Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
உலக இந்து சமய செய்தி மடல் 9-5-2021
இன்று May 9 -ஆம் தேதி — ஞாயிற்றுக் கிழமை ,2021
உலக இந்து சமய செய்தி மடல்
தொகுத்து வழங்குபவர் வைஷ்ணவி ஆனந்த்
இது ‘ஆகாச த்வனி’ யின் உலக இந்து சமய செய்தி மடல் நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்,
நமஸ்காரம் செய்திகள் வாசிப்பது VAISHNAVI ANAND
எங்கள் நிகழ்ச்சிகளை ஞாயிற்றுக் கிழமை தோறும் லண்டன் நேரம் பிற்பகல் 2 மணிக்கும், இந்திய நேரம் மாலை 6-30 மணிக்கும் நேரடியாகக் கேட்கலாம்.
Xxxx
அனுமன் பிறப்பிடம் விவாதம் ; கிஷ்கிந்தா தேவஸ்தானம் எதிர்ப்பு
அனுமன் பிறப்பிடம் சேஷாத்திரி மலைதொடரில் உள்ள அஞ்சனாத்திரி என்ற திருப்பதி தேவஸ்தான விவாதத்தை எதிர்த்து, ஆறு பக்க கடிதம் எழுதி, கிஷ்கிந்தா தேவஸ்தானம், திருமலைக்கு அனுப்பி உள்ளது.
ராம பக்தனான அனுமன் பிறப்பிடம் குறித்து பல புராணங்களில் கூறப்பட்டிருந்தாலும், வெங்கடாசல மகாத்மியம் உள்ளிட்ட பல புராணங்களில், அனுமன் பிறப்பிடம் திருமலையில் அமைந்துள்ள அஞ்சனாத்திரி என கூறப்பட்டுள்ளது. இதை அடிப்படையாக வைத்து, திருமலை திருப்பதி தேவஸ்தானம், இதுகுறித்து ஆய்வு செய்ய, பண்டிதர்கள் தலைமையில் ஒரு குழுவை ஏற்படுத்தியது. அக்குழுவினர் இதுகுறித்த ஆதாரங்களை சேகரிக்க பல புராணங்கள், இதி காசங்கள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தனர்.இந்த ஆய்வில், அனுமன் பிறப்பிடம் சேஷாசல மலைத்தொடரில் உள்ள அஞ்சனாத்திரி என, முடிவு செய்யப்பட்டது. இதை ஸ்ரீராமநவமி அன்று, தேவஸ்தானம் திருமலையில் அதிகாரப்பூர்வமாக ஆதாரங்களுடன் வெளியிட்டது.இதை எதிர்த்து, கர்நாடகாவில் உள்ள கிஷ்கிந்தா தேவஸ்தானம், திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு, ஆறு பக்க கடிதம் அனுப்பி உள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது: வரலாற்று ஆய்வாளர்கள் நடத்திய ஆராச்சிகளின் முடிவில், ஹம்பியில் உள்ள கிஷ்கிந்தையில் அனுமன் பிறந்தார் என உறுதியாகி உள்ளது.இந்நிலையில், திருமலை தேவஸ்தானம் எந்த வரலாற்று ஆய்வாளர்களை வைத்து ஆராய்ந்து இதுபோன்ற ஒரு முடிவிற்கு வந்து, திடீரென அஞ்சனாத்திரி மலை தொடரில் அனுமன் பிறந்தார் என்று அறிக்கை சமர்பித்துள்ளது? இதற்கு ஆய்வாளர்களின் கூற்றுப்படி விளக்கமளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இதற்கு பதில் அளிக்க, திருமலை தேவஸ்தானம் தயாராகி வருகிறது.
XXXXX
இந்து அமைப்பு சேவா இண்டெர்நேஷனல் பேருதவி
எல்லா மதத்தினருக்கும் எல்லா இனத்தினருக்கும் உதவும் இந்து அறக்கட்டளையான சேவா இண்டெர்நேஷனல் அமைப்பு இந்திய கோவிட் வைரஸ் நெருக்கடியைத் தீர்க்க 70 லட்சம் டாலர் நிதியை ஒரே வாரத்தில் எழுப்பி இருக்கிறது. அமெரிக்கர்களின் கருணை உணர்வை தாராள மனப்பான்மையை சேவா இண்டெர்நேஷனல் தலைவர் அருண் காங்கனி புகழ்ந்தார் .
இதனிடையேவாஷிங்டனிலிருந்து ஒரு செய்தி வந்துள்ளது
இந்தியாவுக்கு உதவும் குழுவில் சுந்தர் பிச்சை
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவுக்கு உதவ, 40க்கும் அதிகமான பன்னாட்டு நிறுவனங்களால் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு குழுவில், கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை இணைந்துள்ளார்.
கொரோனா இரண்டாவது அலையால், இந்தியா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா உட்பட பல நாடுகள், உதவிக்கரம் நீட்டியுள்ளன. அமெரிக்காவில், 40க்கும் மேற்பட்ட பன்னாட்டு நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகள் இணைந்து, இந்தியாவுக்கு உதவ, சிறப்பு குழு அமைத்துள்ளனர்.வென்டிலேட்டர்கள், ஆக்சிஜன் செறிவூட்டிகள் உட்பட, பல மருத்துவ உபகரணங்களை, இந்தியாவுக்கு, இந்த சிறப்பு குழு அனுப்பி வைத்துள்ளது.
இந்த குழுவில், அமெரிக்க வாழ் இந்தியர்களான, கூகுள் நிறுவன தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, டிலோட்டி நிறுவன தலைமை செயல் அதிகாரி புனித் ரஞ்சன், ‘அடோப் இங்க்’ நிறுவன தலைமைச் செயலர் அதிகாரி ஷாந்தனு நாராயண் ஆகியோர் இணைந்துள்ளனர்.
XXX
கடவுளின் பேரால் உறுதிமொழி எடுக்காத தமிழக அமைச்சர்கள்
இன்று காலை கவர்னர் மாளிகையில் தமிழக முதல்வராக ஸ்டாலின் பதவியேற்றார். அவரை தொடர்ந்து மற்ற 33 அமைச்சர்களும் பதவியேற்றனர். பதவியேற்ற இவர்கள் யாருமே கடவுளின் பேரால் உறுதிமொழி எடுக்கவில்லை.
அருகாமை மாநிலமான புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க., கூட்டணியில் வெற்றி பெற்ற ரங்கசாமி முதல்வராக பதவியேற்றார். அவருடன் சில அமைச்சர்களும் பதவியேற்றனர். அவர்கள் அனைவருமே கடவுள் பெயரால் உறுதிமொழி எடுத்துக்கொண்டு பதவியேற்றனர்.
இந்நிலையில், தமிழக அமைச்சர்கள் மட்டும் ஏனோ கடவுள் பெயரால் யாரும் உறுதிமொழி எடுக்காமல் பதவியேற்றனர். இதற்கு காரணம் திமுகவின் கொள்கையா? இல்லை வேறு எதுவும் காரணமா என கேள்வி எழுகிறது. இந்த நிகழ்வு, பதவியேற்வு விழாவில் கலந்து கொண்டவர்கள் மத்தியில் நெருடலை ஏற்படுத்தியது.
சுமார் 40,000 இந்தக் கோவில்களை பராமரிக்கும் அறநிலைய அமைச்சர் சேகர் பாபுவும் கூட கடவுள் பெயரில் உறுதி மொழி எடுக்காதது இந்துக்களிடையே அதிருப்தி அ லைகளைபி பரவ விட்டுள்ளது
XXX
திருப்பதி கோவில் வெங்கடேஸ்வரா பக்தி சேனலுக்கு ரூ.1 கோடி காணிக்கை
திருப்பதி திருமலையிலுள்ள பாலாஜி வெங்கடாசலபதி கோவிலில் செயல்படும் ஸ்ரீவெங்கடேஸ்வரா பக்தி சேனல் அறக்கட்டளைக்கு சென்னையைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் ரூ.1 கோடியை காணிக்கையாக வழங்கி உள்ளது.
அந்தக் காணிக்கைக்கான வரைவோலையை திருமலையில் உள்ள நாத நீராஞ்சன மண்டபத்தில் வைத்து தனியார் நிறுவன பிரநிதிதிகள் திருமலை-திருப்பதி தேவஸ்தான கூடுதல் முதன்மைச் செயல் அலுவலரும் பக்தி சேனல் நிர்வாக இயக்குனருமான ஏ.வி.தர்மாரெட்டியிடம் மே மாதம் மூன்றாம் தேதி வழங்கினர்.
திருப்பதி கோவிலில் இந்த மாதம் மாதம் நடக்கும் விழாக்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன் விவரம் வருமாறு:-
வருகிற 13-ந்தேதி பிருகு மகரிஷி வருட திருநட்சத்திரம்,
14-ந்தேதி அட்சய திரிதியை, பரசுராமர் ஜெயந்தி.
16-ந்தேதி நம்மாழ்வார் உற்சவம் தொடக்கம்,
17-ந்தேதி சங்கராச்சாரியார் ஜெயந்தி,
20-ந்தேதியில் இருந்து 22-ந்தேதி வரை பத்மாவதி பரிநய உற்சவம், 22-ந்தேதி வரதராஜசாமி ஜெயந்தி,
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு அணிவித்த பட்டு வஸ்திரம் ஸ்ரீரங்கம் சென்றது
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் பிறந்த தினம் சித்திரை மாதம் ரேவதி நட்சத்திரம் ஆகும். அன்றைய தினம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு அணிவிக்கப்பட்ட பட்டு வஸ்திரங்களை அணிந்துகொண்டு ஸ்ரீரெங்கநாதர் பக்தர்களுக்கு காட்சி அளிப்பது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு
இன்று ஞாயிற்றுக்கிழமை அவரது பிறந்த நட்சத்திரமான ரேவதி நட்சத்திரம் வருகிறது. எனவே ஆண்டாளுக்கு பட்டு வஸ்திரங்கள் அணிவிக்கப்பட்டு அந்த பட்டு வஸ்திரங்களை கொண்டு செல்லும் வைபவம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் நேற்று நடைபெற்றது.
இதற்காக பிரத்தியேக பட்டு வஸ்திரங்கள் ஆண்டாளுக்கு அணிவிக்கப்பட்டு, பின்னர் ஒரு கூடையில் அவற்றை வைத்து கொண்டு செல்லப்பட்டது. கொரோனா பரவலை தடுக்கும் வகையில் பக்தர்கள் யாரும் இந்த நிகழ்ச்சிக்கு அனுமதிக்கப்படவில்லை.
இந்த பட்டு வஸ்திரங்களை இன்று நடைபெறும் கருடசேவை நிகழ்ச்சியின்போது ெரங்கநாதர் அணிந்துெகாண்டு பக்தர்களுக்கு காட்சி அளிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதே போல் ஆண்டாளுக்கு ரூ.4 லட்சம் மதிப்புள்ள திருப்பாவை பாடல்கள் அடங்கிய பட்டுப்புடவை ஒன்றை பக்தர் ஒருவர் நேற்று வழங்கினார். இந்த புடவையில் ஆண்டாளின் உருவம் தங்க நிறத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த புடவையும் நேற்று ஆண்டாளுக்கு அணிவிக்கப்பட்டது.
XXXXX
பாகிஸ்தானில் சாதித்த ஹிந்து பெண்
பாகிஸ்தானில் கவுரவமிக்க, சி.எஸ்.எஸ்., எனப்படும், சென்ட்ரல் சுபீரியர் சர்வீஸ் தேர்வில், முதல் முறையாக, ஹிந்து பெண் ஒருவர் தேர்ச்சி பெற்று, சாதனை படைத்துள்ளார்.
பி.ஏ.எஸ்., எனப்படும், பாகிஸ்தான் ஆட்சிப்பணிக்கான அதிகாரிகள், சி.எஸ்.எஸ்., தேர்வு வாயிலாக தேர்வு செய்யப்படுகின்றனர். சி.எஸ்.எஸ்., – 2020 தேர்வை, 18 ஆயிரத்து, 553 பேர் எழுதினர். இதில், 221 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி பெற்றவர்களில், சிந்து மாகாணம், ஷிகார்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஹிந்து பெண்ணான சனா ராமாசந்தும் ஒருவர். இதையடுத்து, இவர், பி.ஏ.எஸ்., பணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இது பற்றி, சனா கூறுகையில், ”இந்த பெருமை முழுதும், என் பெற்றோரையே சாரும்,” என்றார். பாகிஸ்தானில், சி.எஸ்.எஸ்., தேர்வில் வெற்றி பெற்ற, முதல் ஹிந்து பெண் என்ற பெருமை, சனாவுக்கு கிடைத்துள்ளது.
இத்துடன் லண்டனிலிருந்து வரும் செய்திகள் நிறைவடைந்தன………………………….. செய்திகளை உங்களுக்கு வழங்கியவர் வைஷ்ணவி ஆனந்த்………………………… நன்றி, வணக்கம்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your
WORLD HINDU NEWS ROUNDUP IN ENGLISH 9-5-2021
Namaste , Namaskaram to Everyone
This is a weekly ‘HINDU NEWS ROUND UP’ from around the world.
Read by SUJATHA RENGANATHAN .
XXX
This is a broadcast coming through ZOOM and FACEBOOK.COM / GNANA MAYAM live at
TWO pm London Time and 6-30 PM Indian Time Every SUNDAY.
Even if you miss our live broadcast on SUNDAYS
you can always visit us on FACE BOOK.COM – slash- Gnana Mayam 24 hours a day.
Here is the WEEKLY HINDU NEWS BULLETIN from ‘Aakaasa Dhwani’
– Read by SUJATHA RENGANATHAN .
Xxx
Hanuman birth place controversy — TTD answer to the Humpy Trust objections
It is known that TIRUPATI TIRUMALAI DEVASTHANAM co-declared with evidence on the day of Sri Ramanavami that Anjanadre in Thirumala was the birthplace of Hanuman.
The Hampi Srihanumad Janmabhoomi Tirthakshetra Trust in Karnataka wrote a letter on the TTD statement. TTD recently replied to this letter. Hanuman was asked to send them proof of his birthplace by the 20th of this month. The TTD objected to the Himpi Trust letter, arguing that Hanuman’s birthplace had been declared with proper evidence.
To this extent the Committee in its reply added the details collected. The letter stated that they would invite discussion as the corona spread decreased. According to TTD, the birthplace of Hanuman was Anjanadre in the Tirumala hills, with mythological, oral, legislative and geographical evidence. TTD revealed that they had reached out to the idea through a devotee’s WhatsApp message and that the committee had been investigating the matter in depth for almost four months.
Acharya Muralidhara Sharma, Vice Chancellor, National Sanskrit University, announced that Anjanadevi had come to Venkatachalam in all the Puranas. It is explained that Hanuman was born to Anjanadevi who ate the fruit given by Vayu. Venkatachala Mahathyamannar Muralidhar Sharma is a wonderful book collected about the greatness of Venkateswaraswamy. TTD has ever published this book .. It is said that this Venkatachalam, the abode of Srinivas, is described in 12 Puranas.
In these myths, Venkatachalan was treated as Anjanadri. There are 20 names of this Venkatachalan. However, the spectators argue that Anjaneya was born in their area. Vishwa Hindu Parishad leaders, historians and archaeologists in Karnataka have strongly objected to the TTD statement. They say there is evidence that Hampi is the birthplace of Anjaneya. The Ramayana tells Valmiki that Rama was first introduced to Sugriva by Hanuman in this Kishkindha area near the northern coast of Hampi (Tungabhadra) on the north bank of the river.
XXXX
Telangana HC orders state govt not to take hasty action over alleged encroachment of temple lands
The Telangana High Court on Saturday ordered the state government not to take any action against petitioners S Satyanarayana Reddy and four others who prayed for a direction for a halt to the inquiry into how they came in possession of lands which belonged to Sitaramaswami Temple at Devarayanajal village in Shamirpet Mandal in Medchal-Malkajgiri district.
The court, taking up the petition, expressed surprise over the haste with which the government had constituted a committee with four IAS officers to inquire into the allegations of encroachment of temple lands at a time when people were dying due to the COVID-19 second wave in the state.
The Advocate General brought to the notice of the court that it was only a preliminary inquiry and that action would be taken only after a detailed inquiry. As of now, the government had no intention of razing any structures that have come up on the lands, he said.
The court, however, asked the government to issue notices even for preliminary inquiry and, addressing those facing the allegations, asked them to cooperate with the government as it conducts the probe. The court directed the government and the Endowments department to file a detailed counter on the issue.
The state government, while ordering inquiry recently, had said that the Endowment department was claiming that 1,521 acres of land which belonged to Sitaramsway temple in Deverayanjal had been encroached upon. The government also quoted newspaper reports as stating that a large portion of land worth about Rs 1,000 crore had been occupied illegally by former minister Eatala Rajender and a few others. The IAS officers’ committee is headed by Panchayat Raj Commissioner M Raghunandan Rao.
Xxxx
NO GOD IN SWEARING IN CEREMONY IN TAMIL NADU
MK Stalin, leader of the DMK, took oath as Tamil Nadu’s 23rd Chief Minister on May 7, 2021. This was followed by the swearing in of 33 members of his cabinet. Stalin, son of late DMK supremo and former Chief Minister M Karunanidhi, has assumed the state’s highest office for the first time, in a simple ceremony presided by Governor Banwarilal Purohit at the Raj Bhavan in Chennai on Friday.
Stalin and 33 other members of his cabinet took oath in the name of their conscience and not in the name of god, as is practice
The Governor administered the oath of office and secrecy to the 68-year old leader, who chose to read out his full name Muthuvel Karunanidhi Stalin, to the delight of his supporters and well-wishers in the audience.
Watched on by his wife Durga, who became emotional during in the swearing-in, and son and first-time MLA Udhayanidhi Stalin in the audience.
Stalin and 33 other members of his cabinet took oath in the name of their conscience and not in the name of god, as is practice. Even Mr P K SEKHAR BABU, the minister in charge of Hindu Religious and Charitable Endownments did not use God’s name. This came as a surprise to the believers.
Xxxx
HINDU CHARITY SEWA INTERNATIONAL FUNDING
Indian-American non-profit body raises USD 7 million for India COVID-19 crisis
REPORT FROM HOUSTON:
SEWA INTERNATIONAL ,An Indian-American non-profit body has said that it has reached the 101,000-donor mark and raised over USD 7 million towards COVID-19 relief efforts in India from its Facebook campaign within 10 days.
Started with a goal of USD 500,000 on April 25 as India started seeing a drastic increase in the number of cases reported daily, Sewa Internationa’s Help India Defeat COVID-19′ campaign on Facebook has grown in strength.
Based on rapidly changing needs on the ground, Sewa moved the campaign’s fundraising target thrice, to USD 1 million, USD 5 million, and then to USD 10 million, responding both to the felt need for medical equipment in India, and the emotional commitment of donors to alleviating the suffering of millions.
It is heartening to see Americans generously donating to help India face the challenge posed by the COVID-19 second wave,” said Arun Kankani, President, Sewa International.
Sewa International representatives in India have received 1,466 oxygen concentrators this week.
Its partner organisation, Sewa United Kingdom, has sent another 50 oxygen concentrators.
Sewa volunteers transported all of them to their warehouse in Delhi for distribution to cities and hospitals across the country.
The Sewa India team has also received 139 oxygen concentrators from the United Arab Emirates.
“Sewa teams from many different countries are working with their local communities to raise funds to help India in the current COVID-19 crisis,” Kankani said.
“Sewa has procured 1,688 oxygen concentrators in the US in addition to the 2,584 we have already sent to India. Our procurement team is acting fast to obtain more of these machines. said Srikanth Gundavarapu, who is leading the Sewa Procurement Team.
XXXX
Temples to remain shut during lockdown in Kerala
The Travancore Devaswom Board (TDB), the apex body in the southern state of Kerala which manages over 1,200 temples, on Thursday said shrines under its management would not permit devotees in its premises for darshan during the lockdown period.
NEW GUIDE LINES FOR Char Dham yatra out amid Covid-19 spike
Days after the Uttarakhand government postponed the annual Char Dham yatra, the Char Dham Management Board on Tuesday announced that only priests and so-called traditional right holders will be permitted inside the four shrines of Kedarnath, Badrinath, Gangotri and Yamunotri.
Issuing a set of standard operating procedures, the government said the four shrines would open for daily prayers from 7am to 7pm after the opening of their respective portals.
Officials had earlier announced the dates for opening the four temples.
“Only the priests and related traditional right holders will be allowed inside the shrines for daily puja while following all the guidelines like wearing masks, maintaining social distance and thermal screening,” the guidelines read.
Xxx
Pakistani Doctor Becomes First Hindu Woman to Crack Prestigious Central Superior Services Examination
Miss Sana Ramachand Picture
A Hindu woman in Pakistan passed the prestigious Central Superior Services (CSS) exam and was selected for the Elite Pakistan Administrative Services (PAS).
Sana Ramachand is an MBBS doctor from the rural area of Shikarpur, Sindh, which has the largest Hindu population in Pakistan.
She is one of 221 candidates who have been declared successful in the CSS exam out of the 18,553 written exams. The final choice was made after careful medical, psychological and oral testing.
Groups are assigned at the final stage when the final benefits are determined.
As a result, Ramchand tweeted “Waheguru the Ka Karsa Wahegur the Ki Fate” and said, “Thanks to Allah Almighty, I am happy to have cleared CSS 2020 and been assigned to PAS. All credit goes to my parents. “
The latest CSS pass rate is less than 2%, demonstrating fierce competition and strict standards applied by the Federal Public Service Commission responsible for their recruitment.
XXX
THAT IS THE END OF ‘AAKAASA DHWANI ’ HINDU NEWS BULLETIN BROADCAST FROM LONDON –
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
கவிஞர் ஜெஃப்ரி சாசர்.
CHAUCER GEOFFREY யார்?
ஆங்கிலக் கவிஞர்களில் முன்னணியில் நிற்கும் கவிஞர் ஜெப்ரி சாசர். இவர் வாழ்ந்த காலம் 1340 முதல் 1400 வரை என்று கருதப்படுகிறது. ஆங்கில மொழிக்கு ஒரு பாதை , வகுத்துக் கொடுத்தவர் இவர். இவருக்குப்பின் வந்த ஆங்கிலக் கவிஞர்கள் ஒவ்வொருவரும் இவருக்கு ஏதேனும் ஒரு விஷயத்தில் கடன் பட்டவர்களே. சாசர் வகுத்த உத்திகளில் ஒன்றையாவது அவர்கள் பயன்படுத்தியிருப்பார்கள். சாசர் எழுதிய புகழ் பெற்ற நூல் CANTERBURY TALES.
லண்டனில் ஒரு மதுபான வியாபாரியின் மகனாகப் பிறந்த சாசர் எங்கு கல்வி கற்றார் யாரிடம் கல்வி கற்றார் என்பது தெரியவில்லை. ஆனால் இவரது கவிதைகள் இவரது மேதாவிலாசத்தை காட்டுகின்றன.
17 வயதானபோது சாசர் கிளாரன்ஸ் நகர பிரபுவின் DUKE OF CLARENCE மனைவி LADY ELIZABETHக்கு பணிவிடை செய்பவராக அமர்ந்தார். இதற்கு இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் படைவீரனாகச் சேர்ந்து பிரான்ஸுக்குச் சென்று பல போர்களில் பங்கு கொண்டார். பிரெஞ்சுக்காரர்கள் இவரைப் பிடித்து ஓராண்டு காலத்துக்கு கைதியாக வைத்திருந்தனர். 1360ஆம் ஆண்டில் இவரைப் பணயத்தொகை கொடுத்து மீட்டு வந்தனர்.
1366இல் இவர் JOHN OF GAUNTஇன் மூன்றாவது மனைவியின் சகோதரிகளில் ஒருவரை மணந்தார். இதன் பின்னர்தான் அவர்கள் இருவருக்கும் புரவலராக இருந்து ஆதரித்தார்.
1367ஆம் ஆண்டில் அரசவையில் VALET பதவி கிடைத்தது. அப்போது இவருக்கு வயது 27. விரைவிலேயே அரசரின் ESQUIREஆக மாறினார். 1369ஆம் ஆண்டில் மீண்டும் பிரான்ஸுடன் மோத போர்க்களம் ஏகினார்.
அடுத்த பத்தாண்டுக்காலம் — பொறுப்பேற்று ஐரோப்பாவின் பல நாடுகளுக்குச் சென்று வந்தார்.
ஒருமுறை GENOA நகருக்குச் சென்றபோது இவர் இதாலியக் கவிஞர்கள் பொக்கஸியொவையும் பெட்ராக்கையும், சந்தித்ததாகத் தெரிகிறது.
1377ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் இரண்டாவது ரிச்சர்டு பதவிக்கு வந்தார். அவர் பிரென்ச் இளவரசி மேரியை மணமுடிக்க விருன்பினார். இந்த திருமணத்தை ஏற்பாடு செய்ய சாசர் தூது சென்றார்.
1382ஆம் ஆண்டில் லண்டன் துறைமுகத்தில் சுங்க அதிகாரியாக பதவி ஏற்றார். 1386இல் அவர் நாடாளுமன்றத்திற்கு நியமிக்கப்பட்டார். (KNIGHT OF THE SHINE OF KENT)
சாசருக்கு ஆக்கமும் ஊக்கமும் தந்து வந்த JOHN OF GAUNT வெளிநாடு சென்றபோது, சாசரின் எதிரிகள் அவரிடம் இருந்த அனைத்துப் பதவிகளையும் பறித்தனர். இருந்த போதிலும் RICHARD மன்னர் —- அரசுப்பொறுப்பினை ஏற்றவுடன் சாசருக்கு ஆண்டுக்கு 20 பவுண்டு வீதம் ஓய்வூதியம் தந்தார். அந்தக் காலத்தில் 20 பவுண்டு என்பது பெருந்தொகை.
லண்டனில் வெஸ்ட்மின்ஸ்டரிலுள்ள வீட்டில் CHAUCER வாழ்ந்தார். அவர் WESTMINSTER கதிட்ரலில் அடக்கம் செய்யப் பட்டார்
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
திருக்குறளுக்கு தற்காலத்தில் சிறந்த உரைநூல் இதோ!
ச.நாகராஜன்
1
கவிராஜ பண்டித ஜெகவீர பாண்டியனார் நமது சம காலத்தில் வாழ்ந்த சிறந்த தமிழ் அறிஞர்; தமிழ்ப் புலவர். மணியாச்சிக்கு அருகில் உள்ள ஒட்டநத்தம் என்ற ஊரில் 10-3-1886இல் இவர் பிறந்தார்.
தமிழின் பால் அளவற்ற ஈடுபாடு கொண்ட இவர் மதுரையில் மேலமாசி வீதியில் வாழ்ந்து வந்தார்.
திருவள்ளுவர் பால் அளவற்ற ஈர்ப்பு கொண்ட இவர் தனது இல்லத்திற்கு திருவள்ளுவர் நிலையம் என்றே பெயரைச் சூட்டினார்.
தனது நூல்களைப் பதிப்பிக்க தனது அச்சகம் ஒன்றை உருவாக்கினார். அதற்குப் பெயர் வாசுகி அச்சகம். அந்தக் காலத்தில் கம்போஸிங் எனப்படும் அச்சுக் கோர்ப்பிற்கு எழுத்து அச்சுக்களை எடுத்துக் கோர்க்க வேண்டும். அதையும் இவரே செய்தார். இவரது மகன்களையும் அந்தப் பணியில் ஈடுபடுத்தினார்.
அற்புதமான தமது நூல்களைத் தானே பதிப்பித்தார்.
கவிராஜ பண்டிதரை உரிய முறையில் தமிழகம் பாராட்டவில்லை என்பதே என் தனிப்பட்ட கருத்து. 17-6-1967இல் அவர் மறைந்தார்.
அந்தக் காலத்தில் எனது தந்தையார் மறைந்த தினமணி பொறுப்பாசிரியர் திரு வெ.சந்தானம் புத்தகங்களைப் பணம் கொடுத்து வாங்கிப் படிப்பது வழக்கம். அவருடன் புத்தகம் வாங்கச் செல்கிறார் என்றால் தவறாமல் நானும் கூடவே செல்வது வழக்கம். டவுன்ஹால்ரோடில் உள்ள பாரதி புத்தக நிலையத்தில் உரிமையாளரான திரு சுவாமிநாதன் கல்லாவில் அமர்ந்திருப்பார். நாங்கள் உள்ளே சென்றவுடன் அன்பான வரவேற்பு இருக்கும். புத்தகங்கள் அனைத்தும் தெரிவு செய்யப்பட்டவுடன் அவற்றை அடுக்கிக் கட்டி வீட்டுக்கு அனுப்பி விடுவார் பில்லுடன். பணத்தை கடையிலிருந்து புத்தகத்தைக் கொண்டு வருபவர் வாங்கிக் கொள்வார்.
இப்படி ஆயிரத்தி தொள்ளாயிரத்து அறுபதுகளில் ஒரு நாள், பாரதி புத்தக நிலையத்திலிருந்து திரும்பி வரும் போது மேலமாசி வீதியில் ஒரு வீட்டிற்குள் நுழைந்தார் என் தந்தையார். யார் வீடு என்று நான் கேட்ட போது, ‘உள்ளே வந்து பார்’ என்றார்.
உள்ளே எங்களை அன்புடன் வரவேற்றவர கவிராஜ பண்டித ஜெகவீரபாண்டியனார்.
நெடுநேரம் பேசிக் கொண்டிருந்தோம். அவரது அச்சகத்தைக் காண்பித்தார். எளிமையான தமிழ் அறிஞர். மடை திறந்த வெள்ளம் போல் தமிழ் செய்யுள்களும், கருத்துக்களும் பாய்ந்து வந்ததைப் பார்த்து பிரமித்தேன். வழக்கம் போல புத்தகக் கட்டு ஒன்று உருவானது. அதை அவரே வீட்டிற்கு அனுப்பி வைத்தார். பணமும் தரப்பட்டது.
அந்தப் புத்தகங்களைப் படித்த போது தமிழ்க் கடலின் விஸ்தீர்ணம் ஓரளவு புலப்பட்டது. அவரது அறிவின் ஆழத்தை அளக்கவே முடியாது என்றும் தோன்றியது.
அந்தப் புத்தகங்களுள் ஒரு குறிப்பிடத் தகுந்த புத்தகம் திருக்குறட் குமரேச வெண்பா.
இன்றளவும் அந்தத் தொகுதிகள் எனக்குத் துணையாக இருந்து வருகின்றன.
2
திருக்குறட் குமரேச வெண்பா என்பது 1330 குறட்பாக்களுக்கு ஒரு விரிவுரை. இது புதுமையான ஒரு விரிவுரை. ஒவ்வொரு குறளுக்கும் ஒரு சரிதம் உண்டு. 1330 குறட்பாக்களுக்கு 1330 நேரிசை வெண்பாக்கள். தெய்வ வணக்கமும் அவையடக்கமும் சேர்த்து மொத்தம் 1332 நேரிசை வெண்பாக்கள்.
அவர் நூலின் முகவுரையில் (7-8-1938 தேதியிட்ட பதிப்பு இது) குறிப்பிடுவது இது:-
“தெய்வப் புலமைத் திருவள்ளுவப் பெருந்தகை அருளியுள்ள திருக்குறளின் கருத்துக்களுக்குப் பொருத்தமான சரிதங்களை இராமாயணம், பாரதம் முதலிய இதிகாசங்களினும், காந்தம், பாகவதம் முதலிய புராணங்களினும், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை முதலிய சங்க நூல்களினும், வேறு பல நூல்களினும் இருந்து தெரிந்து எடுத்து எமது குலதெய்வமாகிய குமரேசனது முன்னிலையில் விண்ணப்பித்து அவற்றிற்கு விடை கூறும் முறைமையில் குறள்களை உதாரணமாக எடுத்துக் காட்டி இற்றைக்கு மூன்று வருடங்கட்கு முன்னரே இந்த நூலை முடித்து வைத்தும் வெளிப்படுத்தக் கூசி விலகி இருந்தேன். இங்ஙனம் இருப்ப, அறிஞர் பலர் இந்நூலுட் சில பாக்களைக் கேட்டு மகிழ்ந்து இதனை அச்சில் ஏற்றி அனைவருக்கும் உபகரிக்க வேண்டும் என்று என்பால் அன்பால் என்னைத் தூண்டினர். அன்னார் வேண்டுகோளைச் சிரமேற் கொண்டு இது பொழுது இதனை வெளியிடுகின்றேன்.விழுமிய உரையுடன் கெழுமித் தெளிவாய் வெளி வருகின்றது.”
சரிதங்களைக் குறட்பாவில் அமைத்துத் திருக்குறள்களோடு இணைத்துத் தனிச்சீரும் சேர்த்து அமைக்கப்பட்ட இந்த வெண்பாக்களைப் படிப்பதே ஒரு சுகானுபவம். 1-1-1957இல் இந்த நூல் மூன்றாம் பதிப்பைக் கண்டது.
முதல் குறளுக்கான அவரது குமரேச வெண்பா இது:-
பூவுலகோ டெங்குமேன் பூண்ட துமைகேள்வன்
கோமுகித்த தன்மை குமரேசா – மேவும்
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு
இதற்கான விரிவுரையை அவரே மிக அழகுறத் தெளிவாகத் தருகிறார்.
நீத்தார் பெருமை அதிகாரத்தில் வரும் முதல் குறளுக்கான குமரேச வெண்பா இது:-
மண்டு புகழ் மாணிக்க வாசகரின் மாண்பினை நூல்
கொண்டு புகவ் வானேன் குமரேசா – கொண்ட
ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு
மாணிக்கவாசகரது பெருமையை நூல்கள் ஏன் உவந்து புகழ்கின்றன? எனில், ஒழுக்கத்து நீத்தார் பெருமை பனுவல் துணிவு விழுப்பத்து வேண்டும் என்க.
சில குறள்களுக்கு நான்கு சரிதங்கள் கூடத் தரப்படுகின்றன.
அருமையான இந்த நூல் தற்காலத்திற்கேற்றபடி எளிய தமிழில் அழகிய எடுத்துக் காட்டு கதைகளுடன் தரப்பட்டுள்ளதால் இதுவே காலத்திற்கேற்ற நாம் படிக்க வேண்டிய திருக்குறள் விரிவுரை என்பதை அறுதியிட்டு உறுதி கூறலாம்.
சற்று யோசனை செய்து பார்த்தால் வியந்து போவோம். 1330 குறளுக்கும் பொருத்தமான கதையை புராண, இதிஹாச, இதர நூல்களிலிருந்து எடுத்து ஒரு நேரிசை வெண்பாவில் முதல் இரண்டு அடிகளில் அடக்கி அதற்குரிய குறளை கீழ் இரண்டு அடிகளில் தருவது என்றால் அது சாமானிய செயலா, என்ன! இறைவன் திருவருளும் திருவள்ளுவரின் ஆசியுமே காரணம் எனலாம்,
கண்ட உரைகளைப் படிக்காமல் திருக்குறளுக்கான சரியான உரை இதுவே. இதை அன்பர்கள் கண்டிப்பாகப் படித்துப் பயன் பெற வேண்டும்.
3
கவிராஜ பண்டிதரின் நூல்கள் நாட்டுடமையாக்கப்பட்டு விட்டதால் அவற்றை இணையதளத்திலிருந்து, இலவசமாக, தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
அன்பர்கள் தவறாது இந்த நூலைப் படிக்க வெகுவாக நான் பரிந்துரை செய்கிறேன்.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
DON’T FORGET TO READ 43 PARTS – “TAMIL WORDS IN ENGLISH” THAT ENDED ON SIXTH DECEMBER 2020;
FOLLOWING SERIES STARTED ON NINTH DECEMBER 2020.
ALL THE NUMBERS BELOW ARE SUTRA NUMBERS FROM 2700 YEAR OLD ‘ASHTADHYAYI’ OF PANINI, WORLD’S FIRST GRAMMAR BOOK.
XXX
2700 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ், ஆங்கில சொற்கள் – பகுதி -49
Xxxx
PANINI Sutra 5-1-58
பாணினி சூத்திரம் 5-1-58
Commentators give names of several books; ashtakam is another name for Ashtadhyayi.10 chapter Vyagra Panchako Atheetha. Already we saw Satapata brahmanam.
Dasakam Vaiyagra patheeyam
Thrikam kasakruthsnam
Tamils also followed them and gave their books names such as
Ainkuru nuru, Pathitrup paththu
சம்ஸ்க்ருதத்தில் எண்களை வைத்து நூல்களை அழைப்பது வேத காலத்திலேயே இருந்ததை சதபத பிராஹ்மணம் முதலிய பல நூல் களிலிருந்து அறிகிறோம் . இதைப் பின்பற்றி தமிழர்களும் ஐங்குறு நூறு , பதிற்றுப்பத்து என்றெல்லாம் பெயர் சூட்டினர்
Xxx
5-1-59
Pankthi
It becomes Panthi in Tamil
பங்தி என்பது வரிசை; பத்துப் பத்தாக வரிசை.
இதை இப்பொழுதும் பந்தியில் உட்கார்ந்து சாப்பிடு என்கிறோம்.
பந்திக்கு முந்து படைக்குப் பிந்து, பந்தி வஞ்சனை செய்யாதே என்ற பழமொழிகளையும் நாம் அறிவோம்.
Xxx
5-1-69
Panini used Dakshina
Till this day we use it in Pumas, Temples
தட்சிணை என்று 2700 ஆண்டுகளுக்கு முன்னர் பயன்படுத்தியதை இன்றும் நாம் கோவில்களிலும், பூஜைகளிலும் பயன்படுத்துகிறோம்
Xxx
5-1-70
Sthaali
In Tamil Thaazi
Nowadays they use it for a plate of meals in Indian Restaurants.
ஸ்தாலி என்பதை தாழி , முதுமக்கள் தாழி என்ற சொற்களில் காணலாம். புறநானூற்றிலும் உளது
ஹோட்டல்களில் தாலி என்பதை இப்பொழுது ஒரு பிளேட் சாப்பாட்டுக்கு பயன்படுத்துகின்றனர். முன் காலத்தில் கலயத்தில் உண்டனர். தட்டில் அல்ல .
வெண்ணை திரண்டு வரும்போது தாழி உடைந்தாற்போல- Tamil Proverb
Xxx
5-1-74
Yojanam
Yojanai distance is used in Tamil poems
Varttika adds Krosa
யோஜனை என்ற தூரம் சிலப்பதிகாரம், மணிமேகலை காலம் முதல் பாடல்களில் உள்ளது .
குரோசம் என்ற தூரம் கம்ப ராமாயணம் முதலியவற்றில் வருகிறது
Xxx
5-1-75
Pathika = Pedestrian
பதிக என்பதை பிரயாணி , பாதசாரி என்ற பொருளில் பாணினி பயன்படுத்தினார்
இன்றும் ஆங்கிலத்தில் ‘பெடெட்ஸ்ரியன்’ என்ற சொல் உளது
பதம்/அடி = பாத்/ஆங்கிலம்= சங்க இலக்கியத்தில் ‘அதர்’ என்போம்.
Path= (P) Athar in Tamil literature.
Xxx
5-1-77
Varttika adds
Madhu,
Maricha black pepper by land route
It shows Kerala connection
பாணினிக்கு 300 ஆண்டுகள் பிற்பட்டது காத்யாயன வரருசியின் ‘வார்த்திகம்’ என்னும் நூல். அதில் மிளகு , தேன் முதலியன தரை வழி வணிகப் பொருட்களில் வருகிறது. ஆக 2400 ஆண்டுகளுக்கு முன்னரே, மைசூர், கேரள மாநிலங்களுடன் வணிகத் தொடர்பு இருந்ததை அறிய முடிகிறது.
Xxx
5-1-78
Kaala
For time, duration is used in Tamil literature
Kaala becomes Chrono
கால என்பதை சங்கத் தமிழ் நூல்கள், திருக்குறளில் காண்கிறோம். காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் (1894-1994) சொல்லுவது போல தமிழுக்கும் ஸம்ஸ்க்ருதத்துக்கும் மூல மொழி ஒன்றுண்டு. அதிலிருந்து ‘கால’ வந்தது. ர=ல விதிகளின்படி அது ‘க்ரோனோ’ என்று ஐரோப்பிய மொழிகளில் உரு மாறுகிறது .
2200 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த பதஞ்சலி மஹா மேதாவி. எதையும் தர்க்க ரீதியில் , விஞ்ஞான ரீதியில் வாதிடுவதை அவரது பிரம்மாண்டமான மஹா பாஷ்ய உரையில் காணலாம். அவரது உத்தியை தமிழில் 1300 ஆண்டுகளுக்கு முன்னர் உரை எழுதியோர் அப்படியே பின்பற்றுகின்றனர். அதாவது ‘தடை எழுப்பி விடை காணும் உத்தி’.. பதஞ்சலி ஒரு நாளைக்கு மாணவர் படிக்கும் பாடத்தை ஒரு நாள் syllabus சிலபஸ் என்று தனித்த தனியே எழுதினார். அதற்கு ஆஹ்னிகம் / ஒரு பகல் என்று பெயர். அஹஸ் என்றால் பகல். இதிலிருந்தே தமிழ் ‘பகல்’ வந்தது. இரவு என்பதும் சம்ஸ்க்ருத சொல்லே. ராத்திரி என்பது ‘இரவு’ என மருவியது
Ahnikam one day lesson
Ahas =pakal
Xxx
5-1-81
Panini used Maasa for Month
Vayas for Age
Maasa= Month
Vayas =Age. ஏஜ் /வயது என்பதன் தமிழ் மரூ உ =அகவை Agevai
மாச என்பது மாதம் என தமிழில் வரும், வயஸ் என்பது வயது என வரும் . இதே போல ஆங்கிலமும் ‘ச’ ஒலியை ‘த’ ஒலியாக மாற்றும். ஆகவே தமிழும் ஸம்ஸ்ருதமும்தான் உலக மொழிகளின் ஊற்று, தோற்றுவாய். (All ancient languages came from Tamil and Sanskrit)
Xxxx
5-1-87
Raatri, Ahas says Panini
ராத்ரி , அஹஸ் — மேலே விளக்கப்பட்டுள்ளது .
Becomes Iravu and Pahal
Seen already
Xxx
5-1-94
Vaarttika adds Chaturmaasya.
It is the Four Month vow.
All monks follow this even today.
The four months cover the monsoon rain period in India.
This is the four month discussed through out Akam (Family and Sex) literature in Tamil.
Wives are waiting for their husbands to return home before the rainy period. Kalidasas Meghadutam also covers this period. Kalidas’ book is the first travelogue in the world. That is the only book on Meteorology.
வார்த்திகக்காரர் சாதுர்மாஸ்ய / 4 மாத மழைக்கால விரதம் பற்றிக் கூறுகிறார். இன்றும் சந்யாசிகள் 4 மாதத்துக்கு இடம் பெயரால் இருந்து விரதம் அனுஷ்டித்து அதை வியாச பவுர்ணமியில் நிறைவு செக்கிறார்கள். அதாவது இந்தியப் பருவக்காற்று விஞ்ஞானம் 2500 ஆண்டுகளுக்கு முன்னரே பதிவாகிவிட்டது. காளிதாசனின் அற்புதமான மேக தூத நூல் உலகின் முதல் பயண நூல் மட்டுமல்ல. தென் மேற்குப் பருவக்காற்று உஜ்ஜயினி முதல் இமய மலை வரை எப்படிச் செல்கிறது என்பதையும் காட்டுகிறது. அவன் மாபெரும் வானிலை விஞ்ஞானி . அவர்க்கு முன்னோடி வார்த்திகம்/ நோட்ஸ் எழுதிய வரருசி. இது சங்கத் தமிழ் நூல்களில் குறைந்தது 1000 பாடல்களில் வருகிறது. எல்லா காதல் பாடல்களும் மழைக்கால அறிகுறிகள் வந்துவிட்டதே; இன்னும் காதலன் செய்த பிராமிஸ்/ promise படி வரவில்லையே என்பதாக இருக்கும்.
Xxx
5-1-102
Yoga is used by Panini
English word Yoke comes from this.
யோகம் என்பதை ஆங்கில ‘யோக்’ yoke சொல்லில் காணலாம் .
யோக் = இணை ; இதை உடல் உறவுச் சொல்லிலும் தமிழர்கள் பயன்படுத்துகின்றனர். இடக்கர் அடக்கல் கருதி அச்சொல்லை நான் இங்கே எழுதவில்லை
Xxx
5-1-104
Samaya is used by Panini
It is time or duration
Tamils also use this.
சமயம்/ நேரம் என்ற சொல்லை இன்றும் பயன்படுத்துகிறோம். இது 2700 பழமையான ஸம்ஸ்க்ருதச் சொல்.
Xxx
5-1-105
Rtu ருது
Six Rtus are in ancient Tamil literature as well.
‘Rtu Samharam’ is written by Kalidasa, which covers all the Six Rtus.
Rhythm is linked to this word.
ருது = பெண் ருது /பருவம் அடைந்து விட்டாள். பாட்டில் நல்ல ரிதம் (ஆங்கிலம்) இருக்கிறது. தமிழர்கள் ஆறு பருவங்களை பின்பற்றினர் என்பதெல்லாம் வேத காலச் சொற்கள். சம்ஸ்க்ருதத்தில் உள்ள ஆறு ருதுக்களை , தமிழர்கள் சங்க இலக்கியத்தில் அப்படியே பின்பற்றுகின்றனர். காளிதாசன் எழுதிய முதல் நூல் ‘ருது சம்ஹாரம்’. உலகில் பருவங்கள் பற்றி எழுந்த முதல் நூலும், கடைசி நூலும் இதுவே. 2000 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதிய அற்புதமான இயற்கை வருணனை நூல் இது. இதற்கெல்லாம் மூலம் வேதம் மற்றும் பாணினி சொல்லும் ருது. இது ஆங்கிலத்தில் ‘ரிதம்’ ஆனது.
Xxx
5-1-111
Vaarttika adds Swarga, Punyaahavachanam
வார்திகக்காரர் இன்றும் குழந்தை பிறந்த பத்தாவது நாளில் நடக்கும் ‘புண்யாஹ வசன’ சடங்கை உதாரணமாகக் காட்டுகிறார். ‘சுவர்க்கம்’ என்ற சொல்லையும் எடுத்துக்காட்டில் தருகிறார்.
புண்ய, வசனம் (சினிமா) என்ற சொற்களை இன்றும் நாம் சர்வ சாதாரணமாக பயன்படுத்துத்துகிறோம்.
‘சொர்க்க’ தமிழில் ‘துறக்கம்’ ஆகும். இதுவரை நான் நூற்றுக் கணக்கான இடங்களில் ‘எஸ்’ என்பது ‘த’ ஆக மாறும் என்று காட்டியுள்ளேன். அதே விதிகளின்படி சுவர்க்கம் =துறக்கம் ஆகிறது தமிழ் மொழியில் .
These words are used until today.
Punyaha vachanam is purifying ceremony celebrated until today.
It is good to see it has been there for at least 2400 years.
Xxx
5-1-115
Thulya is used by Panini.
Thulaa rasi and its emblem Balance, which is Thula, is known to all
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ச.நாகராஜன்
ஸ்ரீ ராமரின் எல்லையற்ற கருணை:
இடம்: சுப்ரீம் கோர்ட். துளஸி பீடத்தின் ஸ்தாபகர் தர்ம சக்ரவர்த்தி, பத்ம விபூஷன் ஜகத்குரு ஸ்ரீ ராமபத்ராசார்யா, ஸ்ரீ ராம ஜன்மபூமி வழக்கில் வாதியாக வந்து அமர்ந்திருக்கிறார். சர்ச்சையில் இருக்கும் அயோத்யா ராம ஜென்ம இடத்தைப் பற்றிய குறிப்புகளை, மேற்கோளுக்கு மேல் மேற்கோளாக சாஸ்திரங்களிலிருந்து அள்ளி வீசிக் கொண்டிருக்கிறார் அவர்.
நீதிபதியாக அமர்ந்திருந்தவர் ஒரு முஸ்லீம். அவர், துளைக்கும் ஒரு கேள்வியை வாதியின் முன் வைத்தார்:” நீங்கள் எப்போதுமே வேதம் சொன்னதையே நிரூபணமாகக் கேட்பவர்கள். குறிப்பிட்ட சர்ச்சைக்குரிய இடத்தில் தான் ஸ்ரீ ராமர் பிறந்தார் என்பதற்கு வேதத்தில் ஏதாவது ஆதாரம் இருக்கிறதா?”
ஜகத்குரு ஒரு விநாடி கூட தாமதிக்கவில்லை. ஞானக் கண்ணைக் கொண்ட அவர், “ஓ! இருக்கிறதே, அதை என்னால் கூற முடியும்” என்றார். உடனே ரிக் வேதத்தில் உள்ள ஜைமீனிய சம்ஹிதாவிலிருந்து பல குறிப்புகளைக் கூற ஆரம்பித்தார். ஒரு குறிப்பிட்ட திசையில், சரயு நதியில் உள்ள ஒரு குறிப்பிட்ட இடத்தை, அதுவும் அது ஒரு குறிப்பிட்ட தூரத்தில் இருப்பதை, ஸ்ரீ ராம ஜென்ம பூமியாக தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருப்பதைக் கூறினார் அவர். வழக்கில் சர்ச்சைக்குரிய இடமாகச் சொல்லப்பட்ட இடம் அந்த இடத்தில் அப்படியே இருந்தது. கோர்ட்டாரின் உத்தரவுப் படி ஜைமினீய சம்ஹிதா நீதிபதிக்கு முன்னர் கொண்டு வரப்பட்டது. அவர் கூறிய விவரணம் அனைத்தும் அதில் அப்படியே இருந்தது. சர்ச்சைக்குரிய இடமானது சம்ஹிதா கூறியபடி அதே இடத்தில் தான் இருந்தது.
அந்தக் குறிப்பானது ஹிந்துக்களுக்கு சாதகமாக வழக்கை மாற்றியது. முஸ்லீம் நீதிபதி கூறினார்:” இன்று நான் பாரதீய அறிவின் அதிசயத்தைக் கண்ணால் பார்த்தேன். எப்படி கண்பார்வையற்ற ஒருவர் அள்ள அள்ளக் குறையாத வேத ஞானத்திலிருந்து மேற்கோளை அனாயாசமாகக் கூற முடிகிறது என்பதைப் பார்த்தேன். இது தெய்வீக சக்தியே தான் அல்லவா?”
ஸ்ரீ ராமபத்ராசார்யாஜி இரண்டு மாதக் குழந்தையாக இருக்கும் போதே கண்பார்வையை இழந்து விட்டார். இப்போது அவருக்கு 22 மொழிகள் தெரியும். 80 புத்தகங்களை அவர் எழுதியுள்ளார்.
நன்றி Truth Volume 88 No 13 Reprinted again in Truth Volume 89 No 1 dated 16-4-2021
***
இதன் ஆங்கில மூலத்தைப் படிக்க விரும்புவோருக்காக மூலக் கட்டுரை கீழே தரப்படுகிறது.
Lord Sri Rama’s Grace Infinite:
The scenario in the Supreme Court was as follows:– Dharma Chakravarty, Founder of the Tulsi Peeth, Padma Vibhushan, Jagadguru Sri Rambhadracharya was present, as the plaintiff in the Sri Ram Janmabhumi case, who was quoting references after references from the Shastras in favour of Sri Ram Janmasthan at the disputed site in Ayodhya.
The person sitting on the chair as Judge was a Muslim by religion. He asked a piercing question to him, “You always ask for Vedic references as proof. Can you cite a reference from the Vedas to prove that Sri Ram was born in Ayodhya at the same very place?”
Without wasting a second, the Prajna Ckakshu saint (one endowed with the eyes of wisdom) said, “Yes Sir, I can”… and he started quoting references from Jaiminiya Samhita of the Rig Vedas, pointing from a specific site in the Saryu river, in a particular direction at a definite distance identifying as the place of Sri Ram Janmasthan, that has been clearly indicated. The disputed site exists at just that
place. On the basis of Court orders, Jaiminiya Samhita was produced before him and all the descriptions quoted were found to be accurate. The disputed site exists at that very place.
And the statement turned the course in favour of the Hindus. The Muslim Judge acknowledged, “Today I have witnessed the wonder of Bharatiya wisdom…how a person who is devoid of physical eyes was extensively quoting from the inexhaustible source of the (Vangmay) Veda Shastras? Is it not the Divine Powers?”
Sri Rambhadracharyaji lost his vision, just at the age of two months. Today he knows 22 languages, and has already written eighty books. (Truth Vol. 88, No. 13)
***
tags- ஸ்ரீ ராம ஜென்ம பூமி, ராமபத்ராசார்யாஜி, ஜைமீனிய சம்ஹிதா,