

COMPILED BY LONDON SWAMINATHAN
Post No. 8912-b
Date uploaded in London – –10 NOVEMBER 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
நவம்பர் ஒன்பதாம் தேதி — திங்கட் கிழமை
உலக இந்து சமய செய்தி மடல்
தொகுத்து வழங்குபவர் வைஷ்ணவி ஆனந்த்

இது ‘ஆகாச த்வனி’ யின் உலக இந்து சமய செய்தி மடல் நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்,
நமஸ்காரம் செய்திகள் வாசிப்பது VAISHNAVI ANAND
அனைவர்க்கும் ஞான மயக் குழுவினரின் தீபாவளி வாழ்த்துக்கள்
நவம்பர் 14ம் தேதி தீபாவளியும் இந்தியாவில் குழந்தைகள் தினமும் கொண்டாடப்படுகிறது. உங்கள் குழந்தைகள் அனைவர்க்கும் குழந்தைகள் தின வாழ்த்துக்களும் உரித்தாகுக
எங்கள் நிகழ்ச்சிகளை திங்கட்கிழமை தோறும் லண்டன் நேரம் பிற்பகல் 1 மணிக்கும், இந்திய நேரம் மாலை 6-30 மணிக்கும் நேரடியாகக் கேட்கலாம். உலக இந்து சமய செய்தித் தொகுப்புடன் நேயர்களின் கேள்விகளுக்கும் விடைகளும் அளிக்கப்படுகிறது.
உங்கள் பேட்டை, நகரத்தில் நடைபெறும் விழாக்கள், உற்சவங்கள் பற்றி எங்களுக்கு செய்தி அனுப்புங்கள்.
எங்களை எந்நேரமும் தொடர்பு கொள்ள Facebook.com / Gnana mayam முகவரியில் அணுகவும்
XXXX

முதலில் நீங்கள் ஆங்கிலத்தில் கேட்ட செய்திகளை சுருக்கமாகச் செப்பிவிட்டு தமிழ் நாட்டுச் செய்திகளை விரிவாக வழங்குகிறேன்.
பிரிட்டிஷ் பிரதமர் பாரிஸ் ஜான்சன் தீபாவளி வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் அயோத்தியில் ராமஜென்ம பூமியில் 400 ஆண்டுகளுக்குப் பின்னர் முதல் தடவையாக தீபாவளி கொண்டாடப்படும் என்று அந்த மாநிலத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். சென்ற ஆண்டு 4 லட்சம் தீபங்களை ஏற்றி கின்னஸ் சாதனைப் புஸ்தகத்தில் இடம்பெற்ற அயோத்தி , இம்முறை 5 லட்சம் தீபங்களை ஏற்ற திட்டமிட்டுள்ளது.
லவ் ஜிஹாத் எனப்படும் கட்டாய மத மாற்ற காதல் வலையை எதிர்த்து உத்தரப்பிரதேசம் மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்கள் சட்டங்களை இயற்றத் தீர்மானித்துள்ளன. கர்நாடகமும் இதை பரிசீலித்து வருகிறது. திருமணத்துக்காக மதம் மாறுவதை அனுமதிக்க முடியாது என்று முன்னதாக உயர்நிதி மன்றமும் தீர்ப்பு வழங்கி இருந்தது.
மதம் மாற்றம் செய்யும் நோக்கத்தோடு இந்து சமயப் பெண்களையும் ஆண்களையும், ஏனைய மதத்தினர் காதல் வலையில் சிக்க வைப்பது லவ் ஜிஹாத் என அழைக்கப்படுகிறது .
XXX
மதுரா நகரிலுள்ள கிருஷ்ண பரமாத்மாவின் கோவிலில் ஒரு முஸ்லிம் தொழுகை செய்ததைக் கண்டித்து பாக் பட் நகரில் பாரதீய ஜனதா எ ம் எல் ஏ . ஹனுமான் சாலீஸா துதியைப் படித்தார். இருவர் மீதும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
XXX
லவ் ஜிஹாத்துக்கு எதிராக 3 மாநிலங்கள் சட்டம் இயற்றும்
உத்தரப்பிரதேசத்தில் மதுரா நகர கிருஷ்ணன் கோவிலுக்குள் ஒருவர் நமாஸ் தொழுகை நடத்தியதை அடுத்து இந்து எம் எல் ஏ ஒருவர் மசூதியில் ஹனுமான் சாலிசா பாராயணம் செய்தார் . இதில் தொடர்புடைய முஸ்லிமும் ஹிந்துக்களும் கைது செய்யப்பட்டனர்
XXXX
காமாக்யா கோவிலில் தங்க கலசம்

அஸ்ஸாம் மாநிலத்தில் கெள ஹாத்தி நகரிலுள்ள அன்னை காமாக்யா தேவி கோவில் மிகவும் புகழ்பெற்றது. அது நாட்டிலுள்ள சக்திக் கேந்திரங்களில் ஒன்று.
அந்தக் கோவில் கோபுரத்தில் மூன்று பெரிய தங்கக் கலசங்களைப்
பொருத்துவதற்காக ரிலையன்ஸ் நிறுவன உரிமையாளர் முகேஷ் அம்பானி 20 கிலோ தங்கத்தை கொடுத்துள்ளார்.
XXX
கோவில்களின் நிதியை இந்து சமயம் தொடர்பில்லாத பணிகளுக்குப் பயன்படுத்தக் கூடாதென்று சென்னை உயர்நீ தி மன்றம் கூறியுள்ளது..
XXX
கேரளத்தில் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு அர்ச்சகர் பதவி
கேரளத்திலுள்ள திருவாங்கூர் தேவஸ்வம் போர்டு, புகழ் பெற்ற சபரிமலை ஆலயம் உள்பட 1200 க்கும் மேலான கோவில்களை நிர்வகித்து வருகிறது .கேரளத்தில் கடந்த 4 ஆண்டுகளில் பிராமணர் அல்லாத 133 அர்ச்சகர்கள் நியமிக்கப்பட்டனர். இப்போது பகுதி நேர அடிப்படையில் ஷெட்யூல்ட்டு வகுப்பினர், பழங்குடி வகுப்பைச் சேர்ந்த மேலும் 19 பேரை பகுதிநேர அர்ச்சகராக நியமிக்க போர்டு தீர்மானித்துள்ளது
XXX
தீபாவளியில் இருளை ஒளி வெல்வது போல நாம் ஒன்றிணைந்து கொரோனாவை வெல்வோம் என இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தில் தற்போது கொரோனா பரவல் காரணமாக 2-வது முறையாக முழு LOCK DOWN அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், ‘உலக தீபாவளி திருவிழா 2020’ கொண்டாட்டங்கள் காணொலி காட்சி வாயிலாக நடக்கிறது. 3 நாட்கள் நடைபெறும் இந்த விழாவை பிரதமர் போரிஸ் ஜான்சன் நேற்று தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் தீபாவளியில் இருள் மீது ஒளி வெற்றி பெறுவது போல் நாம் ஒன்றிணைந்து கொரோனாவை வெல்வோம் என நம்பிக்கை தெரிவித்தார். இது குறித்து அவர் பேசியதாவது:-
இருள் மீது ஒளி வெற்றி பெறுகிறது; தீமை அழிகிறது; அறியாமை அகலுகிறது; என்பதை தீபாவளி நமக்கு கற்பிப்பதை போலவே நாம் ஒன்றாக சேர்ந்து இந்த வைரசை வெல்வோம்.
XXXX

திருச்சியில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 100 முதல் 150 இலங்கை தமிழ் பெண்கள் விரதமிருந்து 21 நாட்களும் கேதார கவுரி அம்மனுக்கு பூஜை செய்து வழிபட்டு வருவது வழக்கம்.
ஐப்பசி மாதத்தில் வரும் விரதங்களில் ஒன்றாக கேதார கவுரி விரதம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த விரதமானது தீபாவளி அமாவாசையன்று முடிவுறும் 21 ஒரு நாள் விரதம் ஆகும். சிவனைக்குறித்து அன்னை பார்வதி மேற்கொண்ட விரதங்களில் முக்கியமானது இந்த கேதார கவுரி விரதம்.
அன்னை பராசக்தியான கவுரி இறைவனின் ஒரு பாகத்தை அடைய மேற்கொண்ட இந்த விரதம் 21 திதிகள் அடங்கிய 21 தினங்களில் கடைபிடிப்பது. இந்த விரதம் பெரும்பாலும் புரட்டாசி மாதத்தில் நவமி அல்லது அஷ்டமி திதியில் தொடங்கும். திருச்சி கே.கே.நகர் அய்யப்பநகர் புவனேஸ்வரி அம்மன் கோவிலில் கேதாரேஸ்வரர் மற்றும் கேதார கவுரி அம்மன் சன்னதி உள்ளது.
இந்த ஆண்டு இலங்கை தமிழ் பெண்கள் சுமார் 300 பேர் விரதம் இருந்து வருகிறார்கள். இந்த விரதத்தின் இறுதி நாளான தீபாவளி அன்று சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு இந்த விரதமானது முடித்து வைக்கப்படுகிறது.
XXXX

அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் முதன் முதலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் ஒருவர் வெற்றி பெற்றதால் அவரது சொந்த ஊரான துளசேந்திரபுரம் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். பட்டாசுகள் வெடித்தும், இனிப்பு வழங்கியும் வெற்றியை கொண்டாடினர். வீட்டு வாசல்களில் ரங்கோலி வரைந்து வாழ்த்து தெரிவித்தனர். அமைச்சர் காமராஜ் அங்குள்ள கோவிலுக்குச் சென்று அர்ச்சனை செய்து வழிபட்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் காமராஜ் கூறுகையில், “இந்த சிறிய கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண் இப்போது அமெரிக்காவில் மிக உயர்ந்த பதவிகளில் ஒன்றில் அமர்கிறார். இது ஒரு பெருமையான தருணம்” என்றார்.
கமலா ஹாரிஸ் சொந்த ஊர் தமிழகத்தின் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள துளசேந்திரபுரம் கிராமம் ஆகும். கமலா ஹாரிசின் தாய்வழி தாத்தா கோபாலன், பாட்டி ராஜம் ஆகியோர் மன்னார்குடியை அடுத்துள்ள துளசேந்திரபுரம் கிராமத்தை சேர்ந்தவர்கள்.
XXXXX
தமிழகத்திலுள்ள சிவாலயங்களில் தொன்மை வாய்ந்தது திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில். இக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் திருக்கார்த்திகை தீபத் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. சுமார் 20 லட்சம் பக்தர்கள் வரை அன்று கிரிவலம் மற்றும் சாமி தரிசனம் செய்ய வருவார்கள்.
இந்த ஆண்டுக்கான தீபத் திருவிழா முன்னேற்பாடு பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன. வருகிற 20–ந்தேதி திருவிழா தொடங்குகிறது.29–ந்தேதி மகா தீபம் ஏற்றப்படுகிறது.
திருவண்ணாமலை தீபத் திருவிழா பல்லாண்டுகளாக தடையின்றி நடந்து வரும் நிலையில் அதனை தடுத்து நிறுத்துவது தெய்வ குற்றம் ஆகும். எனவே தீபத்திருவிழா தேரோட்டம் மற்றும் சாமி வீதி உலா வுக்கு தடை விதிக்கக் கூடாது. தற்போது கொரோனா கட்டுக்குள் இருப்பதால் தேவையான கட்டுப்பாடுகளை விதித்து வழக்கம்போல் தேரோட்டம் மற்றும் சாமி வீதி உலா நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என்று திருவண்ணாமலையில் வசிக்கும் அனைத்து தரப்பு மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
XXXX

அடுத்த சில நாட்களில் வரும் முக்கிய விழாக்கள்
நவ 09, திங்கள் : நவமி. திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதிப் பெருமாள் திருக்கோயிலில் மூலவருக்குத் திருமஞ்சன சேவை. மதுரகவி சுவாமிகள் குருபூஜை.
நவ 10, செவ்வாய் : தசமி. ஐப்பசி பூரம். சுவாமிமலை ஸ்ரீமுருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். திருநெல்வேலி ஸ்ரீகாந்திமதியம்மாள் இரவு தங்க சப்பரத்தில் தபசுக்காட்சி.
நவ 11, புதன் : ஏகாதசி. விஷ்ணு தலங்களில் சிறப்பு அலங்கார தீபாராதனை. தென்காசி, கடையம், பத்தமடை, தூத்துக்குடி, சங்கரநயினார் கோவில் ஆகிய திருத்தலங்களில் ஸ்ரீஅம்பாள் திருக்கல்யாணம்.
நவ 12, வியாழன் : துவாதசி. பிரதோஷம். திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல்.
நவ 13, வெள்ளி : திரயோதசி. மாத சிவராத்திரி. தன்வந்திரிபகவான் ஜெயந்தி. வள்ளியூர் ஸ்ரீமுருகப் பெருமான் உற்ஸவாரம்பம். வெள்ளி மயில் வாகனத்தில் திருவீதிவுலா. திரு இந்துளூர் ஸ்ரீபரிமளரெங்கநாதர் திருக்கல்யாண வைபவம்.
XXXXX
இத்துடன் லண்டனிலிருந்து வரும் செய்திகள் நிறைவடைந்தன………………………….. செய்திகளை உங்களுக்கு வழங்கியவர் வைஷ்ணவி ஆனந்த்………………………… நன்றி, வணக்கம்

அனைவர்க்கும் ஞான மயக் குழுவினரின் தீபாவளி வாழ்த்துக்கள
9-11-2020, உலக இந்து சமய, செய்தி மடல்
்
R Nanjappa
/ November 10, 2020கமலா ஹாரிஸ் அமெரிக்க தேர்தலில் வென்று உயர் பதவியில் அமர்வது இந்தியாவுக்கு எந்த விதத்திலும் பெருமை தரும் விஷய மல்ல. கமலா பிறந்தது அமெரிக்காவில், அதனால் அவர் அமெரிக்கரே தவிர இந்தியர் அல்ல. மேலும் அவர் பாப்டிஸ்ட் கிறிஸ்தவர். ஹிந்துமதத்தையும் ஹிந்துக்களையும் வெறுப்பவர். இவர் வெற்றியை ஒரு அமைச்சர் கோயிலில் வழிபட்டுக் கொண்டாடினார் என்றால் அவர் IQவை எப்படிப் பாராட்டுவது என்று தெரியவில்லை!
அதே டெமாக்ரடிக் கட்சியில் துளஸி கப்பார்ட் என்று ஒரு அம்மையார் அமெரிக்க காங்கிரஸ் (பார்லிமென்ட் கீழ்சபை உறுப்பினர்) அவர் ஹிந்துவாக வாழ்க்கை நடத்துபவர்.[Practising HIndu] அவரை அக்கட்சியினர் தேர்வுசெய்ய வில்லை. இதிலிருந்தே அங்கு சர்ச்சுகளின் ஆதிக்கத்தைத் தெரிந்துகொள்ளலாம். இந்த கமலா ஹாரிஸின் வெற்றியினால் இந்தியாவிற்கு என்ன நமை அல்லது லாபம்? அமெரிக்க அதிகாரவர்கம் இந்தியாவிற்கு எதிராகவே இருந்துவந்திருக்கிறது.
கமலா என்ற பெயரைக் கண்டு ஏமாறும் முட்டாள்களாக நாம் இருக்கக்கூடாது. ‘ஆளைக்கண்டு மயங்காதே, ஊது காமலை’ என்பார்கள்.
kps710
/ November 12, 2020Thanks a lot for the detailed information about various functions to be
held at various places. May your service continue for ever/ Subramanian,
Matunga, Mumbai:400 019