
சித்த மருத்துவ ரகசியங்கள், பரிபாஷை குறித்து விளக்குவீர்களா ?
ரகஸியம் பரம ரகஸியம்!- Part 1 (Post No.8831)
Post No. 8831
Date uploaded in London – – 20 OCTOBER 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
லண்டனிலிருந்து 19-10-2020 அன்று இந்திய நேரம் மாலை 6.30 மணிக்கு ஞானமயம்/GNANA MAYAM நிகழ்ச்சி ஒளிபரப்பட்டது. அதில் கேள்வி – பதில் நிகழ்ச்சியில் இடம் பெற்ற கேள்வியும் பதிலும் கீழே தரப்பட்டுள்ளது.
FACEBOOK.COM/GNANAMAYAM
19-10-2020 அன்று ஒளிபரப்பப்பட்ட facebook.com/gnanamayam நிகழ்ச்சியின் உரை இதோ:
ரகஸியம் பரம ரகஸியம்!
Kattukutty

சித்த மருத்துவம் பல்வேறு இக்கட்டான சூழ்நிலைகளிலும் மங்காமல் வாழ்ந்திருப்பது மருந்துகளினாலும் அதனுடைய ரகஸிய மருந்துக் கலவைகளினாலுமே ஆகும்
புதிய கண்டுபிடிப்புகள், புதிய ஆய்வுகள், வளர்ச்சிகள் இருந்தாலும்
நவீன முறையில் செய்யப்படும் மருந்துகள் தாற்காலிக நிவாரணத்தையே கொடுக்கின்றன. சித்த மருந்துகளோ நோயின் அடித்தளத்தையே தாக்கி மக்களை நலமடையச் செய்கின்றன.
இதற்கெல்லாம் காரணம் மருந்துகளை தேர்ந்தெடுத்த விதமும் தயாரிக்கும் முறைகளும் தான். இவைகள் ஒருகாலத்தில ரகசியமாக வைக்கப்பட்டிருந்தன……. ஏன்???
புதையல் ரகசியம்
இக்காலத்திலும் சரி, முன் காலத்திலும் சரி மனிதர்களுக்குத் தேவை
காசு, பணம், துட்டு மணி, மணி, காசு,,பணம், துட்டு, மணி மணி…….
இக்காலம் போல அக்காலத்தில், பேங்க், சேப்டி லாக்கர் கிடையாது.
பணம், நகைகளைப் பாதுகாக்க ஒரு குடத்தில், பானையில் வைத்து
பூமியில் புதைத்து வைத்தனர். மேலும் ஒரு அரசன் தோற்று ஓடும் போதும் ஜமீந்தார்கள், குறு நில மன்னர்கள், பாளையக்காரர்கள்,
பண்ணையார்கள், தனக்கு மிகுதியான பணத்தைப் புதைத்து வைத்திருப்பார்கள்.
இது இருக்குமிடம் ரகசியமாக சங்கேத குறியுடன் அதாவது ஒரு பரிபாஷையுடன் இருக்கும்.
சிலர் மந்திரவாதிகளைக் கொண்டு பூதங்களைப் பாதுகாவலாக வைப்பார்கள்.அதற்கும் ஒரு சீக்ரட் கோடு வேர்டு உண்டு
இப்பொழுது புதையலை கண் கூடாகப் பார்க்கும் ஒரு சித்தர் பாடலை உங்களுக்கு தரப் போகிறேன். புதையல் கிடைத்தால் எனக்கும், திரு.சாமிநாதன், மற்றும் திரு கல்யாண்ஜி குழுவினருக்கும் பங்கு தருமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்
இந்தப்பாடல் time and vedas ல் இடம் பெறும். கண்டிப்பாக உங்கள் நெருங்கிய நண்பர்களுக்கும் கூறவும்.
ஆம ப்பா வெண்ணையிலே தேனை தேய்த்து
ஆதளையின் பாலைக் கூட்டிஅடைவாய்தேய்த்து
ஓம ப்பாதிலர்தமிட தன்னைக் காணார்
ஓங்கி நின்ற உரு மாற்றம் ஒருவர் காணார்
போம ப்பா வெண்டிசையும் கால் வேகங்கொண்டு
பூமிதனை மறைந்தனைத்தையும் பொலிவாய்காண்பர்
வேம ப்பா அண்டரண்டம் வழலைப்பட்டால்
வேதாந்த பஞ்சார்தனெனச் சொன்னாரே!!!

தெய்வீக ரகசியம்
முன் காலத்தில் தென்னாட்டு அரசர்களில் சேர மன்னர்களும்
முக்கியமானவர்களில் ஒருவர். தங்கள் ஆட்சியையே கடவுளிடம்
ஒப்படைத்து தங்கள் தேசத்தையே “கடவுளின் தேசம்” என்று
அழைத்தனர்.தங்கள் சொத்துக்கள் அனைத்தையும் ஸ்ரீ பத்மநாப
ஸ்வாமியிடம் ஒப்படைத்தனர். இவை ரகசியமாக பாதுகாக்கப்பட்டு
வந்தது. இந்த ரகசியத்தை ஒருவர் பொறுக்காமல் அரச குடும்பத்திற்கு எதிராக கேஸ் போட்டு ரகசியத்தை உடைக்கச் செய்தார்.
அரசாங்க அதிகாரிகள் புடை சூழ கதவுகள் உடைக்கப்பட்டன.
உலகமே வியக்கும் வண்ணம் கோடி கோடி ரூபாய்கள் பெறுமான தங்க, வெள்ளி நகைகள், தங்க காசுகள் கண்டு பிடிக்கப்பட்டு 30 நாட்கள் ஆயிற்று கணக்கெடுக்க.
கணக்கின் முடிவில் உலகத்திலேயே மிக பணக்கார சாமியாக
விட்டார் பத்ம நாப சாமி ( வேடிகன் சிடி தவிர !!!)
முதலிடத்திலிருந்த திருப்பதி சாமி இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டார்.
இது சம்பந்தமாக ஒரு ஜோக் ஒன்றும் நிலவியது.
திருப்பதி சாமி சொன்னாராம் பத்மநாபசாமியிடம், “நான் நின்று கொண்டே பல வருஷம் சம்பாதித்தை நீங்க படுத்தகிட்டே ஒரே நாளிலே சம்பாதிசிட்டீங்களே”!!!!
அரசாங்க ரகசியம்
மேலும் சிலவிஷயங்களை இரகசியமாக வைக்க வேண்டியதன் காரணங்கள், குடும்ப, அரசாங்க ரகசியமாகவோ இருக்கும். அரச பரம்பரை துண்டிக்கப் படக்கூடாது என்பதற்காகவும் பரம்பரை சொத்து மற்றவர் கையில் சிக்கி சீரழிந்து விடக் கூடாது என்பதற்காகவும் பரி பாஷைகள் உள்ளன.
நீங்கள் எந்த சினிமா எடுத்துக் கொண்டாலும், அரசன் அரச வாரிசை
கொல்லச் சொல்லுவான். பெரும்பாலும் அது எம் என் நம்பியாராகவோ, பி எஸ் வீரப்பாகவோ, ஆர் எஸ்.மனோகராகவோ எஸ் ஏ அசோகனாகவோ இருக்கும்
அரசனின் அந்தரங்க ஆள், பரிதாப்பட்டு தன் மனைவியிடம் கொடுத்து குழந்தையை வளர்க்கச் சொல்லுவான்.
குழந்தையின் முதுகில் உள்ள மச்சம், கழுத்தில் உள்ள தாயத்து, பிரசவம் பார்த்த தாதி இவைகள் மூலமாக கண்ணாம்பாள் கண்டு பிடித்து குடும்பத்தை ஒன்று சேர்த்து அரசை நிலை நிறுத்துவார்.
ரச மணி ரகசியம்
மந்திர, தந்திர அஷ்டமா சித்தி அடைவதற்காகவும் சித்தர்களின்
ஒரு அரிய கண்டுபிடிப்பு “ரச மணி”. பாத ரசத்தை மூலிகைகள் மூலமாகக் கட்டி, மறைந்து போக, பறக்க, எடை குறைவாக, எடை அதிகமாக ….. இன்னம் பல சித்திகள் அடைந்தனர். இது எல்லா வியாதியும் போக்கும் மிக மருத்துவ குணம் வாய்ந்தது, இதை வைத்திருந்தவர்கள் மிக சக்தி வாயந்தவர்களாக கருதப் பட்டார்கள்.
உதாரணம் காலஞ்சென்ற மதுரை திரு T M சவுந்திர ராஜனை ஒரு சித்தர் சந்தித்து அவரிடம், ஒரு ரச மணி கொடுத்து “நீ பாட்டுலகில் மிகப் புகழ் பெறுவாய் “ என்றார். T M S தன் வாய்ப்பட கூறினார் ஒரு பேட்டியில் இப்படி !!!.45 வருடமாகப் MGR குரலிலும், சிவாஜி குரலிலும் பல வகையாக பாடியதோடு மட்டுமல்லாமல் முருகன் பாடல்களைப் பாடி மெய்யுருக வைத்து புகழ்பெற்றார் ரச மணி மூலமாய்!!!
இதை கட்டும் வித்தை ரகசியமாகப் பாதுகாக்கப்பட்டு வருகிறது இன்று வரையிலும்!!!
சாகா வரம் பெறும் ரகசியம்
இதற்கெல்லாம் மேலாக அரசர்களும், அரசிகளும், மேலும் பணம் படைத்தவர்களும்,நூறாண்டும் அதற்கு மேல் சாகாமலும் வாழ ஆசைப்பட்டனர்!!!
உடலை திடகாத்திரமாக வைக்க உபயோகப்பட்டது சித்த வைத்திய
மூலிகைகள். இதன் இரகசியத்தை அறிய பல நூறு மைல்கள் சென்று
மலை மீது ஏறி பச்சிலைகளை பறித்து சித்தி பெற்றனர் சித்தர்கள்.
அனைத்து சித்தர்களும் முன்னூறு, நானூறு, ஐந்நூறு ஆண்டுகள் வாழ்ந்தனர். இன்னும கண்ணுக்கு புவப்படாமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
சர்வ சக்தி ரகசியம்
இதற்கெல்லாம் மேலாக மந்திர சித்தி பெற்று உலகத்திலேயே மிக சக்தி வாய்ந்த மனிதனாக அதாவது உலகத்தையே தன் கால் கீழ்கொண்டுவர முயற்சித்தவர்கள் தான் அதிகம்!!!
எல்லா மொழி சினிமாக்களிலும் ஒருதிடகாத்திரமான மந்திரவாதி வருவார்
SV ரங்கா ராவ் மாதிரி…..
கண்ணாடி கண்ணாடி காட்டு என் முன்னாடி
என்னை விட சக்தி வாய்ந்தவன் உண்டா இவ்வுலகில்???
கண்ணாடியில் N T ராமா ராவோ, T R மகாலிங்கமோஜெமினி கணேசனோ தெரிவார்கள்…….பிறகு என்ன மந்திரவாதி அவனைக் கொல்ல முயலுவான். கதாநாயகன் ஒரு முனிவர் அல்லது சித்தர் வழி காட்ட மந்திரவாதியை வென்று அரசாட்சியைப் பிடிப்பார் – NTR அல்லது TRM அல்லது JEMINIயோ.
இப்பவும் இந்தப் போட்டி நடந்து கொண்டுதான் இருக்கிறது
அரசியலில் நடக்கிறது. சமுதாயத்திலும் நடக்கிறது.
அரசியலைப பற்றி பேச விரும்ப வில்லை. ஆனால் ஒரு புள்ளி விவரம்,
இந்தியாவிலேயே மிகப் பெரிய பத்து பணக்காரர்களில் 6 பேர்கள் சாமியார்கள்!!!!
-to be continued…………………………………………………………………….