
Post No. 9661
Date uploaded in London – –29 May 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
JOHN MILTON
(1608 – 1674)

ஆங்கிலக் கவிஞர்களில் புகழ் பெற்றவர் ஜான் மில்டன். இவர் கவிஞர் மட்டுமல்ல – நாடக ஆசிரியர் – கட்டுரையாளரும் கூட. இவருடைய பெரிய படைப்பு சுவர்க்க நஷ்டம் (PARADSE LOST)
இளம் வயதிலேயே இவருக்கு ஒரு ஆர்வம். ஆங்கிலத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு பெரிய கவிதை எழுத வேண்டும் என்று துடித்துக் கொண்டிருந்தார். இருந்தபோதிலும் இந்தப் பணியில் ஈடுபட முடியாதவாறு எத்தனையோ கவர்ச்சிகள் அவரை திசைமாற்றின.
20 ஆண்டுக்காலம் அரசியல் சூழலில் சிக்கிக் கொண்டார். ஆங்கில நாட்டின் உள்நாட்டுப்போரில் (CIVIL WAR) இவர் வட்டத் தலைவர்களை ஆதரித்து பல துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டார். பின்னர் ஆலிவ் கிராம்வெல் அமைச்சரவையில் வெளியுறவு அமைச்சராகச் சேர்ந்தார்.
மில்டனுக்கு 35 வயதில் திருமணம் நடந்தது. அப்போது மணமகளுக்கு வயது 17. மில்டனுடன் அவரால் வாழமுடியவில்லை. மில்டன் ஒரு சிடுமூஞ்சி என்று அவர் எண்ணினார். ஒரே மாதத்தில் கணவனை விட்டு ஓடிவிட்டார். அந்தக் காலத்தில் விவாகரத்து – மணமுறிவு (DIVORCE) என்பது அரிது. இருந்தும் மில்டன் மணமுறிவை நாடினார். மணமுறிவை ஆதரித்து ஒரு புத்தகமும் எழுதினார். இது அவர்டைய புகழைக் குறைத்தது. ஆனால் அவருடைய மனைவி அவரிடமே திரும்பி வந்தார். 1652இல் அவருக்கு 28 வயதானபோது இறந்தார். நான்கு ஆண்டுகளுக்குப்பின் மில்டன் மீண்டும் திருமணம் செய்து கொண்டார். அந்த மனைவியும் 1658இல் இறந்தார்.
RESTORATION காலத்தில் அவர் தலைமறைவாக வாழநேரிட்டது. அவருடைய நண்பரான மார்வெல் (MARVELL) தலையிட்டு அவருக்கு மன்னிப்பு வாங்கித் தந்தார். அப்போது அவர் கண்பார்வை மங்கியது.
மில்டன் அதிகமாகப் படிக்கக்கூடியவர். வாழ்நாள் முழுவதிலும் இரவுநேரத்தில் கண்விழித்துப் படித்தார். (மின்சாரம் கண்டுபிடிக்கப்படாத காலம் அது) இது பிற்காலத்தில் அவரது கண்பார்வையையே பறித்துவிட்டது.
கிட்டத்தட்ட 50 வயதானபோதுதான் அவர் PARADISE LOST எழுதத் துவங்கினார். அதைத் தொடர்ந்து சுவர்க்க மீட்சி PARADISE REGAINED என்ற கவிதையையும் SAMSON AGONISTES என்ற நாடகத்தையும் எழுதினார். அவர் இறக்கும்போது அவரது கண்பார்வை முழுதும் இழந்த நிலையில் இருந்தார்.
ஜான் மில்டன் லண்டனிலுள்ள செயின்ட் பால் பள்ளியில் (ST PAUL’S SCHOOL) பயின்றார். 17ஆவது வயதில் கேம்பிரிட்ஜில் கிறிஸ்தவக் கல்லூரியில் சேர்ந்தார். அங்கு அவருக்கு THE LADY சீமாட்டி என்று பட்டப்பெயர். இளமையில் அவ்வளவு அழகாகவும் மென்மையாகவும் இருந்தார்!
Also read

வாளும் நாளும் | Tamil and Vedas
https://tamilandvedas.com › tag › வ…
3 Apr 2020 — இதோ அந்தப் பாடல் – tamilandvedas.com, swamiindology.blogspot.com. “குக்கூ … இதை ஆங்கிலக் கவிஞன் ஜான் மில்டன் இப்படிப் பாடுகிறான்–. The scythe of …
xxxxxxxxxxxxxxxxxxxxxx


tags- ஜான் மில்டன் , சுவர்க்க இழப்பு, சுவர்க்க மீட்சி
