பாஸ்வரம் – உடலுக்கும் தேவை, உரத்துக்கும் தேவை- 1 (Post.9168)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9168

Date uploaded in London – –20 January 2021      

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

இதுவரை 29 மூலகம் பற்றி அறிந்தோம் . இன்று முப்பதாவதாக பாஸ்வரம் பற்றிய சுவையான விஷயங்களைக் காண்போம்.

பாஸ்வரம் (PHOSPHORUS)என்ற சம்ஸ்கிருதச்  சொல் கிரேக்கம், லத்தின் முதல் ஆங்கிலம் வரை எல்லா மொழிகளிலும் இருக்கிறது ‘முதா கரத்த மோதகம்’ என்ற கணேச பஞ்சரத்ன ஸ்லோகம் முதல் பல சூரிய துதிகளில் ‘பாஸ்வரம்’ வருகிறது. வெளிச்சம், சூரியன், ஒளி என்ற பொருள் கொண்ட சொல். இதே பொருள்தான் பாஸ்வரம் என்ற மூலகத்தின் பொருள். காற்றில் சிறிது நேரம் வைத்தால் தீப்பிடித்துவிடும். இது மஞ்சள்/வெள்ளை பாஸ்வரம் . இதைத் தீப்பிடிக்காமல் வைக்க சிவப்பு பாஸ்வரமாக்கி தீப்பெட்டி, தீக்குச்சி, மத்தாப்பு, பட்டாசு முதலியவற்றில் பயன்படுத்துவர் .

இரண்டாவது சுவையான விஷயம்

இதை சுதந்திரப் போராட்ட வீரர்கள் பயன்படுத்தியதாகும் . அந்தக் காலத்தில் இந்தியர்கள் தயாரித்த துணிகளையே , பயன்படுத்த வேண்டும் என்று சுதந்திர வீரர்கள் வேண்டு கோள் விடுத்தநர். அ தைக் கேளாமல் சிலர் வெளிநாட்டுத் துணிகளை விற்றனர். அத்தகைய பிரிட்டிஷ் ஆதரவு துணிக்கடைகளில்  துணிகளை எரிக்க விடுதலை வீரர்கள் அந்த துணிக்கடைகளில் பாஸ்வரத்தை வைத்து விடுவாராம். அன்றிரவு கடைகள் தீப்பற்றி எரியும் என்பதைச் சொல்லத்  தேவையில்லை.

இன்னொரு சுவையான மொழியியல் விஷயம் ‘வ’ என்பது ‘ப’ ஆக மாறும். நாம் ‘வங்கம்’ என்றால் வங்காளிகள் ‘பெங்கால்’ என்பர். அவர்கள் பிரணா’ப்’ குமார் முகர்ஜி என்றால் நாம் அழகாக பிரண’வ’ குமார என்போம்.இதேபோல ஆங்கிலத்தில் பாஸ்’ப’ரஸ் என்பர். நாம் அதை பாஸ்’வ’ரம் என்போம் ‘பரஸ்’ – ‘வரம்’ ஆகும். இதை மாபெரும் சம்ஸ்கிருத அறிஞனான வள்ளுவனும் பயன்படுத்தினான். ‘பாபி’ என்ற சம்ஸ்கிருத சொல்லை அவன் ‘பாவி’ என்று குறளில் மாற்றுகிறான்.

பாஸ்வரம் உடலுக்கும் தேவை; நிலத்துக்கும் தேவை.நமது உடலுக்கு ஏன் தேவை ?

எலும்பும் பல்லும் வளரத் தேவை . மற்றும் பல பணிகளை செய்யும் உடல் என்சைம்,  டி என் ஏ DNA ஆகியவற்றுக்கும் தேவை .

நிலத்துக்கு ஏன் தேவை?

தாவரங்கள் வளருவதற்கு பொட்டாசியம் நைட்ரஜன் , பாஸ்வரம்  அவசியம். பாஸ்வரம்  அதிகம் இல்லாத நிலங்களில் தாவரங்கள் போதுமான வளர்ச்ச்சியில்லாமல் சிறுத்துப் போகும். விதைகளும் பலம் குன்றிப் போகும் . அறுவடையும் குறையும். இதற்காக பாஸ்பேட் உரங்கள் அவசியம் . இயற்கையான பாஸ்பேட் உரம் உண்டாக்க தேவையற்ற மக்கிப்போன தாவரப் பொருட்களுடன் பாஸ்பேட் தூ ளைச்  சேர்த்தும் இதைத் தயாரிப்பார்கள்.

xxxx

ஒரு எச்சரிக்கை 

எந்த மருத்துவக் கட்டுரையைப் படித்தாலும் அதிலுள்ள மருத்துவ விஷயங்களை டாக்டர்களைக் க லந்தாலோசிக்காமல் எடுக்கக் கூடாது. இதை என் எழுதுகிறேன் என்றால் நிலத்துக்குப் போடும் பாஸ்பேட் வேறு. உடலுக்குத்   தேவைப்படுவோருக்காக விற்கும் பாஸ்பேட் மாத்திரைகள் வேறு .

குழந்தையின் வளர்ச்சிக்கு போதுமான அளவு உடலில் பாஸ்வரச் சத்து இல்லையென்றால் டாக்டர் சொல்லுவார். அவர் சொல்லிய அளவுப்படி தாய் எடுக்கலாம் .

இனி ரசாயன விஷயங்களைச் சொல்கிறேன்

இது உலோகமல்ல (non-metal) . இது ஒரு உப்பு. இது மஞ்சள்/வெள்ளை  , சிவப்பு, கருப்பு என்று மூன்று வகைப்படும். வெள்ளை என்பதை சாதாரணமாக காற்றில் வைத்தாலேயே மஞ்சள் நிறமாகி எரியத் துவங்கிவிடும் ஆகையால் அதை நீருக்குள் வைத்திருப்பர்

ரசாயன குறியீடு P

அணு எண் 15

உருகு நிலை – 44 டிகிரி சி / வெள்ளை பாஸ்வரம்

கொதிநிலை – 280 டிகிரி சி / வெள்ளை பாஸ்வரம்

வெள்ளை பாஸ்வரம் அதிக விஷம் உடைய மூலகம் .

வெள்ளை பாஸ்வரத்தை பலநாட்களுக்கு மூடிய கலத்தில் வைத்து சூடாக்கி சிவப்பு பாஸ்வரத்தை உண்டாக்குவர் . அதிக அழுத்தம் கொடுத்தால் கிடைப்பது கருப்பு பாஸ்வரம். மின்சாரத்தைக் கடத்தும் சக்தி கொண்டது.

 பாஸ்வரம் – 31 என்ற கதிரியக்கம் இல்லாத  ஐசடோப் கிடைக்கிறது இதை வெள்ளை பாஸ்வரம் -32 என்ற கதிரியக்க பாஸ்வரமாக மாற்றி ஆராய்சசிகளில் பயன்படுத்துவர்

பா கிடைக்கும் நாடுகள்

ரஷ்யா , அமெரிக்கா , மொராக்கோ , டுனிஷியா , டோகோ, நவூரு

வெள்ளை பாஸ்வரம் இருக்கும் உணவுப் பொருட்கள்

இறைச்சி ,  முட்டை , பால், சீஸ் என்னும் பாலாடைக்கட்டி, சூரியகாந்தி விதைகள் , பூசணி விதைகள், கோழிக்கறி.

xxxx

மூத்திரத்தில் பாஸ்வரம் !! கண்டுபிடித்தது யார் ?

1669ம் ஆண்டில் ஜெர்மனியில் ஹென்னிக் பிராண்ட் (Hennig Brandt) என்பவர் இதை மூத்திரத்தை ஆவியாக்கி கண்டுபிடித்தார்

‘வேலையில்லாத அம்பட்டன் பூனையைப் பிடித்து சிரைத்தானாம்’ என்பது தமிழ் பழமொழி . அதுபோல பிராண்ட் , முத்திரத்தைக் காய்சும்போது தங்கிப்போன கசடை ஆவியாக்கி குளிரவைத்தார் பாஸ்பரஸ் கிடைத்தது. மஹா சந்தோஷம் .

ஈயத்தையும் இரும்பையும் தங்கமாக்கும் ரசவாதக் குளிகையைக் (Philosopher’s Stone) கண்டுபிடித்ததாக நம்பி யாருக்கும் சொல்லாமல் ரஹஸ்யம் காத்ததார் .பின்னர் வயிற்றுப் பிழைப்புக்காக டேனியல் கிராப்ட் என்பவரிடம் விற்றார். அவர் அதை ஐரோப்பா முழுதும் தம்பட்டம் அடித்துப் பெயர் பெற்றார். குங்கல் என்ற ஜெர்மனியருக்கு ரஹசியத்தைச் சொல்லிதருவதாக விலை பேசினார். அவர் கேட்ட விலையைத் தராமல் தானே பாஸ்வரத்தை உண்டாக்கத் தெரிந்துகொண்டார். பிறகு காப்ரெய்ட் லீப்னிட்ஸுக்கு சொல்லிக் கொடுத்து காசு வாங்கினார் . இப்படிப் பதுங்கிப் பதுங்கி வேலை செய்ததால் ஏனைய மூவரும் தாங்களே இதைக் கண்டுபிடித்ததாகப் பெருமை அடித்துக் கொண்டனர் .

இரண்டாவது பகுதியில் ஜெர்மனியின் ஹாம்பர்க் நகரத்தின் மீது அமெரிக்காவும் பிரிட்டனும் பாஸ்வர குண்டுகளை வீசி பல்லாயிரக் கணக்கான  பொது மக்களைக் கொன்று குவித்த வன்செயலையும் இந்த மூலகத்தின் பொருளாதார, மருத்துவ, உணவு, போர் உபயோகங்களையும் காண்போம்.

HAMBURG DESTROYED BY PHOSPHORUS BOMBS

To be continued………………………………………………

TAG- பாஸ்வரம்

Leave a comment

1 Comment

  1. Ramaswami Balakrishnan's avatar

    Ramaswami Balakrishnan

     /  January 21, 2021

    பாஸ்வரம் பற்றிய கட்டுரை அருமை. நன்றி.

Leave a comment