
WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No. 9583
Date uploaded in London – –9 May 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
கவிஞர் ஜெஃப்ரி சாசர்.
CHAUCER GEOFFREY யார்?

ஆங்கிலக் கவிஞர்களில் முன்னணியில் நிற்கும் கவிஞர் ஜெப்ரி சாசர். இவர் வாழ்ந்த காலம் 1340 முதல் 1400 வரை என்று கருதப்படுகிறது. ஆங்கில மொழிக்கு ஒரு பாதை , வகுத்துக் கொடுத்தவர் இவர். இவருக்குப்பின் வந்த ஆங்கிலக் கவிஞர்கள் ஒவ்வொருவரும் இவருக்கு ஏதேனும் ஒரு விஷயத்தில் கடன் பட்டவர்களே. சாசர் வகுத்த உத்திகளில் ஒன்றையாவது அவர்கள் பயன்படுத்தியிருப்பார்கள். சாசர் எழுதிய புகழ் பெற்ற நூல் CANTERBURY TALES.
லண்டனில் ஒரு மதுபான வியாபாரியின் மகனாகப் பிறந்த சாசர் எங்கு கல்வி கற்றார் யாரிடம் கல்வி கற்றார் என்பது தெரியவில்லை. ஆனால் இவரது கவிதைகள் இவரது மேதாவிலாசத்தை காட்டுகின்றன.
17 வயதானபோது சாசர் கிளாரன்ஸ் நகர பிரபுவின் DUKE OF CLARENCE மனைவி LADY ELIZABETHக்கு பணிவிடை செய்பவராக அமர்ந்தார். இதற்கு இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் படைவீரனாகச் சேர்ந்து பிரான்ஸுக்குச் சென்று பல போர்களில் பங்கு கொண்டார். பிரெஞ்சுக்காரர்கள் இவரைப் பிடித்து ஓராண்டு காலத்துக்கு கைதியாக வைத்திருந்தனர். 1360ஆம் ஆண்டில் இவரைப் பணயத்தொகை கொடுத்து மீட்டு வந்தனர்.
1366இல் இவர் JOHN OF GAUNTஇன் மூன்றாவது மனைவியின் சகோதரிகளில் ஒருவரை மணந்தார். இதன் பின்னர்தான் அவர்கள் இருவருக்கும் புரவலராக இருந்து ஆதரித்தார்.
1367ஆம் ஆண்டில் அரசவையில் VALET பதவி கிடைத்தது. அப்போது இவருக்கு வயது 27. விரைவிலேயே அரசரின் ESQUIREஆக மாறினார். 1369ஆம் ஆண்டில் மீண்டும் பிரான்ஸுடன் மோத போர்க்களம் ஏகினார்.
அடுத்த பத்தாண்டுக்காலம் — பொறுப்பேற்று ஐரோப்பாவின் பல நாடுகளுக்குச் சென்று வந்தார்.
ஒருமுறை GENOA நகருக்குச் சென்றபோது இவர் இதாலியக் கவிஞர்கள் பொக்கஸியொவையும் பெட்ராக்கையும், சந்தித்ததாகத் தெரிகிறது.
1377ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் இரண்டாவது ரிச்சர்டு பதவிக்கு வந்தார். அவர் பிரென்ச் இளவரசி மேரியை மணமுடிக்க விருன்பினார். இந்த திருமணத்தை ஏற்பாடு செய்ய சாசர் தூது சென்றார்.
1382ஆம் ஆண்டில் லண்டன் துறைமுகத்தில் சுங்க அதிகாரியாக பதவி ஏற்றார். 1386இல் அவர் நாடாளுமன்றத்திற்கு நியமிக்கப்பட்டார். (KNIGHT OF THE SHINE OF KENT)
சாசருக்கு ஆக்கமும் ஊக்கமும் தந்து வந்த JOHN OF GAUNT வெளிநாடு சென்றபோது, சாசரின் எதிரிகள் அவரிடம் இருந்த அனைத்துப் பதவிகளையும் பறித்தனர். இருந்த போதிலும் RICHARD மன்னர் —- அரசுப்பொறுப்பினை ஏற்றவுடன் சாசருக்கு ஆண்டுக்கு 20 பவுண்டு வீதம் ஓய்வூதியம் தந்தார். அந்தக் காலத்தில் 20 பவுண்டு என்பது பெருந்தொகை.
லண்டனில் வெஸ்ட்மின்ஸ்டரிலுள்ள வீட்டில் CHAUCER வாழ்ந்தார். அவர் WESTMINSTER கதிட்ரலில் அடக்கம் செய்யப் பட்டார்


–subha–
tags–கவிஞர், ஜெஃப்ரி சாசர்.