கனடா நாட்டு சிறுவர் கதை ஆசிரியர் லூசி மாண்ட்கோமரி (Post No.100,03)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,003

Date uploaded in London – 21 AUGUST  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

உலகம் முழுதுமுள்ள சிறுமியர்கள், இளம் பெண்கள், மாணவிகள் ரசித்துப் படிக்கும் புஸ்தகம் , ANNE OF GREEN GABLES  ‘ஆன் ஆப் க்ரீன் கேபிள்ஸ்’ என்ற நாவல் ஆகும். இதை எழுதியவர் லூசி மாட் மாண்ட்கோமரி LUCY MAUD MONTGOMERY  ஆவார்.

கனடாவிலுள்ள பிரின்ஸ் எட்வார்ட் PRINCE EDWARD ISLANDS  தீவில் அவர் பிறந்தார்; இரண்டே வயதில் தாயாரை இழந்தார். தந்தையோ வேறொரு பெண்ணை மணந்து கொண்டு ஓட்டம் பிடித்தார். லூசியை கொடுமைக்கார தாத்தா பாட்டியின் கவனிப்பில் விட்டார். அவர் 15 வயதில் கவிதை ஒன்றை எழுதியது வெளியானது. பின்னர் ஆசிரியராகவும் பத்திரிகை நிருபராகவும் ஹாலிபாக்ஸ் HALIFAX நகரில் பணியாற்றினார்.

புகழ் பெற உதவிய  ANNE OF GREEN GABLES  நாவலை அவர் எழுதினார், திருத்தினார், மீண்டும் எழுதினார்; மாற்றி அமைத்தார். எல்லா பத்திரிக்கைகளும் வெளியீட்டாளர்களும் திருப்பி அனுப்பினர்.

இறுதியில் 34 வயதானபோது ஒரு  நிறுவனம் ஒப்புக்கொண்டு வெளியிட்டது.

ஒரு பிள்ளை பிறக்காதா என்று ஏங்கிய வயதான ஒரு தம்பதியருக்கு ஆன் ANNE என்ற அனாதைக் குழந்தை கிடைத்தது. அந்தச் சிறுமியின் ஒவ்வொரு பருவத்திலும் அவருடைய  ஆசை அபிலாஷைகள் எப்படி இருந்தன என்பதை லூஸி சித்தரிக்கிறார். உண்மையில் சொல்லப்போனால் இது லுயூஸியின் சொந்த அனுபவமே. இந்த நாவலுக்கு பெரிய வரவேற்பு கிடைத்தது .

மார்க் ட்வைன் போன்றோரும் வரவேற்றனர். ஆன் ANNE என்ற கதா பாத்திரத்தை வைத்து ஏழு தொடர் நாவல்கள் எழுதினார். ஆன் என்பவர் ஆசிரியர் ஆகி,, கல்யாணம் செய்துகொண்டு, குழந்தை பெற்றுக்கொள்வது வரை நாவல் செல்கிறது.

1911ல் பாட்டி இறந்தவுடன் லூஸி , ஒரு சமயப் பிரசாரகரை மணந்துகொண்டு  ஒண்டாரியோவுக்கு  குடியேறினார்   குடும்பத்தை நடத்திக்கொண்டே இரண்டு ஆண்டுக்கு ஒரு நாவல் வீதம் 20 நாவல்கள், சிறு கதைத் தொகுப்புகளை வெளியிட்டார்.

மாண்ட்கோமெரி 20 புதினங்களையும் 530 சிறுகதைகள், 500 கவிதைகள் மற்றும் 30 கட்டுரைகளையும் வெளியிட்டார்

பிறந்த தேதி – நவம்பர் 30, 1874

இறந்த தேதி  ஏப்ரல் 24, 1942

வாழ்ந்த ஆண்டுகள் – 67

வெளியிட்ட கதைகள்

1908 – ANNE OF GREEN GABLES

1909 – ANNE OF AVONLEA

1911 – THE STORY GIRL

1915- ANNE OF THE ISLAND

1917 – ANNE’S HOUSE OF DREAMS

1919 – RAINBOW VALLEY

1921 – RILLA OF INGLESIDE

1923 – EMILY OF NEW MOON

1936 – ANNE OF WINDY POPLARS

1939- ANNE OF INGLESIDE

–SUBHAM–

TAGS-  கனடா , சிறுவர் கதை ஆசிரியர்,  லூசி மாண்ட்கோமரி, LUCY MAUD MONTGOMERY

JULY 2020 London Swaminathan Articles, Index-92 (Post No.10,002)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,002

Date uploaded in London – 21 AUGUST  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

HOW TO GET ACCESS FOR THESE POSTS? 

JUST COPY THE TITLE YOU WANT TO READ AND PASTE IT IN GOOGLE SEARCH AND ADD “FROM tamilandvedas.com or from swamiindology.blogspot.com”

IF YOU HAVE ANY PROBLEM, PLEASE CONTACT US. OUR E MAIL IS IN ALL THE 10000 PLUS POSTS.

xxx

JULY 2020 Index 92

Husband is Eleventh Child says Rigveda,8269;July 1,2020

Part 2; 8273:2/7

Swami s crossword 372020;8281;

Swami s crossword 472020;8287;

Swami s crossword 572020;8293

Swami s crossword 672020;8299

Swami s crossword 772020;8305

Dogs and Linguistics- onomatopoeia failed,8291;

Parasu Mystery In Rigveda; Iranian Yadava Link 8308;8/7

Parasurama-Persian/Iranian Connection,8315;9/7

My BBC Guru Passed away, A Big Salute to Kailash Budhwarji, 8239;12/7

Interesting Cyanide Naming Case and Jews in Quran ,8331;12/7

J Mystery Solved; Linguistic Theories Shattered, 8319;10/7

Interesting Language Anecdotes, 8336;13/7

Thou Thee Thy Aye Nay- Old English and New English,8341;14/7

I ordered a Cab and a Cabinet came; Speak English, 8347;15/7

Madurai  Wonder Mr Bull and Miss Cow  Reunited, 16/7;8351

Swami’s subject index-1 Articles on Egypt, pyramids, Indian link,

8359, 17/6

Hindu king who beat Leonardo da Vinci  , 8367, 19/7

Strange water nymphs in Sangam Tamil literature, 8378, 21/7

Swami s crossword 2172020;8379

Swami s crossword 2372020;8391

Goldstucker tears Max muller to pieces-

Vedic Hindus knew writing ,8388,23/7

Controversial Christian Oath , 8396, 24/7

Tamil grammarian Tolkappiar – A Great Scholar, 8406, 26/7

World Famous Panini Committed 10,000 M istakes, 8410

31 quotations on Fame and  Honour, 8416, 28/7

Xxx

TAMIL ARTICLES 

JULY 2020 INDEX

ஜூலை 2020 கட்டுரைகள்

கார்த்திகை மாத பழமொழிகள் 4 கண்டுபிடியுங்கள், 8270, ஜூலை 1,2020

4 தை மாத பழமொழிகள் கண்டுபிடியுங்கள், 8275, ஜூலை 2,2020

ஆன்டிமணி மாத்திரையின் வினோத உபயோகம், 8274,2/7

3 மாசி-பங்குனி பழமொழிகள் கண்டுபிடியுங்கள், 8280, ஜூலை 3

அயோத்தி நகரில் 4 புதிய வாசல்கள்,8279, 3/7

கம்பனைக் காப்பி அடித்தாரா காந்திஜி? 8285, 4/7

4 அத்திப் பூ பற்றிய பழமொழிகள் கண்டுபிடியுங்கள், 8286, 4/7

சிங்கம் பற்றிய 4 பழமொழிகள் கண்டுபிடியுங்கள்,8292,5/7

அட்டமத்துச் சனி பற்றிய 4 பழமொழிகள் கண்டுபிடியுங்கள்,8298,6/7

அயோத்தியில் புதுவகை மரம் கண்டுபிடிப்பு, 8297, 6/7

சிட்டுக் குருவி  பற்றிய 4 பழமொழிகள் கண்டுபிடியுங்கள்,8303, 7/7

ஆந்தை  பற்றிய 4 பழமொழிகள் கண்டுபிடியுங்கள்,8309;8/7

கொழுக்கட்டை  பற்றிய 4 பழமொழிகள் கண்டுபிடியுங்கள்,8314, 9/7

நீ பசுவை வணங்கினால் நான் நாயை வணங்குவேன், 8313, 9/7

சீன  வைரஸ் பற்றி காஞ்சி சுவாமிகள் எச்சரிக்கை, 8320,10/7

கல்யாணம்   பற்றிய 4 பழமொழிகள் கண்டுபிடியுங்கள்,8322;10/7

ஜ – மர்மம் துலங்கியது- மொழியியல் கொள்கை தவிடுபொடி,8325,11/7

தமிழில் ஆறு அவ்வையார்கள் , 8326, 11/7

உலகம் வியக்கும் விசில் மொழி, 8334, 13/7

சங்கு   பற்றிய 4 பழமொழிகள் கண்டுபிடியுங்கள்,8335;13/7

 5 கொக்கு பழமொழிகள் கண்டுபிடியுங்கள்,8343,14/7

5 வௌவால் பழமொழிகள் கண்டுபிடியுங்கள்,8346,15/7

கலிகெழு  கடவுள் கந்தம் சிவலிங்கமா , 8340, 15/7

பால் பற்றிய 5 பழமொழிகளைக் கண்டுபிடியுங்கள் , 8352, 16/7

காசி நகர் பற்றிய 4 பழமொழிகளைக் கண்டுபிடியுங்கள் , 8356, 17/7

பிராமணர் ஜிந்தாபாத்- புறநானூறு-1; 8357, 17/7

பிராமணர் ஜிந்தாபாத்- புறநானூறு-2; 8362, 18/7

அரசன்  பற்றிய 5 பழமொழிகளைக் கண்டுபிடியுங்கள் , 8363, 18/7

அரிசி  பற்றிய 5 பழமொழிகளைக் கண்டுபிடியுங்கள் , 8368, 19/7

ஐயனார்  பற்றிய 5 பழமொழிகளைக் கண்டுபிடியுங்கள் , 8373, 20/7

கடல்கெழு செல்வி யார்? அகநானூற்றில் ஒரு புதிர் , 8372, 20/7

மிளகு பற்றிய 5 பழமொழிகளைக் கண்டுபிடியுங்கள் , 8377, 21/7

கழுகு பற்றிய 5 பழமொழிகளைக் கண்டுபிடியுங்கள் , 8382, 22/7

எழுதாத மறையளித்த எழுத்தறியும் பெருமாள் -சேக்கிழார் 8383, 22/7

கண்ணனைக் கண்டதுண்டோ- எங்க அம்மா பாடிய பாட்டு , 8384, 22/7

5 சந்தனப் பழமொழிகளைக் கண்டுபிடியுங்கள் , 8389, 23/7

விளக்கு பற்றிய 5 பழமொழிகளைக் கண்டுபிடியுங்கள் , 8395, 24/7

யான் எப்போது எப்படி நான் ஆகியது?8394, 24/7

முயல் பற்றிய மூன்றே பழமொழிகளைக் கண்டுபிடியுங்கள் , 8402, 25/7

உடலுக்கு கால்சியம் ஏன் தேவை? 8400, 25/7

கரும்பு பற்றி மேலும் சில பழமொழிகள் 8405; 26/7

5 தங்கப்  பழமொழிகளைக் கண்டுபிடியுங்கள் , 8411, 27/7

மாமியார் பற்றிய 5 பழமொழிகளைக் கண்டுபிடியுங்கள்,8415, 28/7

வீடு  பற்றிய 5 பழமொழிகளைக் கண்டுபிடியுங்கள்,8421, 29/7

ஆயிரம் இலக்கண நூல்கள் , 2000 வினைச் சொற்கள், 8422, 29/7

கம்ப் யூட்டர் கவசம், 8420, 29/7

31 பெரிய புராண பொன்மொழிகள், 8426, 30/7

மரம்  பற்றிய 5 பழமொழிகளைக் கண்டுபிடியுங்கள்,8428, 30/7

மயிர்   பற்றிய 5 பழமொழிகளைக் கண்டுபிடியுங்கள்,8432, 31/7

நம்மாழ்வாரும் ஆங்கிலக் கவிஞனும் 8431, ஜூலை 31,2020

–SUBHAM–

tags- july 2020, index 92, london swaminathan

பத்தாயிரம் கட்டுரைகள் பதிப்பித்த மாபெரும் சாதனை!(Post No.10,001)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,001

Date uploaded in London –  21 AUGUST  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great

சாதனைக்குப் பாராட்டு!

பத்தாயிரம் கட்டுரைகள் பதிப்பித்த மாபெரும் சாதனை!

ச.நாகராஜன்

1

www.tamilandvedas.com  மற்றும் swamiindology.blogspot.com இல் பத்தாயிரம் கட்டுரைகள் பிரசுரிக்கப்பட்டிருக்கின்றன

.

இது ஒரு இமாலய சாதனை. இந்தக் கட்டுரைகள் அனைத்தும் பெரும்பாலும் நன்கு ஆய்வு செய்யப்பட்ட ஆய்வுக் கட்டுரைகளாக அமைந்திருப்பது இவற்றின் சிறப்பை இன்னும் கூட்டுகிறது. தெய்வீகம், தேசம் என்ற தண்டவாளத்தில் இந்தக் கட்டுரைகள் பயணிப்பதால் இவை எந்தக் காலத்துக்கும் பொருத்தமானதாக இலங்குவதில் வியப்பில்லை.

தமிழின் மேன்மை, பாரத தேசத்தின் மேன்மை ஆகிய இவற்றுடன் அறிவியல் உள்ளிட்ட இன்ன பிற விஷயங்களையும் பார்க்கும் போது இந்தத் தளம் ஒரு காலத்தின் கண்ணாடியாக மிளிர்வதில் வியப்பில்லை.

2

இந்த தளத்தை அனைவரும் இலவசமாக அணுக முடிவது இதன் இன்னொரு சிறப்பு.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக இதில் வரும் கட்டுரைகளைத் தங்கள் பெயரில் போட்டுக் கொண்டு அவற்றைச் “சுற்ற விடும்” சுறுசுறுப்பாளர்களைக் கண்டு வேதனைப் படத் தான் முடியும். அவர்கள் மனச்சாட்சி அவர்களை மாற்றினாலொழிய வேறு என்ன செய்ய முடியும்? ‘திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது’ என்று சும்மாவா சொன்னார் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்!

3

பத்தாயிரம் கட்டுரைகளையும் வகைப் படுத்தி தொகைப்படுத்தி அந்தந்தப் பொருளுக்குரிய வகையில் வெளியிட முயன்றால் சுமார் 300 நூல்களை வெளியிட முடியும். கட்டுரைப் பொக்கிஷமாக இது அமையும்.

இந்தக் கட்டுரைகளில் வெளியிடப்படும் படங்கள் தனித்தன்மை கொண்டவை. கட்டுரைகளோடு தொடர்பு உள்ளவைகளாக உள்ள படங்களைத் தேர்ந்தெடுப்பது என்பது ஒரு கடினமான காரியம். அத்துடன் TAG எனப்படும் தேடுதல் குறிப்பையும் இதில் காணலாம்.

எந்தக் கட்டுரை வேண்டுமானாலும் படிக்கக் கூடிய விதத்தில் பக்கத்திலேயே பழைய கட்டுரைகளை அணுகும் வசதியும் தளத்தில் உள்ளது. நாள் ஒன்றுக்கு சுமார் 6500 முதல் 12000 பேர் வரை இந்தக் கட்டுரைகளைப் படித்து மகிழ்வது மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியைத் தருகிறது. அதாவது மாதத்திற்கு 195000 முதல் 360000 பேர் இந்தக் கட்டுரைகளைப் படிக்கின்றனர்!

ஒரு சமயம் ஒரே ஒரு கட்டுரையைப் படித்தவர்களின் எண்ணிக்கை 42000 என்ற எல்லையைத் தொட்டது நிறைவைத் தருகிறது.

4

இந்தக் கட்டுரைகளை ஏராளமானோர் அவ்வப்பொழுது பாராட்டி வருவதும் தங்கள் மகிழ்ச்சியை விமரிசனப் பகுதியில் பதிவு செய்வதும் பாராட்டுக்குரிய ஒன்றாகும். இவற்றைப் படித்துத் தொடர்பு கொண்ட அறிஞர்கள், ஆர்வலர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் இதில் பங்கு கொண்டவன் என்ற முறையில் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

5

இப்படிப்பட்ட www.tamilandvedas.com  மற்றும் swamiindologyblogspot.com நடத்தி வரும் லண்டன் சுவாமிநாதனை வாழ்த்த வார்த்தைகளே போதுமானதாக இல்லை. என்னுடன் அனைவரும் வாழ்த்துவீர்கள் என்பதிலும் ஐயமில்லை.

வாழ்க திரு லண்டன் சுவாமிநாதன்!

மேலும் பல வளர்ச்சிகளைக் கண்டு மிளிர்க www.tamilandvedas.com & swamiindologyblogspot.com!!

இதை ஆதரிக்கும் அன்பர்களின் தொகை மேலும் மேலும் உயரட்டும், அன்னை மீனாட்சி அருள் பாலிக்கட்டும்!!!

***

 tags- tamilandvedas, 10000 posts, swamiindology.blogspot

POSITIVE THOUGHTS IN THE RIG VEDA (Post No.10,000)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,000

Date uploaded in London – 20 AUGUST  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Emperors and Kings of India have contributed hugely to the Vedic Brahmins to spread the Vedas. Even the Buddhist Emperor Asoka had given priority to Vedic Brahmins. In all his inscriptions Brahmins come first and then Sramanas are mentioned. Buddha had praised the Brahmins in his Dhammapada. Tamil kings not only did Rajasuya and Asvamedha Yagas but also donated lands, gold and money to Brahmins according to Sangam Tamil literature (see Pathitrup Pathu) and thousands of temple inscriptions.

Bharatiyar, the greatest of the modern Tamil poets, has praised Vedas sky high and asked us to spread the Vedas.

Why did they do it?

We see Liberty, Equality and Fraternity in the Vedic mantras.

The Rishis/seers address the gods as FRIENDS! In hundreds of Mantras, they address the Gods as friends and call their colleagues, Comrades!

Oft repeated similes refer to the affection between Father and son. They did not miss the love and affection between husband and wife. Those who read the Vedas will be benefitted by these positive phrases in the Vedas. Here are some examples. The three numbers denote the Chapter/Hymn/Mantra.

(Rig Veda has over 1000 hymns and over 10,000 mantras.)

Xxx

Agni

Sapient minded (wise) Priest, Truthful, Most Gloriously Great

RV.1-1-5

Xxx

Beautiful Vayu: RV1-2-1

Xxx

Naasatyas (Asvins/Twins) Wonder Workers . 1-3-3

Xxx

O Indra, Marvellously Bright! 1-3-4

Xxx

River Saraswati, the Mighty Flood 1-3-12

Xxx

River Sarasvati, with her illuminates, Brightens Every Pious Thought 1-3-12

Xxx

Comrades! Come here; Let us sing the Glory of Indra

1-5-1

Xxx

Indra, God of Wondrous Deeds 1-4-6

Xxx

Satakratu (Mr Hundred Deeds/Indra), Powerful in Fight

1-4-9

Xxx

Indra , Richest of the Rich.1-5-2

Xxx

Indra, Lover of Songs 1-5-7 (also 1-5-10)

Xxx

The Lights are Shining in the Sky  1-6-1

Xxx

Indra- Golden, Thunder Armed1-7-2

Xxx

Indra has raised the Sun high in Heaven 1-7-3

Xxx

Indra- a Ripe Branch to the Worshipper(Fruit Bearing Tree)

1-8-8

Xxx

O Lord of all Men 1-9-3

Xxx

Indra – O Most Splendid One 1-9-6

Xxx

Indra – The Treasure Lord of Wealth 1-9-9

Xxx

Indra – Lord of Power and Might 1-11-2

Xxx

Crusher of Forts : 1-11-4

Xxx

Agni – Master of all Wealth 1-12-1

Xxx

Agni, Lord of the House, Much Beloved 1-12-11/2

Xxx

Agni, Purifier, Bright, Effulgent Flame 1-12-10/12

Xxx

The Two Invokers I invite, the Wise, Divine and Sweet of Tongue- 1-13-8

Xxx

Sarasvati, Maahi, Ilaa, Three Goddesses bring Delight

1-13-9

Xxx

Adored , the Strengtheners of Law 1-14-7

Xxx

Visvedevas , The Flaming Ones 1-14-12

Xxx

Rtu , Wealth Giver 1-15-10

Xxx

Those who are Bright as Suns 1-16-1

Xxx

With Holy Thoughts we sing Your Praise 1-16-9

Xxx

To the Assembly’s Wondrous Lord 1-18-6

Xxx

Rbhus made Your Father and Mother Young Again

1-20-4

Xxx

Give Wealth, pleased with our Eulogies 1-20-7

Xxx

Most Youthful Agni 1-22-10

Xxx

Vishnu strode through the Seven Regions of the Earth

1-22-16

Xxx

Vishnu made Three Steps establishing His High Decrees

1-22-18

Xxx

Vayu, Swift as Mind 1-23-3

Xxx

Amrit is in the Waters; Healing Balm is in Water

1-23-19

Xxx

O Waters, teem with Medicine, Keep my Body Safe

1-23-21

Xxxx

Varuna , King, of Hallowed Might 1-24-7

Xxx

King Varuna made a spacious Pathway to Sun

1-24-8

Xxx

Varuna, you have 100 Medicines, O King, 1000 Balms

1-24-9

Xxx

Loosen the Bonds that hold me, Varuna, Above, Between and Under 1-24-15

Xxx

Far seeing Varuna 1-25-5

Xxx

Never do they fail the Ever faithful Worshipper 1-25-6

Xxx

May Aditya make fair paths for us; Mat He prolong our Lives

1-25-12

Xxx

He Who gives Glory to Mankind 1-25-15

Xxx

Lord of the Prospering Powers. 1-26-1

Xxx

O Son of Strength, O Immortal One 1-26- 9/10

xxx

I have covered only first 26 hymns out of 1000 +++ Hymns in the Rig Veda

Those who recite Vedas, and those who listen to Vedas will get only positive things in life.

—subham–

tags – Rig Veda, Mantras, Poitive Thoughts

பஞ்ச தந்திர, விக்ரமாதித்தன் கதைகளை ‘காப்பி’ அடித்த சி.எஸ்.லூயிஸ் (Post.9999)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9999

Date uploaded in London – 20 AUGUST  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஆங்கில நாவல்  ஆசிரியர்  சி. எஸ். லூயிஸ்

2500 ஆண்டுகளுக்கு முன்னால் இந்தியாவில் உலவிய தேவதை, பூதம், பேய், பிசாசு, மிருகங்களின் கதைகளை ‘காப்பி’ COPY  அடித்து ‘பழைய மதுவை  புதிய பாட்டிலில்’ விற்கும் ஒரு கும்பல்  இப்பொழுது கோடிக் கணக்கான டாலர்கள் சம்பாதிக்கின்றது ; ஹாரி பாட்டர் கதைகளைப் படிப்போர் அதன் அடிப்படை அந்தக் கால  அம்புலி மாமா (சந்த மாமா) பத்திரிகை கதைகள்தான் என்பதை அறிவார்கள். ஆனால் இப்படிக் காப்பி அடிக்கும் விஷயத்தை முதல் முதலில் சொல்லிக் கொடுத்தது புத்த மதத்தினரே. ராமாயணத்திலும், மகாபாரதத்திலும் பல அணில், கீரி , எறும்பு, கருடன்  கதைகள் வருகின்றன .

உலகிலேயே முதல் முதலில் பிராணிகள் பெயர்களில் புராணங்கள் இயற்றியவர்களே இந்துக்கள்தான். மச்ச புராணம், கூர்ம புராணம், கருட புராணம் என்பன சில எடுத்துக்காட்டுகள். பவுத்த மதத்தினர் பழைய கதைகள் அனைத்தையும் திரட்டி அவற்றை போதி சத்துவரின் பூர்வ ஜன்ம அவதாரங்கள் என்று கதை கட்டி, அவற்றை 550 ஜாதகக்  கதைகளாகத் தொகுத்தனர். அதை இந்தோனேஷியா, கம்போடியா, லாவோஸ் முதலிய நாடுகளில் சிற்பங்களாகவும் வடித்தனர். அவர்கள் நமது இந்து மத கதைகளைத் திருடியதிலும் ஒரு நன்மை. அவை  உலகெங்கும் பரவின.

இந்து மதக் கதைகளை ஈசாப் என்னும் கிரேக்கன் எகிப்தில் வேலை செய்தபோது ‘காப்பி’ அடித்து எழுதிய ஈசாப் நீதிக் கதைகளும் 2500 ஆண்டுப் பழமையானது என்று சொல்லுவார்கள் (ஆனால் ஆதாரம்  இல்லை).

இவற்றுக்கெல்லாம் மூலக் கதைகள் பல்லாயிரம் ஆண்டுகள் பமையான ரிக் வேதத்தில் உள்ளன. சோம லதா என்ற மூலிகையை பருந்து கொண்டு வருதல், கபிஞ்சலா என்ற பறவை சகுனம் எழுப்புதல், ததிக்ராவன் என்னும் பறக்கும் குதிரைகள், இதுவரை என்னவென்றே  தெரியாத பல பறவைகள்,  பூதங்கள் கதைகள் ரிக் வேதத்தில் உள்ளன .

இப்பொழுது அயர்லாந்தில் பிறந்து ஆங்கிலத்தில் சிறுவர் கதை எழுதி புகழ் பெற்ற கிளைவ் ஸ்டேபிள்ஸ் லூயிஸ் CLIVE STAPLES LEWIS எப்படிக் காப்பி அடித்து கிறிஸ்தவ மதத்தைப் பரப்பினார்  என்பதைக் காண்போம்.

இருபதாம் நூற்றாண்டின் நாவல் ஆசிரியர் சி.எஸ். லூயிஸ் புகழ் அடைந்ததற்குக் காரணம் அவர் எழுதிய நார்னியா தேவதைக் கதைகள் THE CHRONICLES OF NARNIA ஆகும். இவற்றில் 2500 ஆண்டுகளாக இந்தியாவில் படிக்கப்படும் பஞ்ச தந்திர, வேதாளக் கதைகளைக் காணலாம். ஆனால் அவர் இதை கிறிஸ்தவ மதக் கொள்கைகளைப் பரப்ப பயன்படுத்தினார் . சிறுவற்கான கதை என்ற முறையில் அவை சிறந்த கதைகளே.

இப்பொழுது பிரிட்டனின் கட்டுப்பாட்டில் இருக்கும் வட அயர்லாந்தின் பெல்பாஸ்ட் BELFAST  நகரில் லூயிஸ் பிறந்தார். ஒன்பது வயதில் அவர் தாயாரை இழந்தார். இதனால் பள்ளியிலேயே தங்கிப் படிக்கும் ‘போர்டிங் ஸ்கூலு’க்கு BOARDING SCHOOL அனுப்பப்பட்டார். தாயாரை பறிகொடுத்த  வருத்தம் ஒரு பக்கம்; குடும்பத்தைப் பிரிந்து ஹாஸ்டலிலேயே வாழும் அவலம் மறுபக்கம். ‘போதாக்குறைக்கு பொன்னியும் வந்தாளாம்’ என்ற பழமொழிக்கேற்ப போர்டிங் பள்ளியின் கடுமையான கட்டுப்பாடுகளும் அவரை வாட்டி வதைத்தன.

இளைஞராக இருந்தபோது முதல் உலகப் போரில் கட்டாய ராணுவ சேவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். போரில் பலதத காயம் அடைந்து நீண்ட காலம் சிகிச்சை பெற்றார். பின்னர் 1918ம் ஆண்டில்  ஆக்ஸ்போர்ட் OXFORD  பல்கலைக் கழகத்தில் கற்கச் சென்றார். அதே ஊரில் 35 ஆண்டுகள் தங்கி பணி புரிந்தார். சிறந்த அறிவாளி. ஆகையால் 27 வயதிலேயே பல்கலைக்கழக ஆசிரியர் ஆனார். 30 வயதுக்குப் பின்னர் கிறிஸ்தவ மதத்தில் பற்றுக்கொண்டு, மதக் கொள்கைகளைப் பரப்பும் கதைகளை எழுதினார். கிறிஸ்தவ மதக் கொள் கைகளுக்கு விஞ்ஞானப்  பூச்சுக் கொடுத்து மூன்று தொகுதிகளாக OUT OF THE SILENT PLANET ‘அவுட் ஆப் தி சைலன்ட் பிளானட்’ என்ற நாவலை 1938ல் வெளியிட்டார்.

50 வயதுக்குப் பின்னர் கிறிஸ்தவ மதக் கொள்கைகளைப் போற்றும் சிறுவர் கதைகளை THE CHRONICLES OF NARNIA ‘தி க்ரானிக்கிள்ஸ் ஆப் நார்னியா’ என்ற பெயரில் 7 தொகுதிகளாக வெளியிட்டார் . இந்தக் கதைகள் ஒரு சிறுவர், சிறுமியர் அணி மாயாஜால உலகில் பயணம் செய்யும்போது மிருகங்களை சந்தித்து பேசுகின்றனர். இந்தக் கதைகள் அக்காலத்தில் மிகவும் புகழ்  அடைந்தன. இப்பொழுதும் சிறுவர் சிறுமியர்களுக்கு பெற்றோர்கள் அந்தக் கதைப் புஸ்தகங்களை வாங்கிக் கொடுக்கின்றனர்.

இந்தியாவில் புகழ் பெற்ற மயில், காகம் முதலிய பறவைகளை ஈசாப் பயன்படுத்தினார். அதே போல இந்தியாவில் புகழ் பெற்ற சிங்கம் முதலியன லூயிஸ் கதைகளிலும் வருகின்றன.

பிறந்த தேதி — நவம்பர் 29, 1898

இறந்த தேதி — நவம்பர் 22, 1963

வாழ்ந்த ஆண்டுகள் — 64

எழுதிய கதைகள் , நாவல்கள்

1926- DYMER

1938 – OUT OF THE SILENT PALNET

1942- THE SCREWTAPE LETTERS

1943- PARELANDRA

1945 – THE HIDEOUS STRENGTH

1950 – THE LION, THE WITCH, AND THE WARDROBEE

1954- THE HORSE AND HIS BOY

1955- THE MAGICIAN’S NEPHEW

1956 – THE LAST BATTLE

–SUBHAM–

tags- ‘காப்பி’ அடித்த,  சி.எஸ்.லூயிஸ், C S Lewis, Chronicles of Narnia

தம்மை மறந்து ஆடுவோரே உண்மை பக்தர்கள்! (Post No.9998)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9998

Date uploaded in London –  20 AUGUST  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

 வைணவ அமுதம்

பக்திப் பெருக்கால் தம்மை மறந்து ஆடுவோரே உண்மை பக்தர்கள்!

ச.நாகராஜன்

எம்பெருமானின்மீது அளவிலா பக்தியும் அன்பும் உண்மையாகக் கொண்டிருப்பார் எனில் அவர்கள் பைத்தியக்காரன் போல வேறு எதையும் எண்ணாமல் வீதிகளில் ஆட வேண்டும். அப்படி இல்லை எனில் அவர்கள் இறை அன்பைக் கொண்டிருக்கவில்லை என்றே அர்த்தம் என்கிறார் நம்மாழ்வார்.

இதற்கு எடுத்துக்காட்டாக ஒரு சம்பவத்தைக் கூறலாம். ராமானுஜரின் சீடர்  கூரத்தாழ்வான். அவர் வாழ்ந்த காலத்தில் அரசாண்ட மன்னனுக்கு வைஷ்ணவம் என்றாலே பிடிக்காது. அவன் ஒரு சமயம் ஏழைகளுக்காகப் பல வீடுகளைக் கட்டினான்.

கூரத்தாழ்வான் அரசனிடம் சென்றார்: “அரசே! நீங்கள் கட்டிய வீடுகளில் எனக்கு ஒன்றைத் தாருங்கள்” என்று கேட்டார்.

அரசன், “உனக்கு ஒன்றும் தர முடியாது” என்றான்.

ஆழ்வான் : “ஏன், மன்னா! எனக்கு வேத சாஸ்திரம் தெரியாது என்று எண்ணி விட்டீர்களா?  அப்படி நினைத்தீர்கள் என்றால் என்னை சோதித்துப் பாருங்கள்”

அரசன் : அது காரணமில்லை. அந்த வேத சாஸ்திரங்களில் எல்லாம் நீர் வலல்வரே. ஆனால் உமக்குத் தர முடியாது என்று சொன்னதற்கான காரணம் நீர் ஒரு வைஷ்ணவர் என்பதால் தான்!

ஆழ்வான் : ஆஹா! அப்படியா விஷயம்?! எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது இதைக் கேட்க! நான் என்னை ஒரு வைஷ்ணவன் என்று கூறிக் கொள்ளும் தகுதி இல்லாதவன் என்றல்லவா இது வரை நினைத்து வந்தேன். ஆனால் அரசனாகிய நீங்களே என்னை ஒரு வைஷ்ணவன் தான் என்று உங்கள் வாயாலேயே கூறி விட்டீர்களே

இப்படிச் சொல்லியவாறே கூரத்தாழ்வான் தன் உத்தரீயத்தை உயரே தூக்கி எறிந்தார். அங்கேயே ஆனந்தமாக நடனமாட ஆரம்பித்தார்.

சாது சனத்தை நலியும் கஞ்சனைச் சாதிப்பதற்கு

ஆதியஞ் சோதி உருவை அங்கு வைத்து இங்குப் பிறந்த

வேத முதல்வனைப் பாடி வீதிகள் தோறும் துள்ளாதார்

ஓதி உணர்வர் முன்னா என்சவிப்பார் மனிசரே

என்பது நம்மாழ்வாரின் திருவாய்மொழியில் 3-5இல் வரும் பாடலாகும்.

வேத முதல்வனைப் பாடி வீதிகள் தோறும் நடனமாடித் துள்ளாதார் எப்படி ஒரு வைணவனாக இருக்க முடியும்!

அவனை நினைக்கும் போதே ஆனந்தம் தான் ; துள்ளல் தான்!

இதை இப்படி பகவத் விஷயம் நூல் விவரிக்கிறது.

ஆதாரம் : பகவத் விஷயம் பாகம் 3 – சாது சனம் (||| – 5-5)

 ***

INDEX

நம்மாழ்வார் திருவாய்மொழி – சாது சனத்தைப் பாசுரம்

பகவத் விஷயம் விளக்கம்

கூரத்தாழ்வான், அரசனிடம் வீடு கேட்டல்

அரசன் அவனை வைஷ்ணவன் என்று கூறி வீடு தர மறுத்தல்

ஆழ்வானின் ஆனந்தம்

tags- பக்தி,  ஆடுவோர் , உண்மை, பக்தர்கள்,

ரிக் வேதத்தில் பருந்து மர்மம்!! (Post No.9997)

Research Article WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9997

Date uploaded in London – 19 AUGUST  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

சோம லதை எனப்படும் சோமக்கொடியை மலையின் உச்சியிலிருந்து  பருந்துகள் கொண்டு வருவதாக ரிக் வேதப்  புலவர்கள் பலர் பாடியுள்ளனர். சோம ரசம் பற்றி அண்டப் புளுகு ஆகாசப் புளுகு  புளுகிய இரண்டு டஜன் பேர்வழிகள், வெள்ளைத் தோல்  அறிவிலிகள் , அரை வேக்காடுகள் இது பற்றி மவுனம் சாதிக்கின்றன. பிற்காலத்தில் கருட புராணத்தில் கருடன் அமிர்தம் கொண்டு வந்த கதைக்கும் இதற்கும் தொடர்பு இருக்கலாம். ‘இதுதான் சோம லதை , அதுதான் சோமக் கொடி’ என்றெல்லாம் படம் வரைந்து காட்டி 150 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஒரு பயலும் சோமரசம் செய்து, டப்பாவில் அடைத்துவிற்கவும் முன்வரவில்லை. இது ஒன்றே போதும் அவர்கள் சொன்னதெல்லாம் முழுப் பொய் , அபத்தக் களஞ்சியம் என்று காட்ட.

இனி ரிக்வேதப் புலவர்கள், பருந்து பற்றி பாடியுள்ள சுவையான சில இடங்களையும். அது சோமம் என்னும் அற்புத மூலிகையைக் கொண்டுதரும் பாடல்களையும் காண்போம் .

‘ஸ்யேன’ என்ற சொல்லை பருந்துக்கும் ‘சுபர்ண’ என்ற சொல்லை கருடன், கழுகுக்கும் வேத கால ரிஷிகள் பயன்படுத்தியுள்ளனர். சுமார் 65 இடங்களில் ‘ஸ்யேன’ என்ற சொல் வருகிறது. இதை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்போர் FALCON பால்கன், HAWK ஹாக் என்ற சொற்களை பயன்படுத்துகின்றனர். நாம் அதை பருந்து , ராஜாளி என்று சொல்லலாம். ஜம்புநாத ஐயர் ரிக்வேதத்தை மொழி பெயர்க்கையில் ‘பருந்து’ என்ற தமிழ்ச் சொல்லையே பயன்படுத்துகிறார்.

இதோ ரிக் வேதப்  பாடல்கள் (மந்திரங்கள்)

RV.1-32-14

“இந்திரனே! நீ அஹி என்னும் பாம்பைக் கொல்லும்போது உன் இருதயத்தில் பயம் ஏற்பட்டதா? அப்படிப்பட்ட தருணத்தில் நீ யார் உதவியை நாடுவாய்?

நீ 99 நதிகளை பருந்து கடப்பது போல கடந்து விட்டாயே!”

இங்கு 99 நதிகள் என்று வருவது இன்னும் ஒரு புதிர் போடுவதாக இருக்கிறது. டெசிமல் சிஸ்டம் DECIMAL SYSTEM என்னும் தசாம்ச முறையை இந்துக்கள் கண்டுபிடித்தால்தான் இன்று நாம் கம்பியூட்டர் , இன்டர்நெட் முதலியவற்றைப் பயன்படுத்துகிறோம். நூற்றுக் கணக்கான மந்திரங்களில் 10, 100, 1000, 10,000 இது போல நிறைய எண்கள் வருகின்றன. அப்படி இருக்கையில் 99 என்று சொல்லுவது ஏனோ? இந்திரனுடைய பெயரே திருவாளர் நூறு (MR ONE HUNDRED DEEDS சதக்ரது). 99 நதிகள் என்பதால் ரிக் வேத கால இந்துக்களுக்கு நிறைய நதிகள் பெயர் தெரிந்ததும் புலனாகிறது. இங்கே இந்திரனை பருந்துக்கு ஒப்பிட்டதைக் கண்டோம்.

xxx

இந்தப் பாடலையும் முந்திய பாடலையும் பாடியவர் ஹிரண்ய ஸ்தூபன்/ தங்கத் தூண் GOLD PILLAR!!

எவ்வளவு செல்வம் இருந்தால் இப்படி தங்கத் தூண் என்று பெயரிட்டிருப்பார்கள்!!!  வேதம் முழுதும் தங்கம் என்ற சொல் எண்ணற்ற இடங்களில் வருகிறது.

XXX

RV.1-33-2

“நான் இந்திரனைப் போற்றிப் பாடியவாறே உச்சி மரக்கிளையிலுள்ள கூட்டிற்குப் பாய்ந்து செல்லும் பருந்து போல , இந்திரனை நோக்கிப் பாய்ந்து  செல்கிறேன்”.

xxxx

RV.2-42-1/3

இது ஒரு சுவையான குட்டிக் கவிதை.

பாரதியார் குயில், சிட்டுக்குருவி போன்ற பறவைகளைப் பாடும் வகையில் நமக்கு உயர்ந்த தத்துவங்களைப்  போதிக்கிறார். ஆங்கிலத்தில் ஷெல்லி, கீட்ஸ் (SHELLEY AND KEATS) போன்ற பாவலர்களும் பறவைகளைப் பாடிப்பரவுகின்றனர்; புறநானூற்றுப் புலவரும் பிற்கால சத்திமுற்றத்துப் புலவரும் நாரையைப் பாடி மகிழ்கின்றனர். இவர்களுக்கு எல்லாம் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ரிஷி க்ருத்சமதன், கபிஞ்சலா என்ற பறவையைப் பாடுகிறார். அதுதான் பறவையை சகுனத்துடன் தொடர்பு படுத்தும் ஜோதிடப் பாடல். பிற் காலத்தில் பஞ்சாங்கத்தில் கூட பஞ்ச பட்சி சாஸ்திரத்தைப் பார்க்கிறோம். சகுனம் என்றாலே பறவை என்றுதான் அர்த்தம் இந்தப் பாடலில் கபிஞ்சலா என்னும் பறவையை பாடுகையில் உன்னை கருடனோ பருந்தோ கொல்லாமல் இருக்கக் கடவது என்று புலவர் ஆசீர்வதிக்கிறார்..

Xxx

RV.3-43-7

ரிஷி காதினன் விஸ்வாமித்திரன் 3-43-7 மந்திரத்தை ஓதுகிறார் :-

“இந்திரனே நீ விரும்பியபோது பருந்து கொண்டு வந்து தருகின்ற சோமக்கொடியைப் பிழிந்து தருகிறோம். குடியுங்கள்.”

இங்கே பருந்துக்கும் சோமத்துக்கும் உள்ள தொடர்பைக் காண்கிறோம்.

Xxx

RV.4-18-3

வாமதேவன் கௌதமன் என்ற ரிஷி பாடிய இந்தத் துதி 4-18-13 மிகவும் புகழ்பெற்றது . அதை மனுவும் கூட மநு ஸ்ம்ருதியில் குறிப்பிடுகிறார். ஆபத்து காலத்தில் உயிரைக் காப்பாற்றுவதே தருமம்; ஆகையால் எதையும் சாப்பிடலாம், எதையும் செய்யலாம் என்பதே இதன் பொருள். இதிலும் பருந்து – சோம லதா விஷயம் வருகிறது .

“நான் மிகுந்த வறுமையில் வாடிய காலத்தில் நாயின் குடலைச் சமைத்தேன். இந்திரனைத் தவிர வேறு எவரும் உதவவில்லை அவமதிக்கப்பட்ட என் மனைவியைப் பார்த்தேன்; பிறகு பருந்து  எனக்கு இனிய சோமத்தைக் கொண்டுவந்தது.”

XXX .

RV.4-26-,5,6,7

வாமதேவ ரிஷியின் 4 மந்திரங்கள் மேலும் பல தகவல்களைத் தருகிறது

பருந்துக்கு /கருடனுக்கு/ கழுகுக்கு ஏன் புகழ் என்று அவர் இயம்புகிறார் .

“4. மருத்துக்களே !  எல்லா பருந்துகளைக் காட்டிலும்  இந்தப் பறவை மிக்க புகழுள்ளதாகுக .

ஏனெனில் இந்த சுபர்ணன்;  சக்கரமில்லாத தேரிலே தேவர்களால் ஏற்கப்பட்ட சோமத்தை மநுவுக்கு ஏந்திச் சென்றது .

5.பறவை, அதைக் காப்போரை பயமுறுத்தி சோமத்தை அபகரித்துச் சென்றது . மனோ வேகத்தோடு வானத்தில் வேகமாகப் பறந்து, இனிய சோம மூலிகையோடு  சென்றது. அதனால் இவ்வுலகில் பருந்துகள் புகழப்படுகின்றன

(கருட வாஹனம், கருட புராணத்திற்கு பீடிகை போடும் மந்திரம் இது)

6.நேராகப் பறக்கும் பருந்து , வெகு தூரத்திலிருந்து சோமத்தை ஏந்திவந்தது. மகிழ்ச்சியை அளிக்கும் சோமத்தை உயரேயுள்ள சொர்க்கத்திலிருந்து ,  எடுத்து வந்தது.

7.பருந்து 1000 யக்ஞங்களையும் 10,000 யக்ஞங்களையும் தரித்து சோமத்தை எடுத்து வந்தது. பல செயல்களை செய்ய வல்லவனும், சர்வக்ஞனுமான இந்திரன் சோமத்தின் மகிழ்ச்சியில் திளைத்து சத்ருக்களைக் கொன்றான்”

XXXX

இது போல இன்னும் ஏராளமான பகுறிப்புகள்  உள்ளன. ஒரு மண்டலம் முழுதுமே சோமக் கொடி என்னும் மூலிகை பற்றி உள்ளது. அவற்றைத் தனியாகக் காண்போம்..

இந்த பருந்து – ஸோம குளிகை சம்பந்தம் பற்றி  எவராலும் திருப்தியான விளக்கம் தர முடியவில்லை.

சோமத்தை அடையாளம் கண்டுபிடித்து விட்டதாகக் கூறும் அரை வேக்காடுகள் இதற்கு என்ன விளக்கம் சொல்லப் போகிறார்கள்? வேதங்களை ஐரோப்பிய மொழிகளில் மொழிபெயர்த்து 150 ஆண்டுகள் ஆகிவிட்டதே. இன்னுமா தெரியவில்லை?

2000 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்ச் சங்க இலக்கியம் தோன்றியது. அந்த 18 நூல்களிலுள்ள சுமார் 30,000 வரிகளில் அமிர்தம், வேள்வி, யூப தூண் , கங்கை ,இமயம், அருந்ததி, இந்திரன், ராஜசூய யாகம், பருந்து வடிவமுள்ள யாக குண்டம், நான் மறை முதலியன  உண்டு. ஆனால் சோம பானம் பற்றிய குறிப்பு கிடையாது. அந்தக் காலத்திலேயே சோம லதா என்னும் செடி கொடி வகை அழிந்து விட்டது என்றே கருத வேண்டும் .

–subham–

tags- சோம ரசம், சோம லதா, சோம கொடி ,பருந்து , ஸ்யேன, சுபர்ண, ரிக்வேதம்

ரஷிய கவிஞர், மீனவர் மகன் மிகைல் லொமொனோசொவ் (Post No.9996)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9996

Date uploaded in London – 19 AUGUST  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

மிகைல் லொமொனோசொவ் MIKHAIL LOMONOSOV , ரஷியாவில் மீனவர் மகனாகப் பிறந்தார். பெரும் கவிஞராகவும் விஞ்ஞானியாகவும், மொழிகள் பற்றிய அறிஞராகவும் உயர்ந்தார். நம்ம ஊர் வேத வியாசரை நினைவு படுத்துகிறார் மிகைல் லொமனோசொவ்.

அவர்  பல விஞ்ஞானக்  கண்டுபிடிப்புகளை செய்தார் .ரஷிய மொழியை இலக்கியத்திற்கு ஏற்றவாறு செம்மைப்படுத்தினார் . தானே பல விஷயங்களையும் கவிதைகளையும் எழுதி முன்னோடியாகத் திகழ்ந்தார்.

மிகைல் லொமனோசொவ் LOMONOSOV ரஷியாவின் வட பகுதியில் ஒரு மீனவரின் மகனாகப் பிறந்தார்.

அவர் தந்தையின் தொழிலைப் பின்பற்றி மீன் பிடித்து வந்தார். ஆயினும் அவருக்கு அறிவு வேட்கை பிறந்தது. கல்வி கற்கத்  துடியாய்த் துடித்தார்.19 வயதானபோது கையில் கால் துட்டுக் காசு இல்லாமல் நடந்தார் , நடந்தார் தலைநகர் மாஸ்கோவுக்கே நடந்தார்.

மாஸ்கோவுக்கு வந்த லொமொனோசொவ் தன்னுடைய குலம், கோத்திரம் ஆகியவற்றை மறைத்து, புமையை மட்டும் காட்டி, உயரர்ல மக்கள் மட்டுமே கற்கும் பெரிய கல்வி நிறுவனங்களில் பயின்றார். அவரது புலமையை அறிந்த, ஆசிரியர்கள் அவரை 25 வயதில் உயர்கல்விக்காக ஜெர்மனிக்கு அனுப்பினர். அங்கே அவர் கவிதைகளை எழுதத் துவங்கினார். படிப்பு முடிந்து ரஷியாவுக்குத் திரும்பிய அவருக்கு செயின்ட் பீட்டர்ஸ்பர்க் அகாடமியில் ACADEMY OF St. PETERSBURG ரசாயனப் பேராசிரியர் பதவி கொடுக்கப்பட்டது. இது நடந்தது 1745ம் ஆண்டில்.

ரஷ்யாவின் முதல் ரசாயன சோதனைச் சாலையை முதல் முதலில் நிறுவினார் . பல்வேறு துறைகளில் ஆராய்ச்சி செய்தார்.  பன்னாட்டு ஆராய்ச்சிகளையும் விட இவர் முன்னனியில் நின்றார்; தாய் நாடாகிய ரஷ்யாவை மிகவும் நேசித்த அவர் அங்கே விஞ்ஞானத்தையும் கலாசாரத்தையும் பரப்புவதே தமது கடமை என்று கருதினார்.. அக்காலத்தில் பிரெஞ்சு மொழிதான் பெரிய இலக்கிய மொழி என்று கருதப்பட்டது, அதற்கு மாற்றாக ரஷ்ய மொழி திகழ அவர் அரும்பாடுபட்டார் . ரஷ்யாவின் பல பகுதிகளில் ரஷ்ய மொழி வெவ்வேறுவிதமாகப் புழங்கியது. அவற்றை எல்லாம் ஆராய்ந்து ரஷ்ய மொழியைச் செம்மைப்படுத்தினார். இலக்கியத்துக்காக மூன்று வகை பாணியை – STYLES ஸ்டைலை உருவாக்கினார். கதைகள், சோக நிகழ்வுகள், நகைச்சுவை படைப்புகள், இதிகாசங்கள் ஆகியவற்றுக்கு என தனித்தனி பாணிகளை வகுத்தார். அவரே கவிதைகள் எழுதியதோடு ரஷ்ய மொழியில் நிறைய  விஞ்ஞான ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் எழுதினார்.

பிறந்த தேதி -நவம்பர் 19, 1711

இறந்த தேதி – ஏப்ரல் 15, 1765

வாழ்ந்த ஆண்டுகள் – 53

எழுதிய நூல்கள் –

1743 – Morning Meditation

1743 – Evening Meditation on the

Majesty of God

1750 – Tamira and Selim

1752- Demofont

1756 – Hymn to the Beard

-subham–

tags- ரஷிய கவிஞர், மீனவர் மகன்,  மிகைல் லொமொனோசொவ், Lomonosov

June 2020 London Swaminathan Articles, Index-91 (Post No.9995)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9995

Date uploaded in London – 19 AUGUST  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

HOW TO GET ACCESS FOR THESE POSTS? 

JUST COPY THE TITLE YOU WANT TO READ AND PASTE IT IN GOOGLE SEARCH AND ADD “FROM tamilandvedas.com or from swamiindology.blogspot.com”

IF YOU HAVE ANY PROBLEM, PLEASE CONTACT US. OUR E MAIL IS IN ALL THE 9900 PLUS POSTS.

xxx

June 2020 Index 91

300 Languages in London and Gang Slang,8086;June 1,2020

Rigvedic words in Tamil Sangam literature-5;8088;2/6

Mysterious Sound in Bengaluru, Mahabharata and USA,8095;3/6

Swami’s crossword 362020;8099;3/6

Swami’s crossword 462020;8106

Rigvedic Words…. Part 6;8102;4/6

Khadita and Modata, Eat and be Happy, a Dining Hall

2700 years ago, 8109;5/6

I and You didn’t change for 15000 years in English,8111;5/6

Swami’s crossword 662020;8119;

Swami’s crossword 762020;8126

139 Holy Rivers and 39 Holy Lakes of India,8124;7/6

Swami s crossword 862020;8130

Interesting Treatment for Sickness- Rasgollas and

Rice dish,8137;9/6

Swami’s crossword 1062020;8145

Diet coke wonder 8151,11/6

David in Florence – 8150, 11/6

Swami’s crossword 1262020;8158

Indus Valley Civilization and Jain Religion, 8160, 12/6

One head for two sisters, 8159, 12/6

Mr Brickman, 8165, 13/6

Swami’s crossword 1362020; 8167

Woman gives Electric Shock,8172, 14/6

Omkara ,Dasavatara, Hindu saints in Sikh Holy Book of 6000

Verses,8173, 14/6

How Big will be Manu’s Ship Today? 8179, 15/6

Swami’s crossword 1562020; 8181,15/6

Swami’s crossword 1662020; 8188

Swami’s crossword 1762020; 8194

Two Ganga rivers with Healing Powers discovered in Russia,

8187, 16/6

Lord Shiva’s names in Ashtottara and its meaning in English,8193, 17/6

Swami’s crossword 1862020; 8201

Swami’s crossword 1962020; 8208

Swami’s crossword 2062020; 8214

Swami’s crossword 2162020; 8220

Swami’s crossword 2262020; 8226

Sangam 2700 years ago, 8212, 20/6

Greeks also echo Vedic Views on War, 8218, 21/6

100 Earths, 1000 Suns in Rigveda, They Knew Aliens; 8224,22/6

Origin of Hindu Iconography, 8229,22/6

Muslim Invasions stopped Ratha Yatra 32 Times, 8230, 23/6

Swami’s crossword 2562020; 8241

KA is Brahma- Interesting Information from Panini and

 Kautilya, 8240, 25/6

Life is too short to be spent in Talking about Frauds

(July Calendar), 8250, 27/6

Never Sick Again, 29/6, 8260

Rig Vedic Wedding Scene in Turkey, 8265, 30 June,2020

Xxx

Tamil Articles from June 2020

தமிழ் ஒரு வினோத மொழி, 8083,1 ஜூன் 2020

ஆல மரம் – 4 பழமொழிகளைக் கண்டுபிடியுங்கள் ,8085;1/6

ஆங்கில மொழி விநோதங்கள்;8091, 2/6

4 கழுதைப் பழமொழிகளைக் கண்டுபிடியுங்கள் ,8092;2/6

3 குதிரைப் பழமொழிகளைக் கண்டுபிடியுங்கள் ,8098;3/6

பெங்களூரில் மர்ம ஒலி – புதிய விளக்கங்கள்; 8097;3/6

கிளி பற்றிய  4 பழமொழிகளைக் கண்டுபிடியுங்கள் ,8104;4/6

15,000 ஆண்டுக்கு முன் மனிதன் பயன்படுத்திய சொற்கள்;8105;4/6

மான்  பற்றிய  3 பழமொழிகளைக் கண்டுபிடியுங்கள் ,8113;5/6

உலகின் அபூர்வ தபால்தலை – 10 லட்சம் டாலர்,8112,5/6

கப்பல்  பற்றிய  3 பழமொழிகளைக் கண்டுபிடியுங்கள் ,8118;/6

நல்லா சாப்பிடுங்க, ஜமாய்ங்க -2700 ஆண்டுக்கு

முன் கேட்ட பேச்சு,8116;6/6

அதிசய அரிசி மருத்துவம்; 8129;8/6

கோபுரம் பற்றிய  4 பழமொழிகளைக் கண்டுபிடியுங்கள் ,8125;7/6

தேள் பற்றிய  4 பழமொழிகளைக் கண்டுபிடியுங்கள் ,8132;8/6

ஆடு  பற்றிய  4 பழமொழிகளைக் கண்டுபிடியுங்கள் ,8139;9/6

புலி  பற்றிய  4 பழமொழிகளைக் கண்டுபிடியுங்கள் ,8144;10/6

கம்போடியா- காஞ் சீபுரம் தொடர்பு ;8135; 9/6

சின்னச் சின்ன அதிசயங்கள் 8138;9/6

காந்தப் பையனும்  கணிதக் குதிரையும் ;8142;10/6

எ லி  பற்றிய  4 பழமொழிகளைக் கண்டுபிடியுங்கள் ,8148;11/6

கொக்கோ கோலா வாண வேடிக்கை , 8152, 11/6

இதாலியின் புகழ்பெற்ற டேவிட் சிலை , 8150,11/6

4 எருமைப் பழமொழிகளைக் கண்டுபிடியுங்கள் ,8157;12/6

போர்ச்சுகல்லில் கோமாதா கோவிலை கிறிஸ்தவர்கள் உடைத்த

கொடுமை, 8155, 12/6

2 தலை, மூளை ஒன்று: மருத்துவ அதிசயம், 8159, 12/6

முதலை   பற்றிய  4 பழமொழிகளைக் கண்டுபிடியுங்கள் ,8166;13/6

மிஸ்டர் செங்கல் வாயன், 8165, 13/6,

ஒரு கிலோ புதையல் விலை 75,000 பவுன், ! சப்பிடலாம்!8163, 13/6

சம்சாரம் தொட்டால் மின்சாரம் 8172, 14/6

4 ஆமைப்  பழமொழிகளைக் கண்டுபிடியுங்கள் ,8170; 14/6

நரி   பற்றிய  4 பழமொழிகளைக் கண்டுபிடியுங்கள் ,8177,15/6

நல்ல கதை – டான்ஸ் ஆடிய யானை , 8180, 15/6

நண்டு  பற்றிய  4 பழமொழிகளைக் கண்டுபிடியுங்கள் ,8184,16/6

காகம்  பற்றிய  4 பழமொழிகளைக் கண்டுபிடியுங்கள் ,8191,17/6

ரஷியாவுக்குள் கங்கை நதி! சிந்துவெளி நாகரீகம் ; 8186;16/6

ரிக்வேத எட்டாவது மண்டலத்தில் அதிசயங்கள், 8195, 17/6

பேய்  பற்றிய  4 பழமொழிகளைக் கண்டுபிடியுங்கள் ,8198, 18/6

வேதமே கடவுள், மனிதர் ஆகியோரின் கண்கள்-

மநு நீதி நூல் நிறைவு, 8202, 18/6

கருடன் பற்றிய  4 பழமொழிகளைக் கண்டுபிடியுங்கள் ,8207,19/6

மனைவி கிடைப்பான், நண்பன் கிடைப்பான், தம்பி

கிடைக்காது, 8206, 19/6

4 கரடி  பழமொழிகளைக் கண்டுபிடியுங்கள் ,8213,20/6

பன்றி  பற்றிய  4 பழமொழிகளைக் கண்டுபிடியுங்கள் ,8219, 21/6

ஓணான் பற்றிய  4 பழமொழிகளைக் கண்டுபிடியுங்கள் ,8225,22/6

வேத கால மக்களுக்கு வெளி உலகவாசிகள் பற்றித் தெரியும் ? 8231,23/6

4 அணில் பழமொழிகளைக் கண்டுபிடியுங்கள் , 8232, 23/6

4 தவளை/தேரை   பழமொழிகளைக் கண்டுபிடியுங்கள் , 8236, 24/6

பாண்டிய கல்வெட்டு அதிசயம் ,8235, 24/6

4 சந்திரன்  பழமொழிகளைக் கண்டுபிடியுங்கள் , 8240, 25/6

4 சித்திரை மாத  பழமொழிகள்  கண்டுபிடியுங்கள் , 8245, 26/6

இனியவை பெறினும்  தனி தனி நுகர்கே ம், 8244, 26/6

ஹிட்லர் பயம், ஸ்வஸ்திகா பயம், மில்லியன் ரூபாய் வேஸ்ட்,8246,27/6

4 ஆனி  மாத  பழமொழிகள்  கண்டுபிடியுங்கள் , 8249, 27/6

4 ஆடி  மாத  பழமொழிகள்  கண்டுபிடியுங்கள் , 8254, 28/6

4 ஆவணி  மாத  பழமொழிகள்  கண்டுபிடியுங்கள் , 8259, 29/6

ரா, ரா, ரா, ரா 26 அழகிய சொற்கள் , 8261, 29/6

4 ஐப்பசி  மாத  பழமொழிகள்  கண்டுபிடியுங்கள் , 8266, 30/6

ஆஸ்துமாவுக்கு ஆனியன், டயபடீஸுக்கு நிலக்கடலை ,8264,306

துருக்கியில் ரிக்வேத கல்யாண காட்சி, 8258, 29/6

தசரத, அதிரத ,அதிமத , அவப்ருத , 8255;30/6

மன்மத லீலை பற்றிய 31 பழமொழிகள்,8253, 30 ஜூன் 2020

–subham–

 tags — Index 91, June 2020, Swaminathan, articles, London 

மந்த்ராலய மஹான் ஸ்ரீ ராகவேந்திரர்! – 3 ( (Post No.9994)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9994

Date uploaded in London –  19 AUGUST  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

மந்த்ராலய மஹான் ஸ்ரீ ராகவேந்திரர்! – 3

1812ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசு, கோயில் உள்ள ஒரு இடத்திற்கு வாரிசுகள் யாரும் இல்லையெனில் அதை அரசே எடுத்துக் கொள்ளலாம் என்று ஒரு அறிவிப்பை வெளியிட்டது. இந்த புது சட்டத்திற்கு ‘Resumption of Inam Lands Regulation’  என்று பெயர் இந்தச் சட்டத்தின் படி  ‘Permanent Settlement’ செய்தால் மாஞ்சாலி கிராமம் முழுவதுமே அரசு எடுத்துக் கொள்ளும். பொதுமக்களிடம் இந்த அறிவிப்பிற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. ஆகவே இது பற்றி ஆராய்ந்து முடிவெடுக்க ஒரு ஆபீஸரை நியமிக்க அரசு முடிவெடுத்தது.

சர் தாமஸ் மன்ரோ அப்போது பெல்லாரி மாவட்ட ஆட்சியாளராக இருந்தார். அவரை செட்டில்மெண்ட் ஆபீஸராக அரசு நியமித்தது. அரசு அதிகாரிகள்  யாரும் எந்த வித நடவடிக்கையையும் எடுக்க முன்வராத நிலையில், ஒரு நாள் தாமஸ் மன்ரோ தானே நேரில் பிருந்தாவனம் வந்தார். அவருடன் கூட அதிகாரிகளும் வந்தனர்.

மந்த்ராலயம் வந்தவர் கோவிலின் வாயிலில் ஒரு கணம் நின்றார். தன் ஷூவைக் கழட்டினார். தொப்பியையும் எடுத்தார். யாரோ ஒருவருடன் பேச ஆரம்பித்தார். ஆங்கிலத்தில் நடந்த அந்த சம்பாஷணை வெகு நேரம் நீடித்தது. கூட வந்தவர்கள் திகைத்தனர். ஏனெனில் மன்ரோவின் முன்னால் யாருமே இல்லை. பேச்சு முடிவிற்கு வந்ததற்கு அடையாளமாக மன்ரோ தனது பாணியில் ஒரு சல்யூட் வைத்தார். அவருக்கு ஆலயத்திலிருந்து மந்த்ரா க்ஷதை கொடுக்க ஆலயத்திலுள்ளோர் வந்த போது தன் கையில் ஏற்கனவே இருந்த அக்ஷதையை அவர் காண்பித்தார். மந்த்ராலய மகானான ராகவேந்திரரே அவர் முன் தோன்றி இந்த இடம் மசூத்கானால் இனாமாக கொடுக்கப்பட்ட வரலாறு அனைத்தையும் உகந்த முறையில் தெள்ளத் தெளிவாகக் கூற மன்ரோவிற்கு அவர் கூற்றின் நியாயம் புரிந்தது. வேறு யாருக்கும அவர் தென்படவில்லை என்பதும் அவர் ஜீவ சமாதி எய்தி நெடுங்காலம் ஆயிற்று என்பதையும் உணர்ந்து கொண்ட மன்ரோவிற்கு பயபக்தி ஏற்பட்டது. சாஷ்டாங்க நமஸ்காரம் செய்து அங்கிருந்து புறப்பட்டார்.

அந்த நிலத்தை அரசு கையகப்படுத்த முடியாது என்பதை உரிய ஆதாரங்களுடன் மன்ரோ அரசுக்குத் தெரிவிக்க மந்த்ராலயம் உரியபடி பாதுகாக்கப்பட்டது. அவரது உத்தரவு  சென்னை கெஜட்டில் முறையாக ஆவணப்படுத்தப்பட்டிருக்கிறது.  ராகவேந்திரரை தரிசித்து அவர் அருள் பெற்ற இந்த நிலையில் சர் தாமஸ் மன்ரோவிற்கு தற்காலிக ஆளுனராக – கவர்னராக – ப்ரமோஷன் கிடைத்தது. தனது நாற்காலியில் உட்கார்ந்த அவர் கையெழுத்திட வந்த கோப்புகளைப் பார்த்தார். அதில் முதல் கோப்பாக மேலே இருந்தது மந்த்ராலயம் பற்றிய கோப்பு தான். மனமுருகிய அவர் அதில் தனது முதல் கவர்னர் கையெழுத்தைப் போட்டார்.

மன்ரோவின் சிலை சென்னையில் உள்ளதை அனைவரும் அறிவர். குதிரை மீது அவர் அமர்ந்திருக்கும் 15 அடி உயரமுள்ள சிலை 1834இல் இங்கிலாந்தில் செய்யப்பட்டது. 6 டன் எடையுள்ள இந்தப் பெரிய சிலை அங்கிருந்து சென்னைக்குக் கொண்டுவரப்பட்டு 23-10-1839இல் சென்னையில் தீவுத்திடல் அருகே நிறுவப்பட்டது.

இப்படி ராகவேந்திரரின் பக்தரான ஒரு வெள்ளையருக்ககு அவர் அருள் பாலித்ததையும் ஆட்சியாளராக இருந்த அவர் கவர்னராக ப்ரமோஷன் பெற்றதையும் வரலாறு குறிப்பிடுகிறது. அவரது ஆணை கெஜட்டில் வெளியிடப்பட்டதை இன்றும் காணலாம். (Madras Government Gazette in Chapter XI, page 213, with the caption “Manchali Adoni Taluka”.)  இந்த அரசாணை இன்றும் ஃபோர்ட் செயிண்ட் ஜார்ஜிலும் மந்த்ராலயத்திலும் காப்பாற்றப்படு வருகிறது.

ராகவேந்திரர் நாற்பதுக்கும் மேற்பட்ட நூல்களை இயற்றியுள்ளார். த்வைத தத்துவத்தை இனிமையாகவும் எளிமையாகவும் அழகுறவும் விளக்கும் திறம்படைத்தவர் அவர். ப்ரம்மசூத்ரத்திற்கு பாஷ்யமாக அவர் எழுதிய தந்த்ர தீபிகா மிகவும் புகழ் பெற்ற ஒன்றாகும். உபநிஷதங்களுக்கு அவர் அளித்துள்ள விளக்கவுரைகளும் ஜைமினி சூத்ரத்திற்கு ‘பட்ட சங்க்ரஹா’ என்ற அவரது பாஷ்யமும் மிகவும் போற்றப்படும் நூல்களாகும்.

மந்த்ராலயம் கர்நாடக ஆந்திர எல்லையில் துங்கபத்ரா நதியின் தென்கரையில்    

ஆந்திராவில் உள்ள கர்நூல் மாவட்டத்தில் அமைந்துள்ளது. பங்களூரிலிருந்து இது சுமார் 380 கிலோமீட்டர் தொலைவிலும் சென்னையிலிருந்து சுமார் 547 கிலோமீட்டர் தொலைவிலும் ஹைதராபாத்திலிருந்து 250 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.

பூஜ்யாய ஸ்ரீ ராகவேந்த்ராய சத்ய தர்ம ரதாயச |
பஜதாம் கல்பவ்ருக்ஷாய நமதாம் ஸ்ரீ காமதேனவே || ஓம் ஸ்ரீ ராகவேந்த்ராய நம:!

நன்றி, வணக்கம்!

                       ***              முற்றும்

tag- ராகவேந்திரர்! – 3