
Post No. 9184
Date uploaded in London – –25 January 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
நடந்தவை தான் நம்புங்கள் – 3 வெளியான தேதி : 15-1-2021; கட்டுரை எண் : 9145
நடந்தவை தான் நம்புங்கள் – 4
ச.நாகராஜன்
1
பிரபலமான ஒரு உபந்யாசகர் கடவுளைப் பற்றியும் கடவுளைப் போற்றி வணங்க வேண்டியது பற்றியும் அருமையாக உபந்யாசங்கள் செய்து வந்தார். மக்கள் பெரிதும் அவரை மதித்தனர். அவர் உரையைக் கேட்க திரளாகக் கூடுவர்.
அவரை எப்படியாவது மட்டம் தட்ட வேண்டும் என்று நினைத்த நாத்திகக் கும்பல் ஒரு ஆளை தயார் செய்தது. ஒரு கூட்டத்தில் அவர் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த போது கூட்டத்தில் இருந்த அவன் எழுந்து வேகமாகச் சென்று மேடை மீது ஏறினான். மேஜைக்கு முன்னால் இருந்த மைக்கைப் பிடித்துப் பேச ஆரம்பித்தான்.
“கடவுள், கடவுள் என்கிறீர்களே, அவரை உங்களால் எங்களுக்கு இங்கே காட்ட முடியுமா? நான் ஒரு பகுத்தறிவுவாதி. கண்களால் காணப்படுவதைத் தான் என்னால் நம்ப முடியும்? என்று இப்படி ஆர்ப்பாட்டமாகப் பேசி நிறுத்தினான் அவன்.
கூட்டத்தில் இருந்தோர் திகைத்தனர்.
அவனை உபந்யாசகர் புன்முறுவலுடன் கோபப்படாமல் பார்த்தார்.
அவரது சாந்தமான முகத்தைப் பார்த்தவுடன் பகுத்தறிவுவாதி, மிகவும் சத்தமாக, “நான் ஒரு பகுத்தறிவுவாதி” என்று கத்தினான்.
அவனைப் பார்த்த உபந்யாசகர், “சரி, கண்களுக்குப் புலனாகும் எதையும் தான் நீ நம்புவாயா? இதோ இங்கு உன் பகுத்தறிவைக் கொஞ்சம் காண்பியேன். இதோ இந்த மேஜை மீது அதை வைத்துக் காண்பி. அதைக் காண்பித்தால் தானே அதை நான் நம்ப வேண்டும். அது தானே உன் கொள்கை!” என்றார்.
கூட்டத்தினர் ஆரவாரித்துக் கை தட்டினர். பகுத்தறிவு தலை குனிந்து மேடையை விட்டு இறங்கி வெளியே போக ஆரம்பித்தது. அவன் வெளியேறும் வரை கூட்டத்தினர் கை தட்டிக் கொண்டே இருந்தனர்.
2

பேரறிஞர் பெர்னார்ட் ஷா புத்திகூர்மை உள்ளவர் மட்டுமல்ல; உடனுக்குடன் பதில் கொடுப்பதிலும் வல்லவர்.
ஒரு முறை பிரபலமான ஆங்கில வரலாற்றாசிரியர் சர் பேசில் ஹென்றி லிடல் ஹர்ட் (Sir Basil Henry Liddel Hart) பெர்னார்ட் ஷாவை நோக்கி, “உங்களுக்கு ஒன்று தெரியுமா?” என்று ஆரம்பித்தார். Sumac, Sugar ஆகிய இரண்டே இரண்டு வார்த்தைகள் தான் ஆங்கில மொழியிலேயே Su என்று ஆரம்பித்தாலும் Shu என்ற உச்சரிப்பு கொண்டவை” என்று அழுத்தம் திருத்தமாகக் கூறினார்.
உடனே பெர்னார்ட் ஷா, “Sure” என்று சிரித்தவாறே சொன்னார்.
(Sumac என்பது ஒரு விதமான புதர் (is a type of bush). Suவில் ஆரம்பித்தாலும் ஷூர் என்றே Sure உச்சரிக்கப்படுகிறது. பெர்னார்ட் ஷா போட்டார் ஒரு போடு ஷீர் என்று சொல்லி!
3
பிரபலமான ஏ.எஸ்.பி. ஐயர் வரலாறு படைத்த ஒரு நீதிபதி. அவரது அறிவும், உடனுக்குடன் நகைச்சுவையுடன் பதிலளிக்கும் பாங்கும் என்றும் பேசப்படுபவை.
அவரைப் பற்றி வி.ஆர். கிருஷ்ண ஐயர், 23-1-1999 அன்று தேதியிட்ட ஹிந்து நாளிதழில், A.S.P. Ayyar – A Judicial paradigim’ என்ற தலைப்பில் அருமையான ஒரு கட்டுரையை எழுதினார்.
அது அனைவரையும் கவர்ந்தது. ஏ.எஸ்.பி. ஐயரை அடிக்கடி சந்தித்து அளாவி மகிழ்ந்த சென்னையைச் சேர்ந்த சி.வி.நரசிம்மன் என்பவர் தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.
ஒரு முறை அவர் நரசிம்மனிடம் ஒரு வக்கீலின் தவறுக்கும் ஒரு டாக்டரின் தவறுக்கும் உள்ள வித்தியாசம் என்ன என்று கேட்டார். அவரே அதற்கான பதிலையும் சொன்னார் இப்படி: “ ஒரு வக்கீலின் தவறு தரைக்கு ஆறு அடிக்கு மேலே தொங்கும். ஒரு டாக்டரின் தவறு தரையிலிருந்து ஆறு அடிக்கு கீழே புதைக்கப்படும்” (“A lawyer’s mistakes hangs six feet above the ground. A doctor’s mistake isburied six feet below the ground.”)
இப்படி வாழ்நாள் முழுவதும் அவர் கூறிய நகைச்சுவை வாக்கியங்கள் ஏராளம், ஏராளம்.
(திரு C.V.Narasimhan’s letter appeared in Letters to the Editor Column on 28-1-1999)
***

TAGS – நடந்தவை , நம்புங்கள் – 4 ,