
WRITTEN BY KATTUKKUTY
Post No. 9178
Date uploaded in London – – 23 January 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
நவீன ஞான மொழிகள் -19
Kattukutty
உனக்கு நீ நல்லவனாக இருந்தால் போதும், மற்றவருக்கு நீ
கெட்டவனாக தெரிந்தால், அது உன் குற்றமில்லை.
கண்ணில் பிழை இருந்தால், பிம்பமும் பிழை.
அது பார்க்கப்படுபவன் பிழை அல்ல, பார்ப்பவரின் பிழை………..
100 பைசா. 1ரூபாய்
100 சென்ட். 1 ஏக்கர்
100 கடவுள். 1 அம்மா
100 பேய். 1மனைவி
1000 பிசாசு. 1 LOVER
1000 உறவு. 1 நண்பன்
நான் நண்பேன்டா!!!!!
POWER AND MONEY ARE THE FRUITS OF OUR LIFE.
FAMILY AND FRIENDS ARE ROOTS OF OUR LIFE.
WE CAN MANAGE WITHOUT FRUITS,
BUT CAN NEVER STAND WITHOUT ROOTS.
டீச்சர் : கடல் அரிப்பு ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்???
மாணவன் : சொறிஞ்சு விடணும் டீச்சர்………
நட்பு என்றாலும், காதல் என்றாலும்
இதயத்தில் வைக்க வேண்டிய இரண்டு வரிகள்
பழகும் வரை உண்மையாய் இரு,
பழகிய பின் உயிராய் இரு.
ஊக்குவிக்க ஆள் இருந்தால், இன்று ஊக்கு விற்பவன் கூட
நாளைக்கு தேக்கு விற்பான்!!!
தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை அரை குறையாய் செயபவன்
சாதாரணமானவன்.
தனக்குதரப்பட்ட வேலையை செவ்வனே செய்து முடிப்பவன்
சராசரி மனிதன்.
தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை விட அதிகமாய் சாதிப்பவன்
சாமர்த்தியசாலி.

இட மாற்றம் ( பெண்களுக்கு)
உங்கள் விசாலமான மனதும் குறுகிய இடுப்பும் இடம் மாறும்போது
உங்களுக்கு வயதாகிவிட்டது என்று அர்த்தம்.
ஜெயிலர் ஒரு கைதியைப் பார்த்து : உன்னைப் பார்க்க நண்பர்களோ, உறவினர்களோ ஏன் யாரும் வருவதில்லை???
கைதி : அவர்கள் எல்லோரும் இங்கேயே இருக்கிறார்கள்………
இல்லற வாழ்க்கையை வெற்றிகரமானதாக்க இருவர் தேவை.
தோல்வியாக்க ஒருவர் போதும்.
நல்ல தம்பதி என்பது ஒரு நல்ல கை குலுக்கலைப் போல
மேல் கீழ் கிடையாது.
குடும்பஸ்தனுக்கு பல துன்பங்கள்உண்டு
பிரும்மச்சாரிக்கு ஒரு இன்பமும் கிடையாது.
இல்லறம் என்பது ஒருவர் கண்களை மற்றொருவர் பார்த்துக்
கொண்டிருப்பதல்ல……..
தோளோடு தோள் சேர்ந்து ஒரே திசையைப் பார்ப்பதாகும்.
ஒரு நல்ல மனைவி கணவன் சொல்லும் ஜோக்குகளை கேட்டு
சிரிக்கிறாள்.
அவை புத்திசாலித்தனமாக இருப்பதால் அல்ல……..
அவள் புத்திசாலியாக இருப்பதால்……..
திருமணமாகி 50 வது ஆண்டு விழாவைக் கொண்டாடிய
ஹென்றி போர்டிடம் “உங்களது இல் வாழ்க்கையின் வெற்றியின்
ரகசியம் என்ன” ??? என்று கேட்டார்கள்.
எனது கார் கம்பேனியின் வெற்றி ரகசியம்தான் இந்த வெற்றிக்கு
காரணம்……..என்றார் அவர்.
அது – “மாடலை மாற்றாதே”
திருமணம் – இருவரை ஒருவராக்குவது………அந்த ஒருவர் யார்
என்று கண்டு பிடிப்பதற்காக வாழ்நாளெல்லாம் போராட வைப்பது !!!
xxxx
உலகில் அழகான பொய்
“கவிதை”
வசீகரமான பாசாங்கு
“காதல்”
சுகமான ஏமாற்றம்
“திருமணம்”

xxxxx
ஒரு ரஷ்ய ஜோக்
ஒரு நல்ல அரசியல ஜோக்கிற்கு சிறந்த பரிசு அளிக்கப்படும்
முதல் பரிசு இருபது ஆண்டுகள்!!!
xxxx
சிகாகோ நகர அச்சகம் ஒன்றின் பலகை
கல்யாணங்கள் சொர்க்கத்தில் நிச்சியிக்கப்படுகின்றன.
ஆனால் நாங்கள் அவற்றை அச்சடிக்கிறோம்.
Xxxx
பையன்
அப்பா : காக்கா கத்தினா விருந்தாளிகள் வருவாங்கன்னியே, அவுங்க எப்ப போவாங்க???
அப்பா : உங்க அம்மா கத்தினா போவாங்க!

xxxx
வாக்களிப்பதில் தாமதமாக இருப்பவன்,
நிறைவேற்றி வைப்பதில்தீவிரமாக இருப்பான்
xxx
பட்டுத்துணியில் கறை பட்டுவிட்டால் அதை செலவில்லாமல்
நீக்க சிறந்த வழி
கத்தரிக்கோலை உபயோகிக்கவும் !!!
xxx
“புகையிலையினால் மரணம் உங்களுக்கு”- ஜோதிடர் சொன்னார்.
ஆசாமி அன்றுமுதல் புகை பிடிப்பது, பொடி போடுவது, புகையிலை
போடுவது எல்லாவற்றையும் நிறுத்தி விட்டார்
ஆனால் புகையிலை லாரி மோதி மரணமடைந்தார்???
xxxx
இரண்டு சுண்டெலிகளை ஒரு விஞ்ஞானி பழக்கினார்.
அந்த சுண்டெலிகளில் ஒன்று மற்றொன்றுடன் பேசியது.
அந்த ஆசாமியை எப்படி பழக்கிவிட்டேன் பார்த்தாயா?
நான் மணி அடித்தவுடன் சாப்பாடு கொண்டுவர
கற்றுக் கொடுத்து விட்டேன்!!!!

xxx
இரண்டு பையன்கள் பேசிக்கொண்டார்கள்
ஒருவன்சொன்னான் – என அப்பாவிற்கும், உன் அப்பாவிற்கும்
கொஞ்சம்தான் வித்தியாசம்……உன் அப்பா கிரிமினல் வக்கீல்.
என் அப்பா கிரிமினல்……..!!!
***