


Post No. 9888
Date uploaded in London –24 JULY 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
பிரெஞ்ச் மொழியில் விஞ்ஞான கற்பனைக் கதைகளை எழுதிப் புகழ் பெற்றவர் ஜுல்ஸ் வெர்ன் (JULES VERNE) . இவர்தான் முதலில் துணிகரச் செயல்கள் அடங்கிய அறிவியல் புனைக் கதைகளை எழுதினார். இவருக்குப் பின்னர் எச்.ஜி. வெல்ஸ் , ஆர்தர் கிளார்க், ஐசக் அஸிமோவ் ஆகியோரும் எழுதினர்.
ஜுல்ஸ் வெர்ன் , மேற்கு பிரான்சில் நான்டேஸ் (NANTES) துறைமுக நகரில் பிறந்தார். அவருடைய தந்தை ஒரு வழக்கறிஞர். இவரும் பாரிஸ் நகரில் சட்டம் பயிலச் சென்றார். அங்கே அவருடைய மாமா, ஜுல்ஸ் வெர்னை எழுத்தாளர் பலருக்கு அறிமுகம் செய்துவைத்தார். அவர்களில் ஒருவர் புகழ் பெற்ற ஆசிரியர் அலெக்ஸ்சாண்டர் டூமா ஆவார்.
படிக்கும் காலத்திலேயே ஜுல்ஸ் வெர்ன் நாடகங்களை எழுதத் துவங்கினார் . சட்டப் படிப்பிலும் தேறினார். அவருக்கு 22 வயதாகும்போதே அவருடைய ப்ரோக்கன் ஸ்ட்ரா (Broken Straw) என்னும் நாடகம் பாரிஸில் மேடை ஏறியது. பின்னர் அவருடைய சிறுகதைகளும் வெளியாகின.
28 வயதில் ஜுல்ஸ் வெர்ன், ஒரு இளம் வயது விதவையை மணந்து 2 குழந்தைகளைப் பராமரிக்கும் பொறுப்பேற்றார் . வாழ்க்கையை நடத்துவற்குத் தேவையான பொருள் ஈட்டுவதற்காக ஸ்டாக் ப்ரோக்கர் (Stock Broker) ஆனார் (பங்குச் சந்தை ). 35 வயதில் அவருடைய முதல் நாவல் வெளியானது. ‘பலூனில் ஐந்து வாரம்’ என்பது அதன் பெயர். அடுத்த ஆண்டிலேயே ‘பூமி உருண்டையின் மையத்துக்குப் பயணமாதல்’ என்ற நூலை வெளியிட்டார். ஸ்டாக் ப்ரோக்கரை விட இந்தப் பணியில் நிறைய பணம் கிடைக்கும் என்று கருதி முழுநேரமும் எழுத்துப் பணியில் இறங்கினார்.
வினோதமான எந்திரங்களில் விசித்திரமான சாகசப் பயணங்களை மேற்கொள்ளும் புதினங்களை இவர் எழுதியது பிற்காலத்தில் எச். ஜி. வெல்ஸ் போன்ற ஆங்கில நாவலாசிரியர்களுக்கு புதிய ‘ஐடியா’க்களைக் கொடுத்தது 19ஆம் நூற்றாண்டில் விமானம் முதலியன கண்டுபிடிக்கப்பட்ட தருணத்தில் இவருடைய புதினம் வெளியானது . அந்தக் காலத்தில் எவரும் அறியாத விண்வெளிக்கலம் (Spacecraft) முதலியனவும் இவரது நாவல்களில் பவனி வந்தன. ‘கடலுக்கடியில் 20000 லீக் ஆழத்தில்’ என்ற நாவலும் எண்பதே ‘நாட்களில் உலக வலம்’ என்ற நாவலும் இவருக்கு மிகவும் புகழைக் கொடுத்தன. இவை சினிமாக்களாகவும் (திரைப்படம்) உருவெடுத்தன. அவற்றில் வரும் நீர்மூழ்கிக் கப்பல் கேப்டன் நீமோ , பிலியாஸ் ஃபாக் என்ற கதா பாத்திரங்கள் உலகறிந்த மனிதர்களாக ஆயினர்.



பிறந்த தேதி – பிப்ரவரி 8, 1828
இறந்த தேதி – மார்ச் 24, 1905
வாழ்ந்த ஆண்டுகள் – 77
PUBICATIONS எழுதிய கதைகள்
1863- FIVE WEEKS IN A BALLOON
1864- A JOUNEY TO THE CENTRE OF THE EARTH
1865- FROM THE EARTH TO THE MOON
1870- TWENTY THOUSAND LEAGUES UNDER THE SEA
1873 – AROUND THE WORLD IN 80 DAYS
1904- THE MASTER OF THE WORLD
PUBLISHED AFTER HE DIED
1994- PARIS IN THE 20TH CENTURY.
–SUBHAM–





tags- ஜுல்ஸ் வெர்ன் , Jules Verne,