

விடைகள் கீழே உள்ளன.

விடைகள்:–

1.காலால் இட்ட வேலையை தலையால் செய்வான்

2.காலில் கட்டினால் விருது, குப்பையில் கிடந்தால் துணி

3.காலில் சுற்றிய பாம்பு கடித்தா ல் ஒழிய விடாது

4.காலில் விழுகிறது நல்லது, மேலில் விழுகிறது கெட்டது

5.காலுக்குத் தக்க செருப்பு, கூலிக்குத் தக்க உழைப்பும்

6.காலுக்கு கை உதவி, கைக்கு கால் உதவி

கால், பழமொழிகள்

100 பொன் பரிசு கிடைக்க எழுதிய கவிதை (Post 8632)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8632

Date uploaded in London – –5 SEPTEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

திருவிளையாடல் புராணத்தில் தருமி என்ற ஏழைப் பிராமணனுக்கு  சிவபெருமான் எழுதிக் கொடுத்த கவியை சங்கப்  புலவன்  நக்கீரன் கேள்வி கேட்க, சிவபெருமானே நேரில் வந்து நெற்றிக் கண்ணைத் திறக்க , “நெற்றிக் கண்ணைத் திறப்பினும் குற்றம் குற்றமே” என்று அவர் வாதாட, பின்னர் எல்லாம் இனிதே முடிந்த கதை எல்லோரும் அறிந்ததே . அந்தப் பார்ப்பனன் தருமி பெற்றது 1000 பொற் காசுகள் . இந்த நிகழ்ச்சியை அப்பர் பெருமான் தேவாரத்தில் பாடியதால் 1400 ஆண்டுகளுக்கு முன்னர் இது நடந்ததை நாம் அறிகிறோம். திருவிளையாடல் திரைப்படம் இந்தக் காட்சியை சுவைபடக் காட்டுவதால் மக்கள் நினைவில் இது பசுமையாக நிற்கிறது .

ஸ்ரீ மாதவ சிவஞான யோகிகள்

ஸ்ரீ மாதவ சிவஞான யோகிகள் என்பவர் வாழ்விலும் இது போல ஒரு சுவையான சம்பவம் நடந்தது . முதலில் மாதவ சிவஞான சுவாமிகள் யார் என்பதைக் காண்போம். அவர் தமிழிலும் சம்ஸ்கிருதத்திலும் புலமை பெற்றவர் . திருநெல்வேலிப் பகுதியில் பாபநாசம் அருகிலுள்ள விக்கிரமசிங்கபுரத்தில் சுமார் 250 ஆண்டுகளுக்கு முன்னர் இவர் பிறந்தார். இவருடைய இயற்பெயர் முக்களா லிங்கர். தந்தையின் பெயர் ஆனந்தக் கூத்தர். தாயார் பெயர் மயிலம்மை.

‘விளையும் பயிர் முளையிலே தெரியும்’ என்னும் பழமொழிக்கேற்ப இவர் மேதாவிலாசம் சிறு வயதிலேயே வெளிப்பட்டது. திருவாவடுதுறை ஆதீன முனிபுங்கவர்கள் ஒரு முறை விக்கிரமசிங்கபுரம் சென்றிருந்தனர். அப்போது பள்ளிக்கூடத்திலிருந்து திரும்பி வந்து கொண்டிருந்த முக்களா லிங்கர் அவர்களைத் தன் வீட்டுக்கு விருந்துக்கு வருமாறு அழைத்தார். இவ்வளவுக்கும் அப்போது அவருடைய தந்தை ஊரில் இல்லை. சிறுவன் அழைப்புக்கிணங்க அவனுடைய வீட்டுக்குச் சென்ற சிவனடியார்களுக்கு அவன் தாயார் அறுசுவை அமுது படைத்து உபசரித்தார்.

தந்தை ஊருக்குத் திரும்பியவுடன் மகனின் தொண்டை நினைத்து மகிழ்ந்தார். தந்தையையும் தாயாரையும் வணங்கிய முக்களாளிங்கர் தன்னைத் திருவாவடுதுறை ஆதீனத்துக்கு அழைத்துச் செல்ல வேண்டினர். அங்கு சென்ற அவர் சிவநெறித் தொண்டு செய்வதே தன்  குறிக்கோள் என்று சொன்னவுடன் அங்கு சின்னப் பட்டத்தில் எழுந்தருளிய வேலப்ப சுவாமிகள் , முக்களா லிங்கருக்கு சிவ தீட்சை அருளி சிவஞானத்  தம்பிரான் என்ற தீட்சா நாமம் கொடுத்தார். குரு முகமாக பல சாஸ்திரங்களைக் கற்று, சிவஞானத்  தம்பிரான் சம்ஸ்கிருத நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்தார். தமிழில் சுமார் 20 நூல்கள் இயற்றினார் .

சிவ ஞான சுவாமிகள் ஒருமுறை திருப் பாதிரிப்புலியூருக்குச் சென்றார்கள் . அப்பர் சுவாமிகளைக் கரை  ஏற்றிவிட்ட  ஊர் என்பதால் சிலகாலம் தங்கினார் .அப்போது அவ்வூரில் கற்றோர் அவை கூடியது . அதில் ஒரு பணக்காரர் , “கரை ஏற விட்ட முதல்வா  உன்னை யன்றியும் ஓர் கதியுண்டாமோ” என்ற ஈற்றடியைத் தந்து இதனை முடித்துத் தருவோருக்கு நூறு பொன் பரிசளிப்போம் என்று அறிவித்தார். இதனை அறிந்த ஏழை ஒருவன் சுவாமிகளிடம் வந்து விண்ணப்பிக்க, சுவாமிகளும் அருள் கூர்ந்து ,

வரையேற விட்டமுதம் சேந்தனிடம்

உண்டனைவல் லினம் என்றாலும்

வரையேற விட்டமுத  லாகுமோ

எனைச்சித்தென்  றுரைக்கின் என்னாம்

நரையேற விட்டமுத  னாளவனாக்

கொண்டு நறும் புலிசை மேவும்

கரையேற  விட்டமுதல்  வாவுன்னை

யன்றியுமோர்  கதியுண்டாமோ

என்ற பாடலை எழுதிக்கொடுத்து பரிஸில் பெற்றுச்  செல்க எனப் பணித்தனர்.

சுவாமிகள் காஞ்சிபுரத்தில் தங்கிய நாட்களில் , மெய்கண்ட தேவரின் சிவ ஞான போதத்துக்கு பேருரை எழுதினார். அந்த நூலின் பெயர் சிவ ஞான மாபாடியம் .

சுவாமிகள் எழுதிய தொல்காப்பிய விருத்தியில் முந்தையோர் உரையில் கண்ட பல விஷயங்களைத் தவறு என்று சொல்லி ஆதாரமும் தருகிறார்.

இவருடைய பிற நூல்கள் –

சிவ ஞான சித்தியார் பொழிப்புரை

சிவசமவாதவுரை மறுப்பு

அரதத்தாசாரிய சுலோக பஞ்சக மொழிபெயர்ப்பு

சித்தாந்தப் பிரகாசிகை

சிவதத்துவ விவேகம்

சித்தாந்த மரபுக்கு கண்டன கண்டனம்

பஞ்சாக்கர தேசிக மாலை

திருத்தொண்டர் திருநாமக்கோவை

வட திருமுல்லைவாயில் திருவந்தாதி

திருவேகரம்பரந்தாதி

அகிலாண்டேசுவரி பதிகம்

அமுதாம்பிகை பிள்ளைத் தமிழ்

செங்கழுநீர் விநாயகர் பிள்ளைத் தமிழ்

திருவேகம்பர் ஆனந்தக்  களிப்பு

கச்சியானந்தருத்திரேசர்  பதிகம்

இளசைப் பதிற்றுப் பத்தந்தாதி

குளத்தூர்ப் பதிற்றுப் பத்தந்தாதி

சோமேசர் முதுமொழி வெண்பா

காஞ்சிப்புராண முதற் காண்ட பேரிலக்கியம்

தொல்காப்பியச் சூத்திரவிருத்தி

நன்நூல் விருத்தியுரைத் திருத்தம்

இலக்கண விளக்கச் சூறாவளி

தருக்க சங்கிரகம்

அன்னம்பட்டீயம்

சுவாமிகள் , திருவாவடுதுறை ஆதீனத்தின் ஞானக் கண்ணாக, செந்தமிழ்க் காவலராக , இலக்கண வரம்பினையும், சமய வரம்பினையும் பாதுகாக்கும் சிவஞான வள்ளலாகத் திகழ்ந்தார். விசுவாவசு சித்திரைத் திங்கள் எட்டாம் நாள் 17-4-1785-ம் ஆண்டு சிவானந்தப் பெருவாழ்வு அடைந்தார்கள்

– உதவிய நூல் – தொல்காப்பிய சூத்திரவிருத்தி; ஆதீன மகாவித்துவான் ச. தண்டபாணி தேசிகர் முகவுரை

tags –மாதவ சிவஞான ,யோகிகள்,சுவாமிகள், திருவாவடுதுறை

குழந்தை பாக்கியம் இல்லையா? -1 (Post No.8631)

SIX BABIES AT SAME TIME (SEXTUPLETS)

WRITTEN BY KATTUKKUTY

Post No. 8631

Date uploaded in London – –5 SEPTEMBER 2020    

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

குழந்தை பாக்கியம் இல்லையா? இதோ பரிகாரங்கள் பல..! -1

                                   Kattukutty

நான் பெற்ற செல்வம் நலமான செல்வம்

தேன் மொழி பேசும் சிங்கார செல்வம்

தொட்டால் மணக்கும் ஜவ்வாது

சுவைத்தால் இனிக்கும் தேன்பாகு.

என் முன் அமைதியாய் உட்கார்ந்திருந்தனர் தம்பதியினர்.

ஆணுக்கு சுமார் 40. வயதிருக்கும், அந்தபெண்ணிற்கு

சுமார் 35 வயதிருக்கும்.

என்ன விஷயமாய் வந்தீர்களோ??? ஜாதகம் இருக்கிறதா????

ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

ஆண் மகன் பேசலானார் : “சார் எங்களுக்கு கல்யாணம் ஆகி

12 வருடம் ஆகிறது…. ஆனால்…….”

அந்தப். பெண்ணின் கண்களிலிருந்து கண்ணீர் பெருகியது.

முதல் ஐந்து வருடங்கள் ஜாலியாக இருந்து விட்டோம்

பிறகு அப்பா அம்மா இருவரும் தொந்திரவு செய்ய செய்ய

போகாத கோவில் இல்லை, குளிக்காத கடல் இல்லை….

இருக்காத விரதம் இல்லை………இப்போதுஎங்கள்

பொழுது போக்கு என்ன தெரியுமா??? கோவில் இல்லை

குளம் இல்லை ஸ்தோஸ்திரம் இல்லை…..

பின்ன என்ன என்று கேட்கிறீர்களா???? உங்களை மாதிரி

ஜோஸ்யர்களை பார்ப்பதுதான்’ என விரக்தியாக சிரித்தார்.

“எங்களை யார் பார்த்தாலும் எதாவது விசேஷம் உண்டா

என்று கேட்பது போலவே தோன்றுகிறது. இதனால் எந்த

கல்யாணம் காது குத்து சீமந்தம் வளைகாப்பு எதறகுமே

அவள் போவதில்லை, அதனால் நானும் போவதில்லை……”.

ஒரு புதுக்கவிதை

“நான் இறந்தால் என்னை எரிக்காதீர்கள்

புதைத்து விடுங்கள்

அப்பொழுதாவது என் வயிற்றில் புழு நெளியட்டும்”

என்னன்ன பாதிப்பு

1)குழந்தை பேறு இல்லை என்றால் ஆண்களை விட பெண்களே

அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.

2)எதிர் வீடு பக்கத்து வீடு குழந்தைகளைப் பார்க்கும் போதெல்லாம

துக்கம்

3)எல்லோரும் என் குழந்தை இப்படி படிக்கிறான்

அப்படி விளையாடுகிறான் என்னும்போது ஏக்கம்…..

4)சொந்தக்கார ர் முன் நடமாட முடிவது இல்லை.

5)எக்கச்சக்கமான சொத்து ….. வாரிசு இல்லை

சம்பாதித்து என்ன பயன்???

6)வேண்டாத சொந்தக்காரர்களினால் நமது சொத்துக்காக

சூழப்படும் நிலை.

7)மறைமுகமாக மலடி, ஆண்மையற்றவன் எனக்கேட்டு

வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் மன நிலை, மனோவியாதி

அதைத்தொடர்ந்த மற்ற வியாதிகள்

இது எதனால்.??.

குல தெய்வ சாபம்- நமது குடும்பத்தில் உள்ள அனைவரும்

சாமி கும்பிடுவது என ஒரு பழக்கம் உண்டு். அது ஒரு முக்கிய

நாளாக இருக்கும் .தை வெள்ளி, தை பொங்கல் ஆடி வெள்ளி.

சொந்தக்காரர்கள் எந்த ஊரிலிருந்தாலும் வந்து விடுவார்கள்.

இதைச் செய்யத் தவறினால் பரம்பரையே முடிந்துவிடும்.

பித்ரு சாபம்- முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய திதி,

தர்ம காரியங்களைச்  செய்யாமலிருத்தல்.

முக்கியமாக வீட்டிலுள்ள மிக வயதானவர்களை உதாசீனப்

படுத்துதல், அவமானப்படுத்துதல், வீட்டை விட்டு ஒதுக்கி வைத்தல் –

இதனாலும் குழந்தை பிறந்து இறத்தல்

கோசாபம்- அந்தக் காலத்தில் ஒவ்வொருவர் வீட்டிலும் பசு மாடு

இருந்தது. மரத்து போன பசுவை வெட்டக் கொடுப்பது,பசுவிற்கு தண்ணீர்

காட்டாமல் இருப்பது, கன்றுக்கு பாலில்லாமல் செய்வது –

இதைச் செயவதினால் பரம்பரையே அற்று போகும்

ரிஷிசாபம்- ஆச்சார்ய புருஷர்களையும், உண்மையான சாதுக்களையும்,

பக்தர்களை கேலி செய்வது, அவமதிப்பது –

கரு உண்டாகி உண்டாகி அழிவதற்கு இதுதான் காரணம்.

சர்ப்ப சாபம்-சர்பங்களை கொல்லுதல்,புற்றுக்களை இடித்து வீடு கட்டுதல் –

 கருவே உண்டாகமலிருக்க இதுவே காரணம்

பெண்சாபம்-பெண்களை பொய்சொல்லி ஏமாற்றுவது, கைவிடப்பட்ட

பெணகளைச் சீரழிப்பது, சொந்த மனைவியை கைவிடுவது,

துன்புறுத்துவது

இயற்கை சாபம்- நிழல் தரும் மரங்கள், பால் தரும் மரங்களை

வெட்டுவது, கன்று ஈனாத வாழையை வெட்டுவது

மருத்துவ காரணங்கள்-

குழந்தைகள் பிறக்காமல் இருக்க ஆண்கள் 45 % காரணம்

பெண்கள். 55% காரணம்

இருவரும் சரியாக இருந்தும் குழந்தைகள் பிறக்காமலிருக்க

சுற்றுப்புற சூழல். மற்றும் சில மன, உடல் ரீதியான

காரணங்கள் -15%.

ஆண்சார்ந்த கோளாறுகள்

ஆணுக்கு தரமான உயிரணுக்கள் உற்பத்தியாவதில் பிரச்சினை

உடலுறவில் ஏற்படும் பிரச்சினைகள்

உடலுறவு கொள்ளும் கால அவகாசத்தில் உள்ள பிரச்சினைகள்

தவறன முறை, தவறான நேரம்

ஜனன உறுப்பில் கோளாறு

பெண் சார்ந்த கோளாறுகள்

பெண் கரு முட்டை வெளியாகாமை

கரு உண்டானாலும் கரு பெலோப்பியன் டயூப்பிலிருந்து

கருப்பைக்கு வராமை

வந்தாலும் கரு. வளர முடியாத சூழ்நிலை

பெண்ணின் கரு விலக்கான 14 வது நாள் கரு உயிரணு

வீர்யமாக இருக்கும்24 மணி மட்டுமே. அதற்குள் உடலுறவு

கொண்டால் கரு உண்டாகும்.

கரு வராமலிருக்க உடலில் உற்பத்தியாகும் ஹாரமோன்களும் காரணம்

மன அழுத்தமும் ஒரு காரணமாகலாம்.

கரப்ப பை பலஹீனத்தினால ஹார்மோன்கள் உண்டாகாது,கருவும்

உண்டாகாது/கர்ப்பப் பை வாயே சில பேர்களுக்கு திறந்திருக்காது.

கர்ப்ப பையில்உண்டகும் அமிலத்தினால் கரு உண்டாகாது

மற்றும் பல காரணங்களும் உண்டு.மருத்துவரிடம் கேட்டுத்

தெரிந்து கொள்ளலாம்

சரி ஜோதிட ரீதியாக குழந்தை பிறக்காமலிருக்க என்னன்ன

காரணங்கள் என ஆய்வோம்

                          *** (அடுத்த கட்டுரையுடன் முடியும்)

tags- பரிகாரங்கள், குழந்தை பாக்கியம் , இல்லை

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

1947: INDEPENDENCE OR TRANSFER OF POWER ? – 2 (Post No.8630)

WRITTEN BY R. NANJAPPA                        

Post No. 8630

Date uploaded in London – – – –5 SEPTEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

1947: INDEPENDENCE OR TRANSFER OF POWER ? – 2

R.Nanjappa

GANDHI ENTERS THE SCENE

Gandhiji entered the scene then. He had in his small book, the only book he ever wrote, “Hind Swaraj” (1909) outlined his idea of how India lost its freedom. He also said how it could regain it. He considered India not as a mere country, but as a civilization; the real enemy it was facing was Modern Civilization. The British were also its victims., more to be pitied than hated.  Swaraj for India really meant the protection of its civilization.”My swaraj is to keep in tact the genius of our civilization”, he said. India gave up its adherence to its civilization and so it lost its freedom.

WHY INDIA FELL

But having said that, he also understood and pointed out what made us give up our adherence to our civilization. It was the economic exploitation forced on the nation by the British and relentlessly pursued for 150 years. Here, Gandhiji touched on the real, core issue: India did not live in the cities and towns; it lived in the 7,00.000 villages. These villages had been independent economic units, self-sufficient for all practical purposes.  Kings and emperors rose and fell, but had not touched the villages. This was the basis of our national Polity and Society. This was the secret of India’s survival and prosperity through the ages.  But the British disrupted their economy, deprived them of their independence, and took away the products of their labour by way of excessive taxation. Polity and Society too declined in consequence. The three lost their organic links. Real Swaraj was therefore to restore to  the villages their rights as independent economic units, to let them function as a society and operate their own Polity. Gandhiji therefore ceaselessly talked of Village Swaraj, or empowering the villages.

The centre of power is in New Delhi, or in Calcutta and Bombay, in the big cities. I would have it distributed among the seven hundred thousand villages of India.

There will then be voluntary cooperation….Voluntary cooperation will produce real freedom. 

Gandhiji knew that Indians had to fight for it, the British just won’t grant freedom. As early as in 1916, he had said in his Benares Hindu University speech:

 If we are to receive self-government, we shall have to take it. We shall never be granted self-government. Look at the history of the British Empire and the British nation; freedom loving as it is, it will not be a party to give freedom to a people who will not take it themselves.  


ELITES AND MASSES

The British as colonialists did not want to encourage Indians in any way.India was not suitable for their direct colonisation, i.e by immigration and settlement.( such as Australia or Canada) So they devised a method to rule the country by military power, and in course of time engaged Indians themselves in enslaving India and its exploitation. These Indians formed an elite, the English educated elite, who studied English language and literature, law, some Western philosophy- all at superficial levels. They were given very junior and minor positions in administration; but this was enough to make them identify with the colonial masters and alienate themselves from the people of India. On top of them were the British bosses.

This “elite” force was created by the education system imposed by the British, discarding the indigenous education system. But it achieved its objective only because the British had made knowledge of English compulsory for service. The Indian economy having been fully disrupted by then, the educated people had to take up ‘service’ or employment in increasing numbers for a living. This made them increasingly identify themselves with the colonial masters and distance themselves further from their own people and traditions.

This system was sustained by the enforcement of colonial law and order, and a police department under the control of the British officers. 


This was the system we had in India on the eve of Independence in 1947. So, what happened on 15 August 1947? What changed afterwards?

Indian government under Prime Minister Nehru took over the structure as it was then. Not a single element in it was discarded or altered. Law and order, administration and education-everything continued as they had been under the British. Nehru even continued Englishman Lord Mountbatten as the Governor General (unlike Pakistan). The Army Chief was also an Englishman- Robert Lockhart.

           *           to be continued

அவதூதர் கொண்டிருக்கும் 24 குருக்கள் – 1 (Post No.8629)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 8629

Date uploaded in London – – 5 SEPTEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

அவதூதர் கொண்டிருக்கும் 24 குருக்கள் – 1

ச.நாகராஜன்

பாகவதத்தில் பதினொன்றாம் ஸ்கந்தத்தில் கிருஷ்ணருக்கும் உத்தவருக்கும் நடக்கும் சம்வாதம் ஒன்று இருக்கிறது.

அதில் யதுவுக்கும் அவதூதருக்கும் நடந்த ஒரு சம்பாஷணை வருகிறது.

அவதூதர் தான் இருபத்துநான்கு குருக்களைக் கொண்டதாகக் கூறுகிறார்.

அந்த 24 குருமார்கள் யாவர்?

  1. பூமி : எல்லா ஜீவராசிகளும் தங்கள் கர்மத்திற்குத் தக பூமியில் ஜெனிக்கிறார்கள். பூமியை வெட்டி உழுது பயிரிட்டு வளர்க்கின்றனர். அதில் தீயை மூட்டுகின்றனர். ஆனால் பூமியோ தனது பாதையிலிருந்து இம்மியளவும் நகர்வதில்லை. உண்ண உணவும், இருக்க இடமும் அது தருகிறது. ஆகவே பூமியிடமிருந்து ‘ஞானவானான ஒருவன் தன் பொறுமை என்னும் விரதத்தை ஒரு போதும் விடக்கூடாது’ என்பதை கற்றுக் கொண்டேன். மற்றவர்க்கு சேவை செய்வதையே விரதமாகக் கொள்ள வேண்டும் என்பதை பூமி காட்டுகிறது. ஆகவே மலை, நதி அனைத்தும் உள்ள பூமியை என் குருவாகக் கொள்கிறேன்.
  2. காற்று : காற்று சுத்தமானது. நாற்றமில்லாதது. ஆனால் அது இனிமையான மற்றும் நாற்றமான வஸ்துக்களின் மீது பாரபட்சமின்றிப் பாய்ந்து செல்கிறது. அந்தக் கணத்தில் அது அந்த வஸ்துக்களின் மீது பட்டு அவற்றின் பண்பை ஏற்றாலும் கூட சிறிது நேரத்திலேயே தன் இயல்பை மீண்டும் அடைகிறது. இதிலிருந்து நான், ஆன்மீக வழியில் ஈடுபாடைய ஒருவன் இந்த உலகில் வாழும் போது இன்ப துன்பம் தரும் புலன்களுக்குரிய பொருள்களினால் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும் என்பதைக் கற்றுக்  கொண்டேன்.
  3. ஆகாயம் : ஆன்மா ஆகாயம் போல எங்கும் நிறைந்தது. சில சமயம் ஆகாயம் மூடி இருப்பது போலத் தோன்றும். தூசியினாலும் புகையினாலும் நிரம்பி இருப்பது போல இருக்கும். சூர்யோதய காலத்திலும் அஸ்தமன காலத்திலும் வெவ்வேறு வண்ணங்களில் அது விகசிக்கும். ஆனால் உண்மையில் அது எந்த வண்ணமும் இல்லாதது. இதிலிருந்து உண்மையான ஞானி ஒருவன் எப்போதுமே ஆகாயம் மற்றும் வெளி போல எதனாலும் பாதிக்கப்படாமல் தூய்மையானவனாக இருக்க வேண்டும் என்பதைக் கற்றுக் கொண்டேன்.
  4. அக்னி : சில சமயம் கொழுந்து விட்டு அது எரியும். சில சமயம் சாம்பல் பூத்து உள்ளடங்கி இருக்கும். ஆனால் எப்போதும் அது இருக்கும். நல்லவனோ கெட்டவனோ எவன் கொடுத்தாலும் அதை ஏற்றுக் கொண்டு அவனது பாவங்களை அது போக்குகிறது; அதே சமயம் தன் தூய்மையை இழக்காமல் இருக்கிறது. அது போலவே ஞானி ஒருவன் யார் கொடுத்த உணவை ஏற்றாலும் கூட அவனது பாவத்தைப் போக்கி அவனை ஆசிர்வதிக்க வேண்டும். ஆன்மா, வடிவம் இல்லாமல் இருந்த போதும் கூட தேவதைகளாக  மனிதர்களாக மிருகங்களாக தாவரங்களாக வடிவம் எடுக்கிறது. இவை பிறப்பதும் இறப்பதும் பிரபஞ்சத்தில் மர்மமாகவே இருக்கிறது. ஆரம்ப ஆதாரமும் முடிவும் ஆன்மாவே. அக்னியும் இது போன்றதே.
  5. சூரியன் : நாம் பார்க்கும் சூரியன் ஒருவனே. ஆனால் பல்வேறு நீர் நிலைகளில் அது பிரதிபலிக்கும் போது அது பலவாக ஆகிறது. ஒரே ஆன்மாவே இது போல பல்வேறு ஜீவராசிகளில் பிரதிபலிக்கிறது. நாம் பார்க்கும் சூரியன் வெவ்வேறு வடிவம் நம் பார்வைக்குத் தக எடுப்பது போல ஒரு  ஞானியும் தனது பக்தர்களுக்காக அனைத்து வடிவையும் எடுக்கிறான்.
  6. புறா : ஒரு சமயம் இரு புறாக்கள் ஒரு மரத்தில் வசித்து வந்தன. ஒரு நாள் ஒரு வேடன் அவற்றின் குஞ்சை எடுத்து விட்டான். அதைத் தீயில் வாட்டினான். பெண் புறா திரும்பி கூட்டிற்கு வந்து பார்க்கையில் குஞ்சைக் காணோம். குஞ்சு கிடந்த அக்னியில் அதுவும் விழுந்து தன் பிராணனை விட்டது. ஆண்புறா திரும்பி தன் கூட்டிற்கு வந்து நடந்ததைப் பார்த்தது. அதுவும் அதே அக்னியில் விழுந்து தன் உயிரை விட்டது. இதை சற்று எண்ணிப் பார்த்தால் புத்திசாலித்தனம் நிரம்பிய மனிதனனாலும் கூட தனது பற்றினால் அழிவை அடைகிறான். பற்றற்ற ஆன்மா உடல் புலன்களுடன் சேர்ந்தவுடன் முடிவில்லா ஜனன மரண சுழற்சியில் சிக்குகிறது. இதைக் கற்றுக் கொடுத்த புறாவே என் ஆறாவது குரு.
  7. மலைப்பாம்பு : தன் இரைக்காக மலைப்பாம்பு ஒரு போதும் இருந்த இடத்தை விட்டு நகர்வதில்லை. அதன் எதிரில் எந்த ஜீவராசி வருகிறதோ அதை இரையாகப் பிடித்துத் தின்னுகிறது. இதிலிருந்து ஞானத்தைத் தேடும் ஒரு மனிதன் இன்ப சுகத்தை நாடித் தானாகச் செல்லக் கூடாது என்பதை நான் கற்றுக் கொண்டேன். எது அவன் வழியில் தானாக வருகிறதோ அதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதையும் கற்றுக் கொண்டேன். மலைப்பாம்பைப் போல உறக்கத்தையும் விழிப்பையும் நீக்கி விட்டு ஆன்ம தியானம் ஒன்றையே மேற்கொள்ள வேண்டும் என்பதை அறிந்து கொண்டேன்.
  8. கடல் : பிரம்மாண்டமான சமுத்திரத்திலிருந்து நான் கற்றுக் கொண்டது அநேகம். எவ்வளவு நதிகள் அதில் வந்து சேர்ந்தாலும் கூட அது தன் (நீர்)மட்ட அளவை மீறாமல் இருக்கிறது. கோடைகாலத்தில் நதிகள் வறண்ட போதும் அது தன் அளவைக் குறைப்பதில்லை. அதே அளவு தான் இருக்கிறது. அது தன் எல்லையை மீறி எங்கும் புகுவதில்லை. அதே போல ஞானியானவன் தனது உயரிய நிலையிலிருந்து ஒரு போதும் தாழ்வதில்லை. கடல் போல அவன் ஜெயிக்க முடியாமல் இருக்க வேண்டும். ஆழம் காண முடியாத கடல் போல அவனது இயல்பான இயற்கை குணம் யாராலும் சுலபத்தில் உணரமுடியாதபடி இருக்க வேண்டும். கடலே எனது எட்டாவது குரு.
  9. பூச்சி: வெட்டுக்கிளி தீயைப் பார்த்தவுடன் அதில் தாவிக் குதிக்கிறது. அதில் எரிந்து சாம்பலாகி அழிகிறது. அது போலவே ஞானமற்ற மனிதனும் கூட மாயத்தோற்றம் அளிக்கும் புலன் இன்பங்களில் ஈடுபட்டு  முடிவற்ற பிறப்பு- இறப்புச் சுழலில் சிக்குகிறான். இதற்கு மாறாக ஞானியான ஒருவனோ மற்ற அனைத்தையும் விட்டுவிட்டு மாயையையே எரிக்கிறான். வெட்டுக்கிளியே என் ஒன்பதாவது குரு.
  10. யானை : ஆண் யானையைப் பிடிக்க மனிதர்கள் போலியான பொதி வைத்து அடைக்கப்பட்ட பெண் யானை போன்ற ஒன்றைக் காண்பிக்க மோகத்தினால் ஆண் யானை அவர்களிடம் சிக்குகிறது. அதே போல மனிதனும் கூட பெண்களைக் கண்டு மயங்கி மோகத்தினால் தளைப்படுகிறான். முக்தியை விரும்பும் ஒருவன் மோகத்தை விட வேண்டும் என்பதைத் தெரிவிக்கும் யானையே எனது பத்தாவது குரு.
  11. எறும்பு :  எறும்பானது தனக்கு வேண்டிய உணவைச் சேமித்து வைத்துக் கொள்கிறது. அது சேமித்த வைத்த அனைத்தையும் தானும் உண்ணுவதில்லை; தான தர்மமும் செய்வதில்லை. ஆனால் இதர ஜீவராசிகள் அவற்றை எடுத்துக் கொள்கின்றன. அது போலவே செல்வத்தைச் சேர்த்து வைக்கும் ஒருவன் கொள்ளை மற்றும் கொலைக்கு ஆளானவன் ஆகிறான். எறும்பு நமக்கு சில நல்ல விஷயத்தையும் போதிக்கிறது. எப்போது ஓயாத சுறுசுறுப்பைக் கொண்டு அது உழைக்கிறது. எந்தத் தடை வந்தாலும் அதை மீறி அது முன்னேறிக் கொண்டே இருக்கிறது; தனக்கு வேண்டியதைச் சேமித்துக் கொள்கிறது. அது போலவே ஞான மார்க்கத்தில் ஈடுபடும் ஒருவன் தளர்வின்றிச் சுறுசுறுப்புடன் ஆன்மாவை அறிதலில் ஈடுபட வேண்டும். இந்த அரிய உண்மையை விளக்கும் எறும்பே என் பதினொன்றாவது குரு.
  12. மீன் : மீன் பேராசைப் பட்டுத் தூண்டிலில் இருக்கும் இரையை உண்ணுகிறது. தூண்டிலில் அகப்பட்டு உயிரை இழக்கிறது. இதிலிருந்து அதிகச் சுவை தரும் உணவு வகைகளில் ஆசைப்படக் கூடாது என்பதை நான் கற்றுக் கொண்டேன். நாக்கை வெல்லும் ஒருவன் அனைத்தையும் வென்றவனாகிறான். ஒரு நல்ல விஷயத்தையும் மீன் கற்றுத் தருகிறது. அது தனது இருப்பிடத்திலிருந்து அதாவது ஜலத்திலிருந்து ஒரு போதும் வெளியேறுவதில்லை. அதே போலவே மனிதனும் கூட தனது இருப்பிடமான உண்மையான ஆன்மாவை ஒரு போதும் விட்டு அகலக்கூடாது. இதை போதிக்கும் மீனே எனது பன்னிரெண்டாவது குரு.

TO BE CONTINUED

tags —  தத்தாத்ரேயர் , இயற்கை குரு , பாகவதம்

OLD ARTICLES



தத்தாத்ரேயர் | Tamil and Vedas

tamilandvedas.com › tag › தத்த…

  1.  

Translate this page

9 Nov 2013 – இயற்கையில் 13 ‘குரு’க்கள். இந்து சந்யாசிகள் வாழ்நாள் முழுதும் பாடம் கற்கும் மாணவர்கள். அவர்கள் எதிலிருந்தும் பாடம் …



கலீலியோ | Tamil and Vedas

tamilandvedas.com › tag › கலீல…

  1.  

Translate this page

23 May 2019 – தத்தாத்ரேயர் | Tamil and Vedas · https://tamilandvedas.com/tag/தத்தாத்ரேயர்/. 1. … பாகவத புராணத்தில் தத்தாத்ரேயர் என்பவர் இயற்கையிடம் தாம் …



தவளை | Tamil and Vedas

tamilandvedas.com › tag › தவளை

  1.  

Translate this page

25 Nov 2018 – தத்தாத்ரேயர் | Tamil and Vedas · https://tamilandvedas.com/tag/தத்தாத்ரேயர்/. 1. … பாகவத புராணத்தில் தத்தாத்ரேயர் என்பவர் இயற்கையிடம் தாம் …

The Connection between William Wordsworth and Dattatreya …

tamilandvedas.com › 2011/11/10 › the-connection-bet…

  1.  
  2.  

10 Nov 2011 – Let Nature be Your Teacher ”–William Wordsworth and Dattatreya William Wordsworth was an English poet who lived from 1770 to 1850 in …



Nature is our Teacher | Tamil and Vedas

tamilandvedas.com › tag › nature-is-…

  1.  

Translate this page

7 Nov 2013 – The motto is LET NATURE BE YOUR TEACHER. Now I give below an interesting poem by an anonymous author. Sri Adi Shankara is the …

அடுத்த கட்டுரையுடன் நிறைவுறும்.