அ(ம்)மாவாசை பெயர் அற்புதம்! (Post No.8925)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8925

Date uploaded in London – –13 NOVEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

வேதத்தில் அற்புதமான வானியல் செய்திகள் உள்ளன. ஒரு வருஷத்தை 12 மாதங்களாகப் பிரித்து மாதத்தை இரண்டு பட்சங்களாகப் பிரித்து,  அதை 30 நாட்களாக்கி , ஒரு நாளை 60 நாழிகை ஆக்கி சாதனை செய்தது வேறு எந்த கலாசாரத்திலும் இல்லை . ஆண்டையும் தக்ஷிணாயணம், உத்தராயணம் என்று பிரித்ததும் வேறு எங்கும் காணக்கிடக்கில. அதுமட்டுமல்ல ; ஒரு வருஷத்தை மேலை நாட்டினர் நான்காகப் பிரித்தகாலையில் நாம் மட்டும் வேத காலத்திலேயே ஆறு பருவங்களாகப் பிரித்த அற்புதமும் வேறு எங்கும் இல .  இதில் மிகப்பெரிய அதிசயம் என்னவன்றால் வேதங்களுக்கு சில ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் எழுந்த தமிழ் இலக்கியமும் அப்படியே ‘ஆறு பருவம்’, ‘நாற்படை’ என்று பேசுவதாகும் . நாம் உண்டாக்கிய நாற்படை  இன்று உலகெங்கும் செஸ் என்ற பெயரில் கோடி கட்டிப் பறப்பதைக் காண்கிறோம் . பிரம்மாண்டமான எண்கள் யஜுர்வேதத்தில் இருப்பதும் அதை அப்படியே தமிழர்களும் சங்கம், சமுத்திரம், பதுமம் என்ற சம்ஸ்கிருதத் சொற்களோடு பயன்படுத்துவதும் வியப்பிலும் வியப்பு.

பாணினிக்கு பதஞ்சலி  எழுதிய பேர் உரை — மஹா பாஷ்யத்தைப் – படிக்கையில் இப்படியும் ஒருவர் உரை எழுத முடியுமா என்று வியந்து குன்றின் மேல் நின்று கூச்சல் போடத் தோன்றுகிறது! ஆந்தை வடிவ வியூகம், ஆந்தை வடிவ கட்டிடம் பற்றி பாணினி க்கு காத்யாயனர் எழுதிய விளக்கக் குறிப்புகளை படிக்கையில் “அம்மாடியோவ், அப்படியோவ்” என்று கத்தும்படி தோன்றும். மின்னல் வர்ணத்தை வைத்து பருவக்குறிப்புகளைத் தரும் பதஞ்சலியை என்னவென்று வியப்பது. இளம்பூரணரும் பேராசிரியரும் பதஞ்சலியைக் கரைத்துக் குடித்ததால் அதெ பாணியில் உரை எழுதியது மகா அதிசயம். பதஞ்சலி வாழ்ந்ததோ அவர்களுக்கெல்லாம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்.

இப்படி சூப்பர்லேட்டிவ் (SUPERLATIVES- LARGEST, OLDEST, BEST, MOST ANCIENT) உரிச் சொற்களைப் போட்டு எழுதியவுடன்

“சரிதாம்ப்பா , உன் வாயை மூடு , இனி வரப்போகும் , கண்டுபிடிப்புகளை சொல்லு. இன்டர்நெட் பற்றி இந்துக்கள் கதைத்தார்களா? அல்லது கம்ப்யுட்டர் ,மொபைல் போன், பேஸ்புக் , கூகிள் மேப் , ஜூம் ZOOM , கிரெடிட் கார்டு , ஈ மெயில் , E MAIL இணையம் பற்றி ஏதேனும் செப்பினர்களா? என்ற கேள்விகளுக்கு ஏற்கனவே பதில் எழுதிவிட்டேன். இனி வரப்போகும் கண்டுபிடிப்புகளையும் மகா பாரத மருத்துவ அற்புதங்களையும் எழுதி இருக்கிறேன் .

இப்போது ‘சப்ஜெக்ட்’டுக்கு வருவோம்

அமா + வாஸ்யை என்றால் என்ன?

ஒரு மாதத்தை இரண்டு பிரிவுகளாகப் பிரித்த இந்துக்கள் சூரிய, சந்திரன் இயக்கத்தை நன்கு அறிந்ததால் கிரஹணம் ஏற்படுவதைக் கூட முன் கூட்டி அறிந்தனர். இதை அறிந்த கிருஷ்ண பரமாத்மா சூரிய கிரஹணத்தைப் பயன்படுத்தி ஜெயத்ரத்தனை  வீழ்த்திகியதை நாம் அறிவோம் ; எனது பழைய கட்டுரையில் காண்க

ஒவ்வொரு பவுர்ணமி நாளன்றும் சந்திரன் ஒரு குறிப்பிட்ட நட்சத்திரத்துக்கு அருகில் வருகையில் அதை  மாதத்தின் பெயர் ஆக்கி அதை மிகப்பெரிய திருவிழா ஆக்கியதையும் காஞ்சிப் பெரியவரின் அற்புதமான உரையில் காண்க. அத்தனையும் பரிபாடல், சிலப்பதிகார காலம் முதல் தமிழர்கள் அப்படியே பின்பற்றியதையும் காண்க.

நிலவு 15 நாள் வளரும் – அது சுக்கில/ வெள்ளை பக்ஷம்

நிலவு 15 நாள் தேயும் ; அது கிருஷ்ண/ கருப்பு  பக்ஷம்

தமிழர்கள் மஹா கெட்டிக்காரர்கள் சுக்ல/ கிருஷ்ண என்ற ‘கலர்’களைத் தூக்கி எறி ந்துவிட்டு  வளர் பிறை , தேய்  பிறை என்று அழகாகப் பெயர் சூட்டினர். . தமிழர்கள் எவ்வளவு பெரிய விஞ்ஞானிகள் என்பதை வாய்மை உண்மை, மெய்மை (Mano, Vaak, Kaaya) என்று சொன்னதிலும் ஒளி/ஒலி (Light and Sound) என்று சொல் உண்டாக்கியத்திலும் புலிக்குப் பிறந்தது (Cat and Tiger belong to same family) பூனையாகுமா? என்ற பழமொழியில் இருப்பதையும் நெல்லும் புல்லும் ஒரே பேமிலி (Paddy, Grass belong to same family) என்று சொன்னதிலும், அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் (Macrocosm is in Microcosm)  உளது , உள்ளது போகாது, இல்லது வாராது (Energy can neither be created nor destroyed)  என்று சொன்னதிலும்,  இருப்பதை ஏற்கனவே காட்டிவிட்டேன்

நிலவைக் காணாத நாளுக்கு ‘அமா வாசை’ என்று நாமகரணம் செய்தனர் இந்துக்கள் .

அமா வாஸ்ய என்றால் ‘சேர்ந்து வசிப்பது’ என்று பொருள்.

வசிப்பது என்ற சம்ஸ்கிருதச் சொல்லை தமிழர்கள் இன்றும் பயன்படுத்தி வருகிறோம்

சூரியனும் சந்திரனும் சேர்ந்து வசிக்கும் நாள் அமா வாசை;  அமா என்றால் ‘சேர்ந்து’ என்று பொருள்.

வெள்ளைக்காரர்களுக்குப் பெயர் கிடைக்காததால் அதை நியூ மூன் new moon  என்று பெயர் சூட்டினர் . அங்கு நியூ new எதுவும் இல்லை. அரேபியர்களோ மூன் moon – நிலவு பற்றி கணக்குத் தெரியாததால் ரம்ஜான் நாள் எது என்று கூட அறிவிக்க முடியாமல் வா னத்தைப் பார்த்துக் கொண்டிருப்பர். நாமோ கிரஹண ம் ஏற்படும் நிமிடத்தை, வினாடியை கூட பல நுற்றாண்டுகளுக்கு முன்னரே பஞ்சாங்கத்தில் எழுதி வருகிறோம்.

சூரியனுக்கு மிக அருகில் சந்திரன் இருப்பதை “சேர்ந்து= அமா”என்று சொல்கிறோம். அதாவது சந்திரனும் சூரியனும் ஒரே நேர் கோட்டில் வருகின்றன சந்திரனின் நிழல் பூமியில் பட்டால்  அதன் பெயர் சூரிய கிரஹணம் . அதாவது நிழல் விழும் பகுதியில் வாழும் மக்கள் சூரியனைப்  பார்க்க இயலாது.

சந்திர கிரஹணம் பவுர்ணமி  அன்றுதான் நிகழும் ;

சூரிய  கிரஹணம் அமாவாசை   அன்றுதான் நிகழும்; .

ஒரு அமாவாசை முதல் மறு அமாவாசை வரை  ஒரு மா தம் என்று கணக்கிடும் வழக்கம் தெலுங்கர், கன்னடியர் இடையே உண்டு .

வாழ்க ஜோதிடம், வளர்க வானியல்

tags- அமாவாசை, அம்மாவாசை

Xxx  subham xxxx

Leave a comment

Leave a comment