
Compiled BY LONDON SWAMINATHAN
Post No. 9613
Date uploaded in London – –16 May 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
compiled from popular newspapers of Tamil Nadu
உலக இந்து சமய செய்தி மடல் 16-5-2021
இன்று May 16 -ஆம் தேதி — ஞாயிற்றுக் கிழமை ,2021
உலக இந்து சமய செய்தி மடல்
தொகுத்து வழங்குபவர் வைஷ்ணவி ஆனந்த்
இது ‘ஆகாச த்வனி’ யின் உலக இந்து சமய செய்தி மடல் நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்,
நமஸ்காரம் செய்திகள் வாசிப்பது VAISHNAVI ANAND

எங்கள் நிகழ்ச்சிகளை ஞாயிற்றுக் கிழமை தோறும் லண்டன் நேரம் பிற்பகல்
2 மணிக்கும், இந்திய நேரம் மாலை 6-30 மணிக்கும் நேரடியாகக் கேட்கலாம்.
Xxxx
கங்கோத்ரி கோவில் திறப்பு
உத்தரகண்ட் மாநிலத்தலுள்ள பிரசித்தி பெற்ற கங்கோத்திரி கோவில் நேற்று திறக்கப்பட்டது. வைரஸ் நோய் பரவல் காரணமாக பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.
‘சார் தாம்’ என்று அழைக்கப்படும் கோவில்களில் யமுனோத்ரி நேற்று முன்தினம், திறக்கப்பட்டது.
கேதார்நாத் கோவில் நாளை மே 17-ஆம் தேதியும்,
பத்ரிநாத் கோவில் மே 18-ம் தேதியும் திறக்கப்படுகிறது. பனிக்காலத்தில் இந்த 4 கோவில்களும் மூடப்படுவது வழக்கம்.
கங்கோத்திரி கோவில் திறப்பட்டவுடன் முதல் அர்ச்சனை நாட்டின் பிரதமரான நரேந்திர மோடியின் பெயரில் செய்யப்பட்டதாக கோவில் நிர்வாகம் அறிவித்தது

XXX
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இருந்து அரசு ஆஸ்பத்திரிக்கு தினமும் 2 ஆயிரம் உணவு பொட்டலங்கள
கொரோனா பொதுமுடக்கம் காரணமாக இந்து அறநிலையத்துறைக்குட்பட்ட கோவில்கள் சார்பில் அருகில் உள்ள அரசு மருத்துவமனை நோயாளிகளுக்கு உணவு பொட்டலங்கள் வழங்க வேண்டும் என இந்து அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது.
அதன்படி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இருந்து 2 ஆயிரம் உணவு பொட்டலங்கள் தயாரிக்கப்பட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
அரசு உத்தரவின்பேரில் மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் இருந்து அரசு ஆஸ்பத்திரிக்கு தினமும் 2 ஆயிரம் பேருக்கு உணவு பொட்டலங்கள் வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது
கோவிலில் இருந்து வழங்கப்படும் உணவு பொட்டலங்களுக்கு அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

xxxx
ஹிந்து சமய அறநிலையத்துறை கமிஷனராக குமரகுருபரன் நியமன
தமிழகத்தில் 13 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். ஹிந்து சமய அறநிலையத்துறை கமிஷனராக குமரகுருபரன் நியமிக்கப்பட்டார்.
அதே போன்று திருநெல்வேலி கமிஷனர் அன்பு உள்பட, ஐந்து ஐ.பி.எஸ்., அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
xxxx
கடும் எதிர்ப்பு எதிரொலி: ஸ்ரீரங்கம் ஜீயர் பதவி நியமன அறிவிப்பு ரத்து
திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலின் ஜீயர் 51-வது பட்டத்துக்கு விண்ணப்பிக்க இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்பு விடுத்த நிலையில், கடும் எதிர்ப்பு கிளம்பியதால், அறிவிப்பு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் ராமானுஜ மடத்தின் 50வது பட்டம் ஸ்ரீமத் ஸ்ரீரங்க நாராயண ஜீயர் சுவாமிகள் 2018 ஜூலை 11ம் தேதி ஆச்சார்யன் திருவடியை அடைந்தார்.
அதன்பின் ஜீயர் பதவி காலியாக இருந்தது. இந்நிலையில், கடந்த 6ம் தேதி,
‘திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலின் ஜீயர் 51வது பட்டம் காலியாவுள்ளது.
இந்த பதவிக்கு விண்ணப்பிக்க, இந்து தென்கலை தென்னாச்சார்ய சம்பிரதாயத்தைச் சேர்ந்தவராகவும், கோவிலின் பழக்க வழக்கங்களையும் அனைத்துவித பூஜைகளையும் ஆகமம் மற்றும் அனைத்து சம்பிரதாயங்களையும் அறிந்தவராகவும், திருவிழா மரபுகள், நாலாயிர திவ்யபிரபந்தம், வேதபாராயணம் மற்றும் திருவாராதன கிரமங்கள் தெரிந்தவர்கள் தகுதிவாய்ந்தவர்கள்.

இவர்கள், ஜூன் 8ம் தேதி மாலை 4:00 மணி வரை விண்ணப்பிக்கலாம்’ என, இந்து சமய அறநிலையத் துறை அழைப்பு விடுத்துள்ளது.
இது இந்துக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பல அரசியல் கட்சியினரும், சமயத் தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். ஜீயர் நியமனம் என்பது அரசுப் பணி அல்ல. ஜீயர் நியமனத்தை அந்த மடத்தின் சீடர்கள் தான் முடிவு செய்ய வேண்டும். இதில் அரசுத்துறை தலையிட எந்த முகாந்திரமும் இல்லை. எனவே இந்த அறிவிப்பை ரத்து செய்ய பல தரப்பில் இருந்தும் கோரிக்கை எழுந்தது.
இந்நிலையில், இந்த அறிவிப்பினை நிர்வாக காரணங்களுக்காக ரத்து செய்யப்படுவதாக கோயில் இணை ஆணையர் அறிவித்துள்ளார்.
xxxxx
ஸ்ரீ சத்யசாய் அமுதம்‘ திட்டத்தில் இலவச உணவு
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, வீட்டில் தனிமைப்படுத்தியுள்ள நோயாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு, பகவான் ஸ்ரீ சத்ய சாய் சேவா நிறுவனங்கள்
சார்பில், ‘ஸ்ரீசத்ய சாய் அமுதம்’ என்ற திட்டத்தில், வீடு தேடிச் சென்று, ஏழு நாட்கள் இலவசமாக உணவு வழங்கப்படுகிறது.
‘உலகில் வாழும் அனைவரும் சகோதர, சகோதரிகளாக வாழுங்கள். அன்பை மட்டும் தவறாமல் செலுத்துங்கள். நீங்கள் ஒருவரிடம் அன்பு செலுத்தும்போது, இறைவன் உங்களிடத்தில் அதைவிட பல மடங்கு அதிகமாக அன்பு செலுத்துகிறார். தேசத்தின் மீது பாசம் செலுத்துங்கள்’ என்பது, பகவான் ஸ்ரீ சாய்பாபா அறிவுரை

xxx
திருப்பதியில் ஊரடங்கால் தரிசனத்திற்கு வரமுடியாத பக்தர்கள் தேதியை மாற்றிக் கொள்ளலாம்
திருப்பதி பாலாஜி வெங்கடாசலபதி கோவிலில் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இதன் காரணமாக கோவில் உண்டியல் வருமானமும் வெகுவாக சரிந்துள்ளது.
திருப்பதியில் சாமி தரிசனத்திற்காக ஆன்லைனில் ரூ.300 டிக்கெட்டில் பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். ஊரடங்கு காரணமாக பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதால் வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து தரிசனத்திற்கு பக்தர்கள் வர முடியாத
சூழல் நிலவி வருகிறது.
இதையடுத்து திருப்பதி தேவஸ்தானம் ஏப்ரல் 21-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை ரூ.300 டிக்கெட்டில் தரிசனத்திற்கு பதிவு செய்து வரமுடியாத பக்தர்கள் டிசம்பர் 31-ந்தேதி வரை தேதியை மாற்றி கொண்டு தரிசனம் செய்யலாம் என அறிவித்துள்ளது.
பக்தர்கள் டிசம்பர் 31-ந்தேதிக்குள் ஏதாவது ஒரு நாள் மட்டும் மாற்றிக்கொள்ள வேண்டுமெனவும் அடிக்கடி தேதியை மாற்ற அனுமதி இல்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
xxx

ஸ்டாலினுக்கு பிரசாதம் வழங்கி ஆசீர்வதித்த திருப்பதி தேவஸ்தானம்
தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு திருப்பதி தேவஸ்தானம் சார்பில் தீர்த்தப் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
தமிழகத்தில் திமுக ஆட்சியை கைப்பற்றியது. திமுக தலைவர் ஸ்டாலின் தமிழகத்தின் 13-வது முதல்வராக பதவியேற்றார்., திருமலை திருப்பதி தேவஸ்தானம் அவருக்கு தீர்த்தப் பிரசாதங்கள் வழங்கி ஆசிர்வதித்துள்ளது.
திருப்பதி தேவஸ்தானம் சார்பில் கூடுதல் செயல் அதிகாரி தர்மா ரெட்டி தலைமையில்
வேத பண்டிதர்கள், ஸ்டாலினின் வீட்டிற்கு வந்துள்ளனர். அங்கு, முதல்வர் ஸ்டாலின் மற்றும் அவரது மனைவி துர்கா ஸ்டாலினிடம் தீர்த்தப் பிரசாதங்களை வழங்கி வேத பண்டிதர்கள் ஆசிர்வாதம் செய்தனர்.
Xxxx
சபரிமலை ஐயப்பன் கோவில் நடை 14-ந்தேதி திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி ரத்து
வைகாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மே 14-ந் தேதி தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராஜ் போற்றி நடையை திறந்து. வைத்தார் .19-ந் தேதி வரை பூஜைகள் நடைபெறும்.
கேரளாவில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் மாநிலம் முழுவதும் கேரள அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தி உள்ளது.
சபரிமலை தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக திருவிதாங்கூர் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது
xxxx

ஆர்.எஸ்.எஸ். சொற்பொழிவு நிகழ்ச்சி
கொரோனா அச்சுறுத்தலை துணிவுடன் எதிர்கொள்ளவும் மக்கள் மனதில் நேர்மறை எண்ணத்தை விதைத்து தன்னம்பிக்கையை ஏற்படுத்தவும், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு சமூக ஊடகங்களில் முக்கிய பிரபலங்களின் சொற்பொழிவு நிகழ்ச்சியை நடத்துகிறது.
ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் எனப்படும் ஆர்.எஸ்.எஸ்.,ன், கொரோனா எதிர்ப்புக் குழு அமைப்பாளரான, ஓய்வு பெற்ற லெப்டினன்ட் ஜெனரல் குர்மித் சிங் கூறியதாவது:
மக்களிடம், கொரோனா பயங்கர அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எதிர்மறையான எண்ணங்களையும் நம்பிக்கையற்ற மனோபாவத்தையும் உருவாக்கியுள்ளது.இவற்றை போக்கி மக்களிடம் தன்னம்பிக்கை, தைரியத்தை ஏற்படுத்த, ‘நேர்மறை எல்லையில்லாதது‘ என்ற சொற்பொழிவு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சி, ஆர்.எஸ்.எஸ்.,ன் அங்கமான விஷா சம்வாத் கேந்திராவின் ‘பேஸ்புக், யுடியூப்‘ ஆகியவற்றுடன், நுாற்றுக்கும் மேற்பட்ட வலைதளங்களில் உலகம் முழுதும் ஒளிபரப்பாகும்., ‘விப்ரோ‘ நிறுவனர் அசீம் பிரேம்ஜி, சத்குரு ஜக்கி வாசுதேவ், ‘வாழும் கலை‘ ரவிசங்கர் ஆகியோர் சொற்பொழிவு நிகழ்த்துவர்.
இரண்டாவது அலை பரவல் ஏன்? மோகன் பாகவத் விளக்கம்!
”கொரோனா முதல் அலை பரவல் குறைந்த பின், அரசு நிர்வாகமும், மக்களும் பாதுகாப்பு நடவடிக்கைகளை கைவிட்டதால் தான் இரண்டாவது அலை பரவியது,” என, ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத் கூறினார்.
கொரோனா அச்சுறுத்தலை துணிவுடன் எதிர்கொள்ளவும், மக்கள் மனதில் நேர்மறை எண்ணத்தை விதைத்து தன்னம்பிக்கையை ஏற்படுத்தவும், ‘நேர்மறை எல்லையில்லாதது‘ என்ற தலைப்பில், ‘ஆன்லைனில்‘ தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சிக்கு ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது.
நேற்று நடந்த நிகழ்ச்சியில், ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத் பேசியதாவது:
கொரோனா முதல் அலை பரவிய போது, அதை தடுப்பதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை, மக்கள் முழுமையாக பின்பற்றினர். வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை மக்கள் கடைப்பிடிப்பதை அரசு நிர்வாகமும் கண்காணித்து உறுதி செய்தது. முதல் அலை பரவல் குறைந்ததும் பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைப்பிடிப்பதில், மக்கள் மட்டுமின்றி, அரசு நிர்வாகமும் அலட்சியம் காட்டியது. இதனால் தான் இரண்டாவது அலை தீவிரமாக பரவியுள்ளது.
மூன்றாவது அலை பற்றியும் பேசப்படுகிறது. இதற்கு நாம் பயப்படக் கூடாது. நாம் ஒற்றுமையாக எழுந்து நின்றால் கொரோனா சவால்களை முறியடித்து விடலாம். நம்பிக்கையுடன் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டால், கொரோனாவை வென்று விடலாம். ஒருவர் மீது ஒருவர் குற்றம் சொல்வதை விடுத்து, தொற்றிலிருந்து விடுபட அனைவரும் முயற்சிக்க வேண்டும். தைரியத்தை கைவிடாமல் உறுதியாக இருந்தால் நெருக்கடியிலிருந்துவிரைவில் மீள்வோம்.இவ்வாறு அவர் பேசினா
XXXXX

தேனி வேதபுரீ ஆஸ்ரம ஓங்காரநந்த ஸ்வாமிகள் மகா ஸித்தி அடைந்தார்
தேனி வேதபுரீ சித்பவானந்த ஆஸ்ரமத்தின் பீடாதிபதியும், சுவாமி தயானந்த சரஸ்வதி பீடத்தின் கீழ் நிறுவப்பட்ட தர்ம ரஷண ஷமிதி இயக்க மாநிலத் தலைவருமான
ஓங்காரநந்த ஸ்வாமி சென்ற திங்கட்கிழமை மாரடைப்பால் மகா ஸித்தி அடைந்தார். இவரது மறைவு ஹிந்து சமுதாயத்திற்கு பேரிழப்பாகும். அவருக்கு வயது 62.
கோவை பேரூரை சேர்ந்தவர் மனோகரன். அங்கு பள்ளிப்படிப்பை முடித்த இவர் பின்னர் வேதங்களை கற்றுத்தேர்ந்தார். ஸ்ரீசித்பவானந்தனரின் இறுதி சீடர் ஆனார். 27 ஆண்டுகளுக்கு முன் தேனி வேதபுரீயில் சித்பவானந்த ஆஸ்ரமத்தை நிறுவினார். பின் ஓங்காரநந்த ஸ்வாமிகள் என அழைக்கப்பட்டார். சனாதன தர்மத்தின் வழிகாட்டிகளில் தற்காலத்தில் மிகப்பெரும் பங்காற்றியவர். ‛திருக்குறளும் கீதை’யும் என்ற தலைப்பில்
அவர் ஆற்றிய சொற்பொழிவுகள் பிரசித்தி பெற்றவை. தயானந்த சரஸ்வதி ஸ்வாமிகளின் கட்டுப்பாட்டில் இயங்கிய ‛தர்ம ரஷண சமிதி’யின் மாநிலத் தலைவராக பொறுப்பேற்று, எண்ணற்ற பணிகள், குறிப்பாக ஏராளமானோரை தாய் மதத்திற்கு திரும்ப வைத்த பெரும்பங்கு இவருக்கு உண்டு.
ஓங்காரநந்த ஸ்வாமிகளுக்கு ஆயிரத்திற்கு மேற்பட்ட சீடர்கள் தமிழகத்திலும், வெளிநாடுகளிலும் உள்ளனர். மாரடைப்பு காரணமாக அவதியுற்றவர் மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி மகா ஸித்தி அடைந்தார்.
பகவத் கீதை, உபநிடதங்கள், தேவாரம், திருவாசகம், திருமந்திரம், தாயுமாவனர், பாரதியார் பாடல்களின் அர்த்தங்களை பாமர மக்களும் புரிந்து கொள்ளும்படி விளக்கினார். திருக்குறளின் சிறப்பை அடிக்கடி குறிப்பிடுவார்.
ஜாதி, மத, பொருளாதார ஏற்றத் தாழ்வுகளை கடந்து அனைத்து மக்களிடம் அன்பாக பழகினார்.
ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனத்தை நிறுவிய பூஜ்ய ஸ்ரீ பரமார்த்தானந்தாவிடம் சன்னியாசம் பெற்றார். ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி சேவா சமிதி, வேதாந்தா சாஸ்திர பிரசார அறக்கட்டளை மூலம் சமூக முன்னேற்றத்திற்கான பணிகளை மேற்கொண்டார்.
இரவில், தேனி ஆஸ்ரமத்திற்கு, சுவாமிகளின் புனித உடல் வந்தது. புதுக்கோட்டை புவனேஸ்வரி கோவில், தேனி குரு தட்சிணாமூர்த்தி கோவிலைச் சேர்ந்த வேத விற்பன்னர்கள், சிவாச்சாரியார்களால் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
பின், உடல் சப்பரத்தில் ஏற்றப்பட்டு, ஆஸ்ரமத்தை சுற்றி, குருதட்சிணாமூர்த்தி கோவில் எதிரே, நித்ய ஆன்ம சாந்திக்கான சமாதிக்கு கொண்டு வரப்பட்டது. ஆஸ்ரம நிர்வாகி பரசுராமன் இறுதி சடங்குகள் செய்ய, சுவாமிகளின் சீடர்கள், வேத விற்பன்னர்கள், ஆஸ்ரம நிர்வாகிகள் வேத மந்திரங்கள் முழங்க, ஆன்ம நித்ய சாந்தி பூஜைகள் நடந்தன.
‘கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு, பக்தர்கள் ஒத்துழைத்து, வீட்டிலிருந்தே வழிபட்டு கொள்ளலாம். ஸித்தி அடைந்த சுவாமிகளுக்கு, தொடர்ந்து, 16 நாட்கள் பூஜைகள் நடக்கும்’ என, ஆஸ்ரம நிர்வாகி நாராயணன் தெரிவித்தார்.

ஹிந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் ,
ஆர்.எஸ்.எஸ்., மாநிலத் தலைவர் (தென்தமிழகம்) ஆடலரசன் ஆகியோர் இரங்கல் செய்திகளை வெளியிட்டனர்
லண்டனிலிருந்து நேற்று சனிக்கிழமை ஒரு அஞ்சலி நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது ; சுவாமிகளின் பக்தர்கள் புகழஞ்சலி செலுத்தினர்
Xxxx
இத்துடன் லண்டனிலிருந்து வரும் செய்திகள் நிறைவடைந்தன………………………….. செய்திகளை உங்களுக்கு வழங்கியவர் வைஷ்ணவி ஆனந்த்…………………………

நன்றி, வணக்கம்
tags- உலக, இந்து சமய, செய்தி மடல்1652021 ,