நையாண்டி மன்னன் ரெபெலே (Post No.9621)

Post No. 9621

WRITTEN BY LONDON SWAMINATHAN

Date uploaded in London – –18 May   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

FRANCOIS REBELAIS

(1494 – 1553)

பிரான்ஸ்வா ரெபெலே ஒரு பிரெஞ்ச் எழுத்தாளர். அவர் எழுதிய THE HISTORIES OF GARGANTUA AND PANTAGRUEL மிகப்பெரிய, மிகச்சிறந்த புத்தகம். இது ஒரு நையாண்டி நூல். கர்காண்டுவா , பாண்டாக் ருவல் என்ற இரண்டு கதாபாத்திரங்களை வைத்து ரெபெலே நக்கலும் கேலியும் செய்கிறார்.

பிரான்ஸில் ஷினோன் நகருக்கு CHINON அருகில் தந்தையினுடைய எஸ்டேட்டில் அவர் பிறந்தார். இதுதவிர அவருடைய இளமைக்கால வாழ்க்கை குறித்து அதிகம் தெரியவில்லை.

அவருடைய தந்தை ஒரு வக்கீல். அந்தக் காலத்தில் சர்ச் அல்லது மத குருமா ருக்கான மட்டத்தில் மட்டுமே கல்வி கற்பிக்கப்பட்டது. எல்லோரும் கிரேக்க மொழியைக்கற்று பழங்கால விஷயாயங்களை அறிவதில் ஆர்வம் செலுத்தினர். ரெபெலேயும் 15 வயத்தில் அந்தப் பள்ளிக்கூடத்துக்குப் போனார். அந்தக் காலத்தை மறுமலர்ச்சிக்கு காலம் என்று அழைப்பர்.

37ஆவது வயதில் ரெபெலே சொல்லாமலேயே கல்விக்கூடத்தை விட்டு வெளியேறினார்.அவருக்கு மருத்துவத்தில் ஆர்வம் இருந்ததால் அது தொடர்பான கிரேக்க மொழி நுல்களைக் கற்றார்.

முப்பதாவது வயதில் அவர் பிரான்சிஸ்கன்  FRANCISCANS என்னும் கடுமையான கட்டுதிட்டங்கள் உடைய சமயப் பிரிவில் சேர்ந்தார். பின்னர் சிறிது கட்டுதிட்டங்களை உடைய பெனெடிக்க்டின் பிரிவில்  BENEDICTINE ORDER-இல் சேர்ந்தார். இறுதியாக எந்தப் பிரிவிலும் சேராத பாதிரியாராக (SECULAR PRIEST) மாறினார்.

1530-இல் மான்டிபேயே பல்கலைக்கழத்தில் மருத்துவம் பயின்றார். டாக்டர் பட்டம் பெற்ற  பின்னர்லியோன் நகரம் சென்று மருத்துவத் தொழில் புரிந்தார். அப்போது அவரது பெரிய புத்தகமான GARGANTUA AND PANTAGRUELஐ  எழுதத் தொடங்கினார். அதை வெளியிட்டவிதமே நக்கல் மிக்கது. தன பெயரிலுள்ள எழுத்துக்களை புரட்டிப்போட்டு ஆல்கோப் ரிபாஸ் நாசியே என்ற புனைப்பெயரில் வெளியிட்டார். அதற்குப் பெரிய வரவேற்பு கிடைத்தது. அதற்குப் பின்னர் மேலும் மூன்று தொகுப்புகளை எழுதினார்.

ஐந்து தொகுதிகளில் முதல் தொகுதி 1532-இல் வெளியானது. இது பிரான்ஸில் நல்ல வரவேற்பைப் பெற்றது. ஆனால் மறுஆண்டே தடை செய்யப்பட்டது. இதற்குள் REBELAIS மிகவும் செல்வாக்கு மிக்க பாரிஸ் பாதரியார் (BISHOP OF PARIS) ஜீன் டு பெல்லேவை (JEAN DU BELLAY) நண்பராக்கிக் கொண்டார். அவர் ரபலேயை தனது சொந்த உதவிக்கான டாக்டர் என்ற குடையில் ரோமுக்கு அழைத்துச் சென்றார்.

REBBELAIS பிரான்ஸ் திரும்பியவுடன் இரண்டாவது தொகுதியை வெளியிட்டார். புத்தகத்தின் முதல் தொகுதியைத் தடைசெய்த மக்களை இதில் நையாண்டி செய்தார்.

அவர்கள் சினமடைந்து தாக்கவே ரபலே ஓட நேரிட்டது. இப்போது கார்டினல் பொறுப்பிலிருந்த BELLAY இவரை ரோம் நகருக்கு அழைத்துச் சென்றார்.

பிரான்ஸில் முதல் இரண்டு தொகுதிகள் தடைசெய்யபட்டிருந்த நேரத்தில் இவர் புத்தகத்தின் மூன்றாவது மற்றும் நான்காவது தொகுதிகளையும் வெளியிட்டார். அவையும் தடை செய்யப்பட்டன. அப்போது அவருக்கு என்ன கதி நேர்ந்தது என்பது குறித்து தெரியவில்லை. அவர் நாட்டை விட்டு ஓடியிருக்கலாம் அல்லது சிறைப்பட்டிருக்கலாம் என்று ஊகிக்க இடமுண்டு. அதற்கு அடுத்த ஆண்டு அவர் இறந்தார்.

அவர் இறந்த ஒன்பது ஆண்டுகளுக்குப் பின்னர்தான் புத்தகத்தின் கடைசி தொகுதியான ஐந்தாவது தொகுதி வெளியிடப்பட்டது.

பிரான்சில் சமுதாயத்திலுள்ள குறைபாடுகளை அவர் கேலி செய்தார். ஒழுக்கமற்ற, ஊழல்மிக்க பாதிரிமார்களும், பேராசைபிடித்த பணக்காரர்களும் முட்டாள்களும் நிறைந்த உலகத்தில் இவர் படைத்த இரண்டு பேரும் உலாவருவதே கதையின் கருப்பொருள்.

Xxxxx subham xxxx

நையாண்டி , ரெபெலே

Leave a comment

Leave a comment