குழந்தை பெறுவதைவிட 3 முறை போர்க்களம் செல்வேன் – கிரேக்க பெண் புலம்பல் (Post.9151)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9151

Date uploaded in London – –16 January 2021      

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

கிரேக்க மொழி நாடகங்களில் பல சுவையான விஷயங்கள் வருகின்றன யூரிபிடிஸ் – கி.மு.431- என்பவர் சர்ச்சைக்குரிய பல செய்திகளை சொல்லுவார். அவர் எழுதிய ஒரு நாடகத்தின் பெயர் ‘மெடியா’ .

கொல்சிஸ் என்னும் இடத்திலிருந்து வந்த மெடியா (MEDEA) என்னும் சூன்யக்காரி கிரேக்க வீரன் ஜேசன் (JASON) மீது காதல் கொள்கிறாள். . பறக்கும் செம்மறி ஆட்டின் தங்கத் தோலை (GOLDEN FLEECE) கொண்டுவர அவனுக்கு உதவுகிறாள். கொரிந்த் (CORINTH) நகருக்கு வந்து குடும்ப வாழ்வு நடத்தி இரண்டு குழந்தைகளையும் பெறுகிறார்கள். இந்த கால கட்டத்தில் இருவரிடையே பிணக்கு ஏற்பட்டு விவாக ரத்தில் முடிகிறது.காரணம்

ஜேசன் கொரிந்தியன் மன்னன் க்ரினோனின்(CRENON)  மகள் கிளாஸைக் (GLAUCE) காதலித்து திருமணம் புரிகிறான்.

மெடியா விடுவாளா?

ஒரு திருமண ஆடை (WEDDING DRESS)  தைத்து அதை கிளாசுக்கு அனுப்புகிறாள். அது மணப்பெண்ணையும், காப்பாற்ற வந்த தந்தையையும் எரித்துக் கொன்று விடுகிறது ; ஜேசன் மூலம் இரண்டு குழந்தைகளையும் கொன்று விட்டு பறக்கும் ரதத்தில் (FLYING CHARIOT) சிட்டாகப் பறந்து போய்விடுகிறாள்.

கிரேக்க (GREECE)  நாட்டில் ஆண்டுதோறும் நடைபெறும் நாடகப் போட்டியில் ‘மெடியா’ நாடகத்துக்கு மூன்றாம் பரிசுதான் கிடைத்தது. நாடகத்துக்குப் பொருத்தமில்லாத, ஆனால் அக்காலத்தில் நிலவி வந்த சர்ச்சசைக்குரிய விஷயங்களை, அவர் கதாபாத்திரத்தின் வாயிலாக வெளிப்படுத்தினார் . இதோ மெடியாவின் திருமணம் பற்றிய சூளுரை

“உயிர்வாழும்,சிந்திக்கும் படைத்த பிராணிகளில் பெண்களாகிய நாங்கள்தான் பரிதாபத்துக்குரியவர்கள். முதலாவது, நாங்கள் பெருந்தொகை கொடுத்து கணவனை வாங்க வேண்டியிருக்கிறது”.

(அந்தக் கால இந்தியா போல பெண்கள்தான் வரதட்சிணை கொடுக்க வேண்டும். சங்கத் தமிழ் நூல்களிலும் சம்ஸ்க்ருத நாடகங்களிலும் இதைக் காண்கிறோம்.)

“எங்கள் உடல் மூலம்தான், கொடுங்கோல் மன்னன் போல, ஆண்களை ஆட்டிப் படைக்கமுடியும். மேலும் கிடைக்கும் ஆள்  நல்லவனா, கெட்டவனா என்றும் கண்டுபிடிக்க முடியாது.

விவாக ரத்தானது ஒரு பெண்ணுக்கு அவப் பெயரை ஈட்டித்தருகிறது. இதற்கிடையில் கணவனைப் புறக்கணிக்கவும் முடியாது. முன்பின் தெரியாத, அறியாத பழக்க வழக்கங்களுக்கு இடையே சிக்கும்போது, அவள் தீர்க்கதரிசியாக இருந்தால்தான் வரப்போகும் கணவன் எப்படிப்பட்டவன் என்று அறிய முடியும் . வீட்டில் கிடைத்த அனுபவம் இங்கே பயன்தராது. . இதில் வெற்றி கிடைத்தால் , மற்றவர் பொறாமைப்படும் அளவுக்கு எங்களுக்கு நல்வாழ்வு கிடைக்கும் .

வெற்றி பெறவில்லையானால், சாவதே மேல். மண வாழ்க்கையில் திருப்தி கிடைக்காத கணவமார்கள், வெளியே பொழுதைக் கழிப்பதன் மூலம் தங்கள் ஏமாற்ற உணர்வைக் காட்டுகிறார்கள். ஆனால் நாங்களோ ஒருத்திக்கு ஒருவனே என்ற கொள்கையைக் கடைப்பிடிப்பதால் வேறு ஒன்றும் செய்யமுடியாது.

நாங்கள் வீட்டுக்குள் இருப்பதால், ஈட்டி வீசிப் போரிடும் ஆண்களைப் போல அவதிப்படுவதில்லை என்றும் பாதுகாப்பாக இருப்பதாகவும் ஆண்கள் செப்புவர். அவர்கள் எவ்வளவு முட்டாள்கள் ! என்னைப் பொருத்த மட்டில், நான் ஒரு குழந்தையைப் பெற்றுக் கொள்வதைவிட மூன்று முறை போர்க்களம் சென்று பகைவரைச் சந்திப்பேன்”.

இது 2400 ஆண்டுகளுக்கு முன்னர் கிரேக்க நாட்டு நாடகத்தில் ஒரு பெண்மணி பேசிய பேச்சு !

நல்ல வேளையாக 2000 ஆண்டுகளுக்கு முன்னர் நம் இந்தியாவில் உருவான நாடகங்களில் இப்படிப்பட்ட அவல  நிலை இல்லை. எல்லாம் சுப விஷயங்களே .

—subham —

tags — குழந்தை , போர்க்களம் , செல்வேன்,  கிரேக்க பெண்,  புலம்பல்

Leave a comment

Leave a comment