
Post No. 9671
Date uploaded in London – –31 May 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
மே மாத நற் சிந்தனை காலண்டரில் 31 ‘நீதி வெண்பா’ பொன்மொழிகளைக் கண்டோம். ஜூன் மாதம் மேலும் 30 பொன் ‘நீதி வெண்பா’ மொழிகளைக் காண்போம்
பண்டிகை தினங்கள் – ஜூன் 10-சூரிய கிரஹணம்; 21- சர்வதேச யோகா தினம்; கபீர் ஜெயந்தி.
ஜூன் 21 முகூர்த்த தினங்கள் -4,13,14, 16, 23, 28
ஏகாதசி-5/6, 20; பவுர்ணமி-24, அமாவாசை-10
Thanks to Project Madurai for these verses. Please visit Project Madurai. All books are free!!!

ஜூன் 1 செவ்வாய்க் கிழமை
நல்லோர் எங்கும் தோன்றலாம்!
தாமரைபொன் முத்துச் சவரம்கோ ரோசனைபால்
பூமருதேன் பட்டுப் புனுகுசவ்வாது – ஆம்அழல்மற்று
எங்கே பிறந்தாலும் எள்ளாரே நல்லோர்கள்
எங்கே பிறந்தாலும் என்
xxxx
ஜூன் 2 புதன் கிழமை
உயர்வடைய உயரிடமே சேர்க!
அரிமந் திரம்புகுந்தான் ஆனை மருப்பும்
பெருகொளிசேர் முத்தும் பெறலாம் – நரிநுழையில்
வாலும் சிறிய மயிர்என்பும் கர்த்தபத்தின்
தோலுமல்லால் வேறுமுண்டோ சொல்.
xxx
ஜூன் 3 வியாழக் கிழமை
அறிவடையோர் பகைவனாகினும் நண்பனே!
அறிவன் பகையேனும் அன்புசேர் நட்பாம்
சிறுவன் பகையாம் செறிந்த – அறிவுடைய
வென்றி வனசரன்தான் வேதியனைக் காத்தான் முன்
கொன்றதொரு வேந்தைக் குரங்கு
xxx
ஜூன் 4 வெள்ளிக் கிழமை
. இன்சொல்லே யாவரும் கேட்பர்
மென்மதுர வாக்கால் விரும்பும் சகம் கடின
வன்மொழியி னால்இகழும் மண்ணுலகம் – நன்மொழியை
ஓதுகுயில் ஏதங்கு உதவியது கர்த்தபந்தான்
ஏதபரா தம்செய்தது இன்று
xxxx
ஜூன் 5 சனிக் கிழமை
அன்பினால் மாற்றோரிடமும் நன்மை
பகைசேறும் எண்ணான்கு பல்கொண்டே நல்நா
வகைசேர் சுவைஅருந்து மாபோல் – தொகைசேர்
பகைவரிடம் மெய்யன்பு பாவித்து அவரால்
சுகமுறுதல் நல்லோர் தொழில்.
xxx
ஜூன் 6 ஞாயிற்றுக் கிழமை
பயனற்றவை
காந்தன்இல் லாத கனங்குழலாள் பொற்புஅவமாம்
சாந்தகுணம் இல்லார் தவம்அவமாம் – ஏந்திழையே
அன்னைஇல்லாப் பிள்ளை இருப்பது அவம் அவமே
துன்னெயிறில் லார்ஊண் சுவை.

xxx
ஜூன் 7 திங்கட் கிழமை
கல்விக்கு இளமையே காலம்
வருந்தவளை வேய்அரசர் மாமுடியின் மேலலாம்
வருந்த வளையாத மூங்கில் – தரித்திரமாய்
வேழம்பர் கைப்புகுந்து மேதினியெல் லாம்திரிந்து
தாழும்அவர் தம்மடிக்கீழ்த் தான்.
xxx
ஜூன் 8 செவ்வாய்க் கிழமை
நலமாகவாழ ஓர் பொழுதுண்க
ஓருபோது யோகியே ஓண்டளிர்க்கை மாதே
இதுபோது போகியே யென்ப – திரிபோது
ரோகியே நான்குபோது உண்பான் உடல்விட்டுப்
போகியே யென்று புகல்.
xxx
ஜூன் 9 புதன் கிழமை
எல்லாம் அறிவர் ஞானியர்
கண்ணிரண்டே யாவர்க்கும் கற்றோர்க்கு மூன்றுவிழி
எண்ணுவழி ஏழாகும் ஈவோர்க்கு – நண்ணும்
அநந்தம் தவத்தால் அருள்ஞானம் பெற்றோர்க்கு
அநந்தம் விழியென்று அறி.
xxx
ஜூன் 10 வியாழக் கிழமை
இல்வாழ்தலே நல்வழி
உற்றபெருஞ் சுற்றம் உறநன் மனைவியுடன்
பற்றிமிக வாழ்க பசுவின்பால் – பற்றி
நதிகடத்தல் அன்றியே நாயின்வால் பற்றி
நதிகடத்தல்உண்டோ நவில்.
xxx
ஜூன் 11 வெள்ளிக் கிழமை
துறந்தோரே உலகம் ஆள்பவர்
ஆசைக்கு அடியான் அகிலலோ கத்தினுக்கும்
ஆசற்ற நல்லடியான் ஆவானே – ஆசை
தனையடிமை கொண்டவனே தப்பாது உலகம்
தனையடிமை கொண்டவனே தான்.
Xxx
ஜூன் 12 சனிக் கிழமை
பாவம் பலவகையாம்
ஆன்அந் தணர்மகளிர் அன்பாம் குழந்தைவதை
மானம் தெறும்பிசி வார்த்தைஇவை – மேனிறையே
கூறவரு பாவம் குறையாதுஓவ் வொன்றுக்கும்
நூறுஅதிகம் என்றே நுவல்.
xxx

ஜூன் 13 ஞாயிற்றுக் கிழமை
கல்விதன்மாண்பு கற்றோரே அறிவர்
கற்றோர் கனம்அறிவர் கற்றோரே கற்றறியா
மற்றோர் அறியார் வருத்தமுறப் – பெற்றறியா
வந்தி பரிவாய் மகவைப் பெறும்துயரம்
நொந்துஅறிகு வாளோ நுவல்.
xxx
ஜூன் 14 திங்கட் கிழமை
செயலின் முன் எண்ணுக
செய்யும் ஓருகருமம் தேர்ந்து புரிவதுஅன்றிச்
செய்யின் மனத்தாபம் சேருமே – செய்யவொர
நற்குடியைக் காத்த நகுலனைமுன் கொன்றமறைப்
பொற்கொடியைச் சேர்துயரம் போல்.
xxxx
ஜூன் 15 செவ்வாய்க் கிழமை
நயமான சொல்லால் நன்மையே
நாவின் நுனியில் நயமிருக்கின் பூமாதும்
நாவினிய நல்லோரும் நுண்ணுவார் – நாவின்நுனி
ஆங்கடின மாகில் அத்திருவும் சேராள்முன்
ஆங்கே வரும்மரண மாம்.
xxx
ஜூன் 16 புதன் கிழமை
புல்லோர்க்கண் எல்லாம் நஞ்சே
ஈக்கு விடம்தலைில் எய்தும் இருந்தேளுக்கு
வாய்த்த விடம்கொடுக்கில் வாழுமே – நோக்கரிய
பைங்கண்அர வுக்குவிடம் பல்அளவே துர்ச்சனருக்கு
அங்கம்முழு தும்விடமே ஆம்.
xxxx
ஜூன் 17 வியாழக் கிழமை
அடங்காமை தீயவர் பண்பு
துர்ச்சனரும் பாம்பும் துலையொக்கி னும்பாம்பு
துர்ச்சனரை யொக்குமோ தொகையே – துர்ச்சனர்தாம்
எந்தவிதத்தாலும் இணங்காரே பாம்புமணி
மந்திரத்தால் ஆமே வசம்.
xxx
ஜூன் 18 வெள்ளிக் கிழமை
அல்லோரின் சேய்மை நன்றே
கொம்புளதற்கு ஐந்து குதிரைக்கு பத்துமுழம்
வெம்புகரிக்கு ஆயிரம்தான் வேண்டுமே – வம்புசெறி
தீங்கினர்தம் கண்ணில் தெரியாத தூரத்து
நீங்குவதே நல்ல நெறி.
xxx
ஜூன் 19 சனிக் கிழமை
புல்லோரை திருத்துவது எளிதல்ல
அவ்விய நெஞ்சத்து அறிவில்லாத் துர்ச்சனரைச்
செவ்வியர் ஆக்கும் செயலுண்டோ – திவ்வியநல்
கந்தம் பலவும் கலந்தாலும் உள்ளியது
கந்தம் கெடுமோ கரை.
xxx

ஜூன் 20 ஞாயிற்றுக் கிழமை
இருமலும் புல்லோரும் நிகரே
துன்னும் இருமலும் துர்ச்சனரும் ஒக்குமே
மன்னும் இனிமையால் மாறாகிப் – பன்னும்
கடுவும் கடுநேர் கடுமொழியும் கண்டால்
கடுக வசமாகை யால்.
xxxx
ஜூன் 21 திங்கட் கிழமை
கடையன் சொல் நிற்காது
நீசனோ நீசன் நினையுங்கால் சொல்தவறும்
நீசனே நீசன் அவனையே – நீசப்
புலையனாம் என்றுரைக்கும் புல்லியனே மேலாம்
புலையனாம் என்றே புகல்.
xxxx
ஜூன் 22 செவ்வாய்க் கிழமை
தீயவர்தம் ஓழுக்கம் போற்றாதே
ஞானம்ஆ சாரம் நயவார் இடைப்புகழும்
ஏனைநால் வேதம் இருக்குநெறி – தான்மொழியில்
பாவநிறை சண்டாளர் பாண்டத்துக் கங்கைநீர்
மேவுநெறி யென்றே விடு.
xxxx
ஜூன் 23 புதன் கிழமை
இடத்தினால் தான் சீர் சிறப்பு
ஆனை மருப்பும் அருங்கவரி மான்மயிரும்
கான வரிஉகிரும் கற்றோரும் – மானே
பிறந்தஇடத்து அன்றிப் பிறிதொருதே சத்தே
செறிந்தஇடத்து அன்றோ சிறப்பு.
xxx
ஜூன் 24 வியாழக் கிழமை
நிலைதவறாமை பெருமை
தலைமயிரும் கூருகிரும் வெண்பல்லும் தந்தம்
நிலையுடைய மானவரும் நிற்கும் – நிலைதவறாத்
தானத்தில் பூச்சியமே சாரும் நிலைதவறும்
தானத்தில் பூச்சியமோ தான்.
xxx

ஜூன் 25 வெள்ளிக் கிழமை
நன்மனையாள் பண்பு
அன்னை தயையும் அடியாள் பணியும்மலர்ப்
பொன்னின் அழகும் புவிப்பொறையும் – வன்னமுலை
வேசி துயிலும் விறல்மந் திரிமதியும்
பேசில் இவையுடையாள் பெண்.
xxxx
ஜூன் 26 சனிக் கிழமை
மகளிரின் வாக்கு நிலை
பெண்ணொருத்தி பேசில் பெரும்பூமி தான்அதிரும்
பெண்ணிருவர் பேசில்விழும் வான்மீன்கள் – பெண்முவர்
பேசில் அலைசுவறும் பேதையே பெண்பலர்தாம்
பேசில்உலகு என்னாகுமோ பின்.
xxxx
ஜூன் 27 ஞாயிற்றுக் கிழமை
அற்பர் நன்மை செய்யார்
கற்பூரம் போலக் கடலுப்பு இருந்தாலும்
கற்பூரம் ஆமோ கடலுப்பு – பொற்பூரும்
புண்ணியரைப் போல இருந்தாலும் புல்லியர்தாம்
புண்ணியர்ஆ வாரோ புகல்
xxx
ஜூன் 28 திங்கட் கிழமை
அறம் செய்ய காலம் ஏன்
உள்ளபொழுது ஏதும் உவந்தளிப்பது அல்லாமல்ஓர்
எள்ளளவும் ஈய இசையுமோ – தெள்ளுதமிழ்ச்
சீரளித்தோன் உண்டநாள் சேர்மேகத் துக்கருந்த
நீரளித்த தோமுந்நீர் நின்று
xxx
ஜூன் 29 செவ்வாய்க் கிழமை
உள்ளதும் அல்லாததும்
மந்திரமும் தேவும் மருந்தும் குருவருளும்
தந்திரமும் ஞானம் தரும்முறையும் – யந்திரமும்
மெய்யெனில் மெய்யாய் விளங்குமே மேதினியில்
பொய்யெனில் மெய்யாகிப் போம்.
xxxx
ஜூன் 30 புதன் கிழமை
அடியவர் வெல்ல அரிதானவர்
ஈசன்எதிர் நின்றாலும் ஈசனருள் பெற்றுயர்ந்த
நேசர்எதிர் நிற்பது அரிதாமே – தேசுவளர்
செங்கதிர்முன் நின்றாலும் செங்கதிர வன்கிரணம்
தங்குமணல் நிற்கரிதே தான்.
–subham—

tags- நீதி வெண்பா பொன்மொழிகள், ஜூன் 2021 காலண்டர்,