
Post No. 10,003
Date uploaded in London – 21 AUGUST 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
உலகம் முழுதுமுள்ள சிறுமியர்கள், இளம் பெண்கள், மாணவிகள் ரசித்துப் படிக்கும் புஸ்தகம் , ANNE OF GREEN GABLES ‘ஆன் ஆப் க்ரீன் கேபிள்ஸ்’ என்ற நாவல் ஆகும். இதை எழுதியவர் லூசி மாட் மாண்ட்கோமரி LUCY MAUD MONTGOMERY ஆவார்.
கனடாவிலுள்ள பிரின்ஸ் எட்வார்ட் PRINCE EDWARD ISLANDS தீவில் அவர் பிறந்தார்; இரண்டே வயதில் தாயாரை இழந்தார். தந்தையோ வேறொரு பெண்ணை மணந்து கொண்டு ஓட்டம் பிடித்தார். லூசியை கொடுமைக்கார தாத்தா பாட்டியின் கவனிப்பில் விட்டார். அவர் 15 வயதில் கவிதை ஒன்றை எழுதியது வெளியானது. பின்னர் ஆசிரியராகவும் பத்திரிகை நிருபராகவும் ஹாலிபாக்ஸ் HALIFAX நகரில் பணியாற்றினார்.
புகழ் பெற உதவிய ANNE OF GREEN GABLES நாவலை அவர் எழுதினார், திருத்தினார், மீண்டும் எழுதினார்; மாற்றி அமைத்தார். எல்லா பத்திரிக்கைகளும் வெளியீட்டாளர்களும் திருப்பி அனுப்பினர்.
இறுதியில் 34 வயதானபோது ஒரு நிறுவனம் ஒப்புக்கொண்டு வெளியிட்டது.
ஒரு பிள்ளை பிறக்காதா என்று ஏங்கிய வயதான ஒரு தம்பதியருக்கு ஆன் ANNE என்ற அனாதைக் குழந்தை கிடைத்தது. அந்தச் சிறுமியின் ஒவ்வொரு பருவத்திலும் அவருடைய ஆசை அபிலாஷைகள் எப்படி இருந்தன என்பதை லூஸி சித்தரிக்கிறார். உண்மையில் சொல்லப்போனால் இது லுயூஸியின் சொந்த அனுபவமே. இந்த நாவலுக்கு பெரிய வரவேற்பு கிடைத்தது .
மார்க் ட்வைன் போன்றோரும் வரவேற்றனர். ஆன் ANNE என்ற கதா பாத்திரத்தை வைத்து ஏழு தொடர் நாவல்கள் எழுதினார். ஆன் என்பவர் ஆசிரியர் ஆகி,, கல்யாணம் செய்துகொண்டு, குழந்தை பெற்றுக்கொள்வது வரை நாவல் செல்கிறது.
1911ல் பாட்டி இறந்தவுடன் லூஸி , ஒரு சமயப் பிரசாரகரை மணந்துகொண்டு ஒண்டாரியோவுக்கு குடியேறினார் குடும்பத்தை நடத்திக்கொண்டே இரண்டு ஆண்டுக்கு ஒரு நாவல் வீதம் 20 நாவல்கள், சிறு கதைத் தொகுப்புகளை வெளியிட்டார்.
மாண்ட்கோமெரி 20 புதினங்களையும் 530 சிறுகதைகள், 500 கவிதைகள் மற்றும் 30 கட்டுரைகளையும் வெளியிட்டார்
பிறந்த தேதி – நவம்பர் 30, 1874
இறந்த தேதி ஏப்ரல் 24, 1942
வாழ்ந்த ஆண்டுகள் – 67
வெளியிட்ட கதைகள்
1908 – ANNE OF GREEN GABLES
1909 – ANNE OF AVONLEA
1911 – THE STORY GIRL
1915- ANNE OF THE ISLAND
1917 – ANNE’S HOUSE OF DREAMS
1919 – RAINBOW VALLEY
1921 – RILLA OF INGLESIDE
1923 – EMILY OF NEW MOON
1936 – ANNE OF WINDY POPLARS
1939- ANNE OF INGLESIDE
–SUBHAM–
TAGS- கனடா , சிறுவர் கதை ஆசிரியர், லூசி மாண்ட்கோமரி, LUCY MAUD MONTGOMERY