ரிக் வேதத்தில் எவருக்கும் புரியாத பேய்கள், தேவதைகள்!-Part 4 (Post No.10,212)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,212

Date uploaded in London – 15 OCTOBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ரிக் வேதத்தில் எவருக்கும் புரியாத  பேய்கள், தேவதைகள்!- Part 4

நதிகள் துதி 10-75-5

இதுதான் ரிக் வேதத்தின் புகழ்பெற்ற நதிகள் துதி. இதில் கங்கை நதியில் துவங்கி வரிசைக் கிரமத்தில் யமுனை ,சரஸ்வதி,சுதுத்ரி, பருஷ்ணி என்று மேற்கு நோக்கிச் செல்கின்றனர். இதனால்  இந்து நாகரீகம் கங்கையில் துவங்கியது உறுதியாகிறது. அதை 2000 ஆண்டுப் பழமையான சங்கத் தமிழரின் 2500 பாடல்களும் உறுதி செய்கின்றன. ஏனெனில் தமிழர்களுக்கு கங்கை, யமுனை தெரியும், இமயம், முனிவர்கள் தெரியும்; அமிர்தம், இந்திரன் தெரியும்; அருந்ததி, சப்தரிஷிகள் தெரியும். இவை அனைத்தும் புறநானூறு அகநாநூறு முதலிய நூல்களில் வருகின்றன. ஆனால் சிந்து, சரஸ்வதி, சோம ரசம் பற்றிய குறிப்புகளே இல்லை; ஆகவே கங்கைதான் முதலில் வந்தது என்பது புலனாகிறது

இதை   ஒத்துக் கொண்டாலும் ஒத்துக்கொள்ளாவிடினும் ஆப்கானிஸ்தான் முதல் டில்லி, மேற்கு வங்கம் வரை ஓடும் நதிகளைக் குறிப்பிடுவதால், இந்து மகா சாம்ராஜ்யத்தை வேதங்கள் குறிப்பிடுவதால் வேத கால பூகோள எல்லையும் விளங்கும் .

இதில் வியப்பான விஷயம் என்னவென்றால் இந்த நதிகள் பட்டியலில் உள்ள  சில நதிகளைக்  கூட நாம் அடையாளம் காண இயலவில்லை; வேதங்கள் அவ்வளவு பழமை உடைத்து .

ஆர்ஜீகீ, சுஸோமா , என்பன விபாஸா , சிந்து நதிகள் என்று யாஸ்கர் கூறுவதை வெள்ளைக்காரர்கள் சாத்தியமற்றது என்கின்றனர்.

எட்டாவது மந்திரத்தில் சிலாமாவதி ஊர்ணாவதி என்பன நதிகள் என்று சொல்லும் சாயனர் அவை சிந்து நதியின் காரணப் பெயர்கள் என்கிறார் . சிலாமா செடிகள் வளர்ந்து இருப்பதாலும் கம்பளி கிடைப்பதாலும் இப்படிப் பெயர்கள் என்கிறார். அவைகளுக்கும் ஆதாரம் இப்போது கிடைக்கவில்லை.

நதிகள் பற்றிய துதியிலும் கிரிப்பித் GRIFFITH விஷமம் நன்றாக புலப்படும்; கங்கை என்பது தொலைதூர நதி என்பதால் அதை முதலில் சொன்னார் என்று சொல்லிவிட்டு மேலும் அது ஒரு பெண்ணின் பெயர் என்றும் சொல்கிறார். உண்மையில் அதில் உள்ள எல்லா நதிகளின் பெயர்களையும்  இன்றுவரை பெண்கள் சூட்டி வருகின்றனர் . தமிழ்ப் பெண்கள் கூட கோமதி, சிந்து, கங்கா, ஜமுனா என்று பெயர் வைத்துக் கொள்கின்றனர்

Xxx

கல்யாண மந்திரங்கள் 10-85-6 ரைபி, நாராஸம்சீ, காதா

இன்றும் கூட பிராமணர் வீட்டுக் கல்யாணங்களிலும் , சம்பிரதாய முறைக் கல்யாணங்களிலும் ரிக்வேத கல்யாண மந்திரத்தின் பெரும்பகுதி பயன்படுகிறது. ஆயினும் இவைகளில் உள்ள சில சொற்களின் பொருள் விவாதத்துக்கு உரியனவாக இருக்கின்றன. அதாவது உறுதியான பொருள் எவருக்கும் தெரியவில்லை. வேத காலத்துக்கு சில ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் வந்த சாயனாரின் உரையை ஓரளவு நம்பலாம் ; ஆயினும் அவர் சம்பிரதாயத்தை உடைத்து வேதத்துக்குப் பொருள் கண்டதால் பழ மைவாதிகள் அதை ஏற்பதில்லை.

“ரைபீ ,  அவளுடைய (கல்யாணப் பெண்ணின் ) தோழி; நாராசம்சீ அவளுடைய தாசீ; சூரியையுடைய அழகான ஆடை ‘காதை’யால் அலங்கரிக்கப்பட்டிருந்தது”- 10-85-6

 இவை பெண்களின் பெயர்கள் ; இவைகளை உருவக வருணனை என்று கருதுகின்றனர்.  ஏன் இந்தப் பெயர்கள்?  விளங்கவில்லை. இவை விளங்காததால், இவைகளை வேதத்துக்குப் புறம்பானவை என்றும் எழுதிவிட்டனர்!!!

‘தனக்குப் புரியாவிட்டால் அது எல்லாம் திராவிட செல்வாக்கு! என்பன அடி முட்டாள்களின், விஷமிகளின் வாதம்’

xxxx

கோசம் 10-85-7

இது மணப் பெண்ணின் பெட்டியா, ஆடையா, தேரின் பாகமா என்று பல்வேறு கருத்துக்கள்!! என்ன வினோதம் !

“அவளுடைய மஞ்சனையில் எண்ணமே தலையணை; அவள் காணும் காட்சியே கண்ணுக்கு மை ; அவள் கணவனிடம் சென்றபோது வானமும் பூமியும் அவள் பொக்கிஷம் /கோசம்” — இது மந்திரம்

Xxxx

10-85-28 கிருத்யை

ஒரு பெண் தேவதை அல்லது பேய்    அல்லது துஷ்ட  தேவதை

XXX

10-85-35 ஆசசனம், விசசனம் , அதிவிகர்த்தனம்

இவை பல வகை ஆடைகளாக இருக்கலாம் என்பது ஒரு விளக்கம் ; ஆ னால் அகராதியில் காணும் பொருள்:– கொல்லுதல் , வெட்டுதல், துண்டு போடுதல்; இந்த அகராதியே சர்ச்சைக்குரியது ; கோல்ட்ஸ்டக்கர் GOLDSTUCKER இதை கிழி , கிழி என்று கிழித்து விடுகிறார். பசுக்கொலை செய்து தினமும் பிளேட்டில் பரிமாறுவோர் செய்த St Petersburg Dictionary செயின்ட் பீட்டர்ஸ்பர்க் அகராதி அது. மேலும் இந்துக்கள் கோவில்களிலோ, கல்யாண விருந்துகளிலோ இன்று வரை மாமிசம் படைக்க மாட்டார்கள் ; சீக்கியர்கள் கூட இதைப் பின்பற்றுகின்றனர்.

பேராசிரியர் வில்சன் இவைகளை ‘சுற்றி அணியும் துணி’, ‘தலையில் அணியும் துணி’, ‘பிரிவுகள் உள்ள பாவாடை’ என்கிறார்.

xxxx

சிறைச் சாலையில் நான்

ஒரு சுவையான செய்தியைச் சொல்லிவிட்டுக் கட்டுரையை முடிக்கிறேன். பிரிட்டிஷ் சிறைச் சாலைகளில் உள்ள இந்துக் கைதிகளைக் கண்டு  அவர்களுக்குப் பிரார்த்தனை முதலியவற்றை வழங்கும் பணியையும் பகுதி நேர வேலையாகச் (Part Time Prison Chaplain) செய்துவந்தேன். மிகக் குறைவான இந்துக்களே சிறையில் அடைக்கப்படுகின்றனர் ஆனால் முஸ்லிம்களோ 25 சதவிகிதத்துக்கு மேல் ! அதாவது அவர்களுடைய ஜனத் தொகை விகிதாசாரத்தைவிட மிக மிக அதிகம்.

ஒரு சிறையில், இந்துக் கைதிகள், விசாரணைக் கைதிகள், என்னைக் கண்டவுடன் ஒடி ஒளிந்தனர். பெரும்பாலும் மாமிசம் சாப்பிடும் இலங்கைத் தமிழர்கள்; ஏனப்பா இப்படி எல்லோரும் மறைந்து மறைத்து போகிறார்கள் என்று ஒருவரைப் பிடித்து விசாரித்தேன். அவர் உண்மையைக் கக்கிவிட்டார். “ஐயா நாங்கள் எல்லோரும் இன்று லஞ்ச் Non Vegetarian Lunch  நேரத்தில் மாமிசம் சாப்பிட்டுவிட்டோம். ‘அது’ சாப்பிட்டுவிட்டால் பிரார்த்தனை செய்யக்கூடாது; சுத்தம் இல்லையே என்றார் .

“அடப் பாவி மகன்களா ! இதை வாய் திறந்து முன்னமே சொல்லி இருந்தால், நான் வரும் தினத்தை அல்லது நேரத்தை மாற்றி இருப்பேனே” என்றேன். பின்னர் இதை அதிகாரிகளுடன் விவாதித்து நேரத்தை மாற்றிக்கொண்டேன் . மாமிசம் சாப்பிட்டால் சீக்கியர்கள் கூட பிரார்த்தனைக்கு வரமாட்டார்களாம். லண்டனில் மாமிசம் சாப்பிடும் சீக்கியர்கள், குருத்வராவில் கல்யாணம், பிரார்த்தனை வைத்துக்கொண்டாலும் அங்கே மாமிச விருந்து தர மாட்டார்கள். இதே போல சம்பிரதாய முறையில் கல்யாணம் செய்யும் எந்த ஜாதியினரும் மாமிச விருந்து கொடுப்பதில்லை. இப்போது காலம் கெட்டுவிட்டது எப்படி நடக்கிறதோ யாம் அறியோம் பராபரமே.

இதனால்தான் நம் சம்பிரதாயங்களை அறியாத, பின்பற்றாத, நம்பாத வெளியார்கள் எழுதும் வியாக்கியானங்களை நம்பக் கூடாது.இந்துவான எனக்கே சிறைக் கைதிகள் நழுவிச் சென்றபோதுதான் ஒரு ‘பாடம்’ lesson கிடைத்தது!

பத்தாவது மண்டலத்தில்  (துதிகள் 1 முதல் 85 வரை) நான் கண்ட புரியாத சொற்களைத் தந்தேன் மேலும் பின்னர் காண்போம்.

–சுபம் —

Tags-  ரிக் வேதத்தில் ,பேய்கள், தேவதைகள்,

Leave a comment

Leave a comment