WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No. 10,152
Date uploaded in London – 29 September 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
சேர சோழ பாண்டியர்கள் உலகிலேயே நீண்ட காலத்துக்கு அடித்துக்கொண்டு செத் தொழிந்தார்கள் . இது போல வடக்கே நடந்த ஒரு யுத்தம் இது. அதாவது ஒரே இனத்தில் உட் பூசல் ; அரக்கர்கள் இல்லாத மதநூல் உலகில் எந்த மதத்திலும் இல்லை. போர் நடைபெறாத பகுதி இந்தப் பூவுலகில் எதுவுமே இல்லை. இது போல ரிக் வேத காலத்திலும் உட்பூசல் , வெளிப்பூசல்கள் இருந்தன. அவை எல்லாவற்றுக்கும் இனப் பூ ச்சு பூசிய அயோக்கியத்தனத்தை மார்க்சீய கும்பலும் மாக்ஸ் முல்லர் கும்பலும் செய்தன. இந்து மத நூல்கள் எவற்றிலும் இந்துக்கள் வெளியிலிருந்து வந்ததாக எழுதவில்லை. தேவர்களும் இந்தியாவில் பிறக்க வேண்டும் என்று ஏங்குவதாக புராணங்கள் சம்ஸ்கிருதப் பாடல்களில் பாடுகின்றன.
பொன் மயமான இலங்கை வேண்டுமா? என்ற வினா வந்த போது “ஜனனி ஜன்ம பூமிஸ் ச ஸ்வர்காதபி கரீயஸி “– என்று இராமபிரான் சொல்கிறான். “பெற்ற தாயும் பிறந்த பொன்நாடும் நற்றவ வானினும் நனி சிறந்தனவே” –என்று பாரதி அதை மொழி பெயர்த்தார். அதாவது அயோத்தி மாநகரமுள்ள கோசல நாடு சுவர்க்கத்தை விடச் சிறந்ததாம். இப்படி நதிகளுக்கும் நாட்டிற்கும் ‘தாய்’ என்ற பட்டம் சூட்டிய கலாசாரம் இந்து கலாசாரம். இதை ரிக் வேதத்தில் இருந்து கிரேக்கர்கள் ‘காப்பி’ copy அடித்து உலகிற்குப் பரப்பினர் .
இதோ இரண்டு யமுனைக் குறிப்புகள்:-
ரிக் வேதம் 5-52-17
ஒரு படையாகத் திரண்ட, ஏழு ஏழான (7X7+49) சக்தர்களான மருத்துக்கள், எனக்கு நூற்றுக் கணக்கான பசுக்களை அளிப்பார்களாகுக . நான் யமுனைக் கரையிலே புகழ்பெற்றுள்ள பசுக்களின் செல்வத்தை அடைவேனாக . குதிரைகளின் செல்வத்தை அடைவேனாக.”
இந்த துதியிலும் ஒன்பதாவது மந்திரத்தில் (ninth mantra) பருஸ்ணி என்ற பஞ்சாப் நதியின் பெயரை ரிஷி குறிப்பிடுகிறார். ஆக ரிக் வேதத்தின் மிகப்பழைய பகுதியில் ஆயிரம் மைல் இடைவெளியில் ஓடும் நதிகள் வருகின்றன. இந்த இரண்டு நதிக்கரைகளில் இரண்டு மோதல்களில் சுதாஸ் வெற்றி பெற்றதாக ஏனைய பாடல்களில் வரலாற்றுக் குறிப்புகள் கிடைக்கின்றன. இந்த யுத்தத்தில் விசுவாமித்திரர் – வசிஷ்டர் இடையேயான பெர்சனாலிட்டி க்ளாஷும் Personality Clash (உரைகளில்) வருகிறது.
மிகப்பழைய யுத்தம் இப்படி பரந்த நிலப்பரப்பில் நடப்பது அவர்களின் ஆட்சிப் பரப்பை காட்டுகின்றன. ராமாயணமும் மஹா பாரதமும் இதை உறுதிப் படுத்து கின்றன ; கிருஷ்ணன் தன் தலைநகரை உத்தரப் பிரதேச மதுரா நகரிலிருந்து 800 மைல்களுக்கு அப்பாலுள்ள குஜராத் மாநில துவாரகா துறைமுகத்துக்கு மா ற்றினான். அது ஒரு சுனாமி தாக்குதலில் அழிந்ததை மஹாபாரதம் பேசுகிறது. இப்பொழுது 5000 ஆண்டுப் பழமையான அமைப்புகளை கடலடி தொல்பொருட்த் துறையினர் நமக்குக் காட்டுகின்றனர் . அவருக்கும் முந்தியவர் ராமன் !
xxx
ரிக் வேத 7-18-19
இந்த துதி முழுதும் வரலாற்றுக்குறிப்புகள் உடையது. இதில்தான் தெளிவாக பருஷ்ணி – யமுனை – சுதாஸ் வெற்றி வருகிறது. யமுனை பற்றிய குறிப்பை மட்டும் தருகிறேன்
“போரிலே அவன் (King Sudas) பேதனைக் கொன்றபோது யமுனைக் கரையில் வசித்தவர்களும் , திரிசத்தவர்களும் இந்திரனைப் புகழ்ந்தார்கள். அஜாசர்களும் சிசுருக்களும் யக்ஷவர்களும் அவனுக்குப் போரிலே கொல்லப்பட்ட குதிரைகளின் தலைகளைப் பலியாக்கி நிறையாக அளித்தார்கள் “.
இந்தப் பாடலில் ஏராளமான விஷயங்கள் உள்ளன. அவற்றை பின்னொரு சமயம் எழுதுவேன்.
இறுதியாக மார்க்சிஸ்ட் , மாக்ஸ் முல்லர் சவப்பெட்டிகளில் ஆணி அடிப்போம். ரிக் வேதம் முழுதும் நிறைய விவசாயக் குறிப்புகள் உள்ளன. இவைகளும், அவர்கள் ‘நாடோடிகள்’ அல்ல என்பதைக் காட்டும். ரிக்வேதத்தில் ஸபா, தலைவர்களைத் தேர்ந்தெடுத்தல் முதலியவையும் வருகின்றன. அந்த சபை/ அவை என்பதை இன்று இந்தியா முழுதும் பயன்படுத்தி வருகின்றனர் .
ரிக் வேதத்தில் மிகவும் புகழ் பெற்ற ஒரு வேடிக்கையான துதி ‘சூதாட்டக்காரன் புலம்பல்’ ஆகும். இது நம்ம ஊர் குடிகாரன் புலம்பல் போன்ற பாட்டு. அவன் கூட விவசாயத்தின் பெருமை யைச் சொல்கிறான்.
டேய் சூதாட்டக்காரா — தனக்குத் தானே சொல்லி புலம்பும் காட்சி —
“டேய் சூதாட்டக்காரா ; நான் சொல்றத நம்புங்கடா ; எவனும் சூதாட்டம் ஆடாதீங்கடா ; நிலத்தைப் பண்படுத்தி , விவசாயம் செய்யுங்க; இதில் கிடைக்கும் காசு பணத்தில் சுகமாக வாழுங்க! அங்கு பசுக்களும் சாப்பிட்டு வளரும் ; வீட்டிலே மனைவியும் இருக்கா . இதையே எனக்கு சவிதா/ சூரிய தேவன் சொன்னான்” .10-34-14
இதற்கு முந்திய மந்திரங்களில் மனைவி விரட்டி அடித்த புலம்பல் எல்லாம் வருகின்றன. அதனால்தான் இந்த மந்திரத்தில் விவசாயம் செய்து உழைத்து காசு சம்பாதித்தால் ‘வீட்டில் மனைவியும் இருப்பாள்’ என்ற வரி வருகிறது . இதை அனைவரும் படித்து (கவிதை 10-34; சூதாட்டம் பற்றியது) மகிழவேண்டும். சூதாட்டம் என்பதை எடுத்துவிட்டு சாராயம் குடித்தல் என்று போட்டாலும் பொருந்தும்.
வள்ளுவனும் சூதாட்டம், கள் பற்றி எழுதி இருப்பதால் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் இது தமிநாட்டிலும் பெரிய தீங்கு விளைவித்தது புரிகிறது. ஆக — உழுதுண்டு வாழ்வாரே வாழ்வர் மற்றெல்லோரும் தொழு துண்டு பின் செல்வர் — என்று விவசாயத்தை ரிக் வேதம் போற்றுவதால் ,மாக் ஸ்முல்லர் , மார்கஸியவாதிகளின் சவப்பெட்டியில் ஓங்கி ஆணி அறைந்துவிட்டோம் . இனி அந்தப் பிரேதங்கள் எழுந்திருக்காது!!!
–சுபம்—
tags- யமுனை நதி 2