
WRITTEN BY LONDON POET DR A. NARAYANAN
Post No. 9918
Date uploaded in London – 1 AUGUST 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ஆண்டாள் திருவடிகளே சரணம்

ஆடிப்பூரத்தி லவதரித்த ஆண்டாள்
அரங்கனின் புகழ் பாடி அகமகிழ்ந்தாள்
சூடிக் கொடுத்த சுடர் கொடியோ இவள்
சொல்லில் பிறந்ததுத் திருப்பாவையன்றோ
மார்கழி நீராடி மதுசூதனன் பேர் பாடி
மாதர் குழுவினை வீதியில் கூட்டி
வீடு வீடாய்ச் சென்றுத் தேடுவோ மாயனை
நாடும் நம்மை நழுவுவானோ இந்நந்தன்
மையிடாக்கண்களும் மலர் சூடாக்கூந்தலு
மாய் பொய்யும் புறங்கூறலைப் புறந்தள்ளி
வாயும் வயிறும் வருந்தியோர்க்கன்னமிட்டதே
மாயனுக்கிம் மங்கையரின் மார்கழி நோன்பு
ஒங்கி உலகளந்த உத்தமனுக்குத் தலை
தாங்கிய பால் குடம் சுமந்தத் தாய் குலம்
நீங்காத நடமாடும் செல்வமீன்ற நெடியோனுக்
கீன்றது அவன் விரும்பிய வெண்ணெயே
ஆழி ஏந்தா அரவணைத்துயிலோன் முன்
தாழி வெண்ணெய் ஏந்திய தோழியர்கள்
வேண்டினதோ பட்டர் பிரான் கோதையைப்
பிடித்தக் கார்வண்ணன் பித்து விட்டு விடவே
வேண்டுதல் கேட்டுத் தன்னுள் பூரித்த
வேய் குழலோன் நினைத்ததோ திவரறி
யாரோ இக்கோதையே நித்தம் துதித்தென்
சித்தம் கவர்ந்த சிந்தாமணியெனவே
பக்திமணம் கமழும் பாமாலையயேப் பூமாலையாய்
முக்திபெற முகுந்தனையே முந்தணயில் முடிந்திவள்
மூச்சுக் காற்றால் வாடிச் சூடிய மாலையையணிய
பட்டர்பிரான் வர துயில் நீத்துக் காத்திருந்தானரங்கன்
மகள் தோள் சார்ந்த மாலை மாயனுக்கொவ்வாவென
மனம் நொந்த ஆழ்வான் மகளிழைத்தப் பிழையை
மன்னிக்க மன்றாட அசரீரி ஒலித்ததோ “கோதை சூடிய
மாலை வாடினினு மெம் வைசயந்தியிலுமுன்னதமே
வாடியவள் சூடிய மாலையின் வாசம் தென்றலாய்
பாடிய பாமாலையில் வீச நாடிய நாராயணனைத்
தேடிய கோதையின் பக்தியே கீதையாக, தருவீரோ?
ஆழ்வானே! எனை ஆண்ட இவளை முத்தாரமாக.”
கன்னி கண்ட கனவு நினைவான நாளோ நாயகன்
நந்த கோபன் குமரன் கோயில் தோரண வாயில்
வந்த கோதையை கதிரொளி தீபம் கலசமுடனேந்திச்
சதிரள மங்கையர் எதிர்கொண்டழைத்த நன் நாளே
மத்தளம் கொட்டி வரி சங்கம் முழங்க முத்தும்
மணியும் மலரும் நிறைந்த பந்தர் கீழ் மதுசூதனன்
மங்கைக் கரம் பற்றித் தீ வலம் வந்து அவள் தாள்
பற்ற சிந்தியதவள் கண்ணிர் வெந்நீராயவன்மீது
கண்ணீர் கசிந்த கோதையின் கண்கள் விழித்ததோ
உரியவளாயினு முயர்ந்தவர் நீர் என் தாள் பற்றியதில்
பாவியானேனப், பாவியிலும் பாவி இக்கண்ணனே! கை
பிடித்தவளைக் கண் கலங்க வைத்ததிலென்றான்.
ஓங்கிய பக்தியில் ஒன்றிய உள்ளத்தால்
அன்றிவ்வுலகள ந்தானைத் தாங்கிய
இத்தாரகையக்குரிய மார்கழி மாதத்
திலுமொன்றியவனோ மதுசூதனன் .
—A. நாராயணன்

tags- நாச்சியார் வைபவம், A. நாராயணன்