சிறந்த தானம் மூன்று, விடக் கூடாதவர்கள் மூவர்! (Post No.9044)

WRITTEN BY S NAGARAJAN                                    

Post No. 9044

Date uploaded in London – – 17 DECEMBER 2020       

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

சுபாஷிதம்

சிறந்த தானம் மூன்று, விடக் கூடாதவர்கள் மூவர், மதிப்பு போடவே முடியாதவர் மூவர்…!

ச.நாகராஜன்

சிறந்த தானங்கள் மூன்று!

த்ரீண்யாஹுரதி தானானி காவ: ப்ருத்வி சரஸ்வதி |

சிறந்த தானங்கள் மூன்று. அவையாவன பசு. நிலம், கல்வி!

*

விடக் கூடாதவர்கள் மூவர்!

பக்தம் ச பஜமானம் ச த்வாஸ்மீதி ச வாதினம் |

த்ரீநேதாச்சரணம் ப்ராப்தான் விஷமேபி சத்யஜேத் ||

விடவே கூடாதவர்கள் மூவர் :

பக்தன் – கடந்த கால பணியாளன்

பஜமான: – நிகழ்கால பணியாளன்

தவாஸ்மீதி வாதி – உங்களைச் சரணடைந்து பாதுகாப்பு கேட்பவன்

*

மதிப்பு போடவே முடியாதவர் மூவர்!

த்ரய ஏவாதனா ராஜன் பார்யா தாஸஸ்ததா சுத: |

யத்தே சமதிகச்சதி யஸ்ய தே தஸ்ய தத்தனம் ||

மனைவி, பணியாளன், மகன் ஆகிய இந்த  மூவருக்கு மதிப்பு போடவே முடியாது. விலை மதிக்க முடியாத செல்வங்கள் இவர்கள்.

*

கடன் கொடுக்கவே கூடாதவை மூன்று

புஸ்தகம் வனிதா வித்தம் பரஹஸ்தகதம் கதம் |

யதி சேத் புனராயாதி நஷ்டம் ப்ரஷ்டம் ச கண்டிதம் ||

புஸ்தகம், பெண், பணம் இந்த மூன்றையும் கடனாகக் கொடுக்கவே கூடாது.

ஒருவேளை திரும்பி வந்தாலும் புஸ்தகம் சிதிலமாகி இருக்கும்; பெண் ப்ரஷ்டையாகி இருப்பாள், வந்த பணம் குறைந்தும் சில்லறையாகவும் இருக்கும்!

*

புரிந்துகொள்ளவே முடியாத அளவு சக்தி கொண்டவை மூன்று!

அசிந்த்யோ ஹி மணி மந்த்ர ஔஷதீனாம் ப்ரபாவ |

நம்மால் புரிந்து கொள்ளவே முடியாத அளவு அளப்பரிய சக்தி கொண்டவை மூன்று!

அவையாவன ரத்தினக் கற்கள் (மணி), மந்திரம், மூலிகைகள்

*

அலங்காரங்கள் மூன்று

தத்ர ப்ரதமம் சப்தார்தோபகதத்வேன த்ரைவிதமலங்காரவர்கஸ்ய

ப்ரதாபருத்ரீயம் , சப்தாலங்கார ப்ரகரணம்

கவிதையில் வரும் அலங்காரங்கள்  மூன்று! அவையாவன வார்த்தை, அர்த்தம், வார்த்தையும் அர்த்தமும்!

*

தவிர்க்க வேண்டியவை மூன்று

வாக்வாதார்த்த சம்பந்ததத்பத்னீபரிபாஷணம் |

யதிச்சேத் விபுலாம் மைத்ரீம் த்ரிணி ந காரயேத் ||

 கருட புராணம் 114.5

ஒரு நட்பு நீடித்து இருக்க வேண்டுமானால்

வாக்கு வாதம் கூடாது

அர்த்த சம்பந்தம் அதாவது பணம் தொடர்பான விஷயங்கள் இருக்கக் கூடாது.

தத் பத்னி பரிபாஷணம் அதாவது நண்பனுடைய மனைவியுடன் பேசக் கூடாது.

இந்த மூன்றும் நட்பு நீடித்து இருக்க வேண்டுமானால் தவிர்க்கப்பட வேண்டும்.

*

போரினால் பெறும் பயன்கள் மூன்று

பூமி மித்ரம் ஹிரண்யம் ச விக்ரஹஸ்ய பலம் த்ர்யம்

ஹிதோபதேசம் III- 66

விக்ரஹ பலம் அதாவது போரினால் ஏற்படும் பலன்கள் மூன்று

பூமி கிடைக்கும். நட்பு கிடைக்கும் (போரில் உதவிக்கு வருவோர்). தங்கம் கிடைக்கும்.

*

tags- tags —   தானம் ,மூன்று, 

Leave a comment

Leave a comment