
Compiled BY LONDON SWAMINATHAN
Post No. 9641
Date uploaded in London – –24 May 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
இன்று May 23 -ஆம் தேதி — ஞாயிற்றுக் கிழமை ,2021
உலக இந்து சமய செய்தி மடல்
தொகுத்து வழங்குபவர் வைஷ்ணவி ஆனந்த்
இது ‘ஆகாச த்வனி’ யின் உலக இந்து சமய செய்தி மடல் நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்,
நமஸ்காரம் செய்திகள் வாசிப்பது VAISHNAVI ANAND

எங்கள் நிகழ்ச்சிகளை ஞாயிற்றுக் கிழமை தோறும் லண்டன் நேரம் பிற்பகல் 2 மணிக்கும், இந்திய நேரம் மாலை 6-30 மணிக்கும் நேரடியாகக் கேட்கலாம்.
Xxxx
இந்திய விஞ்ஞானிக்கு மில்லின்னியம் பரிசு ;ஞானமயம் குழு வாழ்த்து !
கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழக ரசாயன இயல் விஞ்ஞானிகள் இருவருக்கு உலகப் புகழ் பெற்ற மில்லின்னியம்
பரிசு கிடைத்துள்ளது .
D N A டி என் ஏ ஆராய்ச்சியில் ஈடு பட்டுள்ள சங்கர் பாலசுப்ரமணியன் அவருடன் பணி புரியும் டேவிட் க்ளினர்மேன் ஆகிய இருவரும் மில்லின்னியம் டெக்நாலஜி விருதை வென்றதாக அதற்குப் பொறுப்பான பின்லாந்து நிறுவனம் செவ்வாய்க்கிழமை அறிவித்தது இந்தப் பரிசு பத்து லடசம் யூரோ மதிப்புடையது.
முன்னைவிட அதிக வேகத்தில் டி .என் ஏ அமைப்பினை கண்டுபிடிக்கும் உத்திகளை இவர்கள் கண்டறிந்துள்ளனர்.
கொரோனா போன் ற வைரஸ்களின் டி .என்.ஏ அமைப்பை அறிந்தால்தான் அ தற்கான மருத்தைக் கண்டுபிடிக்க முடியும் இந்த ஆராய்சசியில் இவ்விருவரும் முன்னணியில் நிற்கின்றனர். இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை அறிவிக்கப்படும் இந்த விருது இந்த முறை வைரஸ் பரவளினால் தாமதப்பட்டது.
ஞான மயம் குழுவுக்கு இரட்டை மகிழ்ச்சி . இந்திய வம்சாவளி அறிஞருக்குக் கிடைத்ததில் முதல் மகிழ்ச்சி. ஞான மயம் குழுவைத் சேர்ந்த குடும்பத்துக்குக் கிடைத்ததில் மேலும் மகிழ்ச்சி நமக்கு தொடர்ந்து பிரார்த்தனைப் பாடல்களையும் அஷ்டபதி பாடல்களையும் பாடி வரும் திரு .பாலசுப்ரமணியத்தின் மகன்தான் சங்கர். இவர் முன்னரே பல விருதுகளை வென்றவர் . விக்கிபீடியா முதலிய தளங்களில் இவர் பெருமை பதிவாகியுள்ளது.
சங்கருக்கும் திரு பால சுப்ரமணியன், திருமதி பத்மா பால சுப்பிரமணியன் ஆகியோரு க்கும் ஞான மயம் குழு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளது
Xxxx

சார்தாம் கோவில் வரிசையில் கங்கோத்ரி யமுனோத்ரி கோவில்கள் திறக்கப்பட்டதை சென்ற வாரம் அறிவித்தோம். மே 17 ஆம் தேதி கேதார்நாத் கோவில், மே 18ம் தேதி பத்ரி நாத் கோவில் கதவுகளும் திறக்கப்பட்டுவிட்டன. பக்தர்களுக்கு தற்போது அனுமதி இல்லை . கோவில் அர்ச்சகர்கள் மட்டும் பூஜைகளைச் செய்வார்கள்.
பனிக்காலத்தில் மூடப்படும் இக்கோவில்கள் கோடைகாலத்தில் மட்டும் திறந்து வைக்கப்படும்
கோவில் திறக்கப்பட்டவுடன் முதல் பூஜை நாட்டின் பிரதமர் நரேந்திர மோடியின் பெயரில் செய்யப்பட்டது
xxxx

கோயில் சொத்து ஆவணங்களை இணையத்தில் பதிவேற்ற உத்தவு
சென்னை: அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோயில்களின் சொத்து ஆவணங்களை இணையத்தில் பதிவேற்ற அத்துறையின் அமைச்சர் சேகர்பாபு உத்தரவிட்டுள்ளார்.
இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் அலுவலகத்தில் அமைச்சர் சேகர்பாபு தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய தரவு சேகரிக்கும் பணிகள் மற்றும் இணையப்பதிவேற்றம் குறித்து முதல்வர் ஸ்டாலின் வழிகாட்டுதலில், அறநிலையத்துறை அமைச்சர் கீழ்க்கண்ட நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள உத்தரவிட்டார்.
1. கோயில் நிர்வாகம், அலுவலர்கள், திருப்பணிகள் மற்றும் விழாக்கள் போன்ற தகவல்களை இணையத்தில் வெளியிட வேண்டும்.
2. கோயில்களில் நடைமுறையில் உள்ள பல்வேறு பதிவேடுகளை ஸ்கேன் செய்து இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
3. கோயில் நிலங்கள் மற்றும் கட்டடங்களின் விவரங்களை, பொதுமக்கள் கணினிவழியில் பார்வையிடும் வகையில் புவிசார் குறியீடு செய்து இணையத்தில் வெளியிட வேண்டும்.
4. கோயில் பெயரில் உள்ள அசையும் மற்றும் அசையா சொத்துகளின் உரிமை ஆவணங்களை ஸ்கேன் செய்து இணையத்தில் பதிவேற்ற வேண்டும்.
5. கோயில் சொத்து ஆக்கிரமிப்புகளை அகற்றல், நியாய வாடகை வசூலித்தல் மற்றும் கோயில் வருவாயினங்களைப் பெருக்கும் வகையில் விரைந்து செயல்பட வேண்டும்.
– இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
xxxxx

அகஸ்தியர் அருவியில் மீண்டும் சிலைகளை நிறுவ திட்டம்
புயல், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட அகஸ்தியர், லோபமுத்ரா சிலைகள் பாபநாசம் அகஸ்தியர் அருவியில் மீண்டும் நிர்மானிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நெல்லை மாவட்டம், பாபநாசம் மலையில் உற்பத்தியாகும் தாமிரபரணி ஆறு, மலையில் இருந்து வரும் வழியில் அகஸ்தியர் அருவியாக கொட்டுகிறது.
அகஸ்தியர் அருவியின் அருகே உள்ள ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்த கல்யாண தீர்த்தத்தில் அகஸ்தியர், தமது துணைவி லோபமுத்ராவுடன் நின்ற நிலையிலான சிலைகள் நிறுவப்பட்டிருந்தன. அந்த சிலைகளை யாரோ விஷமிகள் உடைத்துவிட்டதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.
இதுகுறித்து மாவட்ட வனத் துறை வட்டாரங்கள் கூறும்போது, ‘ கடந்த ஜனவரி மாதம் பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதில் அகஸ்தியர், லோபமுத்ரா சிலைகள் அடித்துச் செல்லப்பட்டன ஆனால் சிலைகளை யாரோ உடைத்துவிட்டதாக வதந்தி பரப்பப்பட்டு வருகிறது. இதேபோன்ற அகஸ்தியர் அருவி நீர் மடைமாற்றி விடப்பட்டதாகவும் தவறான தகவல் பரவி வருகிறது.
சமூக வலைத்தள ங்களில் வனத்துறைக்கு எதிராக வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வனத்துறை எச்சரித்துள்ளது
கொரோனா பாதிப்பு குறைந்ததும் அகஸ்தியர் அருவி அருகே அகஸ்தியர், லோபமுத்ரா சிலைகளை மீண்டும் நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பணிகளை அமெரிக்காவில் மருத்துவராக பணிபுரியும சென்னையைச் சேர்ந்த ரவிகுமார் மேற்கொண்டு வருகிறார்’ என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
டாக்டர் ரவிகுமார் கடந்த 2021 இல், அகஸ்தியர் அருவியில் அகஸ்தியர் மற்றும் அவரது துணைவியாரின் சிலையையும் தமது சொந்த செலவில் நிறுவினார் என்பது குறிப்பிடத்தக்கது
Xxxx

பசு மூத்திரம் பற்றி பாரதீய ஜனதா கட்சி எம்.பி. பிரக்யா தாகூர்
மாட்டு மூத்திரத்தை தினமும் குடிப்பதால் தனக்கு கொரோனா வரவில்லை என்று பாரதீய ஜனதா கட்சி எம்.பி. பிரக்யா தாக்கூர் தெரிவித்துள்ளார்
- நாட்டு மாட்டின் மூத்திரத்தை தினமும் குடித்தால் கொரோனாவால் ஏற்படும் நுரையீரல் பிரச்சினையை அது சரி செய்யும்
- கொரோனாவுக்கு எதிராக எந்த மருந்தையும் நான் எடுத்துக் கொள்ளவில்லை
- பசு மூத்திரம், பசு சார்ந்த இதர பொருட்களின் கலவையே புற்றுநோயை குணப்படுத்தியது
கொரோனாவை தடுக்க ஒரே தீர்வு தடுப்பூசி மட்டும்தான் என்பதால், தடுப்பூசி போடும் பணியை மத்திய, மாநில அரசுகள் விரைவுபடுத்தியுள்ளன. ஆயினும், மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் நடைபெற்ற பாஜக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அக்கட்சியின் எம்.பி.,
பிரக்யா தாக்கூர், “நாட்டு மாட்டின் மூத்திரத்தை நாம் தினமும் குடித்தால் கொரோனாவால் ஏற்படும் நுரையீரல் பிரச்சினையை அது சரி செய்யும். நான் தினமும் மாட்டு மூத்திரத்தை குடிக்கிறேன். எனவே, கொரோனாவுக்கு எதிராக எந்த மருந்தையும் நான் எடுத்துக் கொள்ளவில்லை. எனக்கு கொரோனா வரவில்லை. மாட்டு மூத்திரம் உயிர் காக்கும் பொருள்” என்று கூறினார்
பசு, அதன் மூத்திரம் தொடர்பாக பாஜகவினர் பேசுவது இது முதன்முறை அல்ல என்றாலும் அக்கட்சியின் எம்.பி. ஒருவரே இவ்வாறு பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா அறிகுறிகளுக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பிரக்யா தாக்கூர் அனுமதிக்கப்பட்டார் என்பது கவனிக்கத்தக்கது.
xxxx

கோவையில் ‘கொரோனா தேவி‘ சிலை: 48 நாட்கள் சிறப்பு பூஜை!
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெருந்தொற்று மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தி வரும் சூழலில், கோவையில் ‘கொரோனா தேவி’ என்ற பெயரில் அம்மன் சிலை வடிவமைக்கப்பட்டு, 48 நாட்கள் சிறப்பு பூஜைக்கு பின், பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.
கொரோனா நோயை கட்டுப்படுத்த, உலகம் முழுக்க தடுப்பூசிகள், மருந்துகள் தொடர்பான ஆய்வுகள் நடந்து வருகின்றன. கொரோனாவிலிருந்து தப்பிக்க, கோவையில், ‘கொரோனா தேவி’ சிலையை உருவாக்கி அதற்கு பூஜைகள் செய்ய துவங்கியுள்ளனர்.கோவை காமாட்சிபுரி பகுதியிலுள்ள 51வது சக்தி பீடத்தில் இந்த சிலை வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக காமாட்சிபுரி ஆதீனம் ஸ்ரீசிவலிங்கேஸ்வரா ஊடகங்களுக்கு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
கோவிட்19 என்ற வைரஸ், மக்களின் வாழ்க்கையை பெரிதும் பாதித்துள்ளது. இதை மனதில் வைத்து, கொரோனா தேவி சிலையை வடித்துள்ளோம். பிளேக் நோய் பரவியபோது, பிளேக் மாரியம்மன் சிலை வடிவமைக்கப்பட்டு வழிபடப்பட்டது. காலரா, பிளேக் போன்ற கொள்ளை நோய்களின்போது, தங்களை காப்பாற்ற, அம்மனை வழிபட்டது வரலாறு.
ஒரே நம்பிக்கை என்ற நிலையில், இதுபோல சிலைகள் வடிக்கப்பட்டு வழிபாடுகள் நடந்துள்ளன. அதே மாதிரிதான், கொரோனாவின் கோரத் தாண்டவத்தை நிறுத்த, கொரோனா தேவி சிலையை வடித்துள்ளோம்.48 நாட்கள் மகா யக்ஞம் நடத்தி, வழிபடுவோம். பக்தர்களுக்கு இந்த காலகட்டத்தில் பூஜையில் கலந்து கொள்ள அனுமதியில்லை. கோவில் பூசாரிகள் மட்டுமே பூஜைகள் நடத்துவார்கள். மாரியம்மன், மாகாளியம்மன் வழிபாட்டை போலவே, கொரோனா தேவி வழிபாடும் முக்கியமானது.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Xxxxx
திருப்பதி கோயிலில் அதிர்ச்சி; கோபுரத்தில் ஏறிய ராஜ நாகம்!
பக்தர்கள் நடமாட்டம் குறைந்த நிலையில் வனவிலங்குகளின் ஊடுருவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
திருமலை திருப்பதி தேவஸ்தானம் மூலம் திருப்பதி நகரில் நிர்வகிக்கப்பட்டு வரும் பெரும்பாலான கோயில்கள் மூடப்பட்டுள்ளன. அர்ச்சகர்கள் மட்டும் நண்பகல் மற்றும் மாலை வேளைகளில் பூஜைகள் செய்து கோயில் நடையை மூடி விடுகின்றனர். இந்நிலையில் கடந்த ஒருவாரத்தில் தேவஸ்தானத்தின் இரண்டு கோயில்களில் வனவிலங்குகள் நடமாட்டம் தென்பட்டுள்ளது.
அதாவது, ஸ்ரீனிவாசா மங்காபுரம் கோயிலில் இரண்டு நாட்களுக்கு முன்பு ராஜ நாகம் ஒன்று கோபுரத்தில் ஏறியுள்ளது. இது அங்கிருந்தவர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதேபோல் கபில தீர்த்தம் கோயிலில் சமீபத்தில் சேஷாசலம் வனப்பகுதியில் இருந்து இரண்டு சிறுத்தை புலிகள் நுழைந்துள்ளன. அதிலும் கடந்த மூன்று நாட்களாக தொடர்ச்சியாக வனவிலங்குகள் கோயிலுக்குள் படையெடுத்து வருகின்றன.
இதுபற்றி தகவலறிந்து திருப்பதி தேவஸ்தானத்தின் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கோயில்களின் எல்லைகளை மூடி சீல் வைத்துள்ளனர். கோயிலின் முதன்மையான வளாகத்திற்குள் யாரும் நுழைய முடியாத படி தடுப்புகள் அமைத்திருக்கின்றனர்.
இதுதொடர்பாக டைம்ஸ் ஆப் இந்தியாவிடம் பேசிய தேவஸ்தான தலைமை கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு அதிகாரி கோபிநாத் ஜட்டி ஐபிஎஸ், வனவிலங்குகள் நடமாட்டத்தால் யாரும் அச்சப்பட வேண்டாம். தேவஸ்தான ஊழியர்கள் உரிய தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
சிசிடிவி கேமராக்கள் மூலம் இரண்டு சிறுத்தை புலிகளின் நடமாட்டம் கண்டறியப்பட்டுள்ளது. இதையொட்டி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கிறது என்றார். திருமலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக பக்தர்களின் வருகை மிகவும் குறைந்த அளவில் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.
Xxxx
மாணவர் தலைவர் மீது வழக்கு பதிவு
அலிகார் முஸ்லீம் பல்கலைக் கழக முன்னாள் மாணவர் தலைவர் சர்ஜில் உஸ்மானி மீது மஹாராஷ்டிர போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
அவர் இந்து மத தெய்வங்களைக் குறைகூறும் வண்ணம் ட்வீட்டுகளை வெளியிட்டதாக புகார் வந்ததால் ஜால்னா மாவட்ட போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.
ஹிந்து ஜாக்ரன் மஞ்ச் அமைப்பைச் சேர்ந்த அம்பாதாஸ் அம்போரே கொடுத்த புகாரில் ராம பிரானை இழிவு படுத்தும் பதிவுகளை உஸ்மானி செய்தாதாகக் கூறியிருந்தார்.
இவ்வாண்டு ஜனவரி 30ம் தேதி புனே நகரில் எல்கர் பரிஷத்தின் அவர் பேசிய பேச்சும் இந்து சமயத்தினரின் மனதை புண்படுத்தியதால் ஏற்கனவே ஒரு வழக்கும் அவர் மீது பதிவானது.
xxxxx
இத்துடன் லண்டனிலிருந்து வரும் செய்திகள் நிறைவடைந்தன………………………….. செய்திகளை உங்களுக்கு வழங்கியவர் வைஷ்ணவி ஆனந்த்…………………………

நன்றி, வணக்கம்
tags-இந்து சமய செய்தி மடல் 23-5-2021