பல்லு போச்சு – வாழ்க்கையே போச்சு!! (Post No.9035)

WRITTEN  BY KATTUKKUTY

Post No. 9035

Date uploaded in London – – 14 DECEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

பல்லு போச்சு – வாழ்க்கையே போச்சு!!!!

Kattukutty

மனிதனுக்கு அழகு முகம்!!! அந்த முகத்திற்கு அழகு பற்கள்!!!

பறகள் அழகுக்கு மட்டுமல்ல, சாப்பிடவும் தான்!!! சில பழங்களை,

காய்களை நறுக்கி சாப்பிடுவதைத் தவிர பற்களால் கடித்து

சாப்பிடுவதே தனி ருசி!!!

உதாரணம் கரும்பு, மாங்காய், கொய்யா!!!!

குழந்தைகளுக்கு இது ஒருஆயுதமும் கூட!!!

பற்கள் பற்றிய ஒரு ஜோக்……..

ஏ நாக்கே, நீ ஏதாவது பேசித் தொலைந்துவிடுகிறாய், கடைசியில்,

கடைசியில் உடைபடுவது நான் தான்!!!

பற்களால் மற்றொரு உபயோகம் பற்களைப் பார்த்து ஜோதிடமும்

சொல்லலாம்!!! பறகளின் அமைப்பு , பற்களின் அளவு, பற்களுக்கு

இடையே உள்ள இடை வெளி,பற்களின் நிறம் ஆகியவற்றின் மூலம்

ஒருவருடைய வாழ்கையையே கணிக்க முடியும்!!!!

இந்த பல் ஜோதிடத்திற்கு “டான்ட் சாஸ்திரம்” என்று பெயர்.

பற்கள் வெள்ளை வெளேறென்று வெண்மையாக இருந்தால் வாழ்க்கை வளமானதாகவும்,சந்தோஷகரமானதாகவும் இருக்கும். பலருடைய

நட்பும் கிடைக்கும். சந்திர ஆதிக்கம் பெற்ற இவர்கள் புகழ் பெற்று வாழ்வார்கள்.

மஞ்சள் நிற பற்களா உங்களுக்கு…..சனி ஆதிக்கம் பெற்றவர் நீங்கள்

ரொம்ப பந்தா காட்டுவீர்கள்!!! சனி ஆதிக்கம் மிகுந்த நீங்கள் நிறைய

பிரச்சினைகளையும், ஏமாற்றங்களையும் சமாளிக்க நேரிடும்.

பற்கள் சிவப்பு நிறமா??? ராஜ யோகம்தான் உங்கள வாழ்க்கை!!!

செவ்வாயின் ஆதிக்கம் பெற்ற நீங்கள், போலீஸ், ராணுவம் போன்ற

இடங்களில் உயர்ந்த பதவிகளைப பெறுவீர்கள்!!!

வெளிர் சிவப்பு நிறத்தில் பற்கள் அமைந்தால், கேட்கவே வேண்டாம்

உங்களை மாதிரி புத்திசாலி கிடையாது!!! அறிஞர் நீங்கள்!!!

காதல் திருமணத்தினால் வெற்றிகரமான வாழ்க்கை, வெளிநாடுகளுக்கு பயணம்!!! இறந்த பின்னும் உங்கள் புகழ் உலகம்

முழுவதும் பரவும்!!!

முன்வரிசைப் பற்களில் இடை வெளியா???நல்ல எதிர்காலமும், ராஜ யோகமும் உண்டு உங்களுக்கு!!! அதில் இடைவெளி இருந்தால்,வாழ்க்கை சவால் நிறைந்ததாகவும், கடைசியில் வெற்றி நிறைந்ததாக முடியும்!!!!

பற்கள் வரிசை தவறி தாறுமாறாக இருந்தால் அவர்களது வாழ்க்கை போராட்டமாகவே இருக்கும். மனக்குழப்பம் மிகுந்து காணப்படும்.

35 வயதுக்கு மேல் உங்களுக்கு ராஜயோகம் தான்!!!

சிறிய பற்கள் கொண்டவர்கள் வாழ்க்கையில் துன்பம் , திருமண

வாழ்க்கையில் பிரச்சினை, வரிசையாக நடக்கும்.

பெரிய , சிறிய பற்கள் மாறிமாறி இருந்தால் வாழ்க்கையில் ஏற்ற இறக்கத்தைக் காண்பார்கள்

பெரிய பற்கள் இருந்தால் திறந்த மனதுடையவர்கள். நிறைய நண்பர்களும் உண்டு.

கூர்மையான பற்கள் உடையவர்கள்அதிர்ஷ்டம் உடையவர்களாகவும்

அதி புத்திசாலியாகவும் இருப்பார்கள்.

உடனே உங்கள் முகத்தை கண்ணாடியில் பாருங்கள் , எந்த விதமான பற்கள் உங்களுக்கு???

வழ்க்கை வளமுற வாழ வாழ்த்துகிறோம்!!!!

 tags- பல்லு போச்சு

***

Leave a comment

Leave a comment