ஸ்ரீ சமர்த்த ராமதாஸ் – 2 (Post No.9877)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9877

Date uploaded in London – 21 JULY   2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஸ்ரீ சமர்த்த ராமதாஸ் – 2

லண்டனிலிருந்து திங்கள் தோறும் இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் ஞானமயம் நிகழ்ச்சியில் 19-7-2021 அன்று ஒளிபரப்பான உரை!

அவர் ஆங்காங்கு நிகழ்த்திய அற்புதங்கள் ஏராளம்.

கண்பார்வையற்ற ஒருவனுக்கு கண் பார்வையை அருளினார் ராமதாஸர். கிணற்றில் விழுந்த ஒருவனை உயிர் போகாமல் உயிர்ப்பித்தார். ஒரு சுமங்கலிப் பெண் தன் கணவனை இழந்து அழ, உனக்கு ஒரு மகன் பிறப்பான் என்று அருளினார் சமர்த்தர். அவளது கணவனை சுடுகாட்டிற்குக் கொண்டு சென்றிருந்தனர். அங்கு அவனை ராம நாமம் சொல்லி உயிர்ப்பித்தார். அவர் அருளியபடியே அந்தப் பெண்ணுக்கு ஒரு மகன் பிறந்தான். உத்தவன் என்று பெயரிட்டப்பட்ட அந்த மகனே பின்னால் ராமதாஸரின் சீடராக ஆனார்.

ராமதாஸருக்குச் சீடர்கள் பெருகினர். உத்தவ் ஸ்வாமி, கல்யாண் ஸ்வாமி, வெண்ணா ஸ்வாமி, திவாகர் ஸ்வாமி, ஆசார்ய கோபால்தாஸ் உள்ளிட்ட பலரும் இவர்களுள் குறிப்பிடத் தகுந்தவர்கள்.

ராமதாஸர் விட்டலனைப் போற்றும் ஏராளமான அபங்கங்களை இயற்றினார். தஞ்சாவூரில் அவர் இருந்த போது அபங்கங்களை கர்நாடக இசையில் பாட அவர் ஊக்குவித்தார். அதன் பயனாக இன்றும் அபங்கங்கள் ஹிந்துஸ்தானி இசையில் கேட்பதோடு கர்நாடக இசையிலும் நாம் கேட்க முடிகிறது. பல ஆன்மீக நூல்களையும் அவர் இயற்றி அருளியுள்ளார். அவரது தாஸபோதம் பிரசித்தி பெற்ற ஒரு நூலாகும். தாஸ் என்றால் சீடன்; போதம் என்றால் உபதேசம். சீடருக்கு உபதேசமாக அமையும் இந்த நூல் மராத்தி மொழியில் உரைநடை நூலாக அமைகிறது. 1654ஆம் ஆண்டு அவர் இதை இயற்றினார். இதில் பக்தி மார்க்கத்தைப் பற்றி அவர் விரிவாகக் குறிப்பிடுகிறார். 20 அத்தியாயங்களில் 7751 உரைநடைப் பகுதிகளை இது கொண்டுள்ளது. வேதங்கள், உபநிடதங்கள், பகவத்கீதை, சாஸ்திரங்கள், பிரம்மசூத்ரம் உள்ளிட்ட அனைத்து புண்ய நூல்களின் சாரமாக இது திகழ்கிறது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி,சிந்தி, கன்னடம் உள்ளிட்ட இந்திய மொழிகள் அனைத்திலும் மொழிபெயர்க்கப்பட்டஇந்த நூல் இப்போது ஆங்கிலத்திலும், ஜெர்மானிய மொழி உள்ளிட்ட பல மொழிகளிலும் படிக்கக் கிடைக்கிறது.

ராமதாஸரின் ஆரத்திகளுள் கணேச ஆரத்தி குறிப்பிடத்தகுந்த ஒன்றாக அமைவதோடு இன்று அனைவராலும் ஆரத்தியின் போது பாடப்பட்டு வருகிறது. சுககர்த்த துகஹர்த்த ஸ்லோகம் என்று இதன் பெருமை கூறப்படுவதால் இது சுகத்தைத் தரும்; துக்கத்தை அகற்றும் என்பது உறுதியாகிறது. மனாசே ஸ்லோகம் என்ற அரிய நூல்  205 ஸ்லோகங்களைக் கொண்டுள்ளது. இதை அவர் சீடரான கல்யாண் ஸ்வாமியுடன் சேர்ந்து இயற்றினார். அவரது ஸ்ரீமாருதி ஸ்தோத்ரம் புகழ் பெற்ற ஆஞ்சநேய ஸ்தோத்ரம் ஆகும். அதை ஓதுவதால் ஏற்படும் அபார பலன்களை அந்த ஸ்தோத்ரத்தின் இறுதியில் காணலாம். இன்னும் ஆத்மா ராம், 11 லகு கவிதா, ஷத்ரிபு நிரூபண், மானபஞ்சகம், சதுர்த்தமான், பீம ரூபி ஸ்தோத்ரம் உள்ளிட்டவை குறிப்பிடத் தகுந்தவையாகும். ராமாயணத்திற்கு அவர் மராத்தியில் டீகா எனப்படும் விளக்கஉரை வேறு அருளியுள்ளார்.

சிறந்த ஆன்மீகப் பெரியாராகவும் அரசியலில் ஹிந்து சாம்ராஜ்யத்தை நிறுவ வழி வகுத்ததோடு அந்நிய முகலாரின் ஆக்கிரமிப்பிற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தவராகவும் இருந்த அவர் சமூக சீர்திருத்தவாதியாகவும் விளங்கினார். பக்தி மார்க்கத்தில் ஜாதி பேதம் கிடையாது என்பதை அவர் வலியுறுத்தியதோடு பெண்களுக்கு சமூகத்தில் உரிய அந்தஸ்தை வழங்க வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார். ‘பெண்களின் கர்ப்பத்திலிருந்தே ஒவ்வொருவனும் உருவாகிறான். இந்த முக்கியத்துவத்தை அறியாதவனை மனிதன் என்று எப்படிக் கூற முடியும்’ என்கிறார் அவர்.

அவரது தாக்கம் இந்திய சுதந்திரப் போராட்டத்திலும் ஹிந்து எழுச்சியிலும் இருந்ததை சமீபத்திய வரலாறு சுட்டிக் காட்டுகிறது. பாலகங்காதர திலகர் அவரிடமிருந்தே சுதந்திரம் எனது பிறப்புரிமை என்பதைச் சொல்வதற்கான உத்வேகம் பெற்றார்.

ஹிந்துக்கள் அனைவரையும் ஓரிழையில் இணைக்கும் ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்கத்தை 1925ஆம் ஆண்டு விஜயதசமி அன்று ஸ்தாபித்த பரமபூஜனீய டாக்டர் ஸ்ரீ கேசவபலிராம் ஹெட்கேவார் ராமதாஸரது பல உரைகளையும் பாடல்களையும் தனது டயரியில் எழுதும் பழக்கம் உடையவர். ஹிந்து எழுச்சிக்கு அவர் சமர்த்த ராமதாஸரிடமிருந்தே உத்வேகம் பெற்றார்.

இறுதியாக சமர்த்த ராமதாஸர் தனது இறுதி நாட்களை சதாரா மாவட்டத்தில் உள்ள சஜ்ஜன் காட்டில்,தஞ்சாவூரிலிருந்து கொண்டுவரப்பட்ட விக்ரஹத்தில் அருகில் இருந்தவாறே, ஸ்ரீராம் ஜயராம் ஜய் ஜய் ராம் என்று ராமநாமத்தை ஜபித்தவாறே கழித்தார். கடைசி ஐந்து நாட்களில் அவர் நீர் அருந்துவதையும் நிறுத்தி விட்டார். 1681ஆம் ஆண்டு தனது 73ஆம் வயதில் ராமனுடன் ஒன்றினார். உத்தவ் ஸ்வாமி அவருக்கான இறுதி மரியாதைகளைச் செய்தார். பின்னால் மராட்டிய சாம்ராஜ்யத்தை ஆண்ட சாம்பாஜி போன்ஸ்லே அவருக்கு ஒரு சமாதியைக் கட்டினார்.

இறுதியாக அவரது மனாசே ஸ்லோக அருளுரைகளில் ஐந்துடன் இந்த  உரையை முடிப்போம் :

2வது ஸ்லோகம்:

நேர்மையும் பக்தியும் நிறைந்த பாதையைக் கடைப்பிடிப்போம். இந்தப் பாதை நம்மை ஸ்ரீ ஹரிக்கு இட்டுச் செல்லும். விலக்கப்பட்ட அனைத்தையும் தவிர்ப்போம்; போற்றப்படும் அனைத்தையும் முழு மனதுடனும் பக்தியுடனும் செய்வோம்.

ஸ்லோகம் 3
ஒவ்வொரு நாள் காலையும் ஸ்ரீ ராமரைத் துதிப்போம்.. ஸ்ரீ ராம் என்று சொல்லி நமது வேலையைத் தொடங்குவோம். நல் நடத்தையை எப்போதும் கடைப்பிடிப்போம். நற்செயல்களைச் செய்பவனையே இந்த உலகம் போற்றும்.

ஸ்லோகம் 186

ஸ்ரீ ராமர் எப்போதும் நம்முடன் இருக்கிறார். நாம் ஸத்தியத்தைக் காண்போமாக.எப்போதும் ஸ்ரீ ராமருடன் நாம் இணைவோமாக. ஸ்ரீ ராமரிடமிருந்து நம்மைப் பிரிக்கும் அஹங்காரத்தை வெறுத்து ஒதுக்குவோமாக.

ஸ்லோகம் 204

ஸத்ஸங்கம் உலகப் பற்றைத் துறக்க காரணமாக அமையும். ஸத்ஸங்கமே முக்திக்கு வழி வகுக்கும்.

இறுதியான 205வது ஸ்லோகம்

 மனதிற்காக நல்ல கீதங்களைக் கேட்டு மனதிலிருந்து அழுக்கை அகற்றுவோம். நமது மந்தமான பிரக்ஞையை விழிப்புணர்வுள்ள ஒன்றாக மாற்றுவோம்.ஞானத்தைப் பெறுவோம். உலகப் பற்றைத் துறப்போம். மனதிற்காக நல்ல பாடல்களைக் கேட்டு மனதைச் செம்மைப் படுத்துவோம். முக்தியைப் பெற ராஜமார்க்கத்தைக் கடைப்பிடிப்போம்.

சமர்த்த ராமதா கீ ஜெய்!

ஸ்ரீ ராம் ஜய ராம் ஜய ஜய ராம்!நன்றி வணக்கம்!

வெல்க பாரதம்! ஜெய்ஹிந்த்!!

****

tags சமர்த்த ராமதாஸ்-2

“அன்னையின் உருவில் இறைவனைக் காண்போம்!” (9876)

WRITTEN BY B.KANNAN, DELHI

Post No. 9876

Date uploaded in London –20 JULY   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

லண்டனிலிருந்து திங்கள் தோறும் இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் ஞானமயம் நிகழ்ச்சியில் 19-7-2021 அன்று ஒளிபரப்பான உரை!

பா.கண்ணன், புது தில்லி

“அன்னையின் உருவில் இறைவனைக் காண்போம்!”

சமீபத்தில் ஶ்ரீநாகராஜன் அவர்கள் ஒரு வலைப்பதிவில் “கடவுள் எங்கே?” என்ற தலைப்பில் ஒரு கட்டுரைப் பதிவிட்டிருந்தார். அதில் அவர், கடலில் உப்பு பரவியிருப்பது போல, கடவுள் இந்தப் பிரபஞ்சம்
முழுவதும் நிரம்பி இருக்கிறான். எப்படி விதைக்குள் மரமானது ஒளிந்திருக்கிறதோ, அதே போல் ஒவ்வொருவரிடமும் பரமன் மறைந்திருக்கிறான் எனக் குறிப்பிடிருந்தார். அதைப் படித்த போது சிலஆண்டுகளுக்கு முன்பு கன்னிமேரா பொதுநூலகத்தில் 

இ ருந்து படிக்க எடுத்து வந்த “YOUR SACRED SELF”என்ற நிர்வாகம்-மேலாண்மையைப் போதிப்பதுடன் ஆன்மிகப் புரிதலையும் விளக்கும் புத்தகம் தான் நினைவுக்கு வந்தது. அதைப் பற்றிதான் இப்போது பார்க்கப் போகிறோம்.

டாக்டர் வேய்ன் வால்டர் டையர் (Dr. Wayne W. Dyer,1940-2015) ஓர் அமெரிக்க தத்துவ ஞானி, வேதாந்தி, சுய சிந்தனை, சுய முன்னேற் றத்தை ஊக்குவிக்கும் விரிவுரையாளர், வாழ்வில் வெற்றிபெறஉதவும் வழிமுறைகளைப் போதிப்பவர். அத்துவைத சித்தாந்தத்தில் ஈடுபாடு கொண்டவர். லிங்காயத் சைவ மரபைச் சார்ந்த மராத்திய தத்துவ மேதை மாருதி ஷிவராம்பந்த் காம்லி எனும் பூர்வாஸ்ரமப் பெயர் கொண்ட ஸ்ரீநிசர்கதத்தா மகராஜைத் தன் ஆதர்ச ஆசானாக ஏற்றுக் கொண்டவர். ‘நீங்கள் இறைவனைப் போற்றி, அவருக்குச் சேவையாற்றுபவராக இருக்கலாம் அல்லது, தற்பெருமை, சுய நலத்துக்கு அடிமையாகி, அதன்பிணைக் கைதியாகவும் மாறி விடலாம். எல்லாமே உங்கள் கையில் தான் உள்ளது!’ என்று மகராஜ் அடிக்கடி கூறுவார். தன் ஆசானின் அருளால் ஆன்மிக விஷயத்தில் ஈடுபாடு கொண்டு சில புத்தகங்களும் எழுதியுள்ளார்.‘நிதர்சன மாயாஜாலம்’ (REAL MAGIC), உயர்மட்ட இறையுணர்வு நிலையை விவரிக்கும் ‘உன் தூய உள்ளம்’ (YOUR SACRED SELF), ஆகிய அவரது இருபுத்தகங்களும் ஆன்மிக விஷயத்தில் மிக முக்கிய இடத்தைப் பிடித்துள்ளன. இரண்டாவதில், முன்னுரையில் அவர் கையாளும் ஓர் உருவகக் கதையின் மூலம், பக்த பிரகலாதனின் ‘தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான்!’என்ற வாதமும், தாயின் கருப்பையில் இருந்தவாறே அபிமன்யு கற்றறிந்தப் போர்க்கள ஞானமும், பஞ்சபூதங்களில் உறைந்திருக்கும் இறைவனைப் பூடகமாக உணர்த்தும் தாயின் கருப்பையும் எவ்வளவு உண்மை என்பதை அறிய முடிகிறது! இதோ அதன் சுருக்கம்……

ஒரு தாயின் கருவில் முழுவளர்ச்சி அடைந்த இரட்டைச் சிசுக்கள்(IDENTICAL TWINS) இருந்தன.கூடிய விரைவில் பிரசவம் ஆகிவிடலாம் என்ற நிலை. அச்சமயம் அவையிரண்டும் தங்களுக்குள் ‘மானசீகமாக’ப் பேசிக்கொண்டன.

“நாம் பிறந்த பிறகு நமக்கு நடக்கப் போகும் விஷயங்களில் உனக்கு நம்பிக்கை இருக்கிறதா?” என்று கேட்டது முதல் சிசு. எதிர்மறை சிந்தனை உடையது, போலும்! அதாவது  நாத்திகவாத எண்ணம் கொண்டது!

“நிறையவே இருக்கு! ஏதாவது நிச்சயம் நடக்கும். அதை எதிர்கொள்ள வேண்டியத் தயார் நிலைக்கு நாம் இருக்கும் இச்சூழலே கொண்டுச் செல்லக் கூடும், அல்லவா?” என்றது இரண்டாவது சிசு. இது நேர்மறை (அதாவது ஆத்திகவாத)எண்ணம் கொண்டது, போலும்!

“அசடு, அசடு! பிறப்புக்குப் பின் வாழ்வு என்பதே கிடையாது. அப்படியே இருந்தாலும் அது எப்படிப்பட்டதாக இருக்கும்?”

“அவ்வளவாகத் தெரியாது! ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம், இங்கிருப்பதை விட அங்கு ஒலியும், வெளிச்சமும் அதிகமிருக்கலாம். இதோ நம் கால்களால் நடக்கலாம், வாயினால் சாப்பிடலாம். வேறு ஏதாவது புலன்களால் ஆட்டுவிக்கப்படலாம். இப்போதே அதைத் தெரிந்துக் கொள்ள முடியாதே!”

“ஹோ,ஹோ! சுருண்டு, முடங்கிக் கிடக்கும் நாம் நடப்பதா, அடி முட்டாள்தனம்! வாயால் சாப்பிடுவதா, நல்ல வேடிக்கை, கேலிக்கூத்து! இந்தத் தொப்புள்கொடி தான் நமக்கு எல்லாவற் றையும் தருகிறதே? ஆனால் அது சிறியதாக இருப்பது தான் சங்கடம். பிறப்புக்குப் பின் அதால் என்ன உபயோகம் இருக்கப் போகிறது? உயிரில்லா நிலையே நிலவும் என்பதே உண்மை!”

“இல்லை,அப்பனே! என் மனதில் வேறு மாதிரி தோன்றுகிறது. அங்கு நிலைமையே வேறு மாதிரி இருக்கலாமே! இந்தத் தொப்புள்கொடிக்கே அவசியம் இல்லாமல் போகலாம், அல்லவா?”

“நிறுத்து, நிறுத்து! பிறப்புக்குப் பின் வாழ்வு உண்டென்றால், ஏன் யாரும் இங்குத் திரும்பி வரவேயில்லை? என்னைப் பொறுத்த வரை பிறப்பு என்பது உயிரின் முடிவு. பிறப்புக்குப் பின்னால் நாம் உணரப் போவது ஒரே அந்தகாரம், ஆழ்ந்த மௌனம் மற்றும் ஒருவித மயக்க நிலையே நிறைந்திருக்கும். வேறு வழி ஒன்றும் புலப்படாது!”

“எனக்கும் புரியவில்லைதான்! ஆனால் நம்மைப் பராமரிக்கப் போகும் ஒரு புனித நபரைச்  சந்திப்போம் என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை! அந்த நபர்  நம்மைப் பேணி, பாதுகாப்பார் என்பதும் உறுதி!”

“அப்படி ஒருவர் இருப்பாரா, என்ன, எனக்கு நம்பிக்கை இல்லை!”

“நிச்சயம் இருப்பார். ஏன், நம்மை வெளியுலகத்துக்கு அறிமுகப் படுத்தப் போகும் இந்த ‘அறை’ யின் சொந்தக்காரராகவும், ‘அன்னை’ யாகவும் ஒரு பொருப்புள்ள ‘அம்மா’ வாக இருக்கலாமே!”

“உன் பேச்சைக் கேட்டால் சிரிப்புதான் வருகிறது. ‘அம்மா’, ‘அன்னை’ என்று சொல்கிறாயே, அப்படி ஒருவள் உண்டா? நீ நம்புகிறாயா? அப்படி இருப்பாளேயானால் இப்போது அவள்எங்கே?”

“நம்மைச் சுற்றி அவள் வியாபித்து இருக்கிறாள். அவளுள் கட்டுண்டுக் கிடக்கிறோம். நம் ஒவ் வொரு அசைவும் அவள் விருப்பப்படியே நடக்கிறது. அவளுடைய ஓர் அங்கம் நாம்.அவளின்றி ஓர் அணுவும் அசையாது,அப்பனே!”

“சுத்த அபத்தம்! என்னால் அவளைப் பார்க்க முடியவில்லையே? ஆகையால், தருக்கப்படி ‘அன்னை’  என்ற அவள் இல்லவே, இல்லை என்பதே சரி!”

“நிதானமாக யோசித்துப் பார்! எந்த இடையூறுமின்றி மனதை ஒருமுனைப் படுத்தி, மோன நிலையில் தியானம் செய். அவள் உன்னைச் சுற்றி இருப்பதை உணருவாய். அங்கிருந்து எழும் இனம்புரியாத ஒலி உன் மனதில் பரவும். எங்கிருந்தோ அவள் அன்புடன் பேசுவதையும், பிறருடன்  உரையாடுவதையும் உற்றுக் கேட்டுப் பரவசமடைவாய்!”

“………………………………………………….!”

“என்ன, பேச்சே எழும்பவில்லை? யோசிக்கிறாயா, யோசி, யோசி!” என்றது இரண்டாம் சிசு. முதல் சிசு மேலும் யோசிக்க ஆரம்பிக்கையில் பிரசவம் நேர ஆரம்பித்துவிட்டது….!

அன்பர்களே, நாமும் யோசித்துப் பார்ப்போம். அந்தத் தாய் நமக்கு அளித்துள்ளப் புகலிடம்  கருப்பை (பூமி), மேற்கூறை வேய்ந்து (ஆகாயம்) பாதுகாப்பாக வைத்துள்ளாள், அவள் கொடுத்துள்ளத் தொப்புள்கொடியே நம் உயிர் மூச்சு ( வாயு ), நம்மைச் சுற்றி இருக்கும் சவ்வுத் திரவம் —பனிக்குடம்),(நீர்) சீரான வெப்பநிலையை ( அக்னி ) நமக்குத் தந்துக் காக்கிறது. இவையெல்லாமே அந்தப் பரம்பொருள், கருணையே வடிவான
அன்னை நம்மீது காட்டியுள்ள அருட்செயல், அளப்பறியக் கருணை. அப்படிப்பட்டவள் பிறப்புக்குப் பின்பும் நம்மை உணர்வுகளுக்கு அப்பாலிருந்துக் காத்தருளுவாள் என்பதில் சிறிதளவும் ஐயமேயில்லை! இன்னும் யோசிக்கிறீர்களா, யோசியுங்கள், விடாமல் யோசியுங்கள்! நீங்களே புரிந்துகொள்வீர்கள்!

அன்னை,பகவான்,இறைவன் என்ற பல்வேறு சொற்களுக்கு வேறு என்ன விளக்கம் வேண்டும்?!

நன்றி, வணக்கம்.

வாழ்க பாரதம். ஜெய் ஹிந்த்!

tags- அன்னை, இறைவன்

Interesting titbits about Natyashastra of Bharata Muni (Post No.9875)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9875

Date uploaded in London –20 JULY   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Natya shastra Date – 500 BCE

Chapters in Bharata’s Book- 36

No. of Slokas/couplets – 6000

Language- Sanskrit

Author – Bharata Muni

Natya sastra of Bharata is known to be an encyclopaedic source for the reconstruction of Indian social and cultural history. It is not adequately used so far. Some scholars have dealt with dramaturgy and some others have dealt with dance or music elements in the book. But no one has treated his work as a whole.

The Natya sastra (NS) deals with theatre in the most comprehensive manner. It is not simply an elaborate treatise on dramaturgy, but most authoritative and surviving treatise on histrionics, dance and music. One of the famous commentators Abhinavagupta called it Bharata sutram. The work is also called Satasaahasri. According to Bahurupa Misra the original work had 12000 Slokas. Later Bharata summarised it in 6000 Slokas. The earlier work is lost .

According to tradition there are three stages in the development of the NS.

An original work called Gandharva Veda with 36,000 Slokas is attributed to Brahma;

a later work of 12000 verses , apparently in the form of dialogue between Siva and Parvati.

And the third one came from Bharata. But the first two works are lost.

Bharata means actor or Nata. NS may be a work of many hands. But Abhinvagupta confirmed that it is the work of Bharata. Bharata composed NS using the practices that existed among the actors and producers. That way one can say Bharata compiled all the materials available during his time and a long tradition existed before him. Because of this long tradition NS also is dated between 500 BCE and 300 CE.

Hindus always update their works to include the modern practices. So foreigners looked at the latest update and gave wrong dates. Like we amend our constitution through parliament resolutions  they also did it after scholarly discussion in the assembly. We have to look at the oldest material in any work and take that date as the date of the work.

Since there was a great intellectual revolution in the second century BCE,1000s of works are dated around that time. But it would not be possible to get that sort of intellectual development within that short time. Foreigners gave different dates to different works. And they are proved wrong by their own compatriots.

NS has 36 chapters. The first and the last chapters give interesting information about the dance drama. Bharata says drama began in the Treta Yuga and did not exist in the Krta Yuga. While creating it Brahma used elements from the Vedas. Like Mahabharata, NS also is described as the Fifth Veda. Like Mahabharata, NS also claim all that is in the world is inside NS. What is not found in NS,is not found anywhere else.

Abhinavagupta gives us very important information to show dramas were enacted during the Mauryan rule. He says Mahakavi Subandhu wrote Vasavadatta natyadhara. It was a play within a play. Bindusara watched it. In the drama itself Udayana was watching a drama with Vasavadatta.

NS mentioned several scholars. First we come across mythical characters like Brahma and Sadasiva. Then we come across Nandi, Kohala, Vatsya, Sandilya and Dhurtila..

Bharta use highly technical language of the performing arts. It is very difficult to understand it. A number of ancient scholars wrote commentaries on the NS. They are:-

Bhattodbhatta

Lollata

Matrugupta

Sankuka

Bhattanayaka

Bhatta yantra and

Abhinavagupta

Unfortunately, except for the last, all the earlier commentaries have been lost.

Abhinavagupta quotes occasionally the views of earlier commentators.

He belongs to Kashmir and he lived in the tenth century CE. He was a well known mystic, philosopher and a versatile scholar. His explanations constitute the most valuable key to the unlocking of the NS, especially of its sections dealing with music and aesthetics.

The sculptures of Sunga, Satavahana,  Saka and Kushana periods provide us lot of information regarding the music,dance, musical instruments, ornaments and dress of ancient India.

Compiled from two books on NS.

–subham—

TAGS – Interesting, titbits,, Natyashastra, Bharata Muni

ஆங்கில கட்டுரையாளர், கவிஞர் சார்ல்ஸ் லாம் (Post No.9874)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9874

Date uploaded in London –20 JULY   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஆங்கில மொழியில் கட்டுரைகள் எழுதிப் புகழ்  அடைந்தவர் சார்ல்ஸ் லாம் CHARLES LAMB . 200 ஆண்டுகளுக்கு முன்னர் அவர் எழுதிய கட்டுரைகள் இன்றும் பெரிதும் விரும்பிப் படிக்கப்படுகின்றன.

லாம் , லண்டனில் பிறந்தார். க்ரைஸ்ட் ஹாஸ்பிடல் (Christ Hospital) என்ற பள்ளியில் படித்தார். அங்குதான் அவர் பிற்காலத்தில் கவிஞ ராகப் புகழ் எய்திய சாமுவேல் கோல்ரிட்ஜை  (SAMUEL TAYLOR COLERIDGE ) சந்தித்தார். பள்ளிப் பருவத்தில் ஏற்பட்ட தொடர்பு வாழ்நாள் இறுதி வரை தொடர்ந்தது. நட்பின் இலக்கணமாகத் திகழ்ந்தனர் இருவரும்.

14 வயதில் பள்ளிப் படிப்பை விட்டு வெளியேறிய சார்ல்ஸ் லாம், கிழக்கு இந்தியக் கம்பெனியில் (EAST INDIA COMPANY)  குமாஸ்தாவாக (எழுத்தர்) சேர்ந்தார். 50 வயது வரை அங்கு வேலை பார்த்தார்.

21 வயதானபோது கோல்ரிட்ஜ், அவரை எழுதும்படி தூண்டினார். பல்வேறு விஷயங்கள் குறித்த கவிதைகள் (POEMS ON VARIOUS SUBJECTS ) என்ற தலைப்புள்ள அந்தப் புஸ்தகம்தான்  லாமுக்கு இலக்கிய நுழை வாயிலாக அமைந்தது.

1796ம் ஆண்டில் நடந்த ஒரு துயர சம்பவம் லாமின் வாழ்க்கையை மாற்றியது. லாமின் பெரிய சகோதரி பெயர் மேரி . அவர்தான் லாமுக்கு மிக நெருக்கமானவர். மேரிக்கு மன நோய் உண்டு. ஒருநாள் அவர் வெறிபிடித்து தனது தாயாரையே கொன்றுவிட்டார். தாயாரை இழந்தபோதும் மேரியைத்  தான் கவனித்துக் கொள்வதாக லாம் சொன்னதால் நீதிபதிகளும் மன நோய் பீடித்த மேரியை விடுதலை செய்தனர் . மேரியின் மன நோய் நீடிக்கவில்லை.

மேரியை வாழ்நாள் முழுதும் பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பை ஏற்ற போதும் அவரது எழுத்துப்பணி தொடர்ந்தது.

அவர் அக்காலத்தில் விரும்பிப் படிக்கப்பட்ட பல பத்திரிக்கைகளுக்கு கட்டுரை எழுதினார். சிறுவர் சிறுமியருக்காக ஷேக்ஸ்பியர் நாடகக் கதைகளை எழுதுமாறு வேண்டுகோள் வந்தவுடன் சகோதரி மேரியுடன் சேர்ந்து ஷேக்ஸ்பியர் கதைத் தொகுப்பை வெளியிட்டார். இது 32 வயதில் நடந்தது. இதன் நடை எல்லோரையும் ஈர்த்ததால் இன்றுவரை மீண்டும் மீண்டும் அச்சாகி வருகிறது  சகோதரி மேரியுடன் சேர்ந்து மேலும் பல கதைகளை சிறுவர்களுக்காக எழுதினார்.

இதில் சிறுவர் சிறுமியர்க்கான கவிதைகளும் அடக்கம்.

லாம், பத்திரிகைகளில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு எலியாவின் கட்டுரைகள் ESSAYS OF ELIA என்ற தலைப்பில் 2 தொகுதிகளாக வெளிவந்தது. இது 48 வயதில் நடந்தது. இதற்குப் பத்து ஆண்டுகளுக்குப் பின்னர் எலியாவின் கடைசி கட்டுரைகள் THE LAST ESSAYS OF ELIA  என்ற தலைப்பில் மேலும் ஒரு நூலையும் வெளியிட்டார்.

சார்ல்ஸ் லாம்

பிறந்த தேதி – பிப்ரவரி 10, 1775

இறந்த தேதி – டிசம்பர் 27, 1834

வாழ்ந்த ஆண்டுகள் – 59

எழுதிய புஸ்தகங்கள் –

1798 – BLANK VERSE

1798 – A TALE OF ROSAMUND GRAY

1807 – TALES FROM SHAKESPEARE

1808 – THE ADVENTURES OF ULYSSES

1809 – MRS LEICESSTER’S SCHOOL

1809 – POETRY FOR CHILDREN

1811 – PRINCE DORUS

1818 – THE WORKS OF CHARLES LAMB

1823- ESSAYS OF ELIA

1833 – THE LAST ESSAYS OF ELIA.

-SUBHAM-

யாரடாவன் கூட்டத்துல பாம்பு …

https://tamilandvedas.com › யார…

1.     

Translate this page

26 Nov 2018 — சார்ல்ஸ் லாம்ப் (CHARLES LAMB) என்பவர் பிரபல ஆங்கில எழுத்தாளர், கவிஞர்.

—ssubham—

Tags-
 சார்ல்ஸ் லாம் 
, Charles Lamb, Essays of Elia

ஸ்ரீ சமர்த்த ராமதாஸ் -1 (Post No.9873)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9873

Date uploaded in London – 20 JULY   2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

லண்டனிலிருந்து திங்கள் தோறும் இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் ஞானமயம் நிகழ்ச்சியில் 19-7-2021 அன்று ஒளிபரப்பான உரை!

ஸ்ரீ சமர்த்த ராமதாஸ் -1

ஸ்ரீ ராம் ஜய ராம் ஜய ஜய ராம்! அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே சந்தானம் நாகராஜன் வணக்கம்!

பாரத தேச வரலாற்றில் சமர்த்த ராமதாஸர் முக்கியமான வித்தியாசமான ஒரு பங்கை வகிக்கிறார். முகலாயரால் ஹிந்து மதம் பாதிக்கப்பட்டிருந்த காலத்தில் அவதரித்த அவர் மக்களிடம் ஆன்மீக எழுச்சியை ஊட்டியதோடு அல்லாமல் முகலாயரின் ஆக்கிரமிப்பையும் விஸ்தரிப்பையும் தடுத்து நிறுத்தி மக்களிடம் ஹிந்து எழுச்சியையும் ஊட்டினார். பக்தி இயக்கத்தில் எவ்வளவு பெரும் பங்கு வகித்தாரோ அதே அளவு அரசியலிலும் பங்கு வகித்து சத்ரபதி சிவாஜிக்கு ஆசி அளித்து அவரது செயலுக்கு ஊக்கம் அளித்தார். சந்த் துகாராம் வாழ்ந்த சம காலத்திலேயே அவர் வாழ்ந்தார்.

ஜம்ப் சமர்த் என்ற ஊரில் சமர்த்த ராமதாஸர் சைத்ர சுக்ல நவமியில் சரியாக  12 மணிக்கு ஹிந்து சகாப்தப்படி 1530ஆம் ஆண்டும் கி.பி.1608ஆம் ஆண்டு ஸ்ரீ ராமர் பிறந்த அதே ராமநவமி அன்று அதே நேரத்தில் அவதரித்தார். இந்த இடம் இன்றைய மஹராஷ்டிர மாநிலத்தில் ஜல்னா மாவட்டத்தில் உள்ளது. தேசஸ்த ருக்வேத பிராமண குடும்பத்தில் சூர்யதாஸ் தாஸருக்கும் ராணுபாய்க்கும் இளைய மகனாகப் பிறந்தார். அவருக்குச் சூட்டப்பட்ட பெயர் நாராயணன். அவரது அண்ணனின் பெயர் கங்காதர். அவர் பிறந்த இல்லம் இன்று ராமர் கோவிலாக விளங்குகிறது. நானாசாஹப் தேவ் 1943ஆம் ஆண்டு இதை ஸ்தாபித்தார். இன்று இதை ஒரு டிரஸ்ட் நிர்வகிக்கிறது. 240 ஹெக்டேர் நிலத்தைச் சொந்தமாகக் கொண்டுள்ளது.

சூர்யாஜியின் குடும்பம் சூரியனை வழிபட்டு வந்த குடும்பம். ஒருநாள் சூரியன் அவர் முன் தோன்றி உனக்கு இரு மகன்கள் பிறப்பார்கள். மூத்தவன் ராமனின் அம்சமாகவும் இளையவன் அநுமனின் அம்சமாகவும் பிறப்பார்கள் என்றார். அதன் படியே இளையவனாக அநும அம்சமாகப் பிறந்த குழந்தைக்கு வாலும் இருந்தது. அது நாளடைவில் மறைந்தது. இளம் வயதில் நாராயணனின் குறும்புத்தனத்திற்கு அளவில்லை. அவருக்கு மணத்தை முடித்து வைக்க ஏற்பாடு நடந்தது. ஆனால் திருமணமந்திரத்தில் சாவ்தான் என்ற வார்த்தையைக் கேட்ட அவர் ஜாக்கிரதை என்ற அதன் பொருளை ஆழமாக ஊன்றி நினைத்து உணர்ந்தார். அங்கிருந்து அகன்றார். நேராக இன்றைய நாசிக்கில் உள்ள பஞ்சவடிக்குச் சென்றார். அங்கு 12 ஆண்டுகள் தவம் மேற்கொண்டு இடைவிடாது ராம நாமத்தை ஜபிக்கத் தொடங்கினார். காயத்ரி மந்திரத்தையும் அவர் தொடர்ந்து ஜபித்து வந்தார். இப்படியாக மூன்று கோடிக்கும் மேலாக காயத்ரியையும் பதிமூன்று கோடிக்கும் மேலாக த்ரயோதசாக்ஷரி என்று கூறப்படும் ஸ்ரீ ராம் ஜய ராம் ஜய ஜய ராம்’ என்ற மந்திரத்தையும் ஜபித்தார். ராம தரிசனத்தையும் பெற்றார். 24ஆம் வயதில் அவர் சித்தி பெற்றார்.

அவர் முன் தோன்றிய ஸ்ரீராமர், “அநுமனின் அம்சமாகத் தோன்றிய இனி நீ சமர்த் ராம்தாஸ் என அழைக்கப்படுவாய்; உனக்கு மாபெரும் பொறுப்பு உள்ளது. காட்டில் நான் இருந்த போது அணிந்த ஆடையை உனக்குத் தருகிறேன். அந்நியரின் ஆக்கிரமிப்பைத் தடுத்து நிறுத்து” என்று கூறி மந்திரோபதேசம் செய்ததோடு வஸ்த்ர தீக்ஷை செய்து வஸ்த்ரத்தையும் கொடுத்து அருள, சமர்த்தர் அந்தப் பொறுப்பைத் தலை மேல் கொண்டார். ராம மந்திரத்தை உலகெங்கும் ஜபிக்கச் செய்து சமர்த் சம்பிரதாயத்தை அவர் நிறுவினார். அவர் அணிந்த ஆடை இன்றும் அவரது சமாதிக் கோவிலில் உள்ளது.

அந்நிய ஆக்கிரமிப்பைத் தடுத்து நிறுத்தும் மகத்தான பணியில் அவர் ஈடுபட்டார்.  

அதற்கெனவே அவர் சிவாஜிக்கு அருள் பாலித்தார். சிவாஜியுடனான அவரது சந்திப்பு சுவாரசியமான ஒன்று. ஒரு நாள் சிவாஜி ஆற்றங்கரையோரத்தில் அமர்ந்திருக்க நதி நீரில் மிதந்து வந்த சில ஓலைச் சுவடிகளில் மராத்தி மொழியில் அற்புதமான கவிதைகள் இருந்ததைக் கண்டு ஆச்சரியப்பட்டார். ஓலை வந்த திசை நோக்கிச் சென்ற சிவாஜி அங்கு ஒரு அதிசயமான காட்சியைக் கண்டு ஆச்சரியப்பட்டார். அங்கு ஒரு அருளாளர் அமர்ந்து அருமையான பக்திப் பாடலைப் பாட அதை அவருக்கு முன்னே கொடிய மிருகங்களும் அவற்றிற்கு இரையாகும் பல மிருகங்களும் பயமின்றி ஒன்றாகக் கூடி அந்த இசைப் பாடலைக் கேட்ட வண்ணம் இருந்தன. மிருகங்களின் கண்களிலும் நீர் துளிக்கும் அதிசயக் காட்சியையும் கண்டார் சிவாஜி. அங்கு இருந்த மகானே சமர்த்த ராமதாஸர் என்று அறிந்த சிவாஜி அவரைக் குருவாக ஏற்றார்.

ராமதாஸர் அவருக்கு அருள் பாலித்து சிவாஜியின் வாழ்க்கை நெடுக பல அதிசய சம்பவங்களை நிகழ்த்திக் கொண்டே இருந்தார்.

சிவாஜி 1627ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி பிறந்தார்.1674ஆம் ஆண்டு ஜூன் 5ஆம் தேதி ராய்கரில் சத்ரபதி சிவாஜியாக ஹிந்து சாம்ராஜ்யத்தை நிறுவி முடி சூட்டிக் கொள்கிறார். 1675ஆம் ஆண்டு சமர்த்த ராமதாஸர் பாலி கோட்டையில் தங்குகிறார். 1680ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சிவாஜி அமரராகிறார்.

சிவாஜி பட்டாபிஷேகம் செய்யப்பட்ட அடுத்தபதினொன்றாம் நாளிலேயே அவரது தாயார் ஜீஜாபாய் மரணமடைந்தார். இதனால் சிவாஜி பெரிதும் துக்கமுற்றார். அத்துடன் அவரது மகன் சம்பாஜி பொறுப்புணர்ச்சி சிறிதும் இல்லாமல் இருந்தது அவரை பாதித்தது. அவரது உடல்நிலை சீர்குலைந்தது. அந்தச் சமயத்தில் ஒரு நாள் அவரது தூதுவன் அவரிடம் வந்து மஹராஜ்! தங்களைச் சந்திக்க சமர்த்த ராமதாஸர் வந்திருக்கிறார் என்றான். அதைக் கேட்டு துள்ளி எழுந்தார் சிவாஜி. அவரை வரவேற்க அவர் செல்வதற்குள் ராமதாஸரே அவரது படுக்கையறைக்கு வந்தார். அவர் கரங்களைப் பற்றி ஆசிர்வதித்தார். அத்துடன் சிவாஜியிடம் மென்மையான வார்த்தைகளைக் கூறி, “கவலைப்படாதே! அனைத்தையும் இறைவனிடம் விட்டு விடு என்று கூறினார். சிவாஜி ராமதாஸரின் பாதங்களில் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வணங்கினார்.

“உனக்கு வெற்றி மேல் வெற்றி கிட்டட்டும். நான் உன் அருகிலேயே உள்ள பாலிக் கோட்டையில் தான் தங்கி உள்ளேன் என்றார் அவர். அதன் பின் பாலிக் கோட்டைக்கு சஜ்ஜன் காட் – ஆன்றோர் உறைவிடம் – என்ற பெயர் சூட்டப்பட்டது.

ஒருமுறை சிவாஜியின் நந்தவனத்தில் சமர்த்த ராமதாஸர் இருந்த போது அவரது சீடர் மரத்தில் இருந்த பழங்களைப் பறிக்க அவரிடம் அனுமதி கேட்டார். உடனே சமர்த்தர் ஒரு கல்லை எடுத்து மரத்தின் மீது வீசினார். ஆனால் அந்தக் கல் ஒரு பறவையின் மீது பட அது கீழே விழுந்து இறந்தது. இதைக் கண்ட அனைவரும் ஞானியான இவர் ஒரு பறவையைக் கொன்று விட்டாரே என்று பேசத் தொடங்கினர்.

அதைக்கேட்ட சமர்த்த இராமதாசர் இராம மந்திரத்தின் மகிமையை விளக்கும் ஒரு பாடலை ‘ஜன்ஜூட்’ எனும் இராகத்தில் பாடினார். பாடலைப் பாடிய படியே கீழே இறந்து கிடந்த பறவையை எடுத்து ஆகாயத்தில் வீசினார. அந்தப் பறவை உயிர் பெற்று அப்படியே பறந்து ஓடியது. ஹிந்துஸ்தானி இராகமான ‘ஜன்ஜூட்’ என்ற இராகத்தைப் பாடினால் எப்படிப்பட்ட நோயும் நீங்கும் என்பது இன்றும் 

நிலவி வரும் நம்பிக்கை.இந்த ஹிந்துஸ்தானி ராகத்திற்குச் சமமான கர்நாடக இசை ராகம் செஞ்சுருட்டியாகும்.

அனைவரும் ஆச்சரியப்பட்ட இந்த சம்பவம் உலகெங்கும் பரவியது. சிவாஜி ராமதாஸரை வணங்கி தஞ்சையிலிருந்து ஆட்சி புரிந்து வரும் தன் சகோதரர் வெங்கோஜிக்கு அருளாசி வழங்குமாறு வேண்ட ராமதாஸர் தஞ்சையை நோக்கி விஜயம் செய்தார். அங்கு வெங்கோஜிக்கு ஆசி வழங்கி ஒரு அநுமார் கோவிலைக் கட்டினார். சமர்த்த மடம் ஒன்றையும் ஸ்தாபித்தார். தஞ்சை நகரின் பிரதானமாக இருக்கும் இது இன்றும் செயல்பட்டு வருகிறது. நாடெங்கும் இமயம் முதல் குமரி வரை 12 ஆண்டுகளுக்கும் மேலாக ஊர் ஊராக யாத்திரை செய்த அவர் ராம நாமத்தை எங்கும் பரப்பினார். பண்டரிபுரத்தில் அவருக்கு விட்டல தரிசனம் கிடைத்தது. மஹூர்காட்டில் அவருக்கு ஸ்ரீ தத்தாத்ரேயரின் தரிசனம் கிடைத்தது. ராஜஸ்தான், மஹராஷ்டிரம், உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம் தமிழ்நாடு உள்ளிட்ட பல பிரதேசங்களிலும் அநுமார் கோவில்களை அவர் ஸ்தாபித்தார். இவற்றில் 11 கோவில்கள் இன்று புகழ் பெற்று விளங்குகின்றன. கிருஷ்ணா நதி தீரத்தில் அவர், ராமர் சிலா விக்ரகங்களையும் கண்டுபிடித்து வழிபாட்டிற்கு வழி வகுத்தார்.மஹராஷ்டிரத்தில் உள்ள சதாரா நகரின் அருகே உள்ள மஹாபலேஷ்வருக்கு விஜயம் செய்த அவர் அருகே உள்ள மாசூரில் ராமநவமியைக் கோலாகலமாகக் கொண்டாடும் உற்சவ வைபவத்தைத் தொடங்கி வைத்தார். சீக்கிய குருவான ஹர்கோபிந்த் சிங்கையும் அவர்  ஸ்ரீநகரில் சந்தித்ததாக வரலாறு குறிப்பிடுகிறது.இந்தச் சந்திப்பு வரலாறு முக்கியத்துவம் ஒன்றாக அமைந்திருந்தது.

TAGS-  சமர்த்த ராமதாஸ் -1

இந்துமதத்தைப் புகழ்ந்த அமெரிக்க கவிஞர் ஹென்றி டேவிட் தொரோ (Post No.9870)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9870

Date uploaded in London –19 JULY   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

இயற்கையோடு இணைந்த  வாழ்வு வாழவேண்டும் என்று சொல்லி உபநிஷத முனிவர்களைப் போல வாழ்ந்தவர் அமெரிக்க தத்துவ ஞானி, எழுத்தாளர், கட்டுரையாளர், கவிஞர்  ஹென்றி டேவிட் தொரோ (HENRY DAVID THOREAU) . அவர் எழுதிய இரண்டு நூல்களில் பகவத் கீதையையும், கங்கை நதியையும் யோகத்தையும் பாராட்டினார். இந்து தெய்வங்களைப்  பெயர் குறிப்பிட்டு எழுதியுள்ளார் .

200 ஆண்டுகளுக்கு முன்னர் , சுவாமி விவேகானந்தர் போன்றோர் அமெரிக்காவுக்குச் செல்வதற்கு முன்னர் , அங்கு கிறிஸ்தவப் பாதிரியார்கள் பரப்பிய பொய்யுரைகளே அதிகம் நிலவின . அந்த சூழ்நிலையில் இந்து மதம் பற்றிய சரியான பார்வை கொண்டவராக வாழ்ந்தவர் தொரோ; அவர்  கல்யாணம் செய்துகொள்ளவில்லை. கிட்டத்தட்ட சந்நியாசி வாழ்வுதான்.

இவருடைய அரசியல் கொள்கைகள் இவரை சர்ச்சைக்கும், புகழுக்கும் உரியவர் ஆக்கின. இவர் ஒரு பென்சில் தயாரிப்பாளரின் மகன். மாசசுசெட்ஸ் பகுதியில் கான்கார்ட் (CONCORD) நகரில் பிறந்தார். ஹார்வர்ட் பல்கலையில் பயின்றார். 1837 ஆம் ஆண்டில் பட்டம் பெற்றார். அந்த ஆண்டுதான் அமெரிக்காவின் மற்றோர்  சிந்தனையாளரான ரால் ப் வால்டோ எமர்சன் (RALPH WALDO EMERSON) பெரும் அறைகூவல் விடுத்தார். ஐரோப்பிய செல்வாக்கிலிருந்து விடுபட்டு அமெரிக்கா  தனக்கென புதிய கலாசாரத்தை உருவாக்கிக்கொள்ள வேண்டும் என்ற எமர்சனின் முழக்கம் சங்க நாதமாகப் பரவிய தருணம் அது. தொரோவும் எமர்சனும் நண் பர்கள்  ஆயினர்.

பிறந்த தேதி – ஜூலை 12, 1817

இறந்த  தேதி – மே 6, 1862

வாழ்ந்த ஆண்டுகள் – 44

இவருடைய எழுத்துக்கள் 20 தொகுதிகளாக வந்திருக்கிறது என்றால் இவர் எவ்வளவு எழுதினார் என்பது விளங்கும் .

கன்கார்ட் நகருக்கு அருகில் வால்டன் பாண்ட் (WALDEN POND) என்னும் இடத்தில் ஒரு குடில் அமைத்து இரண்டு ஆண்டுகளுக்கு அதில் தொரோ வாழ்ந்தார். ஒவ்வொரு நாளும் தன சிந்தனையில் உதித்த அரிய பெரிய கருத்துக்களை சொல்லோவியமாகத் தீட்டினார். அந்த இடத்தைச் சுற்றியுள்ள இயற்கை வனப்பையும் வருணித்தார். இவை அனைத்தையும் அடித்தளமாக வைத்து 37 வயதில் வால்டன் (WALDEN) என்னும் நூலை வெளியிட்டார். இதை அவர் எழுதிய நாட் குறிப்பேடு என்று எண்ணிவிடக் கூடாது .

மக்கள் எளிமையாக வாழ வேண்டும். அதிக சொத்து சுகம் சேர்க்கக்கூடாது. இயற்கையை ரசித்து, மதித்து வாழவேண்டும் என்ற அறிவுரை அடங்கியது வால்டன்.

அமெரிக்காவில் கறுப்பின மக்களை அடிமைகளாக நட த்தியத்தைக் கண்டித்து தொரோ போராட்டம் நடத்தினார். அடிமைத் தனத்தை அகற்றும் வரையில் வரிகள் கொடுக்க மாட்டேன் என்றார் . இதனால் 29 வயதிலேயே சிறைவாசமும் கிடைத்தது. இதன் விளைவாக ஒத்துழையாமை இயக்கம் (CIVIL DISOBEDIENT MOVEMENT) பற்றி எழுதி அரசாங்கத்தைவிட தனிமனிதன் (INDIVIDUAL) சக்தி வாய்ந்தவன், முக்கியமானவன் என்று எழுதினார் (இவை அனைத்தையும் பிற்காலத்தில் இந்தியாவில் மஹாத்மா காந்தி செய்தது குறிப்பிடத்தக்கது.)

அரசாங்கத்தின் கொள்கைகள் தவறு என்று மக்கள் கருதினால் சட்டங்களை மதிக்கக்கூடாது என்றும் தொரோ பரப்புரை செய்தார். அவருக்கு 100 ஆண்டுகளுக்குப் பின்னர் வந்த மக்கள் தலைவர்கள் இதைப் பின்பற்றினர். அமெரிக்காவில் 1960-களில் மக்கள் உரிமைக்காகப் போராடிய மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் போன்றோர் இந்தக் கொள்கையைப் பின்பற்றினர். 44 வயதில் காச நோய் கண்டு இறந்தார். அவரது படைப்புகளில் பல தொரோ இறந்த பின்னரே வெளியாகின.

அவரது நூல்கள் :-

1849- A WEEK ON THE CONCORD AND MERRIMACK RIVERS

1849- CIVIL DISOBEDIENCE

1854- WALDEN

PUBLISHED AFTER HE DIED:-

1865- CAPE COD

1866 – A YANKEE IN CANADA

1884 – SUMMER

1887 – WINTER

–SUBHAM –tags- அமெரிக்க கவிஞர், ஹென்றி டேவிட் தொரோ , HENRY DAVID THOREAU,

காடுகளைப் பாதுகாப்போம்! (Post.9869)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9869

Date uploaded in London – 19 JULY   2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

 ஆல் இந்தியா ரேடியோ சென்னை வானொலி நிலையம் சென்னை A அலைவரிசை 720 HZ ச.நாகராஜனின் சுற்றுப்புறச்சூழல் சிந்தனைகளை 16-7-2021 முதல் 25-7-2021 முடிய ஒலிபரப்புகிறது. நேரம் காலையில் தமிழ்ச் செய்திகள் முடிந்தவுடன், சரியாக 6.55க்கு ஆரம்பிக்கும் காலைமலர் நிகழ்ச்சியில் முதல் ஒலி பரப்பாக இது அமையும். ஆன்லைன் நிகழ்ச்சியாக கணினி, ஐபாட் மூலமாகவும் இதைக் கேட்கலாம்.

தொடுப்பு : https://onlineradiofm.in/stations/all-india-air-chennai-pc

உரை எண் : 1 – 16-7-21 அன்று காலை ஒலிபரப்பப்பட்டது.

காடுகளைப் பாதுகாப்போம்!

ச.நாகராஜன்

காடுகளைப் பாதுகாக்க வேண்டும் என்ற நல்லெண்ணம் இன்று உலகளாவிய விதத்தில் பரவி வருவது ஊக்கமூட்டும் ஒரு நல்ல செய்தி.

ஆனால் இதற்கான வித்து தமிழகத்தில் தான் இடப்பட்டது என்பது இந்தியர்கள் அனைவருக்கும் பெருமிதம் அளிக்கும் செய்தியாகும்.

1842ஆம் ஆண்டில் மதராஸ் போர்ட் ஆஃப் ரெவின்யூ (The Madras Board of Revenue)வின் தலைவரான அலெக்ஸாண்டர் ஜிப்ஸன் (Alexander Gibson) காடுகளைப் பாதுகாக்க வேண்டும் என்ற ஒரு திட்டத்தைத் தொடங்கி அதில் அறிவியல் முறைகளைப் புகுத்தினார். காடுகளின் நிர்வாகம் பற்றிய தமிழகத்தில் சென்னையில் மேற்கொள்ளப்பட்ட இந்தத் திட்டமே உலகில் காடுகளைப் பாதுகாக்கும் முதலாவது திட்டமாகும். இது அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளுக்கும் பரவி இன்று மாபெரும் இயக்கமாக மாறியுள்ளது.

காடுகளின் முக்கியத்துவத்தை மனித குலம் நன்கு அறிதல் அவசியம். நாம் சுவாசிக்கும் காற்று சுத்தமாக இருக்க காடுகள் அவசியம்.

 நாம் பயன்படுத்தும் பல்வேறு மரத்திலானான பொருள்கள், காடுகள் நமக்குத் தரும் செல்வமே! உலகில் 80 விழுக்காடு பல்லுயிர் பெருக்கத்திற்கு ஆதாரமாக, ஏராளமான விலங்கினங்களுக்கும் பறவைகளுக்கும் நீர் வாழ் உயிரினங்களுக்கும் வாழ்வாதார இடமாக அமைவது காடுகளே! மண் அரிப்பைத் தடுப்பது, உலகம் வெப்பமயமாதலைத் தடுப்பது உள்ளிட்ட பல்வேறு நற்பலன்கள் காடுகளினாலேயே ஏற்படுகின்றன.

ஆறு கோடி பூர்வ குடியினருக்கு உறைவிடத்தையும் வாழ்வையும் தருவதும் காடுகளே! இது தவிர சுமார் 30 கோடி மக்கள் காடு தரும் செல்வங்களை நம்பி வாழ்கின்றனர்!

காடுகளைத் தவறான முறையில் அழிக்க விழையும் போது மரங்கள் மட்டும் அழிவதில்லை சுற்றுப்புறச் சூழல் அமைப்பே அழிகிறது, அத்துடன் மனித குலம் அழிவுப் பாதையில் செல்கிறது!

கடலுக்கு அடுத்தபடியாக கார்பனை சேமித்து வைத்திருக்கும் பெரும் கிடங்காக அமைவது காடுகளே! தீங்கு பயக்கும் பசுமை இல்ல வளிமங்களே தட்பவெப்ப நிலை மாறுதலுக்குக் காரணமாக அமைகிறது. இதை உறிஞ்சுவது காடுகளே.

வெப்ப மண்டலக் காடுகளில் மட்டுமே இருபத்தைந்தாயிரம் கோடி டன்கள் என்ற அளவில் கார்பன் நிலத்திற்கு மேலும் கீழுமாகச் சேமிப்பாக உள்ளது.

பருகும் நீரையும் இதரப் பயன்பாடுகளுக்கான நீரையும் வழங்குவது காடுகளே. உணவு, பழங்கள், மூலிகைகள் என மனிதனுக்குத் தேவையான அனைத்தையும் வழங்குவதும் காடுகளே. இயற்கைச் சீற்றமாக அமையும் வெள்ளப் பெருக்கு, மற்றும் அதிக மழை ஆகிய காலங்களில் அரணாக இருந்து தடுப்பதும் காடுகளே. நிலத்தில் வாழும் உலக உயிரினங்களில் பாதிக்கு உறைவிடமாக அமைவதும் காடுகளே!இப்படிப்பட்ட அரும் காடுகளைக் காப்பது நமது தலையாய கடமை அல்லவா!

–subham–

tags- காடுகளை, பாதுகாப்போம்,

ஹனுமான் பிறந்த அஞ்சனா பர்வதம் (Post No.9868)

WRITTEN BY BRHANNAYAKI SATHYANARAYANAN

Post No. 9868

Date uploaded in London – –   19 JULY   2021          

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

லண்டனிலிருந்து ஞாயிறுதோறும் இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் தமிழ்முழக்கம் நிகழ்ச்சியில் 18-7-2021 அன்று ஒளிபரப்பான உரை!

அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி

அஞ்சிலே ஒன்று ஆறாக ஆரியர்க்காக ஏகி

அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு அயலாரூரில்

அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவன் எம்மை அளித்துக் காப்பான்

கவிச் சக்கரவர்த்தி கம்பர் வாழி!

ஆலயம் அறிவோம்! வழங்குவது பிரஹன்நாயகி சத்யநாராயணன்.

ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம் பெறுவது ஏழு சிரஞ்சீவிகளில் ஒருவரான ஹனுமான் பிறந்த இடமான அஞ்சனா பர்வதம் ஆகும். உலகின் ஆதி காவியமான வால்மீகி ராமாயணம் கூறும் கிஷ்கிந்தா பகுதி இதுவே. கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹம்பியிலிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ளது பிரசித்தி பெற்ற ஆஞ்சனேயர் கோவில். துங்கபத்ரா நதிக் கரையில் அமைந்துள்ள இயற்கை வனப்புடன் கூடிய மலைப் பகுதியில் உள்ள இந்தக் கோவிலுக்குச் செல்ல மலைமீது ஒரு சமயத்தில் இருவர் மட்டுமே நடக்கக் கூடிய அளவில் குறுகலான படிகள் உள்ளன. 550 படிகளைக் கடந்து மேலே சென்றால் கோவிலை அடையலாம். ஆஞ்சனேயர் பிறந்த இடம் என்பதால் மலை உச்சியிலும் செல்லும் வழியிலும் ஏராளமான வானரங்களைப் பார்க்கலாம். வெள்ளையடிக்கப்பட்ட வெண்மை நிறச் சுவர் கொண்ட சிறிய கோவில் இது. தூரத்திலிருந்தே இந்தக் கோவிலின் மீதுள்ள கூம்பு வடிவுள்ள மாடத்தில் பறக்கும் காவிக் கொடியைக் காணலாம்.

கோவிலின் முன்னே தீப ஸ்தம்பமும் துளசி மாடமும் உள்ளன. முன் மண்டபமும் அதை அடுத்து கர்பக்ரஹமும் உள்ளன. ஆஞ்சநேயப் பெருமான் செந்தூரக் காப்பில் அருள் மிகு தோற்றத்துடன் காட்சி அளிப்பதைக் கண்டு களிக்கலாம். ஹனுமத் ஜெயந்தி அன்று  ‘ஸ்ரீ ராம் கீ ஜெய்’ என்ற கோஷமிட்டு ஆயிரக்கணக்கில் பக்தர்கள் இங்கு திரளாக வந்து ஆஞ்சநேயரை வழிபடுகின்றனர். இந்தப் புனிதமான பர்வதத்தைப் பற்றி இதிஹாஸ புராணங்கள் கூறும் வரலாறுகள் உண்டு.

அஞ்சனா தேவி 7000 ஆண்டுகள் தவம் செய்து ஆஞ்சனேயரை மகனாகப் பெற்ற இடம் இதுவே. அஞ்சனா தேவிக்கும் வாயு பகவானுக்கும் பராக்ரமசாலியான ஆஞ்சனேயர் பிறந்தார். சூரியனுடன் கூடவே அவருக்கு இணையான வேகத்தில் சென்று பல கலைகளையும் அவரிடமிருந்து கற்றார். கிஷ்கிந்தாவை அரசாண்ட வாலி தன் தம்பியான சுக்ரீவனைத் துரத்தவே, சுக்ரீவன் இந்தப் பகுதியில் வந்து இருக்கலானார். அவருக்குச் சொல்லின் செல்வனான ஹனுமார் துணையாக அமைந்தார். சீதையைத் தேடி வந்த ராமரும் லக்ஷ்மணரும் இந்தப் பகுதியில் வரும் போது ஹனுமார் அவர்களைச் சந்தித்து அவர்களை சுக்ரீவனுடன் நட்புக் கொள்ளச் செய்து ராம சேவையில் இறங்கினார். ராமாயணத்தில் விவரிக்கப்படும் இந்தச் சம்பவங்கள் அனைவரும் அறிந்ததே. இந்த நிகழ்வுகள் நடந்த இடங்கள் இவையே என்பதை எண்ணி, உணர்ந்து இந்தப் பகுதிக்கு வரும்போது ஒவ்வொரு இடமாகப் பார்த்து உள்ளம் பூரிக்கின்றனர்.

இந்தப் பகுதியில் உள்ள மாதங்க மலை மாதங்க மஹரிஷியின் பெயரால் அமைந்துள்ள ஒன்று.  இந்தப் பகுதியில் நுழைந்தால் உனக்கு மரணம் ஏற்படும் என்று வாலிக்கு மாதங்க மஹரிஷி சாபமிட்டதால் வாலியால் இந்தப் பக்கமே வரமுடியவில்லை. இந்த மலையே ஹம்பியில் உயரமான இடம். இங்குள்ள விட்டலர் கோவில் அருகேயே ராமரால் வதம் செய்யப்பட்ட வாலி எரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

வாலியின் கோட்டை இருந்த பகுதியைச் சுட்டிக் காட்டுவதாக இங்குள்ள வாலி குகை திகழ்கிறது. சுக்ரீவனின் பட்டாபிஷேகம் நடந்த இடமும் இந்தப் பகுதியில் தான்.

ஸ்படிகம் போல ஜொலிஜொலிக்கும் ஸ்படிக மலை இங்குள்ளது.

தாமரை மலர்களால் நிரம்பி உள்ள பம்பா சரோவர் என்ற குளத்தில், தெள்ளத் தெளிந்த ஸ்படிகம் போன்ற நீர் உள்ளது.

அனேகுந்தி என்ற கிராமத்தின் அருகிலேயே ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. இந்த கிராமத்தை சிந்தாமணி என்று அனைவரும் குறிப்பிடுகின்றனர். சிந்தாமணி ஆலயம் இங்கு உள்ளது. இந்த இடத்தில் தான் வாலிக்கும் சுக்ரீவனுக்கும் இறுதிப் போர் நடந்தது. ராமர் மறைந்திருந்து வாலியின் மீது பாணத்தை ஏவிய இடம் இதுவே.

சீதையை இலங்கையில் கண்டு திரும்பி வருகையில் வானரங்கள் மிகுந்த மகிழ்ச்சியால் மதுவனத்தில் தேனைக் குடித்து அதை அழிக்க ஆரம்பித்த செய்தியை ராமாயணத்தில் காண்கிறோம். அந்த மதுவனப் பகுதியும் இங்கே தான் உள்ளது.  ராமர் லக்ஷ்மணருடன் இங்குள்ள மால்யவான் பர்வதத்தில் நான்கு மாதங்கள் தங்கி இருந்தார்.

இங்குள்ள இன்னொரு ஆஸ்ரமம் சபரி ஆஸ்ரமம். இலங்கையிலிருந்து புஷ்பகவிமானத்தில் திரும்பிவருகையில் இங்குள்ள இடத்தில் சீதா தேவியார் குளித்த இடம் சீதா குண்ட் என்று அழைக்கப்படுகிறது. கிஷ்கிந்தையில் உள்ள அனைவரையும் ராம பட்டாபிஷேகத்திற்கு அழைத்துச் செல்ல புஷ்பக விமானம் இங்கு இறங்கிய செய்தியால் சீதை இங்கு குளித்த செய்தியும் உறுதிப்படுத்தப்படுகிறது.

ராம, சீதா, லக்ஷ்மண, ஆஞ்சநேயரின் பாதம் பட்ட பூமி இதுவே. இராமாயணத்தின் முக்கிய நிகழ்வுகள் அனைத்திலும் இடம் பெறும் பல பகுதிகள் ஆஞ்சநேயர் கோவிலைச் சுற்றியும் அருகேயும் அமைந்திருப்பதால் இது மிகச் சிறந்த புண்ய ஸ்தலமாகக் கொண்டாடப்படுவதில் வியப்பே இல்லை. சுமார் ஐநூறு இதிஹாச, புராண, சரித்திரச் சிறப்பு மிக்க இடங்கள் இங்கு உள்ளன என்பது குறிப்பிடத்தகுந்த ஒரு விஷயமாகும்.

காலம் காலமாக ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் அஞ்சனாத்ரி ஆஞ்சநேயர், அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம்.       

மனோஜவம் மாருத துல்ய வேகம்  ஜிதேந்த்ரியம் புத்திமதாம் வரிஷ்டம் |


வாதாத்மஜம் வானரயூத முக்யம்  ஸ்ரீ ராமதூதம் சிரஸா நமாமி ||

ஆஞ்சனேய பகவான் கி ஜெய்! நன்றி வணக்கம்!       

***

tags-  சபரி ஆஸ்ரமம், ஹனுமான் , அஞ்சனா பர்வதம், பிறந்த இடம்

காஷ்மீர், நமது காஷ்மீர், நடப்பது என்ன? நல்லவை தான் நடக்கிறது! (9867 Post)

கர்னல் ஷெராக் (Col Sherag) தெரிவிக்கிறார்:-

01)   1.5 லக்ஷம் ஹிந்து-சீக்கிய குடும்பங்கள் ஜம்மு-காஷ்மீரில் குடியிருப்போராக ஆகி விட்டனர்.

02)     உமர் அப்துல்லா, மெஹ்பூபாவிகு வழங்கப்பட்ட சலுகைகள்/வசதிகள் நீக்கப்பட்டு விட்டன.

03)     ஜம்மு காஷ்மீர் நேஷனல் பல்கலைக்கழகம் உள்ளிட்ட அனைத்துப் பல்கலைக்கழகங்கள் மீதும் காஷ்மீர் கட்டுப்பாடுகள் விதிப்பது நீக்கப்பட்டது.

04)     ஹிந்து புனிதத்தலங்களின் மீதான காஷ்மீரின் கட்டுப்பாடு நீங்கியது.

05)     1990இல் ஹிந்துக்கள் காஷ்மீரில் விட்டு விட்ட சொத்துக்களை ஆக்கிரமித்துள்ளோரின் மீது, தானாகவே நடவடிக்கை எடுக்க அதற்குரிய அதிகாரமையத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

06)     ஜம்முகாஷ்மீரில் உள்ள அனைத்து கோல்ஃப் மற்றும் இதர கிளப்புகளின் மீதான கட்டுப்பாடை காஷ்மீர் இழந்தது.

07)     பல்கலைக் கழக விஷயங்களில் காஷ்மீர் முதல் அமைச்சரின் பங்கு இனி இருக்கவே இருக்காது.

08)     தேச விரோதிகளுக்கு ஜம்முகாஷ்மீரில் 42 வருடங்களுக்கு முன்னர் தரப்பட்டிருந்த சட்டரீதியான பாதுகாப்பு நீக்கப்பட்டது.பப்ளிக் சேஃப்டி ஆக்ட், 1978இன் படி நடவடிக்கைக்கு உள்ளாகியிருப்போர் ஜம்மு காஷ்மீருக்கு வெளியிலும் கூட எந்தச் சிறையிலும் இனி அடைக்கப்படலாம்.

09)     ஜம்முவிலிருது அரசு அலுவலகம் இனி காஷ்மீருக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஜம்முவிலிருந்தே செயல்படலாம். (ஆறு மாதத்திற்கு ஒரு முறை இந்த அலுவலகம் -பைல்கள் உட்பட- காஷ்மீருக்கு மாறுவது வழக்கம்)

10)     பரூக், உமர், ஆஜாத், மெஹ்பூபா உள்ளிட்ட பழைய முதல் அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டிருந்த சலுகைகள், வசதிகள் நீக்கப்பட்டன. இதில் குடியிருப்பு, வாகனங்கள் உள்ளிட்டவையும் அடங்கும்.

11)     அனைத்து பல்கலைக்கழகங்களும் இனி நியூ டெல்லியின் கட்டுப்பாட்டுக்கு வந்து விட்டன. இங்குள்ள பல்கலைக்கழகப் பாடத்திட்டங்கள் காஷ்மீரை மையமாகக் கொண்டிருப்பது இனி இல்லை. மாற்றப்படலாம்.

12)     தர்மாத் ட்ரஸ்டின் கட்டுப்பாட்டிலோ அல்லது அந்தத் தலத்திற்கான தல வாரியத்தின் கட்டுப்பாட்டிலோ இதுவரை ஹிந்து புனிதத் தலங்கள் இருந்தன.இனி இந்த வாரியங்கள் நியூ டெல்லியின் நேரடிக் கட்டுப்பாட்டில் வரும்.

13)     ஜம்மு காஷ்மீர் வக்ஃப் போர்ட் கூட நியூ டெல்லியினால் எடுக்கப்பட்டு விட்டது. அதன் முழு சொத்துக்கள் இதுவரை காஷ்மீர் முஸ்லீம்களின் நன்கொடைகளால் உருவாக்கப்பட்டிருந்தன. இனி நியூ டெல்லியின் கட்டுப்பாட்டுக்குள் இவை வரும்.

14)      பண்டிட்களிடமிருந்து வாங்கப்பட்ட சொத்துக்களைக் கொண்டிருக்கும் உள்ளூர் மக்களை வெளியேற்ற உள்ளூர் நிர்வாகத்திற்கு நியூ டெல்லி அதிகாரத்தை வழங்கியுள்ளது. இதற்கான விற்பனைப் பத்திரங்கள் செல்லாது என அறிவிக்கப்படலாம்.

15)     கோல்ஃப் மைதானங்கள் மட்டுமல்ல, அனைத்து காட்டு நிலங்களும் கூட நியூ டெல்லியின் கட்டுப்பாட்டிற்கு வந்து விட்டது. டூரிஸ்ட் டெவலப்மெண்ட் அதிகாரிகளும் இனி டெல்லியின் கட்டுப்பாட்டிற்குள் இருப்பர். இந்தியாவிலிருந்தே இனி நிலங்களை லீசுக்கு விடலாம். வசதிகளை யாருக்கும் தரலாம்.

16)     முன்பிருந்ததைப் போல் அல்லாமல் ஜம்மு காஷ்மீர் முதல் மந்திரி வாரண்ட் ப்ரெஸிடென்ஸில் (Warrant of Precedence) 15ஆம் நிலைக்கு இறக்கப்பட்டிருக்கிறார்.

17)     ஜம்மு காஷ்மீர் முதன்மந்திரியினால் பல்கலைக்கழக போர்ட் மற்றும் வக்ஃப் போர்டுக்கு செய்யப்பட்ட நாமினேஷன்கள் அனைத்தும் நீக்கப்பட்டு விட்டன.

18)      அனைத்து காஷ்மீர் ஐஏஎஸ் அதிகாரிகளும் குறைந்த முக்கியத்துவம் கொண்டுள்ள நிலைகளில் வைக்கப்பட்டதோடு, உள்ளூர் வாசிகள் அல்லாத அதிகாரிகள் நிர்வாகத்தை இயக்க ஜம்முவிலிருந்து நியமிக்கப்பட்டுள்ளனர்.

19)     ஆயிரக்கணக்கான லேண்ட் பேங்குகள் (Land Banks of thousands of Kanals) இந்த மாநிலம் சாராத மற்றவருக்கு ‘Investment and Industry’ என்ற பெயரில் தரப்படும்.

நமது MHA (Ministry of Home Affairs) அதிக விளம்பரப்படுத்தாமல் ஆர்ப்பாட்டமின்றி, ஓசையின்றி இவை அனைத்தையும் அமுல் படுத்தியுள்ளது.

       சாதனை தான்!

***

INDEX

ஜம்மு காஷ்மீர் சட்டங்களில் மாற்றம்.

19 மாற்றங்களின் பட்டியல்

ஜம்மு காஷ்மீர் பாரதத்தின் முழுமையான பகுதியான ஆகி விட்டதற்கான சான்றுகள்!

Source and Thanks to Truth Vol 89 No 12 Dated 2-7-2021 – https://m.facebook

Tags- ஜம்மு ,காஷ்மீர், மாற்றம்

ரிக் வேதத்தில் 19 நாட்டிய நாடகங்கள் – பகுதி 2 (Post No.9864)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9864

Date uploaded in London –18 JULY   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ரிக்வேத உரையாடல்/ சம்பாஷணைக் கவிதைகள்

xxxx

RV.1-165

அகஸ்தியர், இந்திரன், மருத்துக்கள் இடையே நடைபெறும் உரையாடல்

xxxx

RV.1-170

அகஸ்தியருக்கும்  இந்திரனுக்கும் இடையே நடைபெறும் உரையாடல்

xxxx

RV.1-179

அகஸ்தியருக்கும் , லோபாமுத்திரைக்கும் இடையே நடைபெறும் உரையாடல்

xxxx

RV.3-33

விச்வாமித்ரன் -நதிகள் இடையே நடைபெறும் உரையாடல்

xxx

RV.4-18

ரிஷி வாம தேவன், இந்திரன், அதிதி ஆகியோர் இடையே நடைபெறும் உரையாடல்

xxx

RV.4-26/27

வாமதேவன் – இந்திரன் –  பருந்து இடையே நடைபெறும் உரையாடல்

xxxx

4-42

ரிஷி திரஸதஸ்யு புருகுத்சன் – இந்திரா வருணர் இடையேயான உரையாடல்

xxx

RV .7-33

வசிஷ்டருக்கும் அவருடைய புதல்வர்களுக்கும் இடையேயான உரையாடல்

xxxx

8-91

அபலை – இந்திரன் இடையேயான உரையாடல்

xxxx

10-102

ரிஷி முத்கலனின்  மனைவி – ரதத்தில் பூட்டப்பட்ட காளை யுடன் உரையாடல்

xxxx

RV.10-86

இந்திரன், இந்திராணி, வ்ருஷாகபி  ஆகியோருடன் உரையாடல்

xxx

RV.10-135

யமன் – இறந்தோர் ஆவி

xxx

RV.10-51

அக்கினி- தேவர்கள் இடையே உரையாடல்

Xxxx

RV.10-124

இந்திரன்- அக்கினி இடையே உரையாடல்

Xxxx

10-108

சரமா என்ற பெண் நாயும் – பாணி என்னும் வணிகர்களுக்கும்

Xxx

10-28

இந்திரனுக்கும்  மகன் வசுக்ரனுக்கும்

Xxx

RV.10-95, 

அபலைக்கும் இந்திரனுக்கும்

Xxxx

இவை தவிர இன்னும் சில உரையாடல் கவிதைகள் உள . அவை உரையாடலா இல்லையா என்பது பற்றி கருத்து வேறுபாடு இருக்கிறது.

–subham —

 tags- ரிக் வேத, நாட்டிய நாடகங்கள் – 2, உரையாடல், கவிதைகள்,