அதர்வண வேதத்தில் அதிசய மந்திரம்-  பிராணிகள் கற்பிக்கும் பாடம் -3 (Post.10,401)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,401

Date uploaded in London – –   2 DECEMBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

முதல் பகுதியில் ஒரு புலவர், நான்கே வரிகளில் 22 பிராணிகள், பொருட்களை பட்டியலிட்டு, அதிதி தேவியே! எனக்கு  பலம் தருக!! என்று வேண்டியதைக் கண்டோம் . அவர் குறிப்பிட்ட 22 பிராணிகள், பொருட்களின் சிறப்பு என்ன என்பதை நான் என் வியாக்கியானத்தில் விளக்க முன்வந்தேன். இதோ மற்ற பொருட்களையும் , பிராணிகளையும்  புலவர் குறிப்பிட்டதன் காரணம்  என்ன என்பதைக் காண்போம்.

அதர்வண வேதம், ஆறாவது காண்டம் , துதி 38 (சூக்தம் எண் 211);  பாடல் தலைப்பு –‘பலம்’

17.வருணன்

வேத காலத்தில் வணங்கி வந்த வருண பகவானை, இந்திரனை, விஷ்ணுவை  தொல்காப்பியர் தமிழ்க் கடவுளராகச் செப்புவதிலிருந்து  தமிழர்களும் வேத கால இந்துக்களும் ஒன்றே என்று தெரிகிறது. அந்த மூவரையும் தினமும் மூன்று வேளைகளில் பிராமணர்கள் மட்டும்  இன்றும் சந்தியாவந்தன வேளைகளில் வணங் க்குவதால் பிராமணர்கள்தான் ‘ஒரிஜினல் தமிழர்கள்’ என்று தொல்காப்பியர் சொல்லுவதும் தெளிவாகிறது. வருணன் கடல் தெய்வம் என்று தொல்காப்பியர் சொல்லுவதை  வால்மீகி ராமாயணத்திலும் காண்கிறோம். அவன் கையில் பாசக் கயிறுகள் உண்டு. அவனை 1000 கண்ணுள்ள உளவாளி என்று வேதம் புகழ்கிறது. நாங்கள் அறிந்தோ அறியாமாலோ செய்த பாவங்களில் இருந்து மன்னிப்பு கொடு என்று பிராமணர்கள் தினமும் மாலை நேர மந்திரத்தில் மன்றாடுகிறார்கள்.அப்பேற்பட்ட வருணன் போல பலம்  கொடு என்று அதர்வண வேத முனிவர் பாடுகிறார்.

 18. அரச குமாரன்

இங்கு க்ஷத்ரியவீரன் போல பலம் தருக என்று வேண்டுகிறார் புலவர். ; நம் நாட்டிற்குப் பெயர் ‘பாரதம்’. காரணம் என்ன? பரதன் என்ற வீரச் சிறுவன் ஆண்ட நாடு இது. அவன் சிறு வயதிலேயே சிங்கக்குட்டிகளைப் பிடித்து விளையாடுவான் என்று பாரதியாரும் காளிதாசனும் பாடுகின்றனர் அப்பேற்பட்ட அரசகுமாரனின் பலத்தைக் கொடு  என்று வேண்டுவதில் வியப்பில்லை

19. முரசு

முரசு என்னும் drum டமாரம் குறித்து வேதத்திலும், சங்கத் தமிழ் நூல்களிலும் , பகவத் கீதையிலும் காண்கிறோம். அதை அடித்தவுடன் வீரம் வெளிக்கிளம்பும்; எதிரிகள் வயிற்றில் புளி கரைக்கும்! ‘வேதம் என்றும் வாழ்க வென்று கொட்டு முரசே, வெற்றி எட்டு திக்கும் எட்ட கொட்டு முரசே’ என்கிறார் பாரதியார் . முரசு கட்டில், அரண்மனை முற்றத்தில் இருக்கும்’ . அதை மரியதையுடன்  பூஜை செய்யவேண்டும். ஒரு புலவர்  அதில் களைப்பில்/அசதியில் தூங்கியதை அறி ந்தும் அவனை மன்னன் மன்னித்து பரிசு வழங்கிய செய்தி சங்கத் தமிழ்ப் பாடல்களில் உளது. ரிக் வேத காலம் முதல், முரசின் ஆற்றல் பேசப்படுகிறது. ‘பூமி துந்துபி’ என்ற பெயரில் பூமியில் குழி வெட்டி, பிராணிகளின் தையல் போர்வையைப் போர்த்தி, டமாரம் அடித்து, உலகையே கலக்கிய செய்தி வேதத்தில் உளது .அப்பேற்பட்ட பலம், எனக்கு வேண்டும் என்கிறார் முனிவர்.

20.அம்பு

தயார் நிலையில் உள்ள அம்பு DRAWN ARROW என்று முனிவர் சொற் பிரயோகம் செய்கிறார். ராமபிரான் வில்லின் நாணில் ஒரு அம்பினைப் பூட்டினால் உலகே அஞ்சுமாம் . சுக்ரீவன் வைத்த test டெஸ்டில் / பரீட்சையில் ராமன் ஒரே அம்பில் 7 மரா மரங்களைத் துளைத்ததை நாம் அறிவோம். ‘வில்லுக்கு விஜயன்’/ அர்ஜுனன் என்ற சொல்லையும் நாம் அறிவோம். இன்றும் உல க வில் வித்தைப் போட்டிகளிலும், ஒலிம்பிக் போட்டிகளிலும் இந்தியர்களுக்கு தங்கப் பதக்கம் பெற்றுத் தருவது வில் வித்தையே. அத்தகைய வில்லின் ஆற்றலை எனக்கு நல்கு என்கிறார்  முனிவர் .

21.குதிரை

அஸ்வமேத யாகம் என்னும் குதிரை யாகம் இந்துக்களுக்கே உரித்தான சிறப்பான போர் உத்தி ஆகும் . ‘’தைரியம் இருந்தால் என் குதிரையைப் பிடி’ என்று சவால் விட்டு, குதிரையை, வீரர்கள் பின் தொடர, அனுப்புவார்கள். அது செல்லும் நாடெல்லாம் அதை அனுப்பிய சக்கரவர்த்திக்குச்  சொந்தம். அதாவது கப்பம்/ வரி கட்ட வேண்டும். இப்படி 100 அஸ்வ மேத யக்ஞம் செய்தால் இந்திரன் பதவி கிடைக்கும். இன்றும் எஞ்சின்களின் சக்தியைக் குறிக்க ஹார்ஸ் பவர் HORSE POWER என்ற சொல்லே பொறியியலில் பயன்படுத்தப்படுகிறது அஸ்வ என்பது குதிரையை மட்டும் குறிக்காமல் வேகம் SPEED , POWER என்றே பொருள்படும் என்பதை  இந்த ஹார்ஸ் பவர் HORSE POWER  சொல் பிரயோகம் காட்டும். அது மட்டுமல்லாமல் குதிரை விந்துவின் HORSE SEMEN  வீரியம் பற்றியும் ஒரு அதர்வ வேதப் பாடல் இருக்கிறது. கி.மு 1300க்கு முன்னர், அதாவது 3300 ஆண்டுகளுக்கு முன்னர் சம்ஸ்கிருத எண்களுடன் கக்கூலி எழுதிய அஸ்வ சாத்திரம் நமக்கு TURKEY ருக்கியில் கிடைத்துள்ளது. ஆக குதிரையை வளர்ப்பு மிருகமாக அறிமுகப்படுத்தியது இந்துக்களே. அப்பேற்பட்ட குதிரையின் வேகம், பலம், வீரியம் எனக்குக் கிடைக்க  வேண்டும் என்கிறார் கவிஞர்

22. மன்னன் சூளுரை 

இறுதியாகப் புலவர் பட்டியலில் காணப்படுவது மன்னனின்  வீர கர்ஜனை; இதை தமிழில் ‘சூளுரை’ என்பர். வீரர்களுக்கு உற்சாகம் ஊட்ட மட்டும் மன்னரின் வீர முழக்கம் ஏற்பட்டதாக எண்ணிவிடக்கூடாது. எண்ணியதை எண்ணியாங்கு முடிப்பவர்கள் தலைவர்கள்.இன்று மாலை சூரியன் மறைவதற்குள் உன் தலை கீழே விழும் என்று வீர கர்ஜனை செய்தால் அதை முடித்துக் காண்பிப்பார்கள் .துரியோதணனைப் பிளந்து அவன் ரத்தத்தைத் தடவிய பின்னரே கூந்தலை முடிப்பேன் என்றாள் திரவுபதி ; அதை நிறைவேற்றியும் காட்டினாள் ; அவள் க்ஷத்ரிய குலப் பெண் . ஆக அரசனின் வீர முழக்கம் வெற்றுரை அல்ல ; வீர உரை.  முனிவர் வேண்டுவதும் அத்தகைய ஆற்றலே!

xxx

எனக்கு பலம் கொடுங்கள் என்று 4 வரிகளிலும் அதிதி தேவியிடம் முறையிட்ட முனிவர் ஏன் 22 பொருட்களைப் பட்டியலிட்டார் என்பதை ஒவ்வொருவரும் யோசித்தால் இன்னும் பல விளக்கங்கள் கிடைக்கக்கூடும்.

Xxxx subham xxxx

Tags-  வருணன், ஒரிஜினல் தமிழர், முரசு,. அதர்வண  வேதம் , பாடம் 3, குதிரை

Leave a comment

Leave a comment