
WRITTEN BY KATTUKKUTY
Post No. 9271
Date uploaded in London – – 16 FEBRUARY 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
அம்புலி மாமா வா வா !!!- 1
S SRINIVASAN
அனைவருக்கும் அன்பான மாலை வணக்கம்
கவர்ச்சி நாயகன், காதல் மன்னன், இரவிற்கு அதிபதி, மனோகாரகன்,
சந்திரனை வணங்கி என் உரையை ஆரம்பிக்கிறேன். வணக்கம்.

PLEASE GO TO FACEBOOK.COM/GNANAMAYAM TO LISTEN TO THIS TALK; ALSO AVAILABLE IN YOUTUBE.COM/GNANAMAYAM
வேறு எந்த நவ கிரகத்திற்கும் இல்லாத ஒரு பெருமை சந்திரனுக்கே
உண்டு. அதை முதலில் சொல்லியே ஆகவேண்டும்.எந்நாட்டவர்க்கும்
இறைவனான தென்னாடுடைய சிவனின் தலையில் பிறை வடிவமாக அமரந்த பெருமை சந்திரனுக்கே உண்டு!!!சூரியன் பகலுக்கு ராஜாவென்றால், சந்திரன் இரவுக்கு ராணி!!!எல்லா நாட்டினருக்கும்
இதுவே காதல் தெய்வம்!!!
சந்திரனின் பிறப்பு
அத்திரி மகரிஷியும், அனசூயையையும் ஆனந்தமாக இல்லறம் நடத்தி
வருகையில் மூன்று தவ சிரேஷ்டர்கள் அவர்கள் வசிக்கும் வாயிலுக்கு
வந்தனர். அத்திரியும் அனசூயையும் காலில் விழுந்து குடிசைக்குள் வர
வழைத்து விருந்துபசாரம் செய்ய ஆரம்பித்தனர்.
என்ன பாக்கியம் செய்தோமோ இந்த ஏழையின் குடிலுக்கு நீங்கள்
எழுந்தருளியதற்கு….. நீங்களனைவரும் விருந்துண்டே செல்ல வேண்டும் என்றார்கள்அத்திரியும் அனசூயையும்.
அம்மூவரும் ஒரே குரலில் சொன்னார்கள் விருந்துண்கிறோம்
ஆனால்
ஒரு கண்டிஷன்…….என்ன அது???
“விருந்து பரிமாறும் பெண்மணி நிர்வாணத்துடன் தான் விருந்து பரிமாற வேண்டும்”
அதிர்ந்து போனார்கள் தம்பதியினர்………சோதனையை சந்தித்தாள்
அனசூயை. அம்மூவரையும் சிறு குழந்தைகளாக மாற்றினாள், தன் தவ வலிமையினால்!!! விருந்தும் படைத்தாள்!!!அங்கு அதே சமயம் வந்த நாரதர், கலைமகள், அலைமகள், மலை மகளிரிடம் சென்று அவர்களின் புருஷன்மார்கள் குழந்தைகளாக மாறியிருப்பதை கூறினார். அலறிப்புடைத்துக்கொண்டு ஓடி வந்து அவர்கள் அனசூயையின் காலில் விழுந்தனர். முப்பெரும் தேவியரும் அவர்கள் கணவன்மார்களும் தன்னகத்தே வந்ததைக் கண்டு அத்திரியும் அனசூயையும் அவர்கள் காலில் விழுந்தனர். தேவர்களைவரும் கூடினர் இந்தக் காட்சியைக்
காண !!!
அனசூயா உனது கற்பின் பெருமையை உலகத்திற்குணர்த்தவே இப்படி ஒரு நாடகமாடினோம்.வேண்டிய வரங்களைக்கேளுங்கள்……..குழந்தை வரம் வேண்டினர் தம்பதியினர்.
மூன்று குழந்தைகளை பெற்றெடுத்தனர் அவர்கள் : சோமன், துர்வாசர், தத்தாத்தி
ரேயன்.
அவர்களின் சோமன்தான் நமது சந்திரன். துர்வாசர் தவசியானார், தத்தாதிரேயன் தேவரானார். சோமன் சந்திரனாகி இரவுக்கு அதிபனாகி,ரஜினிபதி எனப்பெயர் பெற்றார்.ரஜினிபதி என்றால் இரவுக்கு அதிபதி என்று பெயராம்!!!
மிகமிக அழகான சந்தினுக்கு தனக்கு தெரிந்தவற்றை கற்பித்து
வயது வந்தவுடன் தேவ குருவிடம் பாடம் கற்க அனுப்பினார் அத்திரி.
தேவ குருவின் மனைவி தாரை இவனழகில் மயங்கி மையல் கொண்டாள்.
சந்திரனின் திருமணம்
சந்திரனின் அழகில் மயங்கிய தட்சனின் மகள்கள் 27 பேரும் சந்திரனையே மணந்தனர்.அந்த 27 பேர்களில் ரோகிணியிடம் மிக அன்பாக நடந்தான் சந்திரன்…. மற்ற 26 பேர்களும் தகப்பனார் தட்சனிடம் complaint செய்ய, கோபம் கொண்ட தட்சன் ஒரு நாளைக்கு ஒரு கலை வீதம் கொஞ்சம் கொஞ்சமாக மறைய சந்திரனுக்குச் சாபம் கொடுத்தான். சந்திரன் ஓடிப் போய் சிவனின் காலடியில் விழ,சாபத்தை நான் எக்காரணம் கொண்டும் மாற்ற முடியாது, ஆனால்,
மீண்டும் நீ வளர வரம் கொடுக்கிறேன் என்று வரம் கொடுத்தார். அன்றிலிருந்து சந்திரன் 14 நாட்கள் தேய்ந்து அமாவாசையாகவும், மற்ற 14 நாட்கள் வளர்ந்து பௌர்ணமியாகவும் விளங்குகிறார்.
அரிஸ்டாட்டில் கூறுவது- “சந்திரன் மனித உடலில் மிகுதியாக ஆதிக்கம் செலுத்துகிறது”.
மருத்துவத் தந்தை ஹிப்பாக்ரடீஸ் கூறுவது- கோள்களின் கதியை அறியாமல் எந்த மருத்துவராலும் சரியாக மருத்துவம் செய்ய முடியாது.

பௌர்ணமியின் பெருமை
ஜாதகத்தில் சூரியனுக்கு நேர் எதிர் கட்டத்தில் சந்திரன் இருந்தால்
அவர் பௌர்ணமியன்று பிறந்தவராவார்.
சூரியனின் மாற்றத்தைப் பொறுத்தே மாதங்கள் பிறக்கின்றன.ஆனால்
மாதங்களின் பெயர்களோ பௌர்ணமி எந்த நட்சத்திரத்தின் அருகில்
சந்திரன் வருகிறதோ அந்த நட்சத்திரத்தின் பெயரால் அந்த மாதம்
விளங்குகிறது. உதாரணமாக, சித்திரை நட்சத்திரத்தில் பௌர்ணமி
வருவதினால் அந்த மாத த்தின் பெயர் சித்திரை. விசாக நடசத்திரத்தில் பௌர்ணமி வருவதினால் அந்த மாதத்தின் பெயர் வைகாசி……
ஒவ்வொரு பௌர்ணமியும் மிக மிக விசேஷமானவை என்பது
மட்டுமல்லாது விழாக்களாக கொண்டாடப் படுகின்றன.பௌர்ணமி
மந்திர உபதேசமானவர்களுக்கு மிக முக்கிய நாளாகும் . மந்திர உரு
ஏற்றுவது, அம்மனை உபாசிப்பது, பால் குடம்எடுப்பது போன்ற விழாக்கள் நடத்துகின்றனர் இந்த நாளில்.சந்திரனின் கவர்ச்சி காரணமாக
கடல் அலைகள் உயர்ந்து வீசும் காட்சி கண்ணுக்கு விருந்து.
வெளிநாட்டு மக்களும் உள்நாட்டு மக்களும் கன்யா குமரி கடற்கரையில் பௌர்ணமி அன்று கும்பலாக காத்திருந்து ஒரே சமயத்தில் மேற்கே சூரியன் மறைவதையும், சந்திரன் உதயமாவதையும்
இரண்டு தங்கத்தகடுகளை கண்டு களிப்பது உலகில் வேறெங்கும்
காணக்கிடைக்காத காட்சி !!!
அமாவாசையின் பெருமை
ஜாதகத்தில் சூரியனும் சந்திரனும் ஒரே கட்டதிலிருந்தால்அவர் அமாவாசையன்று பிறந்திருக்கிறார் என்று அர்த்தம்.பௌர்ணமி
ஒரு விசேஷமான நாள் என்றால் அமாவாசை அதைவிட விசேஷமான
நாளாகும். முன்னோர்கள் வெகு ஆவலுடன. நம் எள்ளுக்கும் , தண்ணீருக்கும் காத்திருக்கும் நாள். நல்ல காரியங்கள் தொடங்கும்
நாள்…. அமாவாசையன்று “திருஷ்டி”கழிப்பதென்பது தொன்று தொட்ட வழக்கமாகும். மந்திரிப்பதற்கும், மந்திரம் கற்க ஆரம்பிக்கவும் சிறந்தநாள்.புரட்டாசி மாதம் வரும் மஹாளய பட்சம்
என்ற 15 நாட்களுக்கும் பித்ருக்களை திருப்தி செய்யும் நாட்கள்.
இறந்த திதி தெரியாதவர்கள், துர்மரணமடைந்தவர்கள் முதலியோருக்கு திதி செய்ய சிறந்த நாள்.ஆடி அமாவாசையும் இது போலவே தான்……..ஆடி 18 ல் காதலர் வெவ்வேறு சித்திரான்னங்களுடன் உண்டு மகிழும் சிறந்த நாள்!!!
இந்திரன் கெட்டதும் பெண்ணாலே,
சந்திரன் கெட்டதும் பெண்ணாலே !!!
சந்திரன் ஒரு பெரும் யாகம் நடத்தினான்.எல்லா முனிவர்களும், தேவர்களும் கலந்து கொண்டனர்.தேவ குருவின் மனைவி தாரையும்
கலந்து கொண்டாள். யாகம் முடிந்து குருவுடன் திரும்பாமல் சந்திரனிடையே தங்கிவிட்டாள் தாரை. தேவர்களனைவரும்
சந்திரனைக் கண்டித்து தாரையை திருப்பி அனுப்புமாறு கேட்டனர்.
வலிய வந்த சீதேவியை தான் திருப்பி அனுப்ப முடியாது என சட்டம்
பேசினான் சந்திரன். வில்லெடுத்தார் சிவன். பயந்த பிரும்மா
ஒரு வழியாக “ பஞ்சாயத்து” பண்ண தாரையை அனுப்பினான்
சந்திரன்.
குரு ஏற்றக்கொள்ள மறுத்தார்.சாபம் கொடுத்தார். கர்ப்பமானாள் தாரை……..
அழகான குழந்தையான“ புதனை“பெற்றெடுத்தாள்.
சந்திரனின் மனைவி ரோகிணியே புதனை வளர்த்தாள்.
To be continued…………………………………………

tags- அம்புலி மாமா, சந்திரன்,