

Post No. 9775
Date uploaded in London – –25 JUNE 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஆங்கில நாவல் ஆசிரியர் ஈ எம் பார்ஸ்டர் ( E.M.FORSTER) எழுதிய ஐந்து புகழ்பெற்ற நாவ ல்கள் , அவரை 20-ம் நூற்றாண்டின் தலைசிறந்த ஆங்கில நாவல் ஆசிரியர் வரிசையில் இடம்பெற வைத்தன . இந்த 5 புதினங்களை அவர் 45 வயதுக்குள் எழுதி முடித்தார்.
எட்வர்ட் மார்கன் பார்ஸ்டர் (EDWARD MORGAN FORSTER) என்பது அவருடைய முழுப் பெயர்; அவர் லண்டனில் பிறந்தார். அவர் பிறந்த ஒரே ஆண்டில் தந்தையை இழந்தார். பள்ளிக்கூடம் போவது அவருக்கு வேப்பங் காயாகக் கசந்தது. ஆனால் பிற்காலத்தில் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழக படிப்பு வரை முன்னேறினார். அங்கு அபாஸ்டில்ஸ் (APOSTLES) என்ற பெயரில் இயங்கிய அறிஞர்கள் விவாதக் குழுவில்சேர்ந்தார். விரைவில் ப்ளூம்ஸ்பரி (BLOOMSBURY GROUP) குழுவில் இணைந்தார். பழைய பத்தாம் பசலி உத்திக ளுக்கு எதிரான புரட்சி எழுத்தாளர்களையும் கலைஞர்களையும் கொண்டது ப்ளூம்ஸ்பரி அணி.
இளம் வயதிலேயே தாயாருடன் இத்தாலி, கிரீஸ் ஆகிய நாடுகளுக்குச் சென்றார். பின்னர் இரண்டு முறை இந்தியாவில் நீண்ட காலம் பயணம் செய்தார். 26 வயதிலேயே அவருடைய முதல் நாவல் (WHERE ANGELS FEAR TO TREAD ) வேர் ஏஞ் சல்ஸ் பியர் டு ட்ரீட் வெளியாகியது . 32 வயதுக்குள் மேலும் 3 நாவல்கள் எழுத்துலகில் வலம் வந்தன. இதில் ஒன்றான (HOWARDS END) ஹோவர்ட்ஸ் எண்ட் நாவல் இவரை பிரபல நாவல் ஆசிரியர் ஆக்கியது. இது இரண்டு குடும்பங்களுக்கு இடையேயான மோதல் பற்றியது. ஒரு குடும்பம் வர்த்தகத்தில் ஈடுபாடு கொண்டது. இன்னொரு குடும்பம் கலை இலக்கிய உலகில் ஈடுபாடு கொண்டது.
ஆயினும் அவர் 45 வயதில் வெளியிட்ட (A PASSAGE TO INDIA) ‘ஏ பேஸேஜ் டு இந்தியா’ இவரை புகழ் ஏணியின் உச்சிக்கு ஏற்றியது .பிரிட்டிஷ் ஆட்சிக்கால இந்தியாவில் ஏற்பட்ட இந்து- முஸ்லீம் மோதல்களையும், ஜாதிப் பிரச்சினைகளையும், வர்க்கப் போராட்டங்களையும் இதில் பயன்படுத்தினார்.
பார்ஸ்டர் வெறும் புதின எழுத்தாளர் மட்டுமல்ல. அவர் பல கட்டுரைகளையும், இலக்கிய விமரிசனங்களையும், சிறு கதைகளையும் எழுதினார்.கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழத்தில் இலக்கியம் பற்றி சொற்பொழிவாற்றிய அவர் இறுதியில் அங்கு ஆசிரியராக அமர்ந்தார்.
பார்ஸ்டரின் ஆரம்பகால நாவல் மோரிஸ் (MAURICE) தற்காலத்தில் பெரிதும் அடிபடும் ஹோமோசெக்ஸுவல் – ஒருபால் புணர்ச்சி – விஷயம் உடையது . இது அவர் இறந்த பின்னர்தான் அச்சாகியது.
பார்ஸ்டர் பிறந்த தேதி – ஜனவரி 1, 1879
இறந்த தேதி – ஜனவரி 7, 1970
வாழ்ந்த காலம் – 91 ஆண்டுகள்
படைப்புகள்
1905 – WHERE ANGELS FEAR TO TREAD
1907 – THE LONGEST JOURNEY
1908 – A ROOM WITH A VIEW
1910 – HOWARD’S END
1911 – THE CELESTIAL OMNIBUS
1922 – ALEXANDRIA : A HISTORY AND A GUIDE
1924 – A PASSAGE TO INDIA
1936 – ABINGER HARVEST
PUBLISHED AFTER HE DIED……
1971 – MAURICE
பார்ஸ்டரின் நாவல்களில் பெரும்பாலானவை திரைப்படக் கதைகளாகவோ, டெலிவிஷன் கதைகளாகவோ பயன்படுத்தப் பட்டுள்ளன.
–SUBHAM–
Tags- பாஸேஜ் டு இந்தியா , ஈ எம் பார்ஸ்டர், E M Forster, A PASSAGE TO INDIA
