
மன்னாதி மன்னர் (மொக்க) ஜோக்ஸ் - 2 (Post.8993)
WRITTEN BY KATTUKKUTY
Post No. 8993
Date uploaded in London – – 3 DECEMBER 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
மன்னாதி மன்னர் (மொக்க) ஜோக்ஸ் – 2
Kattukutty
அமைச்சரே, புலவர் ஏன் “பிராவுடன்” வந்திருக்கிறார்???
பாடி காண்பிங்கங்கறதை தப்பா புரிஞ்சுக்கிட்டார்போல இருக்கு…..
xx
எதற்கு மன்னர்பாட வரும் புலவர்களிடம் ஆதார் அட்டையை வாங்கி
பரிசோதிக்கிறார்???
எதிரி நாட்டு புலவர்களும் கும்பலோடு கும்பலாக பாடி பரிசைப்
பெற்று சென்று விடுகிறார்களாம்!!
xxx

நகர் வலம் போகும்போது ஆதார் அட்டையை எதற்கு எடுத்து
போகிறீர்கள் மன்னா???
நான் இந்த நாட்டு மன்னன் என்று சொன்னால் யாரும் நம்ப
மாட்டேன் என்கிறார்கள்……
xxx
மகாராணி கேட்ட ஒரே கேள்வியில் எதிரி நாட்டு மன்னன் ஒரே
ஓட்டமாக ஓடிவிட்டான்….
அரசி அப்படி என்ன கேட்டார் மன்னா???
தாலி பிச்சை தான் !!!,
xxx
போர்களத்தில் எதிரி மன்னன் என் கழுத்தைப் பிடித்தான்…..
நீங்கள் உடனே வாளைப பிடித்தீரகளா??
இல்லை அவன் காலைப் பிடித்தேன்!!!
xxx
போர்களத்துக்கு போய்வந்த பின் மன்னர் இரண்டு நாளைக்கு
அந்தப்புரம் போக மாட்டார்……
ஏன்???
கால் வலியோடு தலை வலியும் சேர்ந்தா தாங்க முடியாதாம்!!!
xxx
புலவர் போதைலே பாடினதை மன்னர் கண்டுபிடிச்சுட்டார்!!!
அப்புறம் என்ன செய்தார்???
ஆயிரம் ஊறுகாய் பாக்கெட்டுகளை பரிசாகக் கொடுத்தார்!!!!
xxx
மன்னர் போதேல இருக்கற போது குழந்தைக்கு பேர் வைக்கச்
சொன்னது தப்பாப் போச்சு……
என்ன பேர் வைத்தார்???
“கள்ளம்மா”ன்னு பேர் வைச்சுட்டார்
xxxx

கொடுத்து கொடுத்து எதிரி மன்னரின கைகள் சிவந்தது விட்டதென்று
எதைப் பார்த்து தெரிந்து கொண்டீர்கள்? அமைச்சரே?.?
தங்களின் முதுகைப் பார்த்துத்தான் மன்னா…….
xxxx
அந்த புலவர் பாடுவதில் ஒரு வரி கூட புரியவில்லை அமைச்சரே??
அவர் ஜி.எஸ். டி வரியைப் பற்றி பாடுகிறார் மன்னா!!!
xxx
மன்னரின் சொந்த “சேனல்” எனபதற்காக இப்படியா?.?.
ஏன் என்ன ஆச்சு???
நம் படை வீரரர்கள புறமுதுகிட்டு ஓடி வருவதை மாரத்தான்
ஓட்டம் என்று திரித்து சொல்றாங்க!!!!
xxx
பணிப்பெண்களை அழைத்துக்கொண்டு மன்னர் போருக்குப் போராரே…….எதுக்கு????
எதிரி மன்னர் சபலப் பேர்வழியாம்!!!!
இரும்பைக் குடுத்து இரும்புச் சத்து வாங்கிட்டு வா என்கிறாரே மன்னர்????
அதாவது பேரீச்சம்பழத்தை சொல்றார்!!!!
xxx
போர்களத்தில மையப்பகுதியில் வெல்லத்தை தூவுறாங்களே எதுக்கு???
நம் மன்னருக்காகத்தான்…….”கவ்வுற” மண்
டேஸ்டா இருக்க மாட்டேங்குதாம்!!!!
எதிரி மன்னர் புறாவுக்கு பதில் கிளியை அனுப்பி இருக்கிறானே?? எதற்கு???
ஓலைக்கு பதிலாக செய்தியை கூறிச் சென்று விடுமாம்!!!
xxxx
அரண்மணை வைத்தியரை வேண்டாம் என்று சொல்லி ஒரு கிழவியை
வேலைக்கு வைத்திருக்கிறாரே மன்னர் ஏன்???
அவருக்கு “பாட்டி வைத்தியம்” தான் பிடித்திருக்கிறதாம்!!!
xxxx

இளவரசனுக்கு வந்த அண்டை நாட்டு பெண்ணை நம் மன்னர்
ஏன் வேண்டாம் என்று சொல்லி விட்டார்???
வரதட்சணையாக 100 பதுங்கு குழிகளைக் கேட்டாராம்……….
xxx
மன்னா தகவல் அறியும் உரிமை சட்டத்துல உங்களப் பத்தின
தகவல கேக்குறாங்க ………
எதைப்பற்றி????
மன்னர் இதுவரை எத்தனை போர்களத்திலிருந்து ஓடி
வந்திருக்கிறார் என்று???.?
xxxx
மன்னா …… எதிரிக்கு போரில் பாடம் புகட்டினீர்களா???
ஆமாம் அதெற்கென்ன இப்போ???
போன் செய்து அந்தப் பாடத்தில் “டவுட்” கேட்கிறான் மன்னா…….
மன்னர் ஏன் கோபமாக இருக்கிறார்???
போர்க்களத்தில. அவர் ஓடி வந்ததை விளையாட்டுச் செய்தியில்
காட்டினார்களாம்………
xxxx
மன்னா உங்களுக்கு ஒரு சந்தோஷமான செய்தி…..
என்ன ஒற்றனே???
எதிரி நாட்டு போர் முரசு பழுதாகி விட்டது!!!!
மன்னர் நெகிழ்ந்து போனாராமா???
ஏன்???
தூதுப் பறா அரண்மணைக்கு போகாமல் நேராக பதுங்கு
குழிக்கே வந்து விட்டதாம்!!.,
xxx
புலவர்கள் அதிர்ச்சி அடையும்படி மன்னர் அப்படி என்ன பரிசு
தந்தாராம்???
இருபது பொற்காசுகளுக்கு டோக்கன் கொடுத்திருக்காராம்……
அரசர் நாய் வளர்க்கிறாராம்……
ஏன்???
புலவர்கள் வெகு தூரத்தில் வரும் போதே மோப்பம் பிடித்து
உஷார் படுத்தத்தான்!!!
xxxx
மாறு வேடப் போட்டியை ஏன் மன்னர் தடைசெய்கிறார்???
அவர் மாதிரியே வேஷம் போட்டு யாரோ அந்தப்புரத்திற்குள்
நுழைஞ்சிட்டாங்களாம்……..
போருக்கு போகும் மன்னர் மீசையில் ஏன் மெழுகு தடவிக்
கொள்கிறார்????
மீசையில் மண் ஒட்டக்கூடாதாம்…….
xxx

முடி வெட்ட போகலாமா அமைச்சரே???
வேண்டாம் மன்னா, தலையையே வெட்ட எதிரி காத்துகொண்டு
இருக்கான்!!!
எதிரி மன்னன் என்ன எழுதியிருக்கிறான்???
உங்களை திட்ட வார்த்தையே இல்லையாம், ஆகையால் வெறம்
ஓலையை அனுப்பி இருக்கான்???
அரசர் உள்ளே நுழையம் போது “கப்” அடிக்குதே???
பதுங்கு குழின்னு நினைச்சு செப்டிக் டேங்குக்கு உள்ளே
இறங்கிட்டார்!!!
tags- மன்னாதி, மன்னர் ஜோக்ஸ் – 2 ,

***