வேகத்தை கட்டுப் படுத்தாதீர்கள்!!! (Post No.9112)

WRITTEN BY KATTUKKUTY

Post No. 9112

Date uploaded in London – – 6 January 2021

Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com

வேகத்தை கட்டுப் படுத்தாதீர்கள்!!!
Kattukutty

நமது உடல் விசித்திரமானது!!! தேவையில்லாத பொருள்களை வெளியேற்ற
நவ துவாரங்களையும், வியர்வை சுரப்பிகளையும்
வைத்திருக்கிறான் ஆண்டவன்!!!
அவற்றின் மூலமாக அசுத்த பொருள்களை வெளியேற்றி நமது
உடலை ஆரோக்கியமாக வைக்கிறது இயற்கை!!!
அவை என்னன்ன என்று பார்ப்போமா???

1)மூச்சு
2)சுக்கிலம்/ சுரோணிதம்
3)கண்ணீர்
4)அபான வாயு
5)தும்மல்
6)இருமல்
7)தாகம்
8)இளைப்பு
9)தூக்கம்
10)வாந்தி
11)பசி
12)கொட்டாவி
13)சிறு நீர்/வியர்வை
14)மலம்

மூச்சு

பிராண வாயுவான மூச்சை அடக்கினால் என்ன ஆகும் என்று
உங்களுக்கே தெரியும்!!! அடிக்கடி மூச்சை அடக்கினால், தவறான
முறையில், பிராணாயாம ம் செய்தால் இருமல்,வயிற்றுப் பொருமல்
சுவை தெரியாமலிருத்தல், காய்ச்சல் உண்டாகும்.

சுக்கிலம்

சுக்கிலம் எனப்படுடம் விந்துவை அடக்கினால் (முறை தெரியாமல்)
சுரம், நீர்கட்டு, கை,கால் வலி,ஏற்படும். விந்து தானாக நீர்தாரையில்
இறங்கும்.

கண்ணீர்

கண்ணிலிருந்து வரும் நீரை அடக்க முடியாது!!! அதையும் மீறி அடக்கினால், கண்வலி,
கண்மங்கல், களைப்பு, மனதில் கனம்
தோன்றும் கவலையினால்……….

அபான வாயு

இயற்கையினால் வெளியேற்றப்படும் இக்காற்றை தடை செய்தால்
வாயுத் தொல்லை, மலச்சிக்கல்,உடல் முழுவதும் குத்தல் குடைச்சல்
பசி மந்தம் உண்டாகும்.

தும்மல்

இதை அடக்கினால் மூச்சு திணறும், மூச்சு மேலுக்கு கிளம்பி தலை
முழுவதும் நோகும். முகம் முழுவதும் காற்றினால் உப்பி வலிக்கும்.

இருமல்

மூச்சில் ஒரு கெட்ட மணம், நெஞ்சில் காற்று அடைத்த மாதிரி
உணர்வும் உண்டாகும்

பசி/ தாகம்

உங்களுக்கே தெரியும் உடலிலுள்ள எந்த அவயவங்களும்
ஒழுங்காக வேலை செய்யாது.
பசியை அடக்கி உண்ணாமலிருந்தால்,உடலில் களைப்பு, இளைப்பு
முக வாட்டம் மூட்டுக்களில் வலி……….தலை சுற்றல், காது கேளாமை……..
எல்லாம் உண்டாகும் …….உடலுக்கு ஆதாரமே உணவுதான்!!!
தாகத்தை அடக்கினால், களைப்பு,முகம், நாக்கு உலர்தல்,மயக்கம்,
காது கேளாமை…….பேச்சு வராமலிருத்தல் எல்லாம் உண்டாகும்.

தூக்கம்

இயற்கை நமக்கு அளித்த பரிசு!!!!
அதை அலட்சியப்படுத்தி தூக்கத்தை அடக்கினால், தலை கனத்தல்,களைப்பு, கண்சிவத்தல்,
கண்ணீர் வருதல்,பேச்சு திணறுதல்……அதிகமானால் மயங்கி கீழே விழுதல்……….

வாந்தி

வாந்தியை அடக்கினால் வயிற்றில் இடமில்லாமை, ஒவ்வாத பொருளை உண்ணுதல்,
பித்தம் அதிகமாகும்போது உண்டாகும்.பித்த மிகுதியால் மயக்கம்,பித்த வியாதிகள் உண்டாகும்.

இளைப்பு

இளைப்பு என்னும் வேகத்தை அடக்கினால் உடல் சோர்தல், பெப்டிக்
அல்ஸர், உடலில் மிகுந்த வெப்பம் உண்டாகுதல் திடீரென்று
மூர்சையடைதல், நீர் வேட்கை எல்லாம் உண்டாகும்.

சிறு நீர்/ வியர்வை

இதை அடக்கினால் உடலின் வேகம் குறைதல்,நீ ர் போகும்பு ழையில
புண்,வயிற்றில் பாரம், குறியில் ஒரு எரிச்சல் உண்டாகும்.
வியர்வையை அவ்வப்போது துடைக்காவிட்டால் வியர்க்குரு,
உடலில் ஒரு துர் நாற்றம் உண்டாகும்.
ஏ.சி ரூமில் வேலை செய்பவர்களுக்கு அடிக்கடி சிறு நீர்கழிக்க
வேண்டி வரும். அடக்கக் கூடாது.

மலம்

மலத்தையும், சிறு நீரையும் அடக்கினால் முழங்கால் மூட்டு வலி, வயற்றில் கனம்,
எந்தக் காரியத்திலும் கவனமின்மை, முக்கியமாக
தலை வலி, உடல் பலம் குறைதலும் உண்டாகும்.

கொட்டாவி

முகம் கோணல், உணவு செரிமானம் ஆகாமை, நீர்நோய்கள், அறிவு
மங்குதல், களைப்பு, வயிறு சம்பந்தமான நோய்களும் உண்டாகும்.

கடவுளால் கொடுக்கப்பட்ட இந்த 14 வித வேகங்களைத் தடுத்தால்
உண்டாகும் விபரீதங்கள் நம் வழக்கமான வாழ்வைத் தடுத்து அடிக்கடி
வைத்திய செலவுகளை அதிகரிக்கும்.

உங்கள் வாழ்க்கை உங்கள் கையில்!!!!

–subham–

tags – கொட்டாவி, தூக்கம், மூச்சு

Leave a comment

Leave a comment