HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 96; இந்து மத கலைச்சொல் அகராதி-96 (Post.16,075)

Written by London Swaminathan

Post No. 16,075

Date uploaded in London – 10 August 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

எஸ் என்ற ஆங்கில எழுத்தின் கீழ் உள்ள சொற்கள் தொடர்ச்சிEnglish version posted yesterday.

XXX

சரயு

ராமாயணம் மூலம் புகழ்பெற்ற புனித நதி; சரயு நதிக்கரையில் அயோத்தி நகரம் அமைந்துள்ளது ; உத்தரப்பிரதேச யோகிஜி அரசு லட் சக்கணக்கான தீபங்களை ஏற்றி கின்னஸ் சாதனைப் புஸ்தகத்தில் பதிவாகிவருவதால் மேலும் புகழ் கூடி வருகிறது

இமயமலையில் உற்பத்தியாகும் கங்கை நதியின் ஏழு உபநதிகளில் சரயு நதி ஒன்று. பெண்களின் பெயராகவும் இன்றுவரை நிலவிவருகிறது ;மகாபாரதத்திலும் பல பருவங்களில் குறிப்பிடப்படுகிறது; பஞ்ச பாண்டவர்கள் தரிசித்த நதி இது . பீஹார் மாநிலத்தில் ரேவல்கஞ்ச் என்னுமிடத்தில் கங்கை நதியுடன் சங்கமிக்கிறது.

***

சங்கரதேவ

சங்கரதேவ (1449-1568 CE), அஸ்ஸாம் மாநிலத்திலும் வடகிழக்கு இந்தியாவிலும் புகழ்பெற்ற ஞானி; சரண நாம தர்மவாஸ் என்னும் வைஷ்ணவ இயக்கத்தை நிறுவினார் ; கிருஷ்ணன் ஒருவனே கடவுள் என்று போதித்தார் ; சகல கலா வல்லுநர்; புதிய இசைப் பாணியை உருவாக்கினார் ; புதிய நடன முறையை உண்டாக்கினார்; ஓவியங்களை வரைந்து இந்துமதத்தைப் பரப்பினார்; இவருடைய ஓவியங்கள் லண்டனில் விக்டோரியா ஆல்பர்ட் மியூசியத்தில் உள்ளன .சமயம் மட்டுமின்றி கலைகளின் கர்த்தாகவும் விளளங்கினார்

 25 ராகங்களைப் படைத்தார். ஏக சரண நாம தர்மா ,  என்பது கிருஷ்ண பக்தியைப் பரப்பி வருகிறது; நாடு முழுதும் பலமுறை யாத்திரை செய்தார் . அஹொம் அரசு பின்பற்றிவந்த மிருக பலியை நிறுத்தி உண்மையான இந்து மதத்தை பின்பற்றுவோராக்கினார் ; இந்தியாவில் இவரைப் போல பன்முக சமயப்பிரசாரகர் வேறு எவருமில்லை.

QUIZ சங்கரதேவ் பத்து QUIZ (Post No.14,334)

Written by London Swaminathan

Post No. 14,334

Date uploaded in London –  1 April 2025

xxxx 

சங்கரதேவ் 1449–1568

1.சங்கரதேவ் எங்கே, எப்போது பிறந்தார் ?

சங்கரதேவ் ஆலிபுகரி என்னும் அஸ்ஸாமிய கிராமத்தில் 1449-ஆம் ஆண்டில் பிறந்தார். அவருடைய தந்தை பெயர்- குசும்பர்  சிரோமணி  பூயன் ; தாயின் பெய- சத்தியசந்த்யா

****

2.அவருடைய மனைவி பெயர் என்ன ?

அவர்  ஆம் வயதில் சூர்யபரீயைத் திருமணம் செய்துகொண்டார் . அவர்களுக்கு ஒரு மகள் பிறந்தாள்.

****

3.அவர் போதித்த கொள்கை என்ன?

அஸ்ஸாம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில்  பின்பற்றப்படும் அவருடைய கொள்கை ஏக சரண தர்மம் எனப்படும்; இதன் பொருள் – கிருஷ்ணன் ஒருவரையே சரணம் அடைய வேண்டும் என்பதாகும்.

****

4.அவர் உருவாக்கிய கலைகள் சம்பிரதாயங்கள் என்ன ?

சத்ரியா – நடனக்கலை

சங்கீதம் – போர் கீத்

நாடகம் – அங்கியா நாட், பவோனா

****

5.அவர் என்ன நூல்களை எழுதினார்

பாகவதத்தை அஸ்ஸாமிய மொழியில் எழுதினார்.

சிறு வயதிலேயே செய்யுட்களை எழுதி குரு தேவரை ஆனந்தப் பரவசத்தில் ஆழ்த்தினார்;

அவர் எழுதிய நாடகங்கள், செய்யுட்கள் நூல்கள் –

ருக்மிணி ஹரணம்

ராம விஜயம்

கேலி கோபாலன்

காளீய தமனம்

அஜாமிள உபாக்கியானம்

கஜேந்திர பக்திப் ப்ரதீபம்

****

6.வர கீதம் என்பது என்ன?

அஸ்ஸாமிய மொழியில் அவர் பாடிய நாட்டுப் பாடல்கள் வர கீதம் எனப்படும். வர  கீதத்தின், மொழி, லயம், பாவம் சாதாரண மொழியிலிருந்து வேறுபட்டது; நீதிகள் நிறைந்தது; சங்கரதேவர் 249 சுமார் கீதங்கள் இயற்றினார்.

***

7. சங்கராதேவின் குரு யார் ? சங்கரதேவர் செய்த சாதனைகள் என்ன?

குரு– மஹேந்திர கண்டலி.

வெள்ளைப் பெருக்கெடுத்தோடும் பிரம்மபுத்ரா நதியைக் கடந்தது;

ஆசிரியர் சொன்னவுடன் கவி மழை பொழிந்தது ;

படகினை ஓங்கி கைகளால் குத்தி உடைத்தது;

பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு தீர்த்த யாத்திரை செய்தது;

புதிய நாட்டிய, நாடக, இலக்கிய உத்திகளை உருவாக்கியது.

****

8.சங்கர தேவரின் சீடர் யார் ?

மாதவ தேவர் என்பவர் முக்கிய சீடர். ஒரு முறை சங்கர தேவரை கமலன் என்ற சிஷ்யன் வீட்டுக்கு அழைத்தான். அப்போது அவனது குடிசை தீப்பற்றி எரியவே சங்கர தேவர் கொண்டு சென்ற வர கீதச் சுவடிகளும் எரிந்து சாம்பலாயின உடனே மாதவ தேவரைப் பார்த்து நீ இயற்று என்றவுடன் அவர் பாடத் துவங்கினார் அந்த வகையில் மேலும் 189 வரகீதங்கள் உருவாயின.

****

9..ராமாயணத்தை அவர் பரப்பியது எப்படி?

ஸ்ரீ ராமனின் பாதங்களில் என் மனம் லயித்துவிட்டது என்ற சிறந்த பாடலை இயற்றினார். ராமாயணத்தையும் அவர் பாடல்களாகப்  பாடினார்.

****

10.அவர் எப்போது இறந்தார் ?

அவர் 120-ஆவது வயதில் பைலாதோவா என்னும் கிராமத்தில் புரட்டாசி மாதம் சுக்கில பட்ச துவிதீயை அன்று அமரர் ஆனார்.

***

சர்ப்ப

ரிக் வேதம் முதல் காணப்படும் இந்தச் சொல்லிலிருந்து சர்பண்ட் SERPENT என்ற ஆங்கிலச் சொல் பிறந்தது; நாகம் என்னும் சொல்லிலிருந்து ஸ்நேக் SNAKE (ஸ்னாக்க) என்ற ஆங்கிலச் சொல் உருவானது. ரிக்வேதத்திலும், சிந்துவெளி முத்திரையிலும் சர்ப்ப ராணி இருக்கிறாள். கேரளம் முழுதும் பாம்புகளை வழிபடும் காவுகள்/ கோவில்கள் உள்ளன . கர்நாடகத்தில் குக்கே சுப்ரமண்ய சுவாமி கோவிலில்,  கல்லினால் ஆன, ஆயிரக்கணக்கான நாகர் சிலைகளைக் காணலாம் ; தமிழ் நாட்டில் நாகர் சிலை இல்லாத கோவில் இல்லை என்றே சொல்லலாம்; குமரி மாவட்ட நாகர் கோவில், மஹாராஷ்டிரா நாகபுரி, காஷ்மீர் அனந்த  நாக் வரை பாம்பு வழிபாடு உள்ளது. குழந்தை பிறக்காவிடில் பூர்வ ஜென்மத்தில் பாம்புகளைக் கொன்றதால் நாக தோஷம் வந்ததாக கருதுவதால் எங்கும் நாகர் சிலைகள் காணப்படுகிறது ; உயிருள்ள பாம்புகளை வழிபடும் நாக பஞ்சமி பண்டிகை மகாராஷ்டிராவில் ஆண்டுதோறும் நடைபெறுகிறது.

***

சதக்ரது

சதக்ரது(शतक्रतु).— இந்தி ரனின் பெயர் ; நூறு அஸ்வமேத யா கங்களை செய்தவன் என்பது அர்த்தம்; யார் நூறு அஸ்வமேத யாகங்களை செய்த்தாலும் இந்திரன் பதவியை அடையலாம்; ரிக்வேதத்திலேயே சதக்ரது (शतक्रतु)—    என்ற சொல் பயிலப்படுகிறது

***

சதருத்ரிய

 (शतरुद्रीय):—ருத்திரன் என்னும் சிவபெருமானை நூற்றுக்கணக்கான பெயர்களில் போற்றும் நமகம்-சமகம் என்னும் துதி யஜுர்வேதத்தில் உள்ளது ; சத ருத்ரீய என்றால் 100 ருத்திரன் நாமங்கள் என்று பொருள்; சிவன் என்பது சாந்தமான மங்களமயமான உருவம்; ருத்ரன் என்பது அவரே அழிக்கும் தொழிலை எடுப்பதற்கான உருவம் ; இந்த துதியில் சிவனின் நேர்மறையான குணங்களும் எதிர்மறையான குணங்களும் மாறி மாறி வரும் ; கடவுளின் இருவேறு அம்சங்கள் இவை (முன்னர் ருத்ரன் என்ற தலைப்பில் மேல் விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன)).

***

சதி

சதி என்பது  பார்வதியின் பெயர்; அவளது தந்தை தட்சன், அவளது கணவன் சிவனை அவமத்தித்ததால் யாகத் தீயில் விழுந்து உயிர்துறந்தாள்;  கணவன் சிதைத் தீயில் ஏறி அவளைப்போலவே உடலைத் தியாகம் செய்யும் பெண்களையும் சதி என்பர்; இந்த முறை புறநானூற்றில் உள்ளது; ஆனால் ரிக் வேதத்திலோ மனு ஸ்ம்ருதியிலோ இல்லை; ராமாயண மஹாபார தப் பெண்மணிகள், கண்வன்  இறந்த பின்னரும் வாழ்ந்ததைக் காண்கிறோம்; ஆகையால் இது கட்டாயமில்லை ; விருப்பட்டவர்கள் அப்படிச் செய்தனர் ஆனால்வங்காளத்தில் சொத்துக்களைப்பெறுவதற்காக பலரைக் கட்டாயப்படுத்தி சிதைத்தீயில் ஏற்றியதால் பிரம்ம சமாஜம் இந்த வழக்கத்தைத் தடை  செய்ய உதவியது .வெள்ளைக்கார கிறிஸ்தவர்கள் JOAN OF ARC ஜோன் ஆப் ஆர்க் போன்ற லட்சக்கணக்கான பெண்களை விட்ச் / சூன்யக்காரி என்று சொல்லி தீயில் உயிருடன் எரித்துக் கொன்றனர் ; அந்த அட்டூழியங்களை மறைப்பதற்கு, வெளிநாட்டில், சதி படங்களை வெளியிட்டுக் கிறிஸ்தவப் பிரசாரம் செய்தனர். அதற்கு நிதியும் வசூலித்தனர்.

***

சத்வ குணம்

சத்வம் என்பது முக்குணங்களில் ஒன்று ; பெரியோர்களின், முனிவர்களின் சாந்த குணம் இது ; இதற்கு அடுத்தபடியாக ராஜஸ குணமும் கீழ்மட்டத்தில் தாமச குணமும் வருகிறது .உடலின் , உள்ளத்தின் தூய்மை, மனதின் சமநிலை, மரக் கறி  உணவு, கோபம் இல்லாமை, கருணை   ஆகியவற்றைப் போற்றும் குணம்; இன்பமும் துன்பமும்  ஒன்று ;பொன்னும் ஓடும் ஒன்று என்னும் உயர்ந்த குணம் ; பகவத் கீதையில் கிருஷ்ண பரமாத்மா மூன்று குணங்களின் தன்மைகளையும் விரிவாக விளக்கியுள்ளார் ; காண்க – பகவத் கீதை அத்தியாயங்கள் 14; 17. Chapter 14 (verses 5–18) and Chapter 17.

***

சத்யம் சிவம் சுந்தரம் s s s

சத்யம் என்பதைத் தமிழில் வாய்மை , உண்மை, மெய்மை என்று மொழிபெயர்த்துள்ளனர்; சம்ஸ்க்ருதத்தில் இதை மனோ வாக் காயம் என்ற மூண்டிலும் தூய்மை என்பர் ; உலகில் சத்தியத்தை கடவுளாக அவனகக ஒரே மதம் இந்து மதம்; மூன்று ஜாதிக்காரர்களும் வேத பாட சாலையில் நுழைந்தவுடன் ஆசிரியர் கற்பிக்கும் முதல் வரி சத்யம் வத = உண்மையே பேசு ; உபநிஷத ம் முழுதும் சத்யம் போர்ராப்படுகிறது இந்தியாவின் குறிக்கோள் வாசகமே உண்மைதான் ; சத்யமேவ ஜெயதே= வாய்மையே வெல்லும் என்பது இந்தியாவின் தேசீய சின்னத்திலும் தமிழ்நாட்டின் அரசு சின்னத்திலும் உளது . இது முண்டகோபநிஷத் வாசகம்.

சத்யம் சிவம் சுந்தரம் என்பது உபநிஷத உரைகளில்/[பாஷ்யங்களில் போற்றப்படுகிறது ; உண்மை, மங்கள ம் , அழகு என்பது இதன் பொருள் ; இதை ஸ்வேதாஸ்வதர உபநிஷத் சிவனே உண்மை; சிவனே மங்களம் ; சிவனே அழகு என்று விளக்குகிறது

சத்யா சாயிபாபாவின் வாழக்கை வரலாற்றையும் உபநிஷதங்களையும் கூறும்நூலி ன் தலைப்பு- சத்யம் சிவம் சுந்தரம் ; இதனால் இது கோடிக்கணக்காகனோருக்குத் தெரிய வந்தது ; அதற்கு முன்னர் ஆன்மீக நாட்டம் உடையோர் மட்டுமே அறிந்த சொல் இது ; அவர் பஜனைகளில் அவரே சத்யம் ஞானம் ஆனந்தம் பிரம்மா என்ற உபநிஷத வாக்கியத்தை பஜனை ஆக்கியதால் கோடிக்கு கணக்கானோரின்  வாய்கள் இதை முணுமுக்கத் துவங்கின. அதுவும் புகழ்பெற்ற உபநிஷத வாக்கியம்

தைத்திரீய உபநிஷத் (2.1.1):  “சத்யம் ஞானம்  அனந்தம் பிரம்மா”— Brahman is Truth, Knowledge, and Infinite.

பிருஹதாரண்யக உபநிஷத் (2.3.6):  “சத்தியஸ்ய சத்யம்”—பிரம்மன்  என்று இறைவனை சத்யம் என்று வழிபடுகிறது

முண்டக உபநிஷத் (3.1.6):  “சத்யம் ஏவ ஜயதே நான்ருதம் “—வாய்மையே வெல்லும் ; பொய்மை வெல்லாது என்கிறது

ரிக் வேதம் முதல், பர்த்ருஹரியின் நீதி சதகம் முதல், வள்ளுவனின் திருக்குறள் வரை பல நூறு பாடல்களில் சத்யம் போற்றப்படுகிறது; இது இந்துக்களின் தனிச் சொத்து; தனிச் சிறப்பு ; பரிபாடல் என்னும் சங்க நூலில் மனைவியிடம் கணவன் எப்படியெல்லாம் சத்தியம் செய் கிறான் என்ற பட்டியலே உள்ளது.

***

ஷ்யமந்தக

சியமந்தக வைரத்தின் நீண்ட கதை பாகவதத்தில் உள்ளது ; டைமண்ட் DIAMON என்ற சொல்லே ஷ்யமந்தக என்பதிலிருந்து வந்தது என்று என்னுடைய ஆராய்ச்சி காட்டுகிறது ; கெட்ட ஜாதி வைரம் வந்தால் அந்தக் குடும்பத்தில் கொலை, கொள்ளை , திருட்டு, அநீதி நடக்கும் என்பதை பாகவத புராணம் அழகாக விளக்குகிறது; கிருஷ்ணன் கூட இதன் தாக்கத்திலிருந்து தப்ப முடியாததால் உடும்பு வேண்டாம் கையை விட்டால் போதும் என்ற பழமொழிக்கேற்ப இதைத் துறந்துவிட்டார்; ஐரோப்பா முழுதும் கொலைகளைச் செய்த இந்த வைரம் இப்போது ஹோப் டயமண்ட் HOPE DIAMOND என்ற பெயரில் அமெரிக்காவில் மியூஸியத்தில் உள்ளது.

வஜ்ரம் என்ற சொல்லும் சம்ஸ்க்ருத மொழியில் வைரத்தைக்குறிக்கும் ; தமிழ்ச் சொல் வைரம், வஜ்ரத்தின் திரிபே.

ஸ்யமந்த = டயமண்ட ஆன மொழியியலை ஆங்கிலத்தில் விளக்கியுள்ளேன்

S=T interchangeability is seen in hundreds of English words that we use everyday

Some examples :

condition, education, ambition- in hundreds of words with TION, the pronunciation is SION.

So Syamantaka + Tiamanthaka= DIAMOND is linguistically possible.

சியமந்தக வைரத்தின் கதை

கொலவெறி வைரம்!!!!!

(தமிழ்நாட்டில் பல குடும்பங்களில், குறிப்பாக பிராமண மற்றும் செட்டியார் குடும்பங்களில் வைரம் வாங்குவதற்கு முன் அதை வீட்ல் சில நாள் வைத்து நல்ல செய்திகள் வருமா என்று பார்த்தே வாங்குவார்கள். ஏனெனில் சில வைரங்களில் குறைகள் இருக்கும். இதோ, கிருஷ்ண பரமாத்மாவை படாத பாடு படுத்திய வைரம் பற்றிப் படியுங்கள்)

வைரங்கள் பெண்களின் சிறந்த நண்பர்கள் என்று ஆங்கிலத்தில் சொல்லுவதுண்டு. அது உண்மையாக இருக்கலாம். ஆனால் கட்டாயம் கடவுளுக்கும் வைரத்துக்கும் ரொம்ப தூரம்!! சியமந்தக மணி எனப்படும் வைரம் கண்ண பிரான் காலத்தில் இருந்தது. அது யாதவ குலத்தில் மூன்று கொலைகளுக்கும் பல சண்டைகளுக்கும் காரணமாகிவிட்டது பின்னர் இது பிரான்ஸ், பிரிட்டன் ,அமெரிக்கா ஆகிய நாடுகளுக்குச் சென்று அங்கும் பல சாவுகளுக்கும் சண்டைகளுக்கும் வித்திட்டது. இதை இப்போது வாஷிங்டனில் உள்ள ஸ்மித்சோனியன் மியூசியத்தில் பார்க்கலாம். ஆனால் அவர்களுக்கே இது கண்ணனின் வைரம் என்று தெரியாது

சத்ரஜித் என்பவர் ஒரு யாதவர் தலைவர். அவர் சூரிய தேவனை வழிபடுவார். ஒரு நாள் சூரிய தேவனே அவருக்கு ஒரு பெரிய வைரத்தைக் கொடுத்தார். (அதாவது அவர் கோவிலுக்குச் சென்றபோது அது பூமியிலிருந்து கிடைத்தது.) அது பள பள என்று ஜொலித்தவுடன் கிருஷ்ணருக்கும் கூட பொறுக்கவிலை. அதை உக்ரசேனன் என்பவனிடம் கொடு என்றார். ஆனால் சத்ரஜித் அதற்கு மறுத்துவிட்டார்.

சத்ரஜித் அவருடைய தம்பி ப்ரசேனன் என்பவரிடம் கொடுத்துவைத்தார். அவன் அதை எடுத்துக் கொண்டு வேட்டை ஆடப்போனான். அவனை ஒரு சிங்கம் அடித்துக் கொன்றது. இந்த வைரத்தை கரடி இனத் தலைவர் ஜாம்பவான் எடுத்துச் சென்றார். முன் காலத்தில் மக்கள் தங்களை அடையாளம் கூற ஒரு பறவை அல்லது மிருகம் பெயரைச் சொல்லுவார்கள். ஜம்பவான் கரடி இனம் எனப்படும்  மலை ஜாதி இனத்தைச் சேர்ந்தவர். அவருடைய பிள்ளைகள் அந்த வைரத்தை வைத்து விளையாடத் துவங்கினர்.

எல்லோரும் கண்ண பிரானைச் சந்தேகப் பட்டனர். உடனே அவர்ப்ரசேனனைத் தேடிச் சென்றார். காட்டில் அவனது சடலத்தையும் மற்ற அடிச் சுவடுகளையும் கண்டு அதைப் பின்பற்றினான். ஒரு மாதம் சண்டை போட்ட பின்னர் ஜாம்பவானுடன் ஒரு சமரச ஒப்பந்தம் ஏற்பட்டது. அவருடைய பெண் ஜாம்பவதியைக் கல்யாணம் செய்து கொண்டால் சியமந்தக மணியைத் திருப்பித் தருவதாகச் சொன்னார். கண்ணனுக்கு அடித்தது யோகம். ஒரே கல்லில் இரண்டு மாங்காய். ஒரு பெண்+ ஒரு வைரம்!!

துவாரகைக்குத் திரும்பிவந்தார். வைரத்தை சத்ரஜித்திடமே திருப்பித் தந்தார். அவருக்கு ஏக சந்தோஷம். அவருடைய பெண் சத்யபாமாவையும் கண்ணனுக்கு மணம் முடித்தார். சியமந்தக வைரத்தால் இரண்டு பெண்கள் லாபம் !! இந்த நேரத்தில் ஹஸ்தினாபுரத்திலிருந்து எஸ்.ஓ.எஸ். (அவசர உதவி தேவை என்று) செய்தி வந்தது. பாண்டவர்கள் அனைவரும் அரக்கு மாளிகை தீ விபத்தில் இறந்துவிட்டதாக வந்தது செய்தி. அங்கே சென்றால் எல்லோரும் சுபம்.

இதற்குள் சத்ரஜித் வீட்டில் சததன்வா என்பவன் புகுந்து சத்ரஜித்தைக் கொன்றான். வைரத்தை எடுத்துக் கொண்டு ஓடிவிட்டான். சத்யபாமாவுக்கு ஒரே துக்கம். துவாரகைக்குத் திரும்பி வந்த கண்ணனிடம் கதறி அழுதாள். கண்ணனும் பலராமனும் சததன்வாவைத் தேடினர். அவன் பீஹாருக்கு ஓடிவிட்டான். குஜராத்திலிருந்து ஆயிரம் மைல் துரத்திச் சென்று அவனைக் கண்ணன் கொன்றான். பின்னர்தான் தெரிந்தது. அதை அவன் அக்ரூரன் என்பவனிடம் கொடுத்து வைத்தான் என்பது. கிருஷ்ணன் துவாரகைக்குத் திரும்பி வருவதற்குள் அவன் உத்தரப் பிரதேசத்தில் உள்ள காசிக்கு ஓடிவிட்டான். ஆட்களை அனுப்பி அவனை கண்ணன் அழைத்து வந்தார். மீண்டும் ஒரு சமரச ஒப்பந்தம். அக்ரூரனே அதை வைத்துக் கொள்ளலாம் என்றும் ஆனால் துவாரகையை விட்டு வெளியே போகக் கூடாது என்றும் உத்தரவு போட்டார். இதற்குப் பின் அந்த வைரத்தின் கதை தெரியவில்லை.

ஹோப் வைரம்

சியமந்தக மணியை ஒரு கோவில் அம்மனின்  நெற்றியில் பதித்து வைத்தனர். அதைத் திருடிய அர்ச்சகருக்கு மரண தண்டனை கிடைத்தது. அதைத் திருட்டுத்தனமாக வாங்கிய பிரெஞ்சுக்காரர் ஜீன் பாப்டிஸ்ட் டவர்னியர் வெறி நாய்கள் கடித்து இறந்தார். இதற்கு ஹோப் வைரம் என்று பின்னர் பெயர் சூட்டப்பட்டது!

இந்தியாவிலிருந்து பிரான்ஸ், பிரிட்டன் ,அமெரிக்கா சென்ற ஹோப் வைரம் இதே போல படுகொலைகள், வழக்கு வாய்தாக்கள், சண்டை சச்சரவுகள், கடன் திவாலாக்கள் எல்லாவற்றையும் உண்டாக்கியது. மேலும் ஹோப் வைரம் புற ஊதா கதிர்களில் தக தக என்று சிவப்பாக ஜொலிக்கிறது. இதைத்தான் பாகவதமும் சூரியன் போல ஜொலித்த வைரம் என்று சியமந்தக மணி பற்றியும் கூறுகிறது. பலரும் அதை மாணிக்கம் என்று நம்பினர். ஆனால் அது வைர வகைகளில் ஒரு அபூர்வ வைரம். இப்போது அது அமெரிக்காவில் வாஷிங்டன் நகரில் ஸ்மித்சோனியம் மியூசியத்தில் உள்ளது.

இது மனிதர் கையில் இருந்தால் பல துரதிருஷ்டங்கள் ஏற்படுவதால் கடைசியாக இதை வைத்திருந்த வாட்சன் என்பவரிடமிருந்து இதை அந்த மியூசியத்துக்கு நன்கொடையாக வாங்கிவிட்டனர். அவரும் உடும்பு வேண்டாம் கையை விட்டால் போதும் என்று கொடுத்துவிட்டுப் போய்விட்டார். அவருக்கு முன் ஹோப் என்பவர் வைத்திருந்ததால் இதற்கு ஹோப் வைரம் என்று பெயர். உண்மையில் இது ஹோப்லெஸ் (அவ நம்பிக்கை) வைரம்!!!

முதலில் இது லாம்பெல் இளவரசி கைக்குப் போனது. அவரை ஒரு கும்பல் அடித்துக் கொன்றது. அதன் பின்னர் ஜாக்ஸ் செலோட் என்பவர் கைக்குப் போனது. அவர் புத்தி சுவாதினம் இழந்து தற்கொலை செய்துகொண்டார். இதற்குப் பின்னர் ரஷிய இளவரசர் கனிடொவ்ஸ்கியை அடந்தது. அவர் தனது காதலிக்குக் கொடுத்துவிட்டு பின்னர் அவளை கொலையும் செய்தார். பிறகுதான் ஹென்ரி தாமஸ் ஹோப் வாங்கினார்.

பிரெஞ்சுப் புரட்சியில் லூயி மன்னரையும் அவருடைய மனைவி மேரி அன்டாய்னெட்டையும் கில்லட்டின் எந்திரத்தில் வைத்து பகிரங்கமாக கொடூரமாகக் கொன்றதைப் படித்திருப்பீர்கள். அப்போது இந்த ஹோப் வைரம் (கண்ண பிரானின் சியமந்தகம்) அவர்கள் கையில் இருந்த்தது. உலக வரலாற்றில் ஒரு மன்னரும் ராணியும் இவ்வளவு பரிதாபமாக இறந்தது கிடையாது. அதற்குப் பின் வேறு ஒருவர் கைக்குப் போய் அவர்கள் குடும்பத்தில் பெரிய சண்டை ஏற்பட்டு பல ஆண்டுகள் வழக்கு நடந்தது. இதை வாங்கிய ஒருவர் பணம் எல்லாம் இழந்து திவால் ஆனார்.

To be continued……………………

Tags- சரயு, சங்கரதேவ, சதி, சதரூன்றிய, சத்யம், சியமந்தக, டைமண்ட், HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 96; இந்து மத கலைச்சொல் அகராதி-96 ,சியமந்தகம், ஹோப் வைரம்

புரந்தரதாசர்,அருணகிரி நாதர்,  வள்ளலார்: மூவரின் ஸ்வீட் உவமை !– Part 80 (Post.15,633)

புரந்தரதாசர்,அருணகிரி நாதர்வள்ளலார்மூவரின் ஸ்வீட் உவமை ! – Part 80 (Post.15,633)

Written by London Swaminathan

Post No. 15,633

Date uploaded in London –19 April 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

80திருப்புகழில் அருணகிரிநாதர் சொல்லும் அரிய செய்திகள் Part 80

திருப்புகழில் அருணகிரி நாதர் சொல் அழகும், பொருள் வளமும்- Part 80

***

தனித்தனி முக்கனி பிழிந்து ……

ராமலிங்க சுவாமிகள் அருணகிரிநாதரைப்போல தனித்தனி முக்கனி பிழிந்து …. பாடலைப் பாடினார். அருணகிரிநாதரோ புரந்தர தாசர் போலப் பாடினார்; தெய்வீகப் பாடல்களை ஒப்பு நோக்கி மகிழ்வோம் 

தேனை வடித்துச் சொரிந்ததோ கொதி

     பாலு டன்ஒக்கக் கலந்ததோ நல

          சீனி யில்விட்டுப் பிசைந்ததோ பல …… கனிதானோ

தேடி யெடுத்துப் பிழிந்ததோ நிறை

     பாகு பதத்திற் கமைந்ததோ இவை

          சேர வுருட்டித் திரண்டதோ நவ …… ரசமீதோ

ஞான முளைத்துப் படர்ந்ததோ யதி

     லேயெ ழுபுட்பச் சுகந்தமோ விது

          நாம கள்வித்தை ப்ரசங்கமோ வென …… உரைநாவால்

நாவ லர்மெச்சிப் பணிந்துதா ழவும்

     நீய துமெச்சித் தணிந்துபே சவும்

          நானு னைமெச்சிப் புகழ்ந்துபா டவும் ……. அருள்தாராய்!

யானை மதப்பட் டெழுந்ததா மென

     வேயி ருபத்மச் சதங்கையோ லிட

          ஆறு முகத்துக் குழந்தையா யருள் …… அணையார்பால்

ஆறு முகத்திற் சொரிந்தபாற் குளம்

     ஆறு முலைக்குப் பிரிந்தபால் நிறை

          வார மலைக்குச் சிறைந்தபோ திலு …… மமையாதோ

சோனை மலைக்குட் திரிந்துலா விய

     சீர சமுத்ரத் தரங்கமே லெழு

          சூரி யனொக்கத் திரிந்துலா விய …… புதல்வோனே!

சோலை மலைக்குக் கடம்புபோல் வளர்

     விரா லிமலைக்குக் கொழுந்துபோ லுயர்

          சுவா மிமலைக்குக் கரும்புபோல் வரு …… முருகோனே!

……… பதவுரை ………

தேனை வடித்துச் சொரிந்ததோ கொதி … சுத்தமான தேனைப் பிழிந்து எடுத்து ஊற்றியதோ, சூடான

பாலுடன் ஒக்கக் கலந்ததோ நல … பாலுடன் அத்தேனை தகுந்த அளவு கலந்துள்ளதோ, நல்ல

சீனியில் விட்டுப் பிசைந்ததோ பல கனிதானோ … சர்க்கரையில் கொட்டிப் பிசைந்துள்ளதோ, பல வகையான பழங்களோ,

தேடி யெடுத்துப் பிழிந்ததோ நிறை … அப்பழங்களைத் தேடி எடுத்து அதன் சாற்றைப் பிழிந்து எடுத்ததோ, தேவையான

பாகு பதத்திற் கமைந்ததோ இவை … நல்ல பக்குவத்திற்கு உள்ளானதோ, இவைகள் எல்லாம்

சேர வுருட்டித் திரண்டதோ நவரசமீதோ … ஒன்றாக சேர்த்து உருட்டி உருவானதோ, ஒன்பது விதமான இனிமைகளைக் கொண்டதோ

ஞான முளைத்துப் படர்ந்ததோ யதிலே … மெய்யான உணர்வு உதித்து பரவியுள்ளதோ, அவற்றுள்

யெழு புட்பச் சுகந்தமோ விது … எழுகின்ற பலவகைப் பூக்களின் நறுமணமோ, இது

நாமகள் வித்தை ப்ரசங்கமோ வென உரை நாவால் … சரஸ்வதியின் அருளால் வெளிப்படும் ஞானத் தெளிவோ என உன் அருளை நாவினால் போற்றுகின்ற,

நாவலர் மெச்சிப் பணிந்து தாழவும் … புலவர்கள் விரும்பிப் பணிவோடு தலை வணங்கவும்,

நீயது மெச்சித் தணிந்து பேசவும் … நீ அதைக் கண்டு விரும்பி நிறைவோடு அவர்களுடன் பேசவும்,

நானுனை மெச்சிப் புகழ்ந்து பாடவும் அருள்தாராய்! … நான் உனை விரும்பித் துதித்துப் பாடவும் உனது அருளைத் தருக!

யானை மதப்பட் டெழுந்ததா மெனவே … யானை மதங்கொண்டு ஓடும்போது, அதன் கழுத்திலுள்ள மணிகளின் ஒலியைப் போன்றதோ என்று

யிரு பத்மச் சதங்கை யோலிட … உனது இரு தாமரை மலர்ப் பாதங்களை அலங்கரிக்கும் சதங்கைகள் ஓசையிட

ஆறு முகத்துக் குழந்தையா யருள் அணையார் பால் … அறுமுகக் குழந்தை வடிவாக வந்து உன்னை அணைத்து வளர்த்த கார்த்திகைப் பெண்களுக்கு அருள் புரிந்தவனே

ஆறு முகத்திற் சொரிந்த பாற்குளம் … உனது ஆறு முகத்திற்கு பொழிந்த பாற்குளம் போன்ற

ஆறு முலைக்கும் பிரிந்த பால் நிறை … கார்த்திகைப் பெண்கள் அறுவர் தனங்களிலிருந்து வெளிப்பட்டப் பாலின் அளவானது

வார மலைக்குச் சிறைந்த போதிலு மமையாதோ … நீண்ட நெடிய மலையினால் தடுக்கப்பட்டு அடைக்கப்பட முடியுமோ?

சோனை மலைக்குட் திரிந்துலாவிய … கார் மேகங்கள் சூழ்ந்துள்ள மலகளின்மேல் திரிந்து உலாவி வருகின்றவனாகவும்,

சீர சமுத்ரத் தரங்க மேலெழு … பாற்கடலின் அலைகளின் மேல் எழுகின்ற

சூரிய னொக்கத் திரிந்துலாவிய புதல்வோனே! … ஞான சூரியனாகவும் உலாவி வருகின்ற மைந்தனே

சோலை மலைக்குக் கடம்புபோல் வளர் … சோலை மலை எனும் திருத்தலத்திற்கு வளர்கின்ற கடம்ப மலர் போன்றும்,

விராலி மலைக்குக் கொழுந்து போலுயர் … விராலிமலை எனும் திருத்தலத்திற்கு இளந்தளிர் போன்றும், உயர்ந்த

சுவாமி மலைக்குக் கரும்புபோல் வரு முருகோனே! … சுவாமி மலை எனும் திருத்தலத்திற்கு இனிக்கும் கரும்பு போன்றும் வந்து அருள் புரிகின்ற முருகப் பெருமானே!

****

புரந்தரதாசர் கண்டுபிடிப்பு! ராமர் பாயசம்கிருஷ்ணா சர்க்கரைபுதுவகை கல்கண்டு! (Post.14,272) 

Written by London Swaminathan

Post No. 14,272

Date uploaded in Sydney, Australia –  5 March 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

(புரந்தரதாசர் பற்றிய 7–வது கட்டுரை இது)

புரந்தரதாசர் கீர்த்தனைகளில் நல்ல ருசி உண்டு; யாராவது அவரது வீட்டுக்குப் போனால் ராமர் பாயசம் தருவார்; அதில் கிருஷ்ணா சர்க்கரையும் இருக்குமாம்; அத்தோடு வாசலில் உள்ள தாம்ப்பாளத்  தட்டிலிருந்து கற்கண்டும் எடுத்துக்கொள்ளலாமாம் . இதற்காக அவர்  நம்மை வெற்றிலை பாக்கு வைத்து மேள தாளத்துடன் வரவேற்கிறார் . இதோ அவரே சொல்கிறார்

ராம நாம பாயஸக்கே கிருஷ்ண நாம சக்கரே

விட்டல நாம துப்பவ கலசி பாயி சப்பரிசிரோ (ராம)

ராமா என்னும் பாயசத்தை தயாரிக்ககிருஷ்ணா என்னும் சர்க்கரையை பயன்படுத்தவும்;

விட்டலா என்னும் நெய்யைப் போட்டுக் கலக்கி, சுவைத்துப் பாருங்கள், சப்புக் கொட்டுங்கள் (வாயில் எச்சில் ஊறும்) (ராம)

ஒம்மன கோதிய தந்து வைராக்ய கல்லலி பீசி

சும்மனே சஜ்ஜிய தெகெது சன்ன ஷாவிகே மாடிரோ*** (ராம)

கவனம் (ஒருமுனைப்படுத்தல்) என்னும் கோதுமையைக் கொண்டு வந்து, வைராக்யம் என்னும் கல்லில் போட்டு

அந்த மாவைக் கையில் எடுத்து மெல்லிய இழையாக செய்வீராக (ராம)

ஹ்ருதயவெம்போ மடிகேயல்லி பாவவெம்போ எசரு இட்டு

புத்தியிந்தா பக்வவ மாடி ஹரிவாணலி படிசிகொண்டு

ஆனந்த ஆனந்தவெம்போ டேகு பந்தாக எரடு டேகு பந்தாக

ஆனந்த மூர்த்தி நம்ம புரந்தர விட்டலன நெனெயிரோ (ராம)

இதயம் என்கிற பானையில்; எண்ணம் என்கிற அந்த மாவைப் போட்டு

புத்தியுடன் அதை நன்றாக சமைத்து; ஹரி என்கிற பெரிய தட்டில் போட்டு

(சாப்பிட்டபிறகு) ஆனந்த ஆனந்த என்கிற இரண்டு ஏப்பங்கள் வரும்போது

ஆனந்த மூர்த்தி நம் புரந்தர விட்டலனை நினையுங்கள் (ராம)

***

சஜ்ஜிகே – கோதுமை & சர்க்கரையால் செய்யப்படும் ஒரு இனிப்புப் பண்டம்.

ஷாவிகே – சேமியா போல் மெல்லிய, நீண்டதாக ஆக்கிக் கொள்ளுதல்

****

தமிழில் கிருபானந்தவாரியார் சுவாமிகளின் உபன்யாசத்தைக் கேட்டவர்களுக்கு ஊறுகாய் போடுவது பற்றி அவர் சொன்னது மறக்காது!

புது வகைப்    பழச்சாறு SWEET — வள்ளலார்

வள்ளலார்  பாடலுடன் ஒப்பீடு ; சிவன் நாமம் மூன்று பழச் சாறு

தனித்தனி முக்கனி பிழிந்துவடித்துஒன்றாய்க் கூட்டி

சர்க்கரையும் கற்கண்டின் பொடியும் மிகக் கலந்தே,

தனித்த நறும் தேன் பெய்து, பசும்பாலும் தெங்கின்

தனிப்பாலும் சேர்த்து, ஒரு தீம் பருப்பிடியும் விரவி,

இனித்த நறுநெய் அளைந்தே, இளஞ்சூட்டின் இறக்கி

எடுத்த சுவைக் கட்டியினும் இனித்திடும் தெள் அமுதே,

அனித்தம் அறத் திருப்பொதுவில் விளங்கும் நடத்து அரசே,

அடிமலர்க்கு என் சொல் அணியாம் அலங்கல் அணிந்து அருளே!

நூல்: திருவருட்பா; பாடியவர் வள்ளலார்

மா, பலா, வாழை என்ற முக்கனிகளையும் தனித்தனியே சாறு பிழிந்து, வடிகட்டிச் சக்கைகளை நீக்கி, அவற்றை ஒன்றாகக் கலந்து, அந்தக் கலவையில் சர்க்கரையும் கற்கண்டுப் பொடியையும் நிறையச் சேர்த்து, அசுத்தம் இல்லாத நல்ல தேனை அதில் ஊற்றி, பசும்பாலும் தேங்காய்ப் பாலும் சேர்த்து, இடித்த பாசிப்பருப்பைப் போட்டுக் கிளறி, இனிப்பான, நல்ல நெய்யையும் சேர்த்துக் கொதிக்கவைத்து இளம் சூட்டில் இறக்கி ஆறவிட்டுப் பின்னர் அதிலிருந்து ஒரு துண்டு எடுத்து வாயில் போட்டால் எப்படி இருக்கும்? அந்தச் சுவைக்கட்டியைவிட அதிகம் இனிப்பான தெள்ளமுது, என் இறைவனாகிய நீ!

நிலையில்லாத பிறவித் துயரம் அறுபடும்விதமாக அம்பலத்தில் ஆடும் நடராஜனே, உன்னுடைய பாத மலர்களை என் சொற்களால் அலங்கரிக்கிறேன், ஏற்றுக்கொண்டு அருள் செய்!

*****

புது வகைக் கற்கண்டு  – புரந்தரதாசர்


கல்லு சக்கரே கொள்ளீரோ நீவெல்லரு

கல்லு சக்கரே கொள்ளீரோ

கல்லு சக்கரே சவி பல்லவரே பல்லரு

புல்ல லோசன ஸ்ரீ கிருஷ்ண நாமவெம்ப (கல்லு)

கற்கண்டு சாப்பிடுங்கள் கற்கண்டு – நீங்க எல்லோரும்

கற்கண்டு சாப்பிடுங்கள் கற்கண்டு

கற்கண்டை சாப்பிட்டவருக்கே தெரியும் (அது எவ்வளவு இனிமையென்று)

மலர்க் கண்களை உடைய ஸ்ரீ கிருஷ்ணனின் பெயர் என்னும் (கற்கண்டு)

எத்து ஹேருகளிந்தா ஹொத்து மாருவதல்லா

ஒத்தொத்தி கோணியளு தும்புவதல்லா

எத்த ஓதரு பாடிகே சுங்க இதக்கில்லா

உத்தம சரக்கிது அதி லாப பருவந்தா… (கல்லு)

எருமைகளால் இதை இழுத்துப் போகமுடியாது

எடுத்துப் போட்டு கோணியில் நிரப்பமுடியாது

எங்கு எடுத்துப் போனாலும் இதற்கு வாடகை, சுங்கம் (வரி) கிடையாது

உத்தமமான சரக்கு (பொருள்) இது, அதிகமான லாபம் தரும் பொருளான (கற்கண்டு)

நஷ்ட பீடுவதல்லா நாத ஹுட்டுவதல்லா

எஷ்டு ஒய்தரு பெலே ரொக்க இதக்கில்லா

கட்டிருவெய திந்து கடிமே ஆகுவதில்லா

பட்டணதொளகே பிரசித்த ஆகிருவந்தா.. (கல்லு)

(இதனால்) நஷ்டமே வராது.. (எவ்வளவு சேர்த்தாலும்) துர்நாற்றம் வராது

(உங்களிடமிருந்து) யாராவ்து எடுத்துப் போனாலும் மதிப்பு குறையாதது

கட்டெறும்பு தின்றாலும் குறையவே குறையாதது

பட்டணத்தில் மிகவும் பிரசித்தமானதாக இருக்கும்… (கற்கண்டு)

சந்தே சந்தேக்கே ஹோகி சிரம படிசுவதல்லா

சந்தே ஒளகேயிட்டு மாருவதல்லா

சந்தத பக்தர நாலகே சவிகொம்ப

காந்த புரந்தர விட்டல நாமவெம்ப.. (கல்லு)

சந்தை சந்தையாக போய் விற்க முடியாதது

சந்தையில் வைத்து வாங்கவும் முடியாதது

எப்போதும் (அவர் பெயர் சொல்லும்) பக்தரின் நாக்கில் இனிமையை தரும்

புரந்தர விட்டலா என்னும் நாமமான … (கற்கண்டு)

***

ராம நாமம் செய்யும் அற்புதம் – – புரந்தரதாசர்

ராம மந்தரவ ஜபிஸோஹே மனுஜா

ராம மந்த்ரவ ஜபிஸோ

ஆ மந்த்ர ஈ மந்த்ர மெச்சி கெடலுபேடா

சோம சேகர தன்ன பாமெகே ஹேளித மந்த்ர (ராம)

ராம நாமத்தை ஜபியுங்கள்ஹே மக்களே

அந்த நாமம், இந்த நாமத்தையெல்லாம் பெரிதென்று சொல்லி கெட்டுப் போக வேண்டாம்

அந்த சிவபெருமான் தன் மனதிற்கு இனியவளிடம் (பார்வதியிடம்) சொன்ன நாமம் இதுவே (ராம)

குலஹீனனாதரு கூகி ஜபிஸுவ மந்த்ர

சல பீதியொளு உச்சரிப மந்த்ர

ஹலவு பாபங்கள ஹதகெடிசுவ மந்த்ர

சுலபதிந்தலி ஸ்வர்க சூரெகொம்புவ மந்த்ர (ராம)

அனைவரும் கூடி சொல்லக்கூடிய மந்திரம்

சாலை/தெருக்களில் போகும்போதும் சொல்லக்கூடிய மந்திரம்

எண்ணிலடங்கா பாவங்களை தொலைத்துக் கட்டும் மந்திரம்

சுலபமாக சொர்க்கத்தை அடைய வைக்கும் மந்திரம் (ராம)

மருதாத்மஜ நித்ய ஸ்மரணெ மாடுவ மந்த்ர

சர்வ ரிஷிகளிலி சேரித மந்த்ர

துரித கானனகிது தாவானல மந்த்ர

பொரெது விபீஷணனிகே பட்ட கட்டித மந்த்ர (ராம)

வாயு மைந்தன் (அனுமன்) தினமும் நினைத்து பூஜிக்கும் மந்திரம்

அனைத்து முனிவர்களும் ஜபிக்கும் மந்திரம்

பிரச்னைகளுக்கு விரைவாக தீர்வு அளிக்க உதவும் மந்திரம்

உச்சரித்த விபீஷணனுக்கு ஆட்சியைப் பெற உதவிய மந்திரம் (ராம)

ஞானநிதி நம்ம ஆனந்த தீர்த்தரு

சானுராகதி நித்ய சேவிப மந்த்ர

பானுகுலாம்புதி சோம நேனிப மந்த்ர

தீன ரக்‌ஷக புரந்தர விட்டலன மந்த்ர (ராம)

ஞான நிதியாகிய நம்ம ஆனந்த தீர்த்தர் (ஸ்ரீ மத்வாச்சாரியர்)

காலை எழுந்ததிலிருந்து முழு நாளும் (எப்போதும்) வணங்கும் மந்திரம்

சூரிய குலத்தில் உதித்த (ராமச்)சந்திரனை நினைக்க வைக்கும் மந்திரம்

(நமது) கஷ்டத்தில் எப்போதும் உதவும் புரந்தரவிட்டலனின் மந்திரம் (ராம)

****

பாடலும் மொழிபெயர்ப்பும் தாசர் சாங்ஸ் .காம் இணைய தளத்திலிருந்து எடுக்கப்பட்டதுநன்றி உரித்தாகுக.

****

ஏறுமயில் ஏறி‘ உள்ளர்த்தம்

     ஏறுமயி லேறிவிளை யாடுமுக மொன்றே

          ஈசருடன் ஞானமொழி பேசுமுக மொன்றே

     கூறுமடி யார்கள்வினை தீர்க்குமுக மொன்றே

          குன்றுருவ வேல்வாங்கி நின்றமுக மொன்றே

     மாறுபடு சூரரை வதைத்தமுக மொன்றே

          வள்ளியை மணம்புணர வந்தமுக மொன்றே

     ஆறுமுக மானபொருள் நீயருளல் வேண்டும்

          ஆதியரு ணாசல மமர்ந்த பெருமாளே.

……… இப்பாடலின் மேலார்ந்த பொருள் ………

ஏறத்தக்க மயில் மீது ஏறி திருவிளையாடல்களைச் செய்தது உன் ஒரு முகம்தான். சிவபெருமானுக்கு ஞான உபதேசம் செய்தது உன் ஒரு முகம்தான்.

உன் திருப்புகழைக் கூறும் உன் அடியார்களின் இருவினைகளையும்

தீர்த்துவைப்பது உன் ஒரு முகம்தான். கிரெளஞ்ச மலையை

உருவும்படியாக வேலை ஏவியதும் பின்பு அமைதிகாத்ததும் உன் ஒரு முகம்தான்.

உனக்கு எதிரியாக முரண்பட்ட அசுரர்களை வதைத்து அழித்ததும் உன் ஒரு முகம்தான். வள்ளியைத் திருமணம் செய்துகொள்ள விழைந்து ஆசையுடன் வந்ததும் உன் ஒரு முகம்தான்.

… அவ்வாறெனில், நீ ஆறுமுகனாகக் காட்சி அளிப்பதன் பொருளை

நீ எனக்கு அருளிச் செய்ய வேண்டும். தொன்மைவாய்ந்த

திருவண்ணாமலையில் வீற்றிருக்கும் பெருமாளே.

……… இப்பாடலின் உள்ளர்த்தம் ………

1. என் உள்ளமாகிய மயிலின்மீது ஏறி விளையாடியும்,

2. எனக்கு குருவாக வந்து உபதேசித்து அருளியும்,

3. என்னுடைய வினைகளையெல்லாம் தீர்த்தருளியும்,

4. என் மாயா பாசங்களை வேலால் உருவி ஒழித்தருளியும்,

5. என் அகங்கார மமகார மலங்களை அடக்கியருளியும்,

6. என்னை உன்னோடு புணர்த்தியருளியும்

… இவ்வாறு உன் ஆறு திருமுகங்களாலும் எனக்கு கருணை புரிவாயாக.

****

இறைவனுடைய ஐந்து திரு முகங்கள் பரத்தையும், உமா தேவியின் திரு முகம் இகத்தையும் நல்கும். இந்த ஆறு முகங்களும் சேர்ந்து இகபர செளபாக்கியத்தை அருளும்.

—-subham—

Tags- Part 80, ‘ஏறுமயில் ஏறி’ பாட்டின் ,உண்மையான பொருள், புரந்தரதாசர்,அருணகிரி நாதர், வள்ளலார்: மூவரின் ஸ்வீட் உவமை, தனித்தனி முக்கனி பிழிந்து ராம நாம பாயஸக்கே கிருஷ்ண நாம சக்கரே

தம்மை மறந்து ஆடுவோரே உண்மை பக்தர்கள்! (Post No.9998)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9998

Date uploaded in London –  20 AUGUST  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

 வைணவ அமுதம்

பக்திப் பெருக்கால் தம்மை மறந்து ஆடுவோரே உண்மை பக்தர்கள்!

ச.நாகராஜன்

எம்பெருமானின்மீது அளவிலா பக்தியும் அன்பும் உண்மையாகக் கொண்டிருப்பார் எனில் அவர்கள் பைத்தியக்காரன் போல வேறு எதையும் எண்ணாமல் வீதிகளில் ஆட வேண்டும். அப்படி இல்லை எனில் அவர்கள் இறை அன்பைக் கொண்டிருக்கவில்லை என்றே அர்த்தம் என்கிறார் நம்மாழ்வார்.

இதற்கு எடுத்துக்காட்டாக ஒரு சம்பவத்தைக் கூறலாம். ராமானுஜரின் சீடர்  கூரத்தாழ்வான். அவர் வாழ்ந்த காலத்தில் அரசாண்ட மன்னனுக்கு வைஷ்ணவம் என்றாலே பிடிக்காது. அவன் ஒரு சமயம் ஏழைகளுக்காகப் பல வீடுகளைக் கட்டினான்.

கூரத்தாழ்வான் அரசனிடம் சென்றார்: “அரசே! நீங்கள் கட்டிய வீடுகளில் எனக்கு ஒன்றைத் தாருங்கள்” என்று கேட்டார்.

அரசன், “உனக்கு ஒன்றும் தர முடியாது” என்றான்.

ஆழ்வான் : “ஏன், மன்னா! எனக்கு வேத சாஸ்திரம் தெரியாது என்று எண்ணி விட்டீர்களா?  அப்படி நினைத்தீர்கள் என்றால் என்னை சோதித்துப் பாருங்கள்”

அரசன் : அது காரணமில்லை. அந்த வேத சாஸ்திரங்களில் எல்லாம் நீர் வலல்வரே. ஆனால் உமக்குத் தர முடியாது என்று சொன்னதற்கான காரணம் நீர் ஒரு வைஷ்ணவர் என்பதால் தான்!

ஆழ்வான் : ஆஹா! அப்படியா விஷயம்?! எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது இதைக் கேட்க! நான் என்னை ஒரு வைஷ்ணவன் என்று கூறிக் கொள்ளும் தகுதி இல்லாதவன் என்றல்லவா இது வரை நினைத்து வந்தேன். ஆனால் அரசனாகிய நீங்களே என்னை ஒரு வைஷ்ணவன் தான் என்று உங்கள் வாயாலேயே கூறி விட்டீர்களே

இப்படிச் சொல்லியவாறே கூரத்தாழ்வான் தன் உத்தரீயத்தை உயரே தூக்கி எறிந்தார். அங்கேயே ஆனந்தமாக நடனமாட ஆரம்பித்தார்.

சாது சனத்தை நலியும் கஞ்சனைச் சாதிப்பதற்கு

ஆதியஞ் சோதி உருவை அங்கு வைத்து இங்குப் பிறந்த

வேத முதல்வனைப் பாடி வீதிகள் தோறும் துள்ளாதார்

ஓதி உணர்வர் முன்னா என்சவிப்பார் மனிசரே

என்பது நம்மாழ்வாரின் திருவாய்மொழியில் 3-5இல் வரும் பாடலாகும்.

வேத முதல்வனைப் பாடி வீதிகள் தோறும் நடனமாடித் துள்ளாதார் எப்படி ஒரு வைணவனாக இருக்க முடியும்!

அவனை நினைக்கும் போதே ஆனந்தம் தான் ; துள்ளல் தான்!

இதை இப்படி பகவத் விஷயம் நூல் விவரிக்கிறது.

ஆதாரம் : பகவத் விஷயம் பாகம் 3 – சாது சனம் (||| – 5-5)

 ***

INDEX

நம்மாழ்வார் திருவாய்மொழி – சாது சனத்தைப் பாசுரம்

பகவத் விஷயம் விளக்கம்

கூரத்தாழ்வான், அரசனிடம் வீடு கேட்டல்

அரசன் அவனை வைஷ்ணவன் என்று கூறி வீடு தர மறுத்தல்

ஆழ்வானின் ஆனந்தம்

tags- பக்தி,  ஆடுவோர் , உண்மை, பக்தர்கள்,

ஹிந்துக்களுக்கு தர்ம வாழ்வே வாழ்வு! (Post No.5493)

WRITTEN BY S NAGARAJAN

Date: 1 October 2018

 

Time uploaded in London – 7-15 AM (British Summer Time)

 

Post No. 5493

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

 

இது தான் இந்தியா தொடர்

ஹிந்துக்களுக்கு தர்ம வாழ்வே வாழ்வு!

ச.நாகராஜன்

1

அக்பரின் அரசவையில் அங்கம் வகித்த அப்துல் ஃபஸல் அய்ன் – இ- அக்பரி என்ற தனது நூலில், “ஹிந்துக்கள் தங்கள் மதத்தை நேசிக்கிறார்கள். அவர்கள் மற்ற எந்த ஒரு இனத்துடனும் சண்டையிடுவதில்லை. என்று எழுதியுள்ளார்.

(அதாவது தங்கள் தர்மத்தை ஒரு நாளும் விடாத அவர்கள் அடுத்தவர்களை மதம் மாற்ற முற்படுவதில்லை; சண்டை இடுவதில்லை; அவர்களை மதித்து வாழ்கின்றனர் என்று பொருள் கொள்ள வேண்டும்)

2

 

வருடம் 1942. அலஹாபாத் உயர் நீதி மன்றத்தில் உள்ள ஒரு வேலைக்காக ஒரு நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டது. ஒரு மராத்திய இளைஞன் முதலாவதாகத் தேறினான். தலைமை நீதிபதி, டெபுடி ரெஜிஸ்ட்ராரை அழைத்து, இந்தப் பையன் சரியான உடை அணிந்து வந்தால் தான் அவனை வேலையில் சேர அனுமதிக்கப்படுவான். அவன் மொட்டை அடித்திருக்கிறான். காலிலோ ஷூவே அணியவில்லை.என்றார்.

டெபுடி ரெஜிஸ்ட்ரார் இதை அந்தப் பையனிடம் தெரிவித்ததோடு அவனை தலையில் ஒரு ஹேட்டும், காலில் ஷூக்களும் அணிந்து கொண்டு வரச் சொன்னார்.

அந்த இளைஞன் இதைக் கேட்டு விட்டு, “ எனது தந்தையார் சமீபத்தில் தான் இறந்தார். நான் ஒரு வருட காலம் செய்ய வேண்டிய ஈமச் சடங்குகளைச் செய்து வருகிறேன். ஹிந்து சாஸ்திரங்கள் தலைமுடி வளர்ப்பதையோ அல்லது ஷூ அணிவதையோ இந்தக் கால கட்டத்தில் அனுமதிக்கவில்லை. நான் சாஸ்திரங்களை விட்டு விட முடியாது. ஆகவே இந்த வாய்ப்பையும் கூட நான் வேண்டாம் என்று மறுக்கிறேன். என்று பதில் கூறினான்.

டெபுடி ரெஜிஸ்ட்ரார் இதை தலைமை நீதிபதியிடம் தெரிவித்தார். தலைமை நீதிபதி அந்த இளைஞனின் சாஸ்திர பக்தியைத் தான் விரும்புவதாகவும் அவனை சில நாட்களுக்குள்ளாக வந்து சேரும்படியும் கூறினார்.

இதைக் கேட்ட அந்தப் பையன், சில நாட்கள் தன்னால் காத்திருக்க முடியாது என்றும், அன்று மாலையே லக்னௌ சென்று இன்னொரு தேர்வு எழுதப் போவதாகவும் கூறினான்.

தலைமை நீதிபதி தனது உத்தரவை உடனே மாற்றி, அவனை உடனே அந்தக் கணமே வேலையில் சேருமாறு கூறினார்.

 வேலையின் மீது கொண்ட சிரத்தையினால் அவனது எல்லாத் தடைகளும் அகன்றன.

 

3

ஏப்ரல் 1945. ஒரு பிரபல மருத்துவர் கூறிய சம்பவம் இது:

25 அல்லது 26 வயதிருக்கும் ஒரு மார்வாரி இளைஞன் காலரா நோயினால் பீடிக்கப்பட்டான். நோ மிகவும் தீவிரமடைந்தது. அவனது உடல் நடுங்கிச் சுருங்கத் தொடங்கியது. அவன் தான் இனி பிழைக்கப் போவதில்லை என்று பயந்தான்.

அவன் தனது பெற்றோரை அழைத்து, “ நான் பிழைக்கவில்லை எனில் வாய்மூலமாகச் சொல்லி நான் கடன் வாங்கியவர்களின் பெயரைக் குறித்துக் கொண்டு அதை அடைத்து விடுங்கள் என்று கூறினான். அன்று மாலையே அவன் நோய் தீர்ந்து பிழைத்துக் கொண்டான். வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்காமல் இருப்பது ஹிந்துவைப் பொறுத்த மட்டில் பெரிய பாவம். சட்டத்தின் படி கடனைத் திருப்பிக் கொடுக்க முடியாத நிலையில் இருப்பவர்கள் திவால் ஆனதாகச் சொல்லித் தப்பிக்க முடியும். ஆனால் அவன் அந்த சட்டத்தைப் பயன்படுத்த விரும்பவில்லை. ஆகவே தான் அவன் பிழைத்தான்.

மேலே கூறிய சம்பவங்கள் அன்றாடம் பாரத தேசத்தில் நடக்கும் ஆயிரக் கணக்கான சம்பவங்களில் சிலவே. இது தான் ஹிந்துக்களின் வாழ்க்கை முறை.

பொய் சொல்வது பாவம். வேலையில் சிரத்தையுடன் ஈடுபட வேண்டும். – இவையெல்லாம் ஹிந்துக்களின் இரத்தத்தில் ஊறிய தர்ம கோட்பாடுகள்.

அந்த புகழோங்கிய நாட்களை அன்றாட வாழ்வில் இன்றைய ஹிந்துக்கள் அடைய வேண்டும்.

 

4

இதன் ஆங்கில மூலத்தைக் கீழே பார்க்கலாம்:

Noble Righteous Hindus: Righteous Thinking

Devotion to Dharma

  1. Abul Fazl Courtier of Mughal Emperor AkbarAbul Fazl wrote in his chronicle Ain – E – Akbari — Hindus love their religion. They don’t  have conflict with any other race.
  2. 1942. Once a employment entrance test was conducted in Allahabad high court office. A Maratha youth stood first. The Chief Justice asked the Deputy Registrar, “If this guy appears in proper dress then only he will be permitted to join. The youth’s head was tonsured and feet were without shoes. Deputy Registrar informed him the same and asked to come wearing a hat and shoes.”

The youth replied, “My father has died recently. I am performing Kalasouch ritual for one year. Hindu Shastras ordains not to wear shoes or headgear in next one year. I cannot disregard the Shastras. I can sacrifice the  opportunity as well.”

Deputy Registrar in turn notified the Chief Justice. He replied that he liked the youth’s devotion and asked him to employ him within few days. The youth replied, “I cannot wait for few days. Today evening only I will go to Lucknow for appearing in another examination.”

The Chief Justice altered his order and asked him to employ him right at that moment. All obstacles alleviated due to his devotion.

  1. April 1945. One famous physician has said– A Marwari youth of around 25-26 was diagnosed with Cholera. The disease reoccurred and got serious. His body started cramping. He feared that he would not survive.

He called his parents and said, “If I don’t survive, note down the name of debtors from whom I have taken debt verbally.” He got cured by evening after doing this. Not paying a loan is a sin to Hindu. Though there was a Law of Limitation by practising he could have shown himself as bankrupt. But he did not use that law, that’s why he escaped certain death.

Noble Righteous Hindus: Righteous Thinking

 

நன்றி : ஆங்கில வார இதழ் – Truth Volume 86  No 22 Friday The 14th September, 2018

***