ஆங்கில கட்டுரையாளர், கவிஞர் சார்ல்ஸ் லாம் (Post No.9874)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9874

Date uploaded in London –20 JULY   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஆங்கில மொழியில் கட்டுரைகள் எழுதிப் புகழ்  அடைந்தவர் சார்ல்ஸ் லாம் CHARLES LAMB . 200 ஆண்டுகளுக்கு முன்னர் அவர் எழுதிய கட்டுரைகள் இன்றும் பெரிதும் விரும்பிப் படிக்கப்படுகின்றன.

லாம் , லண்டனில் பிறந்தார். க்ரைஸ்ட் ஹாஸ்பிடல் (Christ Hospital) என்ற பள்ளியில் படித்தார். அங்குதான் அவர் பிற்காலத்தில் கவிஞ ராகப் புகழ் எய்திய சாமுவேல் கோல்ரிட்ஜை  (SAMUEL TAYLOR COLERIDGE ) சந்தித்தார். பள்ளிப் பருவத்தில் ஏற்பட்ட தொடர்பு வாழ்நாள் இறுதி வரை தொடர்ந்தது. நட்பின் இலக்கணமாகத் திகழ்ந்தனர் இருவரும்.

14 வயதில் பள்ளிப் படிப்பை விட்டு வெளியேறிய சார்ல்ஸ் லாம், கிழக்கு இந்தியக் கம்பெனியில் (EAST INDIA COMPANY)  குமாஸ்தாவாக (எழுத்தர்) சேர்ந்தார். 50 வயது வரை அங்கு வேலை பார்த்தார்.

21 வயதானபோது கோல்ரிட்ஜ், அவரை எழுதும்படி தூண்டினார். பல்வேறு விஷயங்கள் குறித்த கவிதைகள் (POEMS ON VARIOUS SUBJECTS ) என்ற தலைப்புள்ள அந்தப் புஸ்தகம்தான்  லாமுக்கு இலக்கிய நுழை வாயிலாக அமைந்தது.

1796ம் ஆண்டில் நடந்த ஒரு துயர சம்பவம் லாமின் வாழ்க்கையை மாற்றியது. லாமின் பெரிய சகோதரி பெயர் மேரி . அவர்தான் லாமுக்கு மிக நெருக்கமானவர். மேரிக்கு மன நோய் உண்டு. ஒருநாள் அவர் வெறிபிடித்து தனது தாயாரையே கொன்றுவிட்டார். தாயாரை இழந்தபோதும் மேரியைத்  தான் கவனித்துக் கொள்வதாக லாம் சொன்னதால் நீதிபதிகளும் மன நோய் பீடித்த மேரியை விடுதலை செய்தனர் . மேரியின் மன நோய் நீடிக்கவில்லை.

மேரியை வாழ்நாள் முழுதும் பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பை ஏற்ற போதும் அவரது எழுத்துப்பணி தொடர்ந்தது.

அவர் அக்காலத்தில் விரும்பிப் படிக்கப்பட்ட பல பத்திரிக்கைகளுக்கு கட்டுரை எழுதினார். சிறுவர் சிறுமியருக்காக ஷேக்ஸ்பியர் நாடகக் கதைகளை எழுதுமாறு வேண்டுகோள் வந்தவுடன் சகோதரி மேரியுடன் சேர்ந்து ஷேக்ஸ்பியர் கதைத் தொகுப்பை வெளியிட்டார். இது 32 வயதில் நடந்தது. இதன் நடை எல்லோரையும் ஈர்த்ததால் இன்றுவரை மீண்டும் மீண்டும் அச்சாகி வருகிறது  சகோதரி மேரியுடன் சேர்ந்து மேலும் பல கதைகளை சிறுவர்களுக்காக எழுதினார்.

இதில் சிறுவர் சிறுமியர்க்கான கவிதைகளும் அடக்கம்.

லாம், பத்திரிகைகளில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு எலியாவின் கட்டுரைகள் ESSAYS OF ELIA என்ற தலைப்பில் 2 தொகுதிகளாக வெளிவந்தது. இது 48 வயதில் நடந்தது. இதற்குப் பத்து ஆண்டுகளுக்குப் பின்னர் எலியாவின் கடைசி கட்டுரைகள் THE LAST ESSAYS OF ELIA  என்ற தலைப்பில் மேலும் ஒரு நூலையும் வெளியிட்டார்.

சார்ல்ஸ் லாம்

பிறந்த தேதி – பிப்ரவரி 10, 1775

இறந்த தேதி – டிசம்பர் 27, 1834

வாழ்ந்த ஆண்டுகள் – 59

எழுதிய புஸ்தகங்கள் –

1798 – BLANK VERSE

1798 – A TALE OF ROSAMUND GRAY

1807 – TALES FROM SHAKESPEARE

1808 – THE ADVENTURES OF ULYSSES

1809 – MRS LEICESSTER’S SCHOOL

1809 – POETRY FOR CHILDREN

1811 – PRINCE DORUS

1818 – THE WORKS OF CHARLES LAMB

1823- ESSAYS OF ELIA

1833 – THE LAST ESSAYS OF ELIA.

-SUBHAM-

யாரடாவன் கூட்டத்துல பாம்பு …

https://tamilandvedas.com › யார…

1.     

Translate this page

26 Nov 2018 — சார்ல்ஸ் லாம்ப் (CHARLES LAMB) என்பவர் பிரபல ஆங்கில எழுத்தாளர், கவிஞர்.

—ssubham—

Tags-
 சார்ல்ஸ் லாம் 
, Charles Lamb, Essays of Elia