
Post No. 9782
Date uploaded in London – –27 JUNE 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
நாம் பின்பற்றும் நூற்றுக் கணக்கான விஷயங்களுக்கு மூலம்/ ஆணிவேர் , உலகின் பழைய நூலான ரிக் வேதத்தில் இருப்பது மிகவும் ஆச்சர்யமாக உள்ளது. அடர்ந்த காடுகள்; பிரம்மாண்டமான நதிகள்; பாலங்கள் கிடையாது. அகஸ்தியர் விந்திய மலையில் ரோடு போடும்வரை சாலைகள் கிடையாது. கடலோரமாகவோ, கப்பல் மூலமாகவோதான் கங்கை நதி வழியாக வட இந்தியாவுக்குள் நுழைய முடியும் ;மின்சாரமும், மொபைல் போனும் இன்டர்நெட்டும் இல்லாத காலத்தில்- குறைந்தது 3500 ஆண்டுகளுக்கு– முன்னர் ஒரே நம்பிக்கை இருந்ததென்றால் அதிசயம்தானே . அதுவும் அப்போது இந்தியாதான் உலகிலேயே பெரிய நாடு!
பெயரிடும் முறையைக் காண்போம் .
மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார், அண்டர் மகன் குறுவழுதி என்பன புறநானூற்றுப் புலவர் பெயரில் உள்ளனர். அதாவது இன்னார் மகன் நான் என்று பெருமையாக செப்புவது பழைய வழக்கம். இதன் மூலம் ஒருவரை அடையாளம் காண்பதும் எளிது. ஏனெனில் பழங்காலத்தில் ஒரே பெயருடன் ஒரு ஊரில் பலர் இருப்பர்!
ஆங்கிலத்தில் மகன் பெயரை தந்தை பெயருடன் ஒட்டிவிடுவார்கள்:-
எ .கா . டேவிட்சன், ஸ்மித்சன்
ஸ்காட்டிஷ், ஐரிஷ் மொழிகளில் முன்னால் ஒட்டிவிடுவர்
எ .கா .
மக் டொனால்ட் = டொனால்ட் மகன்
இந்த ஸ்காட்டிஸ் பெயரில் தமிழ் சொல் மகன் (மேக்) இருப்பதைக் காண்க
ஓ’ ஷானஸ்ஸி = ஷானஸ்ஸி வழிவந்தவன் (தாத்தா பெயர் ஷானஸ்ஸி )
இதிலும் முந்தைய பெயரிலும் மகன், தாத்தா என்பதெல்லாம் தனியாகவோ ஒட்டிக்கொண்டோ இருக்கின்றன . அதுவும் ஐரிஷ் ஸ்காட்டிஷ் பெயர்களில் முன்னால் ஒட்டப்படுகின்றன அல்லது இணைக்கப்படுகின்றன இப்போது தமிழ்ப் பெயரை ஒப்பிடுங்கள்
அண்டர் மகன் குறு வழுதி
மதுரைக் கணக்காயனார் மகன் நக்கீரனார்
பேய் மகள் இள வெயினி
இது ரிக் வேத முறையாகும்.
‘மானா’ வின் மகன் அகஸ்தியன் என்று மந்திரங்களில் வரும் .
குசிக விச்வாமித்ரன் இக்ஷிதரன் மகன் (3-33) என்று காண்கிறோம்.
தமிழ் முறையில் ‘மகன்’ என்பது தனியே வரும்.
இன்னொரு முறையும் சம்ஸ்க்ருதத்தில் உண்டு. தசரதன் மகன் தாசரதி , ஜனகன் மகள் ஜானகி, பாண்டு புதல்வன் பாண்டவன் என்றும் வரும். அந்த அமைப்பு வேறு எந்த மொழியிலும் இல்லை.
ஆனால் தமிழுக்கும் ஸம்ஸ்க்ருதத்தும் மற்றுமுள்ள ஒற்றுமை மகன் என்பதை பிரித்துச் சொல்வதாகும்.
XXX
மநு மர்மம்
தமிழில் மநு நீந்திச் சோழன் கதையை எல்லோரும் அறிவர். இந்த மநு பற்றியும் புராணத்தில் வரும் பிரளய கால மநு பற்றியும் பலரும் அறிவோம். ரிக் வேதத்தில் மனு பற்றி பல மண்டலங்களில் வருகிறது. இவர் எந்த மநு ? எத்தனையாவது மனு? இவருக்கும் நீதி நூலுக்கும் சம்பந்தம் உண்டா? இவருக்கும் பிரளயா காலத்தில் உயிரிங்களைக் கப்பலில் ஏற்றிக் காப்பாற்றிய மநுவுக்கும் தொடர்பு உண்டா? அல்லது தற்கால மன்வந்தரத்தின் அதிபதி வைவஸ்வத மனுவா என்றெல்லாம் தெரியவில்லை. யாரும் இது பற்றி பிரஸ்தாபிப்பதும் இல்லை.
எந்தத் துறை எடுத்தாலும் அதில் ரிக் வேதமே வழிகாட்டியாக இருக்கிறது. இந்தியா தவிர மற்ற கலாசாரங்களில் 4 பருவங்கள் தான் உண்டு. ரிக் வேதத்திலும் சங்கத் தமிழ் நூல்களிலும் மட்டும் 6 பருவங்கள் இருக்கின்றன. இதை விட நமக்கு வேறு என்ன சான்று தேவை? இமயம் முதல் குமரி வரை ஒரே கலா சாரம் அதுவும் கைபர் கணவாய் வழியாக வந்ததல்ல ; மண்ணின் மைந்தர்கள் தோற்றுவித்ததே அது .
கர்நாடக சங்கீதத்தி ல் கடைசியில் பெயரைச் சொல்லி முத்திரை வைப்பதை திருஞான சம்பந்தர்தான் சொல்லிக் கொடுத்தார் என்று நினைத்தேன். சமப்ந்தருக்குப் பின்னர் ஜெயதேவர் அஷ்டபதியில் அவருடைய பெயர் ஒவ்வொரு பாடலிலும் முத்திரையாக வருகிறது. பின்னர் புரந்தரதாசர், தியாகராஜர் பாடல்களிலும் பாடியோர் பெயர்களைக் காண்கிறோம். இதுவும் ரிக் வேத மந்திரத்தில் துவங்கியதே. பல்லவி அனுபல்லவி, ஒவ்வொரு பாட்டின் முடிவிலும் அதே வரிகள் ஆகிய எல்லாவற்றையும் ரிக் வேதத்தில் காணும் போது வியப்பு மேலிடுகிறது.
உவமைகளில், நண்பர்கள் பற்றிய உவமைகள் வேறு எந்த நாட்டு இலக்கியத்திலாவது இந்த அளவுக்கு இருக்குமா என்பது ஐயப்பாடே. பெற்றோர்கள், மனைவிமார்கள் உவமைகளும் அன்பின் இலக்கணமாக உவமிக்கப்படுகின்றன .
உலகின் மிகப் பழைய கவிதைத் தொகுப்பு, வரலாற்று நூல், வாய் மொழி இலக்கியம் என்ற பெருமையுடன் மேற்கூ றியனவும்சேரும்போது ரிக் வேதத்தின் சிறப்பு அதிகரிக்கிறது.


-SUBHAM—
TAGS – பெயரிடும் முறை, ரிக்வேதம் மக்டொனால்ட்