Research Article WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No. 9997
Date uploaded in London – 19 AUGUST 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
சோம லதை எனப்படும் சோமக்கொடியை மலையின் உச்சியிலிருந்து பருந்துகள் கொண்டு வருவதாக ரிக் வேதப் புலவர்கள் பலர் பாடியுள்ளனர். சோம ரசம் பற்றி அண்டப் புளுகு ஆகாசப் புளுகு புளுகிய இரண்டு டஜன் பேர்வழிகள், வெள்ளைத் தோல் அறிவிலிகள் , அரை வேக்காடுகள் இது பற்றி மவுனம் சாதிக்கின்றன. பிற்காலத்தில் கருட புராணத்தில் கருடன் அமிர்தம் கொண்டு வந்த கதைக்கும் இதற்கும் தொடர்பு இருக்கலாம். ‘இதுதான் சோம லதை , அதுதான் சோமக் கொடி’ என்றெல்லாம் படம் வரைந்து காட்டி 150 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஒரு பயலும் சோமரசம் செய்து, டப்பாவில் அடைத்துவிற்கவும் முன்வரவில்லை. இது ஒன்றே போதும் அவர்கள் சொன்னதெல்லாம் முழுப் பொய் , அபத்தக் களஞ்சியம் என்று காட்ட.
இனி ரிக்வேதப் புலவர்கள், பருந்து பற்றி பாடியுள்ள சுவையான சில இடங்களையும். அது சோமம் என்னும் அற்புத மூலிகையைக் கொண்டுதரும் பாடல்களையும் காண்போம் .
‘ஸ்யேன’ என்ற சொல்லை பருந்துக்கும் ‘சுபர்ண’ என்ற சொல்லை கருடன், கழுகுக்கும் வேத கால ரிஷிகள் பயன்படுத்தியுள்ளனர். சுமார் 65 இடங்களில் ‘ஸ்யேன’ என்ற சொல் வருகிறது. இதை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்போர் FALCON பால்கன், HAWK ஹாக் என்ற சொற்களை பயன்படுத்துகின்றனர். நாம் அதை பருந்து , ராஜாளி என்று சொல்லலாம். ஜம்புநாத ஐயர் ரிக்வேதத்தை மொழி பெயர்க்கையில் ‘பருந்து’ என்ற தமிழ்ச் சொல்லையே பயன்படுத்துகிறார்.
இதோ ரிக் வேதப் பாடல்கள் (மந்திரங்கள்)
RV.1-32-14
“இந்திரனே! நீ அஹி என்னும் பாம்பைக் கொல்லும்போது உன் இருதயத்தில் பயம் ஏற்பட்டதா? அப்படிப்பட்ட தருணத்தில் நீ யார் உதவியை நாடுவாய்?
நீ 99 நதிகளை பருந்து கடப்பது போல கடந்து விட்டாயே!”
இங்கு 99 நதிகள் என்று வருவது இன்னும் ஒரு புதிர் போடுவதாக இருக்கிறது. டெசிமல் சிஸ்டம் DECIMAL SYSTEM என்னும் தசாம்ச முறையை இந்துக்கள் கண்டுபிடித்தால்தான் இன்று நாம் கம்பியூட்டர் , இன்டர்நெட் முதலியவற்றைப் பயன்படுத்துகிறோம். நூற்றுக் கணக்கான மந்திரங்களில் 10, 100, 1000, 10,000 இது போல நிறைய எண்கள் வருகின்றன. அப்படி இருக்கையில் 99 என்று சொல்லுவது ஏனோ? இந்திரனுடைய பெயரே திருவாளர் நூறு (MR ONE HUNDRED DEEDS சதக்ரது). 99 நதிகள் என்பதால் ரிக் வேத கால இந்துக்களுக்கு நிறைய நதிகள் பெயர் தெரிந்ததும் புலனாகிறது. இங்கே இந்திரனை பருந்துக்கு ஒப்பிட்டதைக் கண்டோம்.
xxx
இந்தப் பாடலையும் முந்திய பாடலையும் பாடியவர் ஹிரண்ய ஸ்தூபன்/ தங்கத் தூண் GOLD PILLAR!!
எவ்வளவு செல்வம் இருந்தால் இப்படி தங்கத் தூண் என்று பெயரிட்டிருப்பார்கள்!!! வேதம் முழுதும் தங்கம் என்ற சொல் எண்ணற்ற இடங்களில் வருகிறது.
XXX
RV.1-33-2
“நான் இந்திரனைப் போற்றிப் பாடியவாறே உச்சி மரக்கிளையிலுள்ள கூட்டிற்குப் பாய்ந்து செல்லும் பருந்து போல , இந்திரனை நோக்கிப் பாய்ந்து செல்கிறேன்”.
xxxx
RV.2-42-1/3
இது ஒரு சுவையான குட்டிக் கவிதை.
பாரதியார் குயில், சிட்டுக்குருவி போன்ற பறவைகளைப் பாடும் வகையில் நமக்கு உயர்ந்த தத்துவங்களைப் போதிக்கிறார். ஆங்கிலத்தில் ஷெல்லி, கீட்ஸ் (SHELLEY AND KEATS) போன்ற பாவலர்களும் பறவைகளைப் பாடிப்பரவுகின்றனர்; புறநானூற்றுப் புலவரும் பிற்கால சத்திமுற்றத்துப் புலவரும் நாரையைப் பாடி மகிழ்கின்றனர். இவர்களுக்கு எல்லாம் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ரிஷி க்ருத்சமதன், கபிஞ்சலா என்ற பறவையைப் பாடுகிறார். அதுதான் பறவையை சகுனத்துடன் தொடர்பு படுத்தும் ஜோதிடப் பாடல். பிற் காலத்தில் பஞ்சாங்கத்தில் கூட பஞ்ச பட்சி சாஸ்திரத்தைப் பார்க்கிறோம். சகுனம் என்றாலே பறவை என்றுதான் அர்த்தம் இந்தப் பாடலில் கபிஞ்சலா என்னும் பறவையை பாடுகையில் உன்னை கருடனோ பருந்தோ கொல்லாமல் இருக்கக் கடவது என்று புலவர் ஆசீர்வதிக்கிறார்..
Xxx
RV.3-43-7
ரிஷி காதினன் விஸ்வாமித்திரன் 3-43-7 மந்திரத்தை ஓதுகிறார் :-
“இந்திரனே நீ விரும்பியபோது பருந்து கொண்டு வந்து தருகின்ற சோமக்கொடியைப் பிழிந்து தருகிறோம். குடியுங்கள்.”
இங்கே பருந்துக்கும் சோமத்துக்கும் உள்ள தொடர்பைக் காண்கிறோம்.
Xxx
RV.4-18-3
வாமதேவன் கௌதமன் என்ற ரிஷி பாடிய இந்தத் துதி 4-18-13 மிகவும் புகழ்பெற்றது . அதை மனுவும் கூட மநு ஸ்ம்ருதியில் குறிப்பிடுகிறார். ஆபத்து காலத்தில் உயிரைக் காப்பாற்றுவதே தருமம்; ஆகையால் எதையும் சாப்பிடலாம், எதையும் செய்யலாம் என்பதே இதன் பொருள். இதிலும் பருந்து – சோம லதா விஷயம் வருகிறது .
“நான் மிகுந்த வறுமையில் வாடிய காலத்தில் நாயின் குடலைச் சமைத்தேன். இந்திரனைத் தவிர வேறு எவரும் உதவவில்லை அவமதிக்கப்பட்ட என் மனைவியைப் பார்த்தேன்; பிறகு பருந்து எனக்கு இனிய சோமத்தைக் கொண்டுவந்தது.”
XXX .
RV.4-26-,5,6,7
வாமதேவ ரிஷியின் 4 மந்திரங்கள் மேலும் பல தகவல்களைத் தருகிறது
பருந்துக்கு /கருடனுக்கு/ கழுகுக்கு ஏன் புகழ் என்று அவர் இயம்புகிறார் .
“4. மருத்துக்களே ! எல்லா பருந்துகளைக் காட்டிலும் இந்தப் பறவை மிக்க புகழுள்ளதாகுக .
ஏனெனில் இந்த சுபர்ணன்; சக்கரமில்லாத தேரிலே தேவர்களால் ஏற்கப்பட்ட சோமத்தை மநுவுக்கு ஏந்திச் சென்றது .
5.பறவை, அதைக் காப்போரை பயமுறுத்தி சோமத்தை அபகரித்துச் சென்றது . மனோ வேகத்தோடு வானத்தில் வேகமாகப் பறந்து, இனிய சோம மூலிகையோடு சென்றது. அதனால் இவ்வுலகில் பருந்துகள் புகழப்படுகின்றன
(கருட வாஹனம், கருட புராணத்திற்கு பீடிகை போடும் மந்திரம் இது)
6.நேராகப் பறக்கும் பருந்து , வெகு தூரத்திலிருந்து சோமத்தை ஏந்திவந்தது. மகிழ்ச்சியை அளிக்கும் சோமத்தை உயரேயுள்ள சொர்க்கத்திலிருந்து , எடுத்து வந்தது.
7.பருந்து 1000 யக்ஞங்களையும் 10,000 யக்ஞங்களையும் தரித்து சோமத்தை எடுத்து வந்தது. பல செயல்களை செய்ய வல்லவனும், சர்வக்ஞனுமான இந்திரன் சோமத்தின் மகிழ்ச்சியில் திளைத்து சத்ருக்களைக் கொன்றான்”
XXXX
இது போல இன்னும் ஏராளமான பகுறிப்புகள் உள்ளன. ஒரு மண்டலம் முழுதுமே சோமக் கொடி என்னும் மூலிகை பற்றி உள்ளது. அவற்றைத் தனியாகக் காண்போம்..
இந்த பருந்து – ஸோம குளிகை சம்பந்தம் பற்றி எவராலும் திருப்தியான விளக்கம் தர முடியவில்லை.
சோமத்தை அடையாளம் கண்டுபிடித்து விட்டதாகக் கூறும் அரை வேக்காடுகள் இதற்கு என்ன விளக்கம் சொல்லப் போகிறார்கள்? வேதங்களை ஐரோப்பிய மொழிகளில் மொழிபெயர்த்து 150 ஆண்டுகள் ஆகிவிட்டதே. இன்னுமா தெரியவில்லை?
2000 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்ச் சங்க இலக்கியம் தோன்றியது. அந்த 18 நூல்களிலுள்ள சுமார் 30,000 வரிகளில் அமிர்தம், வேள்வி, யூப தூண் , கங்கை ,இமயம், அருந்ததி, இந்திரன், ராஜசூய யாகம், பருந்து வடிவமுள்ள யாக குண்டம், நான் மறை முதலியன உண்டு. ஆனால் சோம பானம் பற்றிய குறிப்பு கிடையாது. அந்தக் காலத்திலேயே சோம லதா என்னும் செடி கொடி வகை அழிந்து விட்டது என்றே கருத வேண்டும் .
–subham–
tags- சோம ரசம், சோம லதா, சோம கொடி ,பருந்து , ஸ்யேன, சுபர்ண, ரிக்வேதம்