பிரெஞ்ச் எழுத்தாளர் மார்செல் ப்ரூஸ்ட்(Post No.9670)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9670

Date uploaded in London – –31 May   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

MARCEL PROUST

(1871 – 1922)

மார்செல் ப்ரூஸ்ட் புகழ்பெற்ற பிரெஞ்ச் எழுத்தாளர். அவருடைய REMEMBRANCE OF THINGS PAST (Lost in Time), புகழ்பெற்ற நாவலாகும். இதுதான் உலகிலேயே நீளமான நாவல். ஏழு வால்யூம்கள்; 4215 பக்கங்கள்!!

     ப்ரூஸ்ட் சிறுவயதில் மிகவும் பலவீனமாக இருந்தார். இவர் பிழைப்பாரா என்பது இவரது பெற்றோர்களுக்கு சந்தேகமாகப் போய்விட்டது. பெரியவனாக வளர்ந்த பின்னரும் இதே கதைதான். ஆஸ்த்மா நோய் அவரைத் தொற்றிக் கொண்டுவிட்டது. சிறு வயதிலேயே இவருக்கு நாவல் எழுதவேண்டும் என்பது ஆசை. அவர் வாழ்நாளில் சேர்த்த திறமையெல்லாம் ஒரே புத்தகத்தில் காட்டிவிட்டார்.

     பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்த ப்ரூஸ்ட் செல்வச் செழிப்புக் காரணமாக பாரிஸ் மாநகரில் செல்வந்தர் வட்டாரத்தில் மிகவும் பெயர்பெற்று விளங்கினார். அனைத்து நடன நிகழ்ச்சிகளிலும் கேளிக்கைகளிலும் இவர் பங்கு கொண்டார். சென்றவிடமெல்லாம் பெரிய நாவல் எழுதும் தனது உள்ளக்கிடக்கையை வெளியிட்டார். இப்படி நேரத்தை வீணடிப்பவர் எந்தக் காலத்திலும் நாவல் எழுதப்போவதில்லை என்று கூறி நண்பர்கள் பரிகசித்தனர். இருந்தபோதிலும் நாவலுக்கான கருப்பொருளை அவர் தொடர்ந்து தேடிவந்தார்,

வயதாக ஆக அவருக்கு ஆஸ்த்மா நோய் அதிமாகித் தொல்லைக் கொடுத்தது. இதனால் வெளியே செல்வதை அறவே நிறுத்திவிட்டு ஒரு அறைக்குள் முடங்கியவாறு எழுதத்தொடங்கினார். இரவு முழுதும் வேலை பகல் முழுதும் தூக்கம் என்ற வழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார். இரவுநேர அமைதியில் அவர் முழுக்கவனம் செலுத்தி எழுதமுடிந்தது. அறைக்குள் ஒரு சிறு சப்தம்கூட நுழைய முடியாதபடி ‘கார்க்’குகளை (CORK) வைத்து ஓட்டைகளை அடைத்துவிட்டே எழுதத் தொடங்குவார்.

     ப்ரூஸ்ட்ஸுக்கு நாற்பத்தி இரண்டு வயதானபோது நாவலின் முதல்பகுதி வெளியிடப்பட்டது. அதற்கு ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர் இரண்டாவது பகுதி வெளியானது.

     அடுத்த பதினான்கு ஆண்டுகளுக்கு அவர் தொடர்ந்து எழுதிக் கொண்டிருந்தார். அவர் இறக்கும் தருவாயில் கடைசி தொகுதியை திருத்தி எழுதும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

— SUBHAM —-

tags–பிரெஞ்ச் எழுத்தாளர் மார்செல் ப்ரூஸ்ட்

Leave a comment

Leave a comment