
COMPILED BY LONDON SWAMINATHAN
Post No. 9011-A
Date uploaded in London – –8 DECEMBER 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
டிசம்பர் ஏழாம் தேதி — திங்கட் கிழமை ,2020
உலக இந்து சமய செய்தி மடல்
தொகுத்து வழங்குபவர் வைஷ்ணவி ஆனந்த்
இது ‘ஆகாச த்வனி’ யின் உலக இந்து சமய செய்தி மடல் நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்,
நமஸ்காரம் செய்திகள் வாசிப்பது VAISHNAVI ANAND

எங்கள் நிகழ்ச்சிகளை திங்கட்கிழமை தோறும் லண்டன் நேரம் பிற்பகல் 1 மணிக்கும், இந்திய நேரம் மாலை 6-30 மணிக்கும் நேரடியாகக் கேட்கலாம். உலக இந்து சமய செய்தித் தொகுப்புடன் நேயர்களின் கேள்விகளுக்கும் விடைகளும் அளிக்கப்படுகிறது.
எங்களை எந்நேரமும் தொடர்பு கொள்ள Facebook.com / Gnana mayam முகவரியில் அணுகவும்
XXXX
தமிழகத்தில் உள்ள 35 கோயில்களில் சித்த மருத்துவ பிரிவு: ஐகோர்ட் கிளையில் அறநிலையத்துறை தகவல்
மதுரை, ஜெய்ஹிந்த்புரத்தைச் சேர்ந்த சித்த மருத்துவர் ஜெயவெங்கடேஷ், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், தமிழக அரசின் கடந்த 1970ம் ஆண்டு அரசாணைப்படி, அனைத்து கோயில்களிலும் சித்த மருத்துவமனை பிரிவை ஏற்படுத்துமாறு அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.
#இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோர் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. வக்கீல் கணபதிசுப்ரமணியன் ஆஜராகி, ‘‘அரசாணைப்படி மக்கள் அதிகம் கூடும் முக்கிய கோயில்களில் சித்த மருத்துவ வசதி இருக்க வேண்டும்,’’ என்றார். அறநிலையத்துறை வக்கீல் நாராயணகுமார் ஆஜராகி, ‘‘தமிழகத்திலுள்ள முக்கியமான 35 கோயில்களில் முதல்கட்டமாக சித்த மருத்துவ பிரிவு துவக்குவதற்கான பணிகள் நடந்து வருகிறது. இவை பயன்பாட்டுக்கு வந்ததும், படிப்படியாக அனைத்து கோயில்களிலும் சித்த மருத்துவ வசதி ஏற்படுத்தப்படும்,’’ என்றார்.
இதையடுத்து அறநிலையத்துறை தரப்பில் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய வேண்டுமென கூறிய நீதிபதிகள் விசாரணையை தள்ளி வைத்தனர்.
xxxxxx
நாகரீகமாக உடை அணிந்து கோவிலுக்கு வாருங்கள்

நாகரீகமாக, அதாவது சம்பிரதாயத்தை மீறாதபடி, உடை அணிந்து கோவிலுக்கு வருமாறு க்ஷிரடியிலுள்ள சாய் பாபா கோவில் நிர்வாகம் பக்தர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது..
மகாராஷ்டிரா மாநிலம் அகமதுநகர், சீரடியில் பிரசித்தி பெற்ற சாய்பாபா கோவில் உள்ளது. இங்கு மராட்டியம், வெளிமாநிலம் மட்டும் இன்றி உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் வருகை தருகின்றனர். இந்தநிலையில் பக்தர்கள் நாகரிகமாக கோவிலுக்கு உடையணிந்து வருமாறு சீரடி சாய்பாபா கோவில் அறக்கட்டளை நிர்வாகம் கேட்டுக்கொண்டு உள்ளது.இதுதொடர்பாக கோவிலில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. அதில் பக்தர்கள் நாகரிகமாக அல்லது பாரம்பரிய உடையை அணிந்து கோவிலுக்கு வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
XXXX
திருக்கோவில் டி .வி. TV தடை கோரி வழக்கு
திருக்கோவில், TV ‘டிவி’ துவங்க தடை விதிக்க கோரிய வழக்கில், ‘உத்தரவு பின்னர் பிறப்பிக்கப்படும்’ என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்தது.
திருநெல்வேலி மாவட்டம், மன்னார்கோவில் ராஜகோபால சுவாமி குலசேகர ஆழ்வார் கோவில் அர்ச்சகர் பெரியநம்பி நரசிம்ம கோபாலன் தாக்கல் செய்த பொதுநல மனு:தமிழக அறநிலையத் துறையின் கீழ், 36 ஆயிரம் கோவில்கள் உள்ளன. கோவில்கள் பாதுகாப்பு, பராமரிப்பின்றி உள்ளன. கோவில்களின் முக்கிய நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப, 8.77 கோடி ரூபாயில் திருக்கோவில், ‘டிவி’ துவக்கப்படும் என, தமிழக அரசு அறிவித்தது.
முதல் கட்டமாக நம் பாரம்பரியம், கலாசாரத்திற்கு சான்றாக உள்ள கோவில்களின் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். வாட்ச்மேன்கள், துாய்மைப் பணியாளர்கள் உட்பட இதர பணியாளர்களை நியமித்து, குறைந்தபட்ச சம்பளம் வழங்க வேண்டும்.
அதுவரை திருக்கோவில், ‘டிவி’ TV துவங்க மேல் நடவடிக்கை எடுக்கக் கூடாது என, தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு, மனு செய்தார்.
நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வு, ‘உத்தரவு பின்னர் பிறப்பிக்கப்படும்’ என்றது.
XXXX

சம்ஸ்கிருதத்தில் டாக்டர் (பிஎச். டி ) பட்டம் பெற்ற முஸ்லீம் மாணவி
குஜராத் பல்கலைக்கழகத்தின் சம்ஸ்கிருதத் துறை மாணவி சல்மா குரேஷி . இவர் சம்ஸ்கிருதத்தில் டாக்டர் பட்டம்.பெற்று அனைவரையும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறார். இந்தியாவில் குரு – சிஷ்ய முறையிலான பாரம்பரிய கல்வி முறை குறித்து இவர் ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.
இதுகுறித்து சல்மா கூறும்போது, “வேதங்கள், உபநிடதங்கள், புராணங்களில் குரு – சிஷ்ய முறை குறித்து நிறைய கூறப்பட்டுள்ளன. பள்ளி படிப்பில் இருந்தே சம்ஸ்கிருதத்தின் மீது ஆர்வமாக இருந்தேன். வேதங்கள், புராணங்களைப் படிப்பது பிடிக்கும். இதற்கு எனது குடும்பத்தினர் யாரும் தடையாக இல்லை. இந்தமத தத்துவங்கள் பெரும்பாலும் சம்ஸ்கிருதத்தில் உள்ளதால், இது கடவுள் மொழி என்று நம்பப்படுகிறது. ஆனால், மதத்துக்கும் மொழிக்கும் எந்த தொடர்பும் இல்லை.
எந்த மொழியையும் படிக்க மாணவர்களுக்கு சுதந்திரம் அளிக்க வேண்டும்.. என்னைப் பொறுத்தவரையில் சம்ஸ்கிருதத்தை எல்லோருக்கும் கட்டாயமாகக் கற்றுத் தரவேண்டும். சம்ஸ்கிருத ஆசிரியையாக வேண்டும் என்பது எனது விருப்பம் ” என்றார்.
Xxxxx
சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா 21-ந்தேதி தொடங்குகிறது
உலகப் புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி மாதத்தில் ஆனித்திருமஞ்சன திருவிழாவும், மார்கழி மாதத்தில் ஆருத்ரா திருவிழாவும் வெகுவிமரிசையாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான மார்கழி விழா, வருகிற டிசம்பர் 21-ந்தேதி (திங்கட்கிழமை) தொடங்குகிறது.
டிசம்பர் 29-ந்தேதி முக்கிய விழாவான தேர்த்திருவிழா நடக்கிறது.
டிசம்பர் 30-ந்தேதி (புதன்கிழமை) அதிகாலை கோவில் ராஜ சபை என்று அழைக்கப்படும் ஆயிரங்கால் மண்டபத்தில் சாமிக்கு மகா அபிஷேகம் நடக்கிறது. இதனை தொடர்ந்து திருவாபரண அலங்காரமும், மதியம் 3 மணி அளவில் ஆருத்ரா தரிசன விழாவும் நடைபெறுகிறது.
xxxx
மகாதீபம் 11 நாட்கள் காட்சி தரும்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப விழாவையொட்டி ஏற்றப்பட்ட தீபம் டிசம்பர் 9ம் தேதி வரை காட்சி தரும்.
அண்ணாமலை உச்சியில் ஏற்றப்பட்ட மகாதீபம் 11 நாட்கள் பக்தர்களுக்கு காட்சி தரும். தினசரி மாலை 6 மணிக்கு ஏற்றப்படும் தீபம் மறுநாள் காலை 6 மணிக்கு குளிர் விக்கப்படும். மகாதீபத்தை டிசம்பர் 9-ந்தேதி வரை தரிசிக்கலாம்.
11 நாட்கள் நிறைவடைந்த பின்னர் தீப கொப்பரை எடுத்து வரப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்படும். இதைத் தொடர்ந்து ஆயிரம் கால் மண்டபத்தில் தீப கொப்பரை பாதுகாப்பாக வைக்கப்பட்டு டிசம்பர் 30-ந்தேதி ஆருத்ரா தரிசனம் நாளில் நடராஜ பெருமானுக்கு திலகமிடப்பட் பின்னர் பிரசாதமாக வழங்கப்படும்.
XXXX
இத்துடன் லண்டனிலிருந்து வரும் செய்திகள் நிறைவடைந்தன………………………….. செய்திகளை உங்களுக்கு வழங்கியவர் வைஷ்ணவி ஆனந்த்………………………… நன்றி, வணக்கம்.

TAGS– உலக , இந்து சமய ,செய்தி மடல்7-12-2020,