தோல்வி இதயத்திற்கு,வெற்றி தலைக்கு போகக் கூடாது (Post No.9126)

WRITTEN  BY KATTUKKUTY

Post No. 9126

Date uploaded in London – – 10 January 2021          

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

நவீன ஞான மொழிகள் – 17

                    Kattukutty

உன்னால் ஒருவர் கண்ணீர் விட்டால் அது பாவம்,

உனக்காக ஒருவர் கண்ணீர் விட்டால் அது பாசம் !!!

XXX

மனிதனாக வாழ வழிகள்

மிகவும் மதிப்பிற்குரியவர்கள் – தாய், தந்தை, குரு

மிக நல்ல நாள் – இன்று

மிகவும் வேண்டியது – பணிவு

மிகவும் வேண்டாதது – வெறுப்பு

மிகப் பெரிய தேவை – நம்பிக்கை

மிகக் கொடிய நோய் – பேராசை

மிக சுலபமானது – குற்றம் காணல்

மிக தரமற்ற குணம் – பொறாமை

நம்பக்கூடாதது – வதந்தி

ஆபத்தை விளைவிப்பது – அதிகப் பேச்சு

செய்யக் கூடாதது – நம்பிக்கை துரோகம்

செய்யக் கூடியது – உதவி

விலக்க வேண்டியது – சோம்பேறித்தனம்

உயர்வுக்கு வழி – உழைப்பு

நழுவவிடக் கூடாதது – வாய்ப்பு

பிரியக் கூடாதது  – நட்பு

மறக்க கூடாததது – நன்றி

ஒவ்வொரு நிமிடமும் இருக்க வேண்டியது – இறை பக்தி

XXXX

தேனீர்ல சர்க்கரை கொட்டினாலும், சர்க்கரை மீது தேனீர்

கொட்டினாலும், கரையப் போவது சர்க்கரை தான்……….

வாழ்க்கையை நினைத்து வருத்தப்பட்டாலும், வருத்தப்பட்டுக்

கொண்டே வாழ்ந்தாலும் வீணாகப் போவது உன் வாழ்க்கைதான்!!!

XXXX

நம்பிக்கை கிடைத்த இடத்தில் அன்பு கிடைக்காது,

அன்பு இல்லாத இடத்தில் சந்தோஷம் இருக்காது,

சந்தோஷம் இல்லாத இடத்தில் வாழ்க்கை இருக்காது !!!.,

XXXX

சில பொழுது சிந்தித்தால்,

பல பொழுது அவசியமில்லை அழுவதற்கு!!!

XXXX

தோல்வி இதயத்திற்குப் போகக் கூடாது,

வெற்றி தலைக்கு போகக் கூடாது ……….

XXXX

வாழ்க்கையில் சாதனை படைத்தேன் என்பதைவிட,

யாரையும் வேதனைப் படுத்தவில்லை என்பதே சிறந்தது!!!

XXXX

தலைவர் தன்னை யூத் YOUTH ன்னு நினைச்சுகிட்டு பண்ற அட்டகாசம்

தாங்கலை………..

ஏன்.? என்ன ஆச்சு…….?

இன்னைக்கு ஒரு குழந்தைக்கு WHATSUP (WHATSAPP) ன்னு பேர் வச்சிருக்காரு!!!

XXXX

                                                                      ***

tags-  நவீன ஞான மொழிகள்17

Leave a comment

Leave a comment