

WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No. 10,019
Date uploaded in London – 25 AUGUST 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great

ஜெர்மனியைச் சேர்ந்த க்ரிம் சகோதரர்களை GRIMM BROTHERS உலகம் என்றும் மறவாது. ஏனெனில் அவர்கள் ஐரோப்பா கண்டத்தில் வாய் மொழியாகப் புழங்கிய புகழ்பெற்ற நாட்டுப்புற கதைகளை எழுத்து வடிவில் தொகுத்து அளித்தனர். அவர்கள் இவ்வாறு செய்திராவிடில் பல கதைகள் அழிந்தே போயிருக்கும். அல்லது காலப்போக்கில் உருமாறிப் போகும் .
SLEEPING BEAUTY உறங்கும் பேரழகி/ஸ்லீப்பிங் பியூட்டி , SNOW WHITE ஸ்னோ ஒயிட், RUMPLESTILTSKIN ரம்புல்ஸ்டில்ட்ஸ்கின் ஆகியன மேலை நாட்டுச் சிறுவர்கள் விரும்பிப் படிக்கும் கதைகளாகும் .
ஜேகப் க்ரிம் , வில்லம் (வில்லியம்) க்ரிம் JACOB GRIMM AND WILHELM GRIMM ஆகிய இரண்டு சகோதர்கள்தான் இந்த அரிய, பெரிய வேலை யைச் செய்தனர். இருவரும் ஹனோ HANAU என்ற ஜெர்மன் நகரில் பிறந்தனர். இளம் வயதிலேயே தந்தையை இழந்ததால் , மார்பர்க் பல்கலைக்கழகத்திலே MARBURG UNIVERSITY படிப்பைத் தொடர குடும்பத்தினர் மிகவும் கஷ்டப்பட்டனர். படிப்பை முடித்துக் கொண்டு இரண்டு பெரும் நூலகங்கள், அரசாங்க அலுவலகங்கள், பல்கலைக் கழகங்கள் என்று பல இடங்களில் வேலை செய்தார்கள் .
1812 முதல் 1822க்குள் மூன்று நாட்டுப்புற கதைத் தொகுப்புகளை வெளியிட்டனர். இன்றும் அவை க்ரிம் சகோதரர்களின் தேவதைக் GRIMMS’ FAIRY TALES கதைகள் என்ற பெயரில் படிக்கப்பட்டு வருகின்றன. இதற்காக அவர்கள் நிதி திரட்டினர் . இப்போது நாம் காணும் பெரிய ஜெர்மனி நாடு அந்தக் காலத்தில் பல குட்டி நாடுகளாகவும். சிற்றரரசர் ஆளும் பகுதிகளாகவும் இருந்தன. ஜெர்மனி ஒன்றுபட வேண்டும் என்று இந்த சகோதரர்களும் ஏனைய தலைவர்களைப் போல விரும்பினார்கள் . அவர்கள் ஜெர்மன் மொழியும், கலாச்சாரமும் ஒன்றே என்று காட்டவும் தேவதைக் கதைத் தொகுப்புகளைப் பயன்படுத்தினர். அவர்களுடைய ஆராய்ச்சி இதற்கு உதவியது.
அவர்கள் கதைகளைத் தொகுத்ததோடு நில்லாமல் அவைகளைச் சுவைபடச் சொன்னார்கள்; எழுதினார்கள். பழங்கால உலகில் நிலவிய மாயாஜாலம், அவர்களுடைய மேதாவிலாசம் ஆகியவற்றையும் நம் மனக் கண்ணுக்கு முன்னே நிறுத்தினர். ஆகையால் 200 ஆண்டுகளுக்கு முன்னர் அவர்கள் எழுதிய வடிவிலேயே இன்றும் புகழ்பெற்று விளங்குகின்றன.
ஜேகப் க்ரிம் JACOB GRIMM
பிறந்த தேதி – ஜனவரி 4, 1785
இறந்த தேதி – செப்டம்பர் 20, 1863
வாழ்ந்த ஆண்டுகள் -78
****
வில்லம் க்ரிம் WILHELM GRIMM
பிறந்த தேதி — பிப்ரவரி 24, 1786
இறந்த தேதி – டிசம்பர் 16, 1859
வாழ்ந்த ஆண்டுகள் – 73
மொழியியல் துறையில் இவர்கள் செய்த ஆராய்ச்சியால் கிரிம் விதி என்ற ஒரு விதியும் உருவாக்கப்பட்டது




***
வெளியிட்ட நூல்கள்
1812-1822 – Grimms’ Fairy Tales (3 volumes)
–Subham–
tags -க்ரிம் சகோதரர்கள்